Wednesday, 23 December 2020
தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளாக அமைந்துள்ள ஊர்கள்
Friday, 11 December 2020
ஏழை மக்களின் பசியாற்றிய மக்கள் சேவகர் சுப்பிரமணியம் சாந்தியடைந்தார்! சாந்தி கியர்ஸ் அறங்காவலர் மரணம்!!
கோவை : பல்வேறு விதங்களில் மக்களுக்கு சேவை செய்து வந்த கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (வயது 78) இன்று உயிரிழந்தார்.
இவர் கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 துவங்கி, இயந்திர உதிரி பாகங்களை பலவேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தவர் சுப்ரமணியம்.
கடந்த 1996 ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கினார்.
இந்த அமைப்பின் அறங்காவலராக இருந்து வந்தார் சுப்ரமணியம். சாந்தி கியர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வேறு நிறுவனத்திற்கு விற்கபட்டது.
சாந்தி சோசியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.
மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஏராளமானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.
சாந்தி மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் வெறும் ரூ.30 மட்டும் வசூலிக்கப்பட்டு வருகிறது. மருத்தகங்களிலும் 30 சதவீதம் விலை குறைவில் அனைத்து மருந்துகளும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் மருத்துவ ஆலோசனை பெறவும் , பரிசோதனைகள் செய்யவும்,மருந்துகள் வாங்கவும் பொது மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். சாந்தி சோசியல் சர்வீஸ் பெட்ரோல் பங்கில், புதிய ஸ்டாக் வரும் போது என்ன விலையோ, அதே விலை அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படும்.
சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின்மயானமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்தகைய சேவைகளை செய்து வந்த சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுப்பிரமணியம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
tamil
Tuesday, 8 December 2020
N2R Inspiration Quotes 369
மற்றவர் தோள் மீது ஏறி நின்று தன்னை உயரமாக காட்டி கொள்வதை விட, தனித்து நின்று தன் உண்மையான உயரத்தை உலகிற்கு காட்டுவதே சிறந்தது!
-N2R நந்தகுமார்.
Tuesday, 8 September 2020
அரசின் தேசிய கண் தான இணையத்தளம்
N2R MotivationalQuotes
#N2R_NandhakumaR_Quotes
#N2R_Quotes
#motivationalquotesoftheday
#channeln2r
#motivationalquotes
#motivationalwords
Saturday, 22 August 2020
விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
Friday, 14 August 2020
ஆடி மாதத்துக்கும் அம்மன் வழிபாட்டுக்கும் என்ன தொடர்பு? ஆடி மாதம் கூழ் ஊற்றுவது ஏன்?
கோழி கூவுவதற்கு முன்பே, `அம்பிகையே... ஈஸ்வரியே...' என்று பாடல் ஒலிக்கத் தொடங்கிவிட்டால் ஆடி மாதம் பிறந்துவிட்டது என்று அர்த்தம். ஆடி மாதம் அம்மனுக்கான மாதம். அம்மன் கோயில் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கிவிடும்.
வருடத்தில் எல்லா மாதங்களும் சிறப்பானவைதாம் என்றாலும், ஆடிமாதத்துக்கு மட்டும் எந்த மாதத்துக்கும் இல்லாத தனிச்சிறப்பு உண்டு. ஆடி மாதத்தில்தான் தட்சிணாயன புண்ணியகாலம் தொடங்குகிறது. உலக உயிர்கள் அனைத்தையும் காத்து அருள்புரியும் சூரியன், கடக ராசியில் சஞ்சரித்து தெற்கு நோக்கிப் பயணிக்கத் தொடங்குகிறார். எனவேதான் இதை `கற்கடக' மாதம் என்றும் குறிப்பிடுகிறோம். கடக ராசி சந்திரனுக்கு உரியது. சிவ அம்சமான சூரியன், சக்தியின் அம்சமான சந்திரனுடன் ஒன்றுசேர்ந்து கற்கடகத்தில் சஞ்சரிக்கும்போது சக்தியின் பலம் அதிகரிக்கிறது. ஆடி மாதத்தில் சிவபெருமானே சக்தியின் அம்சத்துக்குள் அடங்கிவிடுகிறார் என்பது ஐதீகம். எனவேதான், ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதமாகத் திகழ்கிறது.
ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தேவர்களின் இரவு நேரம் என்பது ஆன்மிக நம்பிக்கை. இந்தப் புண்ணிய காலத்தில் சூட்சம சக்திகள் வானத்திலிருந்து வெளிப்படும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அந்த நேரத்தில் பூஜைகள், ஜபங்கள், நீத்தார் வழிபாடு ஆகியவற்றைச் செய்தால் அதிக அளவு பலன்கிடைக்கும். `பார்வதி தேவி மலையரசன் மகளாகப் பிறந்தது ஆடி மாதம்தான்' என்கிறது தேவி பாகவதம். மதுரை மீனாட்சி அம்மன் அவதரித்ததும் ஆடி மாதமே. இதே ஆடி மாதத்தில்தான் ஆண்டாளும் அவதரித்தாள்.
மேலும், மழைக்குரிய தெய்வமாக மாரியம்மன் திகழ்வதால், மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு வரும் ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் திருவிழாக்கள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன. ஆடி மாதத்தில் கூழ் வார்த்தல், விளக்கு பூஜைகள், பூக்குழி இறங்குதல் போன்ற விழாக்கள் நடைபெறுகின்றன. ஆடிப் பூரம், ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடி வெள்ளி, ஆடிச் செவ்வாய் என்று இந்த மாதம் முழுவதும் திருவிழாக்களுக்குப் பஞ்சமே இல்லை.
அம்மன் கோயில் பிரசாதங்களில் முதன்மையானவை வேப்பிலையும், எலுமிச்சைப் பழமும். இதற்குப் பின்னால், அறிவியல் காரணம் ஒன்றும் இருக்கிறது.
ஆடி மாதத்தில் மழைக்காலம் தொடங்குவதால் தொற்று நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புண்டு. வேப்பிலையும், எலுமிச்சைப் பழமும் இயற்கையான கிருமிநாசினிகள். இதனால் தொற்றுநோய்கள் பரவாமல் தடுக்கப்படுகின்றன. மேலும் வெப்பம் குறைவான நாள்களில் எளிதில் செரிக்கக் கூடிய உணவு கூழ். அதுமட்டுமல்ல கூழ் இயற்கையாகவே அதிக அளவு எதிர்ப்புச் சக்தியையும், வலிமையையும் உடலுக்கு வழங்கக்கூடியது. அதனால்தான் `ஆடிக்கூழ் அமிர்தமாகும்' என்று கூறுகிறார்கள்.
இது தொடர்பாக புராணக்கதை ஒன்றும் உண்டு...
கேட்பவை அனைத்தையும் அளிக்கும் காமதேனு பசுவை, ஜமதக்னி முனிவரிடமிருந்து அபகரிக்க கார்த்தவீர்யார்ஜுனரின் மகன்கள் திட்டம் போடுகிறார்கள். ஒருதருணத்தில், முனிவரைக் கொன்று காமதேனுவைக் கவர்ந்துசென்றுவிடுகிறார்கள். கணவர் இறந்ததும் தானும் அக்னிப்பிரவேசம் செய்கிறாள் ஜமதக்னியின் மனைவி ரேணுகாதேவி. ஆனால், `தெய்வாம்சம் பொருந்திய ரேணுகா தேவியினால் உலகத்துக்கு நன்மை ஏற்படவேண்டும்' என்று நினைத்த இந்திரன், வருண பகவானிடம் மழையைப் பொழியும்படி உத்தரவிடுகிறார். மழை பெய்து தீயை அணைத்துவிடுகிறது. ஆனாலும், ரேணுகாதேவியின் உடல் முழுவதும் தீக்காயங்கள் மற்றும் கொப்புளங்கள் ஏற்பட்டுவிடுகின்றன.
தீக்காயத்தின் வெம்மையைத் தணிக்கவேண்டி, வேப்பிலையைச் சுற்றிக்கொள்கிறார் ரேணுகாதேவி. தீக்காயங்களுடன் போராடிய ரேணுகா தேவிக்குக் கிராமத்து மக்கள் கூழ் காய்ச்சிக் கொடுக்கிறார்கள். அத்துடன் வெல்லம், இளநீர் ஆகியவற்றையும் கொடுத்து உதவுகிறார்கள். உடல் முழுவதும் கொப்புளங்களுடன் போராடிக்கொண்டிருந்த ரேணுகா தேவியிடம் சிவபெருமான், ``பராசக்தியின் அம்சமான நீ மக்களை நோயிலிருந்து காக்க வேண்டும்" என்று அருள்புரிகிறார். எனவேதான் அம்மை நோயைக் குணமாக்கும் வேப்பிலைக்கும், உடல் சூட்டைத் தணிக்கும் கூழுக்கும் அம்மன் வழிபாட்டில் முக்கியப் பங்கு வழங்கப்படுகிறது.
ஆடி மாதம் செவ்வாய் கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் இருக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் நீண்ட ஆயுள் பெறவும், குழந்தை வரம் கிட்டவும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்குத் திருமணம் நடைபெறவும் ஆடி மாத விரதம் நலம் பயக்கும்.
ஒரு குழந்தையின் இயல்பு என்ன. பகலெல்லாம் ஓடியாடித் திரிந்தாலும், இரவு வந்துவிட்டால் அந்தக் குழந்தை தன் தாயின் மடியைத்தானே தேடிச் செல்லும்... தாயின் மடியில்தானே இரவைப் பற்றிய அச்சம் நீக்கி ஆறுதலைப் பெறும்... அதுபோலவே, கால மாற்றமானது நம்முடைய வாழ்க்கையில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்க, உலக மக்களாகிய நாமும் பராசக்தியின் அம்சமாக ஆங்காங்கே கோயில்களில் குடிகொண்டிருக்கும் அம்மனை நாடிச் சென்று, அவளுடைய திருவடிகளைத் தொழுது பணிந்து அருள் பெறுவோமாக...!
N2R நந்தகுமார்
Channel N2R
இரண்டாம் குழந்தை
Thursday, 13 August 2020
தூங்கும் போது கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்குபவரா? நீங்க பேரதிர்ஷ்டசாலிதான்! ஏன் தெரியுமா?
எவ்வளவு தான் நாள் முழுவதும் அயராது உழைத்தாலும், வீட்டிற்கு வந்து படுக்கையில் தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது. ஆனால் என்ன அவ்வாறு படுக்கையில் தூங்கும் போது ஆங்காங்கு சிறு வலிகளை சந்திப்போம். இதற்கு காரணம் நாம் தூங்கும் நிலை தான். ஒருவரின் முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு தூங்கும் நிலையானது மிகவும் முக்கியம். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் ஒரே நிலையில், அதுவும் தவறான நிலையில் தூங்கும் போது, முதுகெலும்பிற்கு போதுமான ஆதரவு கிடைக்கப் பெறாமல், அதன் விளைவாக வலி, பிடிப்பு மற்றும் உட்காயங்களை உண்டாக்கும
எனவே இரவு தூங்கும் போது சரியான நிலையில் தூங்க வேண்டியது அவசியம். எனவே தூங்கும் போது – முக்கியமாக பக்கவாட்டில் தூங்கும் போது கூட உங்கள் உடலை சரியான வழியில் நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டாம்.
மேலும் பொருத்தமான மெத்தை ஒன்றை தேர்ந்தெடுத்து, தலையணை பயன்படுத்தி முதுகெலும்பை ஆரோக்கியமான வளைவுக்கு மாற்றிவிடலாம்.

ஆரோக்கியமான தூக்கத்தினை பெற என்ன செய்யலாம்
தூங்கும் போது கால்களுக்கு இடையே தலையணையை வைத்துக் கொள்வதன் மூலம், அது ஆறுதலை அளிப்பதோடு, முழங்கால்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்திருப்பதன் மூலம் அழுத்தம் நீக்கப்படுகிறது.
இது உங்கள் இடுப்பு பகுதி சீரமைக்கப்படுவதை உறுதி செய்கிறது.
நன்மைகள்
- கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்கும் போது, அது இடுப்பில் உள்ள அழுத்தத்தைக் குறைக்கிறது.
- முதுகெலும்புகள் சீரமைப்பில் இருந்து நகர்வதையும் தடுக்கிறது.
- கீழ் முதுகு வலி அல்லது கால் வலியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, குறிப்பாக சியாட்டிகா உள்ளவர்களுக்கு, தலையணையை கால்களுக்கு இடையே வைத்து தூங்குவது மிகவும் நல்லது.
- ஒருபுறமாக தூங்கும் போது, உங்கள் மேல் கால் ஓய்வெடுக்க முன்னோக்கி மெத்தையை பார்த்து செல்லக்கூடும். இது கீழ் முதுகில் ஒருவித அழுத்தத்தைக் கொடுத்து, சியாட்டிக் நரம்பை எரிச்சலடையச் செய்யும்.
- குறட்டை விடுபவர்களுக்கு பக்கவாட்டு தூக்க நிலை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
- ஏனெனில் இந்த தூக்க நிலையில், காற்றுப் பாதைகள் மிகவும் நிலையானவை மற்றும் காற்றைக் கட்டுப்படுத்துவதற்கான வாய்ப்புக்கள் குறைவு.
- உங்கள் முதுகெலும்பை சீரமைத்து வைத்திருப்பது, கழுத்து மற்றும் முதுகு வலியைக் குறைக்கிறது. அதோடு இது தூக்கத்தில் மூச்சுத்திணறல்/குறட்டை ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.
முக்கிய குறிப்பு
- உடலின் ஆற்றலையும், மன விழிப்புணர்வையும் புதுப்பிக்க ஒரு நல்ல இரவு தூக்கம் அவசியம்.
- இது உங்கள் மனநிலையை மேம்படுத்தவும், அடுத்த நாளுக்கு உங்களை தயார்படுத்தவும் உதவுவது மட்டுமல்லாமல், நோயில் இருந்து மீளவோ அல்லது காயத்தில் இருந்து குணமடையவோ உதவும்.
- நீங்கள் தூங்கி எழுந்திருக்கும் போது, ஏதேனும் வலியை உணர்ந்தால், உடனே உங்கள் தூக்க தோரணையை சரிபார்க்கவும்.
- மேலும் ஒவ்வொரு இரவு தூங்கும் போதும் தூக்க தோரணையை கவனிக்க வேண்டியது அவசியம்.
- அதேப் போல் மறுநாள் காலையில் எழும் போது வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்.
Tuesday, 11 August 2020
ஹிந்தி கற்பது குறித்த எமது அனுபவக் கருத்து
வள்ளலார் கூறும் 42 வகை பாவங்கள்
Friday, 7 August 2020
இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2020 ல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன வெற்றி
Friday, 24 July 2020
ஏழு கல் விளையாட்டு | Lagori Game
Saturday, 27 June 2020
பெண்களை திருமணத்திற்கு முன்பு ஊஞ்சலாட சொல்வது எதற்காக தெரியுமா ??
அடிப்படையிலேயே உருவானது.
Sunday, 24 May 2020
உங்கள் வீட்டில், எறும்புகள் திடீரென்று கூட்டம் கூட்டமாக வருகிறதா? எறும்பு சாக்பீஸ் போட்டுட்டு அப்படியே விட்றாதீங்க! காரணத்தையும் தெரிஞ்சுக்கோங்க.
Tuesday, 19 May 2020
சட்டை முனி சித்தர் அற்புத வரலாறு
மனிதன் முயன்றால், சித்தர் வழி நடந்தால் அவனும் சித்தனாகலாம் என்பதே உண்மை. ஏனெனில், சித்தர்களும் மனிதனாகத் தோன்றி இவ்வுலகில் வாழ்ந்தவர்களே. ஆனால், இக்கலிகாலத்தில், அது மிகக் கடினமான ஒன்றாகும். அந்த சித்தர்களை, குருவாக ஏற்று அவர் வழி நடப்பவர்களுக்குக் கூட அது ஓரளவு மட்டுமே சாத்தியம்.
உண்மையாய், நேர்மையாய், சுயநலமின்றி வாழ்ந்து, உலகின் உயர்வுக்கும், நலனுக்குமே எப்போதும் சிந்திப்பவர்களுக்கு சித்தர்களின் அருள் தரிசனம் கிட்டும். ஆனால் அதற்கான கொடுப்பினை, நல்வினை நமக்கு இருக்க வேண்டும். ஆகவே நல்ல எண்ணங்களோடு வாழ்ந்து, நற்செயல்கள் செய்து நமது தகுதியை நாம் உயர்த்திக் கொள்ளுதல் மிக அவசியம்
தியானச் செய்யுள்
சித்த வேட்கை கொண்டு
சிறந்து விளங்கிய சீலரே
அரங்கனிடத்தில் அணிகலன்கள் பெற்ற
அற்புத மூர்த்தியே
எம் அறியாமை நீக்கி ஞானவரம் அருள்வாய்
ஸ்ரீ சட்டைமுனி சுவாமியே!
இவர் ஆவணி மாதம் மிருகசீரிடம் மூன்றாம் பாதத்தில் பிறந்தார் என்று கூறும் போகர் இவரைத் தமது சீடராக அறிமுகப்படுத்தி இவரது வரலாற்றையும் தெரிவிக்கிறார்
சட்டைமுனி எனும் இந்த சித்தர் சிங்கள நாட்டிலிருந்து தமிழ் நாட்டிற்கு வந்தவர்.சேணிய வகுப்பைச்சார்ந்தவர்.தாய்,ஆலய விழாக்களில் நடனமாடுபவர். தந்தை இசைக்கருவிகள் வாசிப்பவர். அந்த நாட்டை விட்டுத் தமிழகம் வந்து விவசாயம் பார்த்து வந்தனர். வானம் பொய்த்தக் காரணத்தால் விவசாயம் செய்துபிழைக்க வழியில்லாது போய்விட்டது. மேலும் பெற்றோருக்கு வயதாகிவிட்ட காரணத்தால் விவசாயக்கூலி வேலை பார்த்து வந்தார். பட்டினியால் வாடும் பெற்றோருக்கு உணவளிக்கவே தமிழகக் கோயில்களின்வாசல்களில் தட்டை ஏந்தி யாசகம் பெற்றுத் தமது தாய் தந்தையரைக் காப்பாற்றி வந்தார்.ஒருநாள் வழக்கம்போல கோயிலின் முன் நின்று யாசகம் கேட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுதுவட நாட்டிலிருந்து சங்கு பூண்ட ஒரு முனிவரைக் கண்டார். அவரிடம் தன் குறைகளை எடுத்து கூறி கண்ணீர்விட்டார். முனிவர். ”யாவும் விதியின் வழித்தான் செல்லும். தாய், தந்தையரை காப்பாற்றும் பொருட்டுநீ செய்யும் செயல் மிகப்பெரியது, புண்ணியமான செயலாகும். விரைவில் உனது நிலையும், காலமும் மாறும்.சிவன்பால் சிந்தனையை நிறுத்து. கடமையைச் செய்.” என்றார்.
சட்டைமுனி மன மகிழ்ச்சிக் கொண்டார். முனிவர் கூறியது போல் மழை நல்லபடி பெய்தது. விளை நிலங்களில் நல்ல விளைச்சல் விளைந்தது. அயராத உழைப்பால் சட்டைமுனியின் வாழ்வும் மலர்ந்தது. இறைவனைஆலயம் சென்று தினம் வணங்கினார். பிச்சைக்காரகளுக்கு தன்னால் இயன்ற அளவு உதவினார். சட்டை முனிக்கு திருமணமும் நடைப்பெற்றது. இல்லற வாழ்வில் ஈடுபாடு இல்லாவிட்டாலும் குடும்பம்நடத்தினார். தினம் கோயில் சென்று சிவனை வழிபடத் தவறவில்லை. ஒருநாள் இறைவனை வணங்கிவிட்டுவெற்று உடம்போடு வெளியே வந்த சட்டை முனி தன் சட்டையை அணிய முற்பட்டார். வெளியிலிருந்துஒரு குரல் வந்தது. ‘ஏன்னப்பா உடுத்துவதில் உறுதியாய் இருக்கிறாய் போலிருகிறது. உதறிட எண்ணமில்லையா? ‘
சட்டைமுனி திடுக்கிட்டு திரும்பினார். எதிரே சங்கு பூண்ட ஒரு முனிவர் நிற்பதைக் கண்டார். அவர் காலடியில்வீழ்ந்து, ‘சாமி வழிகாட்டுங்கள்’ என்றார். ”உதற ஆயத்தமாக இருக்கிறாயா?” என்றார். ஆம்.. சாமி என்றுதாம் அணிந்திருந்த சட்டையை உதறினார். சட்டை முனியே! வாரும் எம்மோடு என்று அழைத்துச் சென்றார். இவரை ‘கயிலாயச் சட்டைமுனி நாயனார்’ என்றும் எப்போதும் கம்பளி மேலாடையை அணிந்திருப்பதால் கம்பளிச் சட்டைமுனி என்றும் அழைக்கப்படுகிறார்.. சங்கு முனிவரின் கையைப் பற்றிக்கொள்ள இருவரும் கனக மார்க்கமாக ஆகாயத்தில் பறந்தனர். இந்தச் செயலைக் கண்டு சட்டைமுனி வியப்படைந்தார். இது குறித்து வினவ ‘இதில் ஒன்றும் வியப்பில்லை.இரசமணியின் சக்தியால் இவைகள் சாத்தியமாகும். உனக்கோ இது போகப்போக விளங்கும்” என்றார்.
அம்முனிவரின் உபதேசங்களைக் கேட்டு அவருடனேயே சுற்றி வந்தார், இறுதியில் போகரைச் சந்தித்துசித்தர்களின் வழியில் தம் ஞானப் பயணத்தைத் தொடர்ந்தார். போகருடன் இருந்தபோது கொங்கணச் சித்தர்,கருவூரார் போன்ற சித்தர் பெருமக்களின் இனிய தொடர்பு ஏற்பட்டது. அகத்தியரிடம் சீடராகச் சேர்ந்து, ஞானநிலையினை அடைந்தார். இவரின் விடாமுயற்சி, ஞானத்தின் உயர்நிலையை எட்டினார். இவரின் தவத்தால்கயிலாயத்தில் சிவபெருமானை தரிசிக்கும் பாக்கியம் பெற்றார்...
சட்டைமுனி ஊர் ஊராகச் சுற்றி வரும் காலத்தில் தூரத்திலிருந்து தெரியும் திருவரங்கர் கோவில் கலசங்களை கண்டு பேரானந்தம் கொண்டார்.
இக்கோவில் நடைசாத்துவதற்குள் அரங்கனை தரிசித்து விட வேண்டுமென ஆவலாக நடந்தார். ஆயினும் பூசை முடிந்து கோவில் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. ஏமாற்றத்துடன் சட்டைமுனி, கோவில் வாசலில் நின்று அரங்கா! அரங்கா! அரங்கா! என்று கத்தினார். உடனே கதவுகள் தாமாகத் திறந்தன. அரங்கனின் தரிசனம் சட்டைமுனிக்குக் கிடைத்தது. அரங்கனின் ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழன்று சட்டைமுனியின் மேல் வந்து சேர்ந்தன. சட்டைமுனி “அரங்கா!” என்று கதறிய சப்தம் கேட்டு திரண்டு வந்த ஊர்மக்கள் வியந்து நின்றனர். அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே இறைவனுடன் ஒன்றாய்க் கலந்தார் சட்டைமுனி. சித்தரின் சமாதி இன்றும் திருவரங்கத்தில் இருப்பதாய் கூறப்படுகிறது.
சட்டைமுனி இயற்றிய நூல்கள்:
சட்டைமுனி நிகண்டு – 1200
சட்டைமுனி வாதகாவியம் – 1000
சட்டைமுனி சரக்குவைப்பு – 500
சட்டைமுனி நவரத்தின வைப்பு – 500
சட்டைமுனி வாகடம் – 200
சட்டைமுனி முன் ஞானம் பின் ஞானம் – 200
சட்டைமுனி கற்பம் – 100
சட்டைமுனி உண்மை விளக்கம் – 51
சித்தர்களுக்கு மனிதனிடம் எதிர்பார்ப்பு என்று எதுவுமே இல்லை. அவர்கள் வலியுறுத்துவது உண்மை, நேர்மை, கருணை, அன்பு, தூய்மையான வாழ்க்கை மட்டுமே. மற்றவர்களுக்கு உதவும் நல்லஎண்ணம், நல்லசெயல், நல்ல சிந்தனையோடு செயல்படுபவர்களுக்கு சித்தரின் அருள் நிச்சயம் கிடைக்கும்.
வெறும் 18 பேர் மட்டுமல்ல; பல்லாயிரக்கணக்கான சித்தர்கள் உலகில் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை வெறும் தமிழர்கள், இந்துக்கள் என்ற குறுகிய வட்டத்துக்குள் அடைக்க நாம் முயலக் கூடாது. பூனைக்கண்ணர் எகிப்து/இங்கிலாந்தைச் சேர்ந்தவர் என்ற நம்பிக்கை உண்டு. போகர் சீனர் என்று சொல்லப்படுகிறது. யாக்கோபுச் சித்தர் அரேபியாவைச் சேர்ந்தவர் என்ற கருத்து நிலவுகிறது. ரோம ரிஷி ரோம் நகரைச் சேர்ந்தவர் என்றும் சொல்கிறார்கள். இப்படி நாடு, நகரம், மொழி, இனம் என அனைத்தையும் கடந்து தூய அற வாழ்வு வாழ்ந்தவர்கள், இன்னமும் சூட்சுமமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். அவர்கள் நம்முடைய தகுதிக்கேற்ப அவர்கள் உதவத் தயாராகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அருள் கிடைக்க நாம் செய்ய வேண்டியது தூய்மையான வாழ்வு வாழ வேண்டியது மட்டுமே.
N2R NandhakumaR
Channel N2R
திருமூலர்
நம்பாததால் மறுபடியும் அவ்வுடலை செயலற்றதாக்கி உண்மையை விளக்கினார்.கண்ணெதிர நடந்த இந்த அதிசயத்தை கண்டு ஊர் பெரியவர்கள் மூலனின் மனைவிக்கு ஆறுதல் சொல்லி அவளது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
பண்டுளவு கிருஷ்ண பூபாலனுக்கு
பார்தனில் உபதேசம் செய்தார்...
Sunday, 17 May 2020
ஸ்ரீ தியாகராஜர் அரிதான படம்
துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!
1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...
-
1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம். மற்றும் 2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம்...
-
🌟 சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது. 🌟 கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கலாகாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கக்கூடாத...
-
முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் ...