Showing posts with label கோடங்கிபாளையம் நந்தகுமார். Show all posts
Showing posts with label கோடங்கிபாளையம் நந்தகுமார். Show all posts

Monday, 20 November 2017

ஹீமோகுளோபின் (Haemoglobin)

ஹீமோகுளோபின் குறைபாடு அதாவது ரத்த சோகை ஏற்பட்டால் உடல் முழுவதும் செயலிழந்ததை போல் இருக்கும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பிராண வாயுவான ஆக்ஸிஜனை கொண்டு சேர்க்கும் ரத்த அணுக்களின் அளவு குறைவதால் சோர்வு ஏற்படும். இதனால் சிறுநீரக பிரச்னை வருவதற்கான வாய்ப்பும் ஏற்படுகிறது. இதில் இருந்து தீர்வு பெற எந்தவொரு மாத்திரை மருந்தும் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவிலேயே ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும். காய்கறிகளுடன் சேர்த்து சில பழங்களையும் சாப்பிடுவது மேலும் சீரான உடற்பயிற்சி போன்றவையே இதற்கு போதுமானது.
1. கொய்யா:

தினமும் கொய்யாப் பழம் சாப்பிடுவதன் மூலம் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எவ்வளவு கசப்பாக கொய்ய இருக்கிறதோ அதில் அவ்வளவு ஹீமோகுளோபினை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது என்று அர்த்தம். மிகவும் சத்தான மற்றும் அதிக பயன்களை கொண்ட ஒரு பழம் இது.
2. மாம்பழம்:

பழ வகைகளில் மிகவும் சுவையானதும், அனைவராலும் விரும்பப்படும் ஒன்றானதாகவும் இருப்பது மாம்பழம். இவ்வளவு இனிப்பான பழத்தால் ரத்த சோகையில் இருந்து விடுபட முடியும் என்றால் எதற்காக கசப்பான மாத்திரைகளை விழுங்க வேண்டும்?
3. ஆப்பிள்:

நாள்தோறும் ஒரு ஆப்பிளை நாம் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்வதை தவிர்க்கலாம் என்பது பல காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு உண்மை. அந்த வகையில் பார்த்தால் தினமும் ஆப்பிள் சாப்பிடுவது ரத்த சோகை மட்டுமில்லாமல் இனி வரவிருக்கும் அனைத்து நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கக் கூடிய ஒன்றாகும்.
4. திராட்சை:

திராட்சையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. மாதவிலக்கு ஏற்படும் பெண்களுக்கு உடலில் தேவையான அளவு ரத்தம் உற்பத்தியாக இரும்புச் சத்து மிகவும் அவசியமான ஒன்று. புதிதாக ரத்தம் உற்பத்தி ஆகிறது என்றால் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் நிச்சயம் உயரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
5. பீட்ரூட்:

பீட்ரூட்டில் நிறைந்திருக்கும் கார்போஹைட்ரேட் ரத்தம் வீணாவதைத் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகமாவதற்குத் தேவையான சிவப்பு ரத்த அணுக்களை இவையும் உற்பத்தி செய்கிறது. அனீமியா நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து என்றே சொல்லலாம்.
6. துளசி:

துளசி ரத்தத்தைத் தூய்மையாக்கி சிவப்பணுக்கள் இறப்பதற்குக் காரணமான நச்சுகளை ரத்தத்தில் இருந்து நீக்குகிறது. தினமும் துளசி சாப்பிடுவதால் நிச்சயம் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
7. காய்கறிகள்:

பச்சை காய்கறிகளை உட்கொள்வது எப்போதும் பல நன்மைகளை வழங்கக் கூடியது. ரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரித்து ரத்த சோகையில் இருந்து நம்மையும் காக்கக் கூடியது காய்கறிகள்.
8. தேங்காய் எண்ணெய்:

உடலில் திசுக்கள், சதைகள் மற்றும் ரத்தம் உற்பத்தியாகத் தேங்காய் எண்ணெய் உதவுகிறது. இதன் மூலம் ஹீமோகுளோபின் அளவு கட்டாயம் அதிகரிக்கும்.
9. முட்டை:

முட்டையில் புரதம், கொழுப்பு, வைட்டமின், இரும்பு, கால்சியம் மற்று தாது ஆகிய அனைத்துச் சத்துக்களும் இருப்பதால் இது உடலும் அதிக நன்மைகளைத் தரக்கூடியது. உடலின் ஹீமோகுளோபின் அளவு மற்றும் இல்லாமல் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சில சத்துக்களும் இதனால் அதிகரிக்கக் கூடும்.

Ruler can do anything, so Born to rule the Galaxy

மறந்து கூட இந்த எண்ணெயில் தீபம் எற்றாதீங்க.....!


தீபம் எற்றுவதே தனி அழகு தான்.... நம் வீட்டில் பூஜை  அறையில் விலகு ஏற்றும் போது, அதிலிருந்து  வரும் அந்த ஒளியால் பிரகாசமாக  தெரியும் அல்லவா...
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.
விளக்கேற்ற கூடாத எண்ணெய்கள்....
கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளை கொண்டு எந்த நேரத்திலும் மறந்து கூட விளக்கு ஏற்ற வேண்டாம்..

இந்த மூன்று எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால், மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையும் பெருக்கும் வல்லவை இந்த எண்ணெயின்  மூலம்  ஏற்றப்படும் தீபத்திற்கு உண்டு என்பதை யாரும் மறந்து விடாதீர்.....
எண்ணெயின் பலன்கள் :
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொருத்து பலன் கிடைக்கும்.
நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்.
நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்.

இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி கிடைக்கும்.
ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய்,
நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய்) - அம்மன் அருள் கிடைக்கும்.
வேப்பெண்ணெய் - கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவிபெறவும்.
ஆமணக்கு எண்ணெய் - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது.

Ruler can do anything, so Born to rule the Galaxy

Friday, 22 September 2017

சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்

வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, 'பிறை காணுதல்' என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக 'சந்திர தரிசனம்' என்று குறிப்பிட்டுள்ளது.

மூன்றாம் பிறையைப் பார்த்தால் செல்வம் சேருமா? என்றும் நான்காம் பிறையைப் பார்த்தால் கஷ்டங்கள் உண்டாகும் என்றும் கூறுகிறார்களே ஏன் என்று 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமனிடம் கேட்டோம். அவர்  நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும்.

காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.

மூன்றாம் பிறை உருவான கதை :

ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார்.

தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் .

தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர். 

சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.

சுறுசுறுப்போடு  அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்த பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.

பலன்கள் :

அமாவசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும்.

மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும்.

குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் இப்பிறையைக் கண்டால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும். 
கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையைக் கண்டால் சகல பாவங்களும் தொலையும்.

நான்காம் பிறையை ஏன் பார்க்கக் கூடாது ?

ஒரு முறை விநாயகப் பெருமான் சந்திரலோகத்துக்கு விஜயம் செய்தார்.

கையில் கொழுக்கட்டையுடன் வந்திருந்த விநாயகரைக் கண்டு ஏளனம் செய்த சந்திரன் மீது விநாயகர் மிகுந்த கோபம் அடைந்தார். அன்று பிள்ளையார் சதுர்த்தி வேறு. கோபமுற்ற கணபதி, ‘சதுர்த்தியில் உன்னைப் பார்ப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாவார்கள்!’ என்று சபித்தார்.

மனம் வருந்திய சந்திரனோ,  தான் அறியாது செய்த தவற்றை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டுக்கொண்டான். விநாயகர் சந்திரனை மன்னித்தார்,  ஆனால், மூன்றாம்பிறையைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் முழு மகிழ்ச்சி பொங்கும் என்று அருளினார்.

நான்காம்பிறையைப் பார்த்ததால் வரும் கெடுபலனை எப்படித் தவிர்க்கலாம்? இதற்கும் புராண காலத்தில் கிடைத்த ஒரு தீர்வைப் பார்ப்போம்.

ஒருமுறை சதுர்த்தியில் வரும் நான்காம் பிறையைப் பார்த்து வீண்பழிக்கு ஆளானார் கண்ணன்.  இதற்குப் பரிகாரமாக, அடுத்த திங்களில் (அடுத்த மாதத்தில்) அமாவாசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் செய்ததோடு கணபதியையும் வேண்டி பழியில் இருந்துவிடுபட்டார்.

காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும். எனவே,

சந்திர தரிசனம் !!

மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும்.

அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.

மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.

மூன்றாம்பிறை பிறந்த கதை :

ஒருமுறை விநாயகப் பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக் கொண்ட பின் விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார்.

எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான்.

இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் 'உன் அழகு இன்று முதல் இருண்டு உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள்" என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது.

பின் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தியதுடன், சிவனை நோக்கி கடும் தவம் இருந்து பழையபடி முழுவெண்மதியை பெற்றான். முழுமதி நாளில் சந்திரனை வழிபடுவது சந்திர தரிசனை ஆகும்.

மூன்றாம் பிறை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் :

சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.

மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.

சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

Thursday, 21 September 2017

என்றும் இளமையுடன் வாழ ஆசையா?

என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை.
இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.
உடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.
எங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச்சாறு உங்களை இளமையாக வைக்க உதவும்.
அப்படிப்பட்ட ஆரஞ்சுப் பழச்சாற்றின் மருத்துவ குணங்கள்…
சில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன. இந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்து விடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது.
பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது. தலைமுடி நரைக்கச் செய்கிறது.
இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்திருப்பதை பார்க்கலாம்.
இந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று.
ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் இரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருக்கிறது. ஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது.
இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.
ஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே. இதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம்.
இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும்.
இருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.
ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்து விடுகிறது.
ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.
ஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.

Ruler can do anything, so Born to rule the Galaxy

Tuesday, 8 August 2017

வீட்டில் தோட்டத்தில் எறும்புத் தொல்லையை எளிமையாக போக்கும் வழிகள்

வீட்டில் எப்போதும் தீராத பிரச்னை என்ன என்றால், அது எறும்பு, கரப்பான்பூச்சி போன்ற பூச்சிகளின் தொல்லை தான். அதிலும் குறிப்பாக, இந்த செவ்வெரும்பு, கட்டெரும்பு, சாமி எறும்புகளின் தொல்லையைச் சொல்லி மாளாது.வீட்டில் எதையும் வெளியே வைத்துவிட முடிவதில்லை. கொஞ்ச நேரத்தில் சாரை சாரையாக, அந்த இடத்தை மொய்க்க ஆரம்பித்துவிடும். அந்த எறும்புகள் வராமல் தடுக்க என்ன தான் வழி?

கிச்சனில் என்ன வைத்தாலும் நமக்கு முன்னால் அதைப் பதம் பார்த்துவிட்டு 

செல்வது எறும்பு தான். இந்த எறும்புகளை அதே கிச்சனில் இருக்கும் சில 

பொருட்களைக் கொண்டு எப்படி விரட்டுவது? 

பட்டையை நாம் உணவில் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த பட்டையை வைத்து, வீட்டில் தொல்லை தரும் எறும்புகளையும் ஒழித்துக் கட்ட முடியும். 

வீட்டில் எறும்பு வருமிடத்தில் சிறிது பட்டையைப் போட்டு வைத்தால், 

விரைவாகவே எறும்புகள் வீட்டை விட்டு வெளியேறிவிடும். 

வெள்ளைப்பூண்டைத் தோல் உரித்துவிட்டு, சிறு சிறு துண்டுகளான நறுக்கி. 

எறும்பு அதிகமாக வரும் இடங்களில் போட்டு வைத்தால் எறும்புத் தொல்லை 

நீங்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது சாதாரண வினிகரை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, 

எப்போதெல்லாம் எறும்பு கண்ணில் படுகிறதோ அப்போது, அதன் மேல் 

தெளித்துவிடலாம். 

வீட்டில் எறும்புகள் வரும் இடங்களில் எல்லாம் மிளகைப் போட்டு வைத்தால், 

எறும்புகள் வெளியே வராமல் ஓடி ஒளிந்துவிடும்.எறும்புகளின் தொல்லை மிக அதிகமாக இருக்கிறதா? வீட்டில் அங்கங்கே ரோடு போட்டு, வரிசையாக சென் கொண்டிருந்தால், தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, எறும்புகள் அதிகமாக வருமிடஙகளில் ஊற்றவும்.

புதினாவின் வாசனைக்கு வீட்டுக்ள் எறும்புகள் நிச்சயம் வீட்டுக்குள் அண்டவே 

அண்டாது. அதனால் கிச்சனுக்குள் ஒரு சிறு தொட்டியில் புதினாவை வளர்க்கலாம். வீட்டுக்கு வெளியேயும் வீட்டைச் சுற்றிலும் புதினா செடிகளை வளர்க்கலாம். 

இதனால் பூச்சிகளின் தொல்லையும் குறையும். சமையலுக்கும் சுத்தமான புதினா கிடைக்கும்.

இதே வழிமுறைகளை உங்கள் தோட்டத்திலும் செயல்படுத்தலாம்.

சில உளவியல் உண்மைகள்!

1. அதிகம் சிரிப்பவர்கள்.....
தனிமையில் வாடுபவர்கள்..

2. அதிகம் தூங்குபவர்கள்,
சோகத்தில் இருப்பவர்கள்..

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள்,
அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. அழுகையை அடக்குபவர்கள்...
மனதால் பலவீனமானவர்கள்..

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!!
மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!!
அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்...
அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!!

பேச்சு -  உளவியல் ஆலோசனைகள்...!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள்.
அது உங்களை பலவீனமானவராக காட்டும்..

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும்.
அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!!

3   மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் ..

4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால்...
அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்..

5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர்...
உங்களை சோம்பேறியோ.... என நினைக்கக்கூடும். .

6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்...
அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்....

7. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும்.
அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..

8. நம்பிக்கையோடு கூடிய புன்னகை , நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்..

9. குழந்தைகளோடு பேசும்போது,  அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும். .

10. உங்கள் பேச்சை விளக்குவதற்கு , உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.. ...

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

1. நீங்கள்தான்  அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். 
நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.

யாரும் சொன்னாலும் ரசித்தாலும்...தான்....   நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள்.
உங்களை நீங்களே ரசியுங்கள்..

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள்.  ...  உங்களை நக்கல் செய்பவரிடம்...
துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்...

இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..

3. உங்களால் எது முடியாது...
உங்களுக்கு எதுவும்  தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்..,  
அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது
என்று நினைக்காதீர்கள்... 
எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை... என்பதே உண்மை....

5. உங்களுக்கு எதுவும் தெரியாது....
எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்... 

இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள்.... 

உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர்....

மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்....

7. அழும் போது தனியாக அழுங்கள்... 
நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ
இங்கு யாரும் வரப்போவதில்லை...
என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்...!!!

கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்...

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,. 

நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.....

எங்கும் எப்போதும் சுயமரியாதையை விடாமல் நடை போடனுங்க....

Thursday, 3 August 2017

தீபம் ஏற்றும் முறையும் பலனும்

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமயலறை, துளசி மாடம்

போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

தீபம் ஏற்றும் நேரம்

தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்).

காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.

விளக்கு ஏற்றும் முறை

ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.

இரு முகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை கிட்டும்.

முன்று முகம் ஏற்றினால்- புத்திரதோஷம் நீங்கும்.

நான்கு முகம் ஏற்றினால் - பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும்.

ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.

விளக்கேற்றும் திசை

கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி

மேற்கு - கடன், தோஷம் நீங்கும்

வடக்கு - திருமணத்தடை அகலும்

தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)

எண்ணெயின் பலன்

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.

நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்

நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்

தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்

இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி

விளக்கெண்ணெய் - புகழ் தரும்

ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ) - அம்மன் அருள்

வேப்பெண்ணை - கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்

ஆமணக்கு எண்ணை - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது

கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.

எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்

விநாயகர் - தேங்காய் எண்ணெய்

மகாலட்சுமி - பசுநெய்

குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்

பைரவர் - நல்லெண்ணெய்

அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த
5 கூட்டு எண்ணெய்

பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய்

திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள்

திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். திரிகளும்,பயன்களும் குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.

• பருத்திப் பஞ்சு - குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
• வாழைத் தண்டின் நார் - முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
• தாமரைத்தண்டு நூல் - முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
• வெள்ளை எருக்கம்பட்டை - செல்வம் பெருகும்.
• புதிய மஞ்சள் துணி - நோய்கள் குணமாகும்.
• புதிய சிவப்பு வண்ண துணி - குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
• புதிய வெள்ளை துணி திரி - அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.
(துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.)

விளக்கின் தன்மை

மண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும்

வெள்ளி விளக்கு – திருமகள் அருள் கிடைக்கும்

பஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம் உண்டாகும்

வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும்

இரும்பு விளக்கு – சனி கிரக தோஷம் விலகும்.

திருவிளக்கின் சிறப்பு

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

விளக்கு துலக்க நல்ல நாள்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.

விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்

ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.

தீபத்தை குளிர வைக்கும் முறை

பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது.

பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.

தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.

1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்

விளக்கு ஏற்றும் பொழுது :

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே

விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

2. தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீரட்ட னாரே.

3. தீபம் (ஏகதீபம்) காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்

சோதியே சுடரே சூழலொளி விளக்கே சுரிகுழல் பணைமுலைமடந்தைப்
பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய் பங்கயத்தயனுமாலறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையுள் குருந்தம் மேவிய சீர்எம்
ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றருளாயே

4. கற்பூரப் பேரொளி காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்

கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புதக் கோலம் நீடி அருமறை சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி.

5. அமுது படைக்கும் போது பாட வேண்டிய மந்திரம்

அமுது படைக்கும் போது :

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பாலவி யாமே

எனவும் படைத்து :

பூந்தண் பொழில்சூழ் புலியூர் பொலிசெம்பொன் அம்பலத்தே
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே.

(என ஓதி வாயின் புறத்தில் நீர்காட்டி விடுக.)

6. திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

திருநீறு :

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.

குங்குமம் :

சிந்துரக் குங்குமம் சேர்த்தனன் போற்றி

கார்த்திகை பெண்களை போற்றும் நன்னாள்
நன்றி மறப்பது நன்றன்று என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தமிழ்த்தெய்வமான முருகப்பெருமானும் நன்றி மறவாமல் தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் திருக்கார்த்திகைத் திருநாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அப்பொறிகளை கங்கை தாங்கிக் கொண்டாள். ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் அவதரித்தார். மகாவிஷ்ணு அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும்படி கார்த்திகைப்பெண்கள் ஆறுபேருக்கு கட்டளையிட்டார். அவர்கள் ஆறுபிள்ளைகளுக்கும் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இதனால் அவர்கள் ஒரே நட்சத்திரமாக மாற்றப்பட்டு வானமண்டலத்தில் இடம் பிடித்தனர்.

இந்த நட்சத்திர நாளில் தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக குழந்தை முருகன் வரம் அளித்தார். முருகனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் விசாகம். ஆனால், அந்த நட்சத்திரத்தில் மாதவிரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை. கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், விரதமும் மேற்கொள்வதில் இருந்து நன்றி மறவாத நாயகன் முருகன் என்பதை உணர முடிகிறது.

சிவசக்தி தீபம்
தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

நிலைத்த பலனுக்கு விளக்கு வழிபாடு
கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து, மாலை அணிவித்து, தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.

தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் முருகப்பெருமானையே அருணகிரிநாதர்""தீபமங்களஜோதீ நமோநம'' என்று திருப்புகழில் பாடுகிறார்.

இறையருள் கைகூட தண்ணீரால் விளக்கெரித்த நமிநந்தியடிகள், தன் உதிரத்தையே எண்ணெயாய் ஊற்றி தீபமேற்ற முயன்ற கலியநாயனார், தலைமுடியை விளக்குத் திரியாக்கிய கணம்புல்லர், அறியாமல் தீபத்தைத் தூண்டிவிட்ட காரணத்துக்காகவே, மறு பிறவியில் சக்ரவர்த்தியாய் பிறந்த மகாபலி ஆகியோரின் புண்ணிய கதைகள் தீப வழிபாட்டின் மகத்துவத்தை உணர்த்தும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவும். பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஆன்மாக்கள் இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே, தீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத் தத்துவம்.

ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றுள் தூப - தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று. தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள். புஷ்ப தீபம்- பிரம்மன்; புருஷாமிருகம் - கலைமகள்; நாகதீபம்-நாகராஜர்; கஜ தீபம் - விநாயகர்; வியாக்ர தீபம்-பராசக்தி; ஹம்ச தீபம் - பிரம்மா; வாஜ்ய தீபம்- சூரியன்; சிம்ம தீபம்-துர்கை; சூல தீபம்-மும்மூர்த்திகள்; துவஜ தீபம்-வாயு; வ்ருஷப தீபம்-ரிஷபதேவர்; பிரமா தீபம்-துர்காதேவி; குக்குட தீபம்-கந்தப்பெருமான்; கூர்ம தீபம்-மகாவிஷ்ணு; ஸ்ருக் தீபம்-அக்னி; சக்தி தீபம்-பராசக்தி.
ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது, அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுவதுடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...