Saturday 10 March 2012

கோயம்புத்தூர் (Coimbatore)

 

கோயம்புத்தூர் (Coimbatore) தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த பெரிய நகரமாகும். இதே பெயரைக் கொண்ட மாவட்டத்தின் தலைமையிடமான இது தொழில் வளர்ச்சியிலும் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நிலையில் உள்ள நகரமாகும். தொழில் முனைவோர் கூடுதலாக உள்ள நெசவு மற்றும் பொறியியல் தொழிலகங்களின் மையமாக விளங்குகிறது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அவிநாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக் கழகங்களும் கோவை மாநகரை மையமாகக் கொண்டு இயங்குகின்றன. தொன்மையான கொங்குநாடு பகுதியைச் சேர்ந்த இந்த நகரம் இங்குள்ள ஆலைகளின் எண்ணிக்கையால் தென்னிந்திய மான்செஸ்டர் என்றும் அழைக்கப்படுகிறது. நகரத்திலும் புறநகர்ப்பகுதிகளும் 2. 1 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

பெயர்க்காரணம்

இப்பகுதியை பண்டைக்காலத்தில் கோசர்கள் ஆண்டதால் கோசன்புத்தூர்->கோவன்புத்தூர்->கோயம்புத்தூர் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

வரலாறு

கோயம்புத்தூரின் துவக்க காலம் குறித்த தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. பழங்குடிகளான இருளர்கள் முதன்மைக் குடிகளாக இருந்தனர். 9ஆம் நூற்றாண்டின் இடையில் இரண்டாவது சோழர் ஆட்சி எழுந்தபோது கோயம்புத்தூரை தன்னாட்சியின் கீழ் கொணர்ந்தது. அவர்கள் கோனியம்மன் கோவிலை மையமாகக் கொண்டு முறையான நகரமைப்பை ஏற்படுத்தினர். இப்பகுதியை பழங்குடி மக்கள்,குறிப்பாக கோசர்கள்ஆண்டு வந்தனர்.கோசன்புத்தூர் என்றிருந்ததே கோயம்புத்தூர் என மருவியது. கொங்கு மண்டலத்தின் முதன்மை நகரமாக விளங்கியது கோயம்புத்தூர்.
கரும்பு வளர்ப்பு நிலையம்,கோயம்புத்தூர், 1927
 
            உரோமர்களின் வணிகத்திற்கும் கோயம்புத்தூர் மையமாக இருந்ததாகத் தெரிகிறது. 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தில்லி சுல்தான்களின் கீழான மதுரையைச் சேர்ந்த இசுலாமியர் ஆட்சிப் புரிந்தனர். இவர்களது ஆட்சி விசயநகரப் பேரரசினால் முடிவுக்கு வந்தது. அவர்களது ஆட்சிக்காலத்தில் இப்பகுதியில் ஆந்திர, கர்நாடக மக்கள் குடிபெயர்ந்தனர்.1550களில் மதுரையில் விசயநகரப் பேரரசின் தளபதிகளாக இருந்த தெலுங்கு பேசும் நாயக்கர்கள் கோயம்புத்தூர் உள்ளிட்டப் பகுதிகளின் ஆட்சியாளர்களாக, பேரரசின் அழிவின் பின்னணியில், உருவெடுத்தனர். 1700களில் மதுரை நாயக்கர்களுக்கும் மைசூர் மன்னர்களுக்குமிடையே கோயம்புத்தூரில் சண்டை நடைபெற்றன. அப்போது 3000 பேர் வாழ்ந்த கோயம்புத்தூரின் ஆட்சி மைசூர் மன்னர்களின் கீழ் வந்தது.
       1760களில் மைசூரின் சிங்காதனத்தை ஹைதர் அலி கைப்பற்றினார்.அவர் பிரித்தானியருக்கு எதிராக செயல்பட்டார். ஆற்காடு நவாப் தோழமையில் பிரித்தானியர் இப்பகுதியில் வேரூன்றுவதை தடுத்தார். இதனை அவரது வாரிசான திப்பு சுல்தான் தொடர்ந்தார். 1799ஆம் ஆண்டு அவரது மறைவு வரை திப்பு சுல்தான் பிரித்தானியருடன் பல போர்களை நடத்தினார். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பிறகு மைசூர் முந்தைய ஆட்சியாளர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கோயம்புத்தூரை பிரித்தானியர் தங்களின் மதராசு மாகாணத்தில் இணைத்துக் கொண்டனர். 1801ஆம் ஆண்டு கொங்குநாட்டு பாளையக்காரரான தீரன் சின்னமலை மலபார் மற்றும் மைசூர் படைகளின் ஆதரவுடன் பிரித்தானியருடன் போர் புரிந்தார். இப்போரின் முடிவில் 1804ஆம் ஆண்டு கோயம்புத்தூர் புதியதாக நிறுவப்பட்ட கோயம்புத்தூர் மாவட்டத்தின் தலைநகராக்கப்பட்டது. 1848ஆம் ஆண்டு நகராட்சி தகுதி வழங்கப்பட்டது. பிரித்தானிய வணிகரும் வள்ளலுமான சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் என்பவர் முதல் நகரவைத் தலைவரானார். அவரால் 1862ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஸ்டேன்ஸ் பள்ளி இன்றும் கோவை நகரின் முதன்மையான கல்விக்கூடங்களில் ஒன்றாக விளங்குகிறது.
1981ஆம் ஆண்டு அருகாமையிலிருந்த சிங்காநல்லூர் நகராட்சியை இணைத்து மாநகராட்சியாக உயர்வு பெற்றது.

புவியியல்

நகர பேருந்து நிலையத்தை ஒட்டியுள்ள சாலை
 
      கோயம்புத்தூர் தமிழகத்தின் மேற்கு ஓரத்தில் கேரள மாநிலத்தை ஒட்டி அமைந்துள்ளது. இதனைச் சுற்றி மேற்கில் மேற்குத் தொடர்ச்சி மலையும் வடக்கில் நீலகிரி பல்லுயிர் வலயமும் பாதுகாக்கப்பட்டக் காடுகளும் உள்ளன.கிழக்குப் பகுதி வறண்ட நிலமாக உள்ளது. மேற்கில் உள்ள பாலக்காட்டு கணவாய் கேரளத்தின் வாயிலாக உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையினை அடுத்து உள்ளதால் இம்மாவட்டத்தில் பல விலங்கு வகைகள் காணக்கிடைக்கின்றன.

ஏரிகளும் குளங்களும்

உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள பெரியகுளம்.
 
வ.உ.சி பூங்காவில் பறவைகள்.
 
கோவையிலுள்ள வ.உ.சி பூங்காவின் முகப்பு.
 
வ.உ.சி பூங்காவிலுள்ள ஓர் நீரூற்று.
 
      பல ஏரிகளும் குளங்களும் அந்நாட்களில் வெட்டப்பட்டிருக்கின்றன. கோவை நகரில் ஒன்பது ஏரிகள் உள்ளன. சில: சிங்காநல்லூர் (குளம்) ஏரி, குறிச்சி (குளம்) ஏரி, வாலாங்குளம் (குளம்) ஏரி, கிருஷ்ணாம்பதி (குளம்) ஏரி, முத்தண்ணன் (குளம்) ஏரி, செல்வசிந்தாமணி (குளம்) ஏரி, பெரியகுளம் (இது உக்கடம் பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது). இந்த நீர்நிலைகள் நொய்யல் ஆற்றிலிருந்து நீர் பெறுகின்றன.
    பறவைகள், விலங்குகள், ஊர்வன, நிலநீர் வாழிகள், மீன்கள் என பல்லுயிர் ஓம்பலுக்கு நகரமைப்பின் ஆதாரமாக இந்த நீரிடங்கள் அமைகின்றன. கோவையின் இந்த நீர்நிலைகள் 125 வகையான பறவைகளின் இருப்பிடமாக உள்ளன. நாடோடிப் பறவைகள் மிகவும் கூடுதலாக ஆகத்து - அக்டோபர் மாதங்களில் வருகின்றன. கூழைக்கடா, நீர்க்காகம், பாம்புத்தாரா, நீலவண்ண தாழைக்கோழி, நாமக்கோழி முதலிய பறவைகள் இந்த ஏரிகளில் காணலாம்.
தவிர, காட்டு யானைகள், காட்டுப் பன்றிகள், சிறுத்தைகள், புலிகள், எருமைகள், பலவகை மான்கள் போன்ற விலங்குகளைக் காணலாம். சுற்றியுள்ள வனப்பகுதிகளில் தேக்கு, சந்தன மரம், ரோசுவுட் மரம் மூங்கில்கள் வளர்கின்றன.

பூங்காக்கள்

     நகரில் பல பூங்காக்கள் உள்ளன. வ.உ.சிப் பூங்கா இவற்றில் முதன்மையான தொன்றாகும். குறிப்பிடத்தக்க பிற பூங்காக்கள்:தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பூங்கா, ரோசுகோர்சு பூங்கா,பாரதிப் பூங்கா,காந்திப் பூங்கா.

வானிலை

தட்பவெப்பநிலை வரைபடம்
கோயம்புத்தூர்
பெ மா மே ஜூ ஜூ் செ டி
 
 
14
 
30
18
 
 
12
 
32
19
 
 
19
 
35
21
 
 
53
 
35
23
 
 
76
 
34
23
 
 
38
 
31
22
 
 
57
 
30
22
 
 
42
 
31
22
 
 
56
 
32
22
 
 
153
 
31
22
 
 
123
 
29
21
 
 
50
 
29
19
வெப்பநிலை (°C)
மொத்த மழை/பனி பொழிவு (மிமீ)
கோயம்புத்தூரின் வானிலை மிகவும் புகழ் பெற்றது. உடலுக்கு இதமான, குளிர்ச்சியான,பிற தென்னிந்திய நகரங்களைப் போன்று கூடுதல் வெப்பமில்லாத வானிலையாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம் கடல்மட்டத்திற்கு 398 மீட்டர் உயரத்தில் உள்ளது. வேனிற்காலம் மற்றும் குளிர்காலத்தில் வெப்பநிலை 35°C முதல் 18°வரை உள்ளது.  மிகக் கூடுதலாக பதியப்பட்ட வெப்பநிலை 41 °C மற்றும் மிகக்குறைந்த அளவு வெப்பம் 12 °C.
பாலக்காட்டுக் கணவாயின் பயனாக மாவட்டத்தின் பெரும்பகுதி சூன் முதல் ஆகத்து வரை தென்மேற்கை பருவ மழையைப் பெறுகிறது. சற்றே வெப்பமான செப்டம்பரை அடுத்து அக்டோபரில் வடகிழக்கு பருவமழை துவங்குகிறது. இதனால் அக்டோபர்,நவம்பர் மாதங்களில் மழை பெறுகிறது. ஆண்டுக்கு ஏறத்தாழ 700 மி.மீ மழை பெறுகிறது.  நகரின் முழுவருட நீர்த்தேவைகளை எதிர்கொள்ள இந்த மழையளவு போதுமானதாக இல்லாதிருப்பினும், சிறுவாணி,அத்திக்கடவு போன்ற சிற்றாறுகள் நகரின் தேவைகளை பூர்த்தி செய்கின்றன. A
பெரும்பாலும் கரிசல் மண்ணாக இருப்பதால் பருத்தி விளைச்சலுக்கு மிகவும் ஏற்றதாக விளங்குகிறது. கோவை 1900ஆம் ஆண்டு ரிக்டர் அளவில் 6.0 கொண்ட நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் நிலநடுக்க வகைப்படுத்தலில் III/IV வகுப்பில் உள்ளது. கோவை மாவட்டத்தில் ஆனைகட்டியில் சலீம் அலி பறவையியல் மற்றும் இயற்கையியல் மையம் அமைந்துள்ளது.

மக்கள்தொகையியல் புள்ளிவிவரம்

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, கோவை நகராட்சி எல்லைக்குள் மக்கள்தொகை 930,882 . அண்மைய மதிப்பீடுகள் 15 இலக்கமாக (1.5 மில்லியன்) மதிப்பிடுகின்றன.  ஆண்கள் 52% பெண்கள் 48% உள்ளனர்.கல்வியறிவு பெற்றோர் 78% ஆக தேசிய சராசரி 59.5%ஐவிட கூடுதலாக உள்ளது. ஆண்களின் கல்வியறிவு விழுக்காடு 81% ஆகவும் பெண்களின் விழுக்காடு 74%ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்கு குறைந்தவர் தொகை 11% ஆகும். இங்கு பேசப்படும் தமிழ் கொங்குதமிழ் என்ற தொன்மையான வழக்கு மொழியாகும்.
நகரின் பெரும்பான்மை மதத்தினராக இந்துக்கள் உள்ளனர். குறிப்பிடத்தக்க தொகையில் இசுலாமியரும் கிறித்தவர்களும் உள்ளனர். குறைந்த அளவில் சமணரும் சீக்கியரும் அண்மைக்காலத்தில் குடிபெயர்ந்துள்ளனர். கொங்கு வேளாளர் கவுண்டர்கள்,நாயக்கர்கள் பெரும்பான்மையான இனத்தவர் ஆகும். பிற இனத்தவர்களில் விஜயநகர்ப் பேரரசு காலத்தில் குடிபெயர்ந்த நாயக்கர்கள் (நாயுடுக்கள்), செட்டியார்கள் முக்கியமானவர்களாவர். கேரளத்தின் பாலக்காடு மாவட்ட மலையாளிகளும் வட இந்திய மார்வாரிகளும் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.

நிர்வாகம்

திவான்பகதூர் சாலை (டிபி ரோட்), ஆர் எஸ் புரம், கோவை
 
     கோவை ஓர் மாநகராட்சியாகும். தவிர, மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். மாநகராட்சிக்கு மேயர் தலைமை ஏற்கிறார். இவருக்குத் துணையாக கவுன்சிலர்களும் துணை மேயரும் உள்ளனர். இவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தவிர அரசுப்பணி சேவையைச் சேர்ந்த மாநகராட்சி ஆணையர் வழக்கமான ஆட்சிப்பணியை மாநகராட்சி அவையின் வழிகாட்டுதலின்படி நடத்துகிறார். மாவட்ட நிர்வாகத்தை மாவட்ட ஆட்சியர் ஏற்கிறார். மாவட்ட நீதிமன்றம் கோயம்புத்தூரின் நீதி நிர்வாகத்தை மேற்பார்வையிடுகிறது. மாநிலத்திலேயே மிகக் கூடுதலான வருவாயை ஈட்டிக் கொடுத்தாலும் நகரத்தின் கட்டுமானத் தேவைகளுக்கான நிதி மாநில அரசிடமிருந்து போதுமான அளவு கிடைப்பதில்லை என்ற குறை உள்ளது.

சட்டம் ஒழுங்கு

    அமைதியான தொழில் வணிக நகரான கோவையில் 1984ஆம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலையை யடுத்து பெருமளவு கடையுடைப்புகளும் கொள்ளைகளும் நிகழ்ந்தன. ஒற்றுமையாக வாழ்ந்த இந்துக்களுக்கும் இசுலாமியருக்கும் இடையே 1980களில் புகையத் தொடங்கிய பகை 1990களில் கோயம்புத்தூரின் மேற்குப்பகுதியில் பெரும் கலவரமாக வெடித்தது. 1998ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புகள் இப்பகையை வளர்த்தது. ஆயினும் தமிழகக் காவல்துறையின் தீவிர கண்காணிப்பை அடுத்து தற்போது குற்றங்கள் வெகுவாகக் குறைந்துள்ளன.

அரசியல்

நகரத்தில் ஐந்து சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன:கோயம்புத்தூர் கிழக்கு,கோயம்புத்தூர் மேற்கு, சிங்காநல்லூர், பேரூர், கவுண்டன்பாளையம்.
நகரத்தின் வடக்கே 20% பகுதி நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ளது. கோவை மேற்கு,கோவை கிழக்கு சட்டமன்றத்தொகுதிகள் உள்ளடக்கியது கோவை நாடாளுமன்றத் தொகுதி ஆகும். 10% நகரப்பகுதி பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியிலும் உள்ளது.

முக்கிய இடங்கள்

மருதமலைக் கோவில்
  • பேரூர் பட்டீஸ்வரஸ்வாமி கோவில்: பங்குனி உத்திரத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படும். சிவன், பட்டீஸ்வரனாகவும், பார்வதி பச்சை நாயகியாகவும் எழுந்தருளியுள்ளார்கள். கரிகால் சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோவில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கனகசபை மண்டபத்திலும், இதர மண்டபங்களிலும் அற்புதமான சிற்ப வேலைப்பாடுகள் காணத்தக்கவை. பேரூர் ஆதீனமும் இங்கு அமைந்துள்ளது.
  • மருதமலை முருகன் கோவில்: நகரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சிறிய குன்றின் மீது அமைந்துள்ள கோவில் முருகனின் ஆறு படை வீடுகளுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் பெற்ற கோவிலாகும்.
  • கோனியம்மன் திருக்கோவில் கோவையின் மற்றுமொரு புகழ்பெற்ற கோவிலாகும். கி.பி பதின்மூன்றாம் நூற்றாண்டில் ‘இருளர்கள்’ கட்டியதாக வரலாறு தெரிவிக்கிறது.சேரர்களின் படையெடுப்பிற்கு பயந்து கோட்டை கட்டி கோனியம்மனை காவல்தெய்வமாக பிற்காலத்தில் ஆண்ட இளங்கோசர்கள் வழிபட்டனர். கோவையின் மையப்பகுதி மக்கள் இன்றும் திருவிழாவின் போது கோவிலில் தீச்சட்டி ஏற்றியபிறகு ஊரை விட்டு செல்வதில்லை. பிற்காலத்தில் மைசூர் அரசர்கள் இக்கோவிலை புனரமைத்து கோனியம்மனை தேவி மகிசாசுரமர்த்தினியாக வழிபட்டதாக தெரிகிறது.
  • ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில்: நகர் மத்தியில் வைசியாள் தெருவில் அமைந்துள்ளது. நவராத்திரி உற்சவங்கள் சிறப்பாக கொண்டாடப்படும்.
  • கோவைக் குற்றாலம்: கோவையிலிருந்து 37 கி.மீ. தொலைவில் மரங்கள் அடர்ந்த வனப்பகுதியில், சிறுவாணி நதியில் அமைந்துள்ளது. வனப்பகுதி என்பதால் மாலை 5 மணிக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை.
  • வ.உ.சி. பூங்கா: வ.உ.சிதம்பரம் பிள்ளை நினைவாக அமைக்கப்பட்ட பூங்கா. சிறு மிருகக்காட்சி சாலை, சிறுவர் ரயில், சிறுவர் விளையாட்டுக் கருவிகள் ஆகியவை உள்ளன. அருகிலுள்ள விளையாட்டரங்கில் நடக்கும் கால்பந்து போட்டிகளும் அரசியல் மற்றும் கலைநிகழ்ச்சிகளும் கோவையின் உயிரோட்டமாக விளங்குகின்றன.
கல்லூரிகள் நிறைந்த அவினாசி சாலை
 
அவினாசி சாலை - பூசாகோ தொழில்நுட்ப கல்லூரி அருகே

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

போக்குவரத்து

வான்வழி

      கோயம்புத்தூர் நகரத்திற்கு இரு வானூர்தி நிலையங்கள் உள்ளன: நகரிலிருந்து 11 கி.மீ தொலைவில் பீளமேட்டில் உள்ள கோவை பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் 15 கி.மீ தொலைவில் உள்ள இந்திய வான்படையின் சூலூர் வான்தளம். கோவை பன்னாட்டு வானூர்தி நிலையத்திலிருந்து இந்தியாவின் முதன்மையான நகரங்களுக்கு உள்நாட்டு சேவைகளும் சார்ஜா, சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு வெளிநாட்டுச் சேவைகளும் இயக்கப்படுகின்றன.
கோவை வானூர்தி நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கப்பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. இதன் நீளம் 9,760 feet (2 m) 747 SP, A 330, 747-300B, 747-300 ER, 747-400 மற்றும் 747-200 போன்ற ""வயிறு அகல" பெரிய ஜெட் இரக விமானங்களை இயக்க வசதி அளிக்கும்.

தொடர் வண்டி

கோயம்புத்தூர் தொடர்வண்டிநிலையத்தின் முன்புறத் தோற்றம்
 
      கோயம்புத்தூருக்கு தொடர்வண்டி சேவை 1872ஆம் ஆண்டில் தொடங்கியது. அப்போது போத்தனூர் - சென்னை இருப்புப் பாதைப் போடப்பட்டது. அகலப்பாதை தொடர்வண்டிகள் கோவையை தமிழ்நாட்டின் மற்றும் இந்தியாவின் முதன்மை நகரங்களுடன் இணைக்கிறது. போத்தனூருக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே இருந்த மீட்டர்பாதை இருப்புப் பாதை மே 2009 முதல் மூடப்பட்டு பாட்டை மாற்றப்படுகிறது. தென்னக இரயில்வேயின் மிகக் கூடுதலான வருவாய் ஈட்டும் தொடர்வண்டி நிலையமாக கோயம்புத்தூர் சந்திப்பு உள்ளது. சேலம் கோட்டத்தின் வருவாயில் 42.17% இந்த நிலையம் பங்களிக்கிறது. கோவை வடக்கு சந்திப்பு மற்றும் இருகூர் பிற முக்கிய தொடர்வண்டி சந்திப்புகளாகும்.

சாலை


கோவையின் முதன்மை சாலையொன்று
 
NH67 நாகப்பட்டிணம்-குண்டுலுபேட்டை, NH47 சேலம்- 
நகரில் ஆறு பிரதான சாலைகளும் மூன்று தேசிய நெடுஞ்சாலைகளும் உள்ளன

  லார்சன் & டூப்ரோ நிறுவனத்தால் 1998ஆம் ஆண்டு கட்டப்பட்ட புதிய புறவழிச்சாலை நகரில் போக்குவரத்தை சீர்செய்யப் பெரிதும் உதவியுள்ளது.
கோவையில் உள்ள முதன்மை பேருந்து நிறுத்தங்கள்:
    நகரில் மக்கள்தொகைக்கும் வாகனத்தொகைக்கும் உள்ள வீதம் மிக கூடுதலானது. 1921ஆம் ஆண்டு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டன. நகரின் பெரும்பான்மையான இடங்களுக்கும் புறநகரில் உள்ள கிராமங்களுக்கும் இச்சேவைகள் மிகுந்த பயனளிக்கின்றன. மாநிலப் போக்குவரத்தின் கோவை கோட்டத்தின் உள்ளூர் பேருந்துகள் 500 பேருந்துகளைக் கொண்டு 119 தடங்களில் சேவை வழங்குகின்றன. 800 நகரப்பேருந்நதுகள் 228 தடங்களில் சேவை புரிகின்றன.
கோவையில் மூன்றுசக்கர தானிக்கள்.
 
      கோவை நகரில் மூன்று சக்கர தானிக்கள் சேவை புரிகின்றன. ஆனால் அளவுக்கருவியினை இயக்காது பயணிகளை ஏமாற்றுவதாக இவர்களுக்கு கெட்டபெயர் உண்டு. புதிதாக இயக்கப்படும் விளி வாடகையுந்துகள் இதனால் பரவலாக விரும்பப்படுகின்றன.

பொருளாதாரம்

     நகரின் முதன்மையான தொழில்துறைகள் பொறியியலும் நெசவும் ஆகும்.தமிழ்நாட்டிலேயே மிகக் கூடுதலாக வருவாய் ஈட்டும் மாவட்டமாக உள்ளது. சுற்றுப்புற பருத்தி வேளாண்மையை ஒட்டி இங்கு அமைந்துள்ள நெசவாலைகளின் கூடுதலான எண்ணிக்கை இதற்கு தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற சுட்டுப்பெயரினைப் பெற்றுத் தந்திருக்கிறது. இம்மாவட்டத்தில் பல உள்ளாடை பின்னும் தறிகளும் கோழிப்பண்ணைகளும் கூடுதலாக உள்ளன. பெரும்பாலான தொழிற்சாலைகளை குடும்ப நிதி அல்லது சமூக ஒருங்கிணைப்பு உதவியுடன் சிறு தொழில்முனைவோர் நடத்துகின்றனர். 1920களில் துவங்கிய தொழில் துறை, இந்திய விடுதலைக்குப் பின்னர் வளர்ச்சி கண்டு அரசு அரவணைப்போ பெரும் வணிகக் குழாம்களின் வரவோ இன்றி தன்னிறைவுடன் ஏற்றம் கண்டுள்ளது. தமிழ்நாட்டின் முன்னணி தொழிலதிபர்களின் பட்டியலில் பெரும்பான்மையான முதலிடங்களை கோவைத் தொழில்முனைவோர் பிடித்துள்ளனர். தற்போது தகவல் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட பிறநாட்டு உள்ளலுவலகப் பணிகளை மேலாண்மையிடும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

துவக்க கால தொழில் வளர்ச்சி

சர் ராபர்ட் ஸ்டேன்ஸ்
 
       பிரித்தானியர் கோயம்புத்தூரை ஆண்டபோது இதனை மலபார் கரையிலிருந்தத் துறைமுகங்களுடன் இணைத்தது. பின்னர் பிரித்தானியர் 1862ஆம் ஆண்டு தொடர்வண்டி இணைப்புகள் ஏற்படுத்தியபோது போத்தனூர் வழியாக கொச்சிக்கு இருப்புப் பாதைப் போடப்பட்டது. இது இங்கிலாந்திற்கு கச்சாப்பொருள்களைகொண்டுசெல்ல அவர்களுக்கு உதவியது.
1888 ஆம் ஆண்டு, சர் ராபர்ட் ஸ்டேன்ஸ் இன்று ஸ்டேன்ஸ் மில் என்று பரவலாக அறியப்படும் கோயம்புத்தார் நூற்றல் மற்றும் நெய்தல் ஆலையை நகரின் வடக்குப் பகுதியில் துவக்கினார். கூடவே ஓர் குளம்பி சீராக்க பட்டறையையும் (coffee curing factory) திருச்சிச் சாலையில் நிறுவினார்.இதுவே கோவையில் பெருமளவு நெசவாலைகள் வருவதற்கு அடிக்கோளிட்டது. மேலும் பலர் தங்கள் நிறுவனங்களை நிறுவிட சர் ராபர்ட் மிகவும் உதவி புரிந்தார்.  கோவைக்கு இவராற்றிய இந்த சேவைகளுக்காக கைசர்-இ-இந்த் தங்கப்பதக்கத்தையும் பின்னர் 1920ஆம் ஆண்டு 'சர்' பட்டத்தையும் கொடுத்து கௌரவிக்கப்பட்டார். 1910ஆம் ஆண்டு காளீசுவரா மில்லும் சோமசுந்தரா மில்லும் நிறுவப்பட்டன. பாப்பநாயக்கன்பாளையத்தில் 1911ஆம் ஆண்டு இலட்சுமி மில் இயங்கத் தொடங்கியது. 1930களில் பைக்காரா மின்னாக்கத் திட்டத்திலிருந்து குறைந்த கட்டணத்தில் மின்சக்தி கிடைத்ததையொட்டி மேலும் பல துணியாலைகள் நிறுவப்பட்டன.
1900ஆம் ஆண்டு சுவாமிக்கண்ணு வின்சென்ட் என்ற இரயில்வே பொறியாளர் தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக வெரைட்டி ஹால் (தற்போது டிலைட் திரையரங்கம்) என்னும் திரையரங்கத்தைக் கட்டினார். அவரது மகன் பால் வின்சென்ட் பேசும் திரைப்படங்களை தென்னிந்தியாவில் அறிமுகம் செய்தார். 1922ஆம் ஆண்டு நாராயணசாமி நாயுடு கரும்பு நசுக்கும் மற்றும் பருத்தி சுத்தப்படுத்தும் பொறிகளை நிறுவினார்.இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் தண்டாயுதபாணி தொழிற்சாலையை நிறுவினார்.  அதே காலகட்டத்தில் ஜி.டி.நாயுடு அவரது தன்னிகரில்லா பேருந்து சேவையைத் துவக்கினார். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மின்னோடிக்கான பெருமையும் அவருக்குடையது. 1931ஆம் ஆண்டு பொள்ளாச்சி நாச்சிமுத்துக் கவுண்டர் துவக்கிய பேருந்து சேவையும் பலதுறைகளில் விரிந்து இன்று பலகோடி ரூபாய் மதிப்புள்ளக் குழுமமாக வளர்ந்துள்ளது.1940களில் ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்த டி.பாலசுந்தரம் நாயுடு செஃப்பீல்ட் பல்கலைக்கழகத்தில் படித்து வந்து நெசவுத் தொழில்நுட்பக் கருவிகளை தாமே வடிவமைத்து தயாரிக்கும் விதமாக டெக்ஸ்டூல் நிறுவனத்தை துவக்கினார்.
      கோவை 1930களிலும் 1940களிலும் திரைப்படத் தயாரிப்பிலும் முதன்மை பெற்றிருந்தது; இங்கிருந்த சென்ட்ரல் ஸ்டூடியோஸ் மற்றும் பட்சிராஜா ஸ்டூடியோஸ் அரங்குகளில் பல முன்னணி திரைக்கலைஞர்கள் தங்கள் கலைவாழ்வைத் துவங்கியுள்ளனர்.

தொழில்துறை இன்று

கோவை அருகே உள்ள ஓர் காற்றாலை.
 
கொடிசியா வளாகம், கோயம்புத்தூர்.
 
      கோவையின் தொழில்வளர்ச்சிக்கு கோவை மாவட்ட சிறுதொழிலதிபர்கள் சங்கம் (CODISSIA)(Coimbatore District Small Industries Association) முக்கியப் பங்காற்றி வருகிறது. இச்சங்கத்தின் தொழிற்கண்காட்சிக்கூடம் கொடிசியா வளாகம் பல பன்னாட்டு வணிகக் கண்காட்சிகளை நடத்த வழிவகுத்து கோவையின் சிறு தொழிலதிபர்களுக்கு பன்னாட்டு வணிகம் நடத்த உதவி புரிந்து வருகிறது.இதனை நாட்டின் தூண்கள் இல்லாத மிகப்பெரும் காட்சிக்கூடமாக லிம்கா சாதனையாளர் புத்தகம் குறிப்பிடுகிறது.
 துணித்துறை
     கோவையில் சிறுதும் பெரிதுமாகப் பல துணி தயாரிப்பு ஆலைகள் உள்ளன. இவற்றின் மேம்பாட்டினை வழிநடத்த மத்திய பருத்தி ஆய்வு மையம் மற்றும் தென்னிந்திய துணித்துறை தொழில்முனைவோர் சங்க ஆய்வகம் (SITRA) போன்றவை உள்ளன. அண்மை நகரான திருப்பூர் ஆண்டுக்கு ரூ.50,000 மில்லியன் மதிப்பளவு ஏற்றுமதியுடன் ஆசியாவிலேயே மிகப்பரந்த பின்னலாடை ஏற்றுமதி மையமாகவிளங்குகிறது.
 தகவல் தொழில்நுட்பம்
    தமிழ்நாட்டில் மென்பொருள் ஏற்றுமதியில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ளது. கோவையில் தகவல் தொழில்நுட்ப பூங்கா ஒன்று கோவை மருத்துவக் கல்லூரி அருகே அமைக்கப்பட்டுள்ளது. கோவை வணிகச் செயலாக்க அயலாக்கமையமாகவும் வளர்ந்து வருகிறது. உலகளவில்  அயலாக்க நகரங்களில் 17ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
கனரக தயாரிப்பு
     பூ.சா.கோ தொழிலகங்கள், சக்தி குழுமம் ஆகியன கோவையின் தயாரிப்பு தொழில் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. தற்போது மூடப்பட்டுள்ள சௌத் இந்தியா விசுகோசு வேலை வாய்ப்புகளை கூடுதலாக்குவதில் பங்கு வகித்தது. லார்சன் டூப்ரோ நிறுவனத்திற்கு 300 ஏக்கரா பரப்பளவுள்ள வளாகம் கோவையின் அடுத்துள்ள மலுமிச்சம்பட்டியில் உள்ளது. இங்கு அந்நிறுவனம் 2009ஆம் ஆண்டு வார்ப்படம் தயாரிக்கும் அமைப்பை இயக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. இலட்சுமி மெசின் வொர்க்ஸ், பிரீமியர் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ் (PRICOL),எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், சாந்தி கியர்ஸ், ரூட்ஸ் ஆகியன இங்கு இயங்கும் மேலும் சில தொழிலகங்கள்.
  தானி பாகங்கள்
    டெக்ஸ்டூல் இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திய அரசின் இராணுவத்திற்கு துப்பாக்கிகளின் முன்வடிவை அளித்திருந்தது. அவர்கள் 1960களில் முதல் உள்நாட்டிலேயே வடிவமைத்த தானுந்தியை தயாரித்தாலும் அப்போது நிலவிய அரசுக் கட்டுப்பாடுகளால் வெளிக்கொணர முடியாது போயிற்று. 1990 வரை பல முன்வரைவுகளை மேம்படுத்தினர். 1972ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதன்முறையாக உள்நாட்டுத் தயாரிப்பாக தானுந்து தீசல் இயந்திரத்தினை வடிவமைத்தனர். 1982ஆம் ஆண்டு தங்களுக்கான எண்ணிம கட்டுப்பாட்டு இயந்திரங்களையும் லேத்துகளையும் தாங்களே தயாரித்துக்கொண்டனர். அவர்களிடமிருந்து பிரிந்த ஜெயம் ஆட்டோமோடிவ்ஸ் இன்று மகிந்திரா, டாட்டா மோட்டார்ஸ், இந்துஸ்தான் மோட்டார்ஸ் ஆகிய தானுந்து தொழிலகங்களுக்கு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சேவைகளை கொடுத்து வருகிறது.
மாருதி சுசூக்கி மற்றும் டாட்டா மோட்டார்ஸ் கோவையிலிருந்தே அவர்களின் தேவைகளில் 30% தானுந்து பாகங்களை பெறுகின்றன. நகரத்தில் பல நகை ஏற்றுமதியில் ஈடுபடும் நகை தயாரிப்பாளர்களும் உள்ளனர். காற்றாலை மின் உற்பத்தியில் பெயர்பெற்ற சுசுலான் நிறுவனம் இங்கு தனது வார்ப்பாலை மற்றும் பட்டறையை அமைக்க திட்டமிட்டுள்ளது. கூடவே, காற்றாலைகளுக்கான பற்சக்கர மாற்றியை தயாரிக்கும் பெல்ஜிய நிறுவனம் ஹான்சென் டிரான்ஸ்மிசன் ரூ.940 கோடி திட்ட செலவில் தனது தயாரிப்பு வசதியை கட்டமைக்க திட்டமிட்டுள்ளது.
   ஈரமாவு அரவைப்பொறிகள்
      கோவை நகரில் 700 ஈரமாவு அரவைப்பொறி தயாரிப்பாளர்கள் மாதமொன்றிற்கு (மார்ச்,2005 படி) 75,000 பொறிகளை தயாரித்து வருகின்றனர். 2006ஆம் ஆண்டு கோவையிலும் அடுத்துள்ள ஈரோட்டிலும் தயாராகும் அரவைப்பொறிகளுக்கு கோயம்புத்தூர் ஈரரவைப்பொறி என்ற புவியியல் அடையாளம் வழங்கப்பட்டது.  இங்கு அரவைப்பொறி தயாரிப்பாளர்களுக்கான பொது கட்டமைப்பும் உள்ளது.
 நீரேற்றிகள் தயாரிப்பு
    கோவைக்கு இந்தியாவின் நீரேற்றி நகரம் என்ற அடைமொழியும் உண்டு. நகரத்தில் ஏராளமான சிறுதொழில் முனைவோர் முனைப்பில் நீரேற்றிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவின் நீரேற்றி மற்றும் விசைப்பொறி தயாரிப்பில் மூன்றில் இருபாகம் கோவையில் தயாராகிறது. ஈர அரவைப்பொறி தயாரிப்பில் கிட்டத்தட்ட முழுநிறை உரிமை கொண்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளைப் போலவே வேளாண்மை மாவட்டத்தினல் முக்கிய பங்கு வகிக்கிறது. பொது வணிகம் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அண்டை மாநிலமான கேரளாவிலிருந்தும் பலரை கவர்கிறது.கோவை நகரின் முதன்மை நீரேற்றி தயாரிப்பாளர்கள் சிலர்: ஷார்ப் தொழிலகங்கள்,சிஆர்ஐ பம்ப்ஸ், டெக்ஸ்மோ தொழிலகங்கள், டெக்கன் பம்ப்ஸ், கேஎஸ்பி பம்ப்ஸ்,

கல்வி

     தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில் கோவையின் பங்கு முக்கியமானது. 1867ஆம் ஆண்டு நடந்த முதல் தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி இறுதித் தேர்வில்( SSLC) கோவை மாணவர்கள் பங்கேற்றுள்ளனர். இங்குள்ள அரசு கலைக்கல்லூரி மிகப் பழமையான (1875-76) கல்லூரிகளில் ஒன்றாகும். இன்று கோயம்புத்தூரில் 24க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள், இரு மருத்துவக் கல்லூரிகள்,வான்படை நிர்வாகக் கல்லூரி, 75க்கும் மேலான கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், ஆறு பல்கலைக்கழகங்கள் 41,000க்கும் கூடுதலான மாணவர்களைக் கொண்டியங்குகின்றன.
மிகப் பழமையான பள்ளிகளாக தென்னிந்தியத் திருச்சபை (C.S.I.) ஆண்கள் உயர்நிலைப்பள்ளி (1831), ஸ்டேன்ஸ் உயர்நிலைப்பள்ளி (1862),புனித பிரான்சிஸ் ஆங்கிலோ இந்திய பெண்கள் உயர்நிலைப்பள்ளி (1880), பீளமேடு சர்வஜன உயர்நிலைப்பள்ளி (1910),சபர்பன் உயர்நிலைப்பள்ளி (1917) உள்ளன.
    வேளாண் துறையில் நாட்டில் அமைந்த முதல் ஒருசில கல்விக்கூடங்களில் கோவை வேளாண் கல்லூரி ஒன்று. அதன் வளர்ச்சி இன்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமாக பரிணமித்துள்ளது. உடன் கரும்பு (Sugarcane Breeding Institute) மற்றும் பருத்தி (Central Institute of Cotton Research) ஆராய்ச்சி நிலையங்களும் நிறுவப்பட்டுள்ளன.
பொறியியல் கல்வியிலும் 1945ஆம் ஆண்டு ஜி. டி. நாயுடு முதல் பொறியியல் கல்வி வழங்கும் ஹோப் கல்லூரியை துவக்கினார். இதுவே பின்னாளில் அரசினர் தொழிற்நுட்ப கல்லூரியாக உருவெடுத்தது. 1950களில் நிறுவப்பட்ட பூசாகோ தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கோவை தொழிற்நுட்பக் கழகம் (C.I.T) முன்னோடிகளாக அமைந்து இப்பகுதியின் தொழில் வளர்ச்சிக்கும் தமிழக/இந்திய தொழில் முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக உள்ளன.1986ஆம் ஆண்டு காருண்யா பல்கலைக்கழகம் துவக்கப்பட்டது.
   தி.சு.அவிநாசிலிங்கம் மற்றும் இராசம்மாள் தேவதாஸ் கூட்டணியில் மகளிர் மேற்கல்விக்கு கல்லூரி நிறுவப்பட்டு இன்று நிகர்நிலைப் பல்கலைக் கழகமாக வளர்ந்துள்ளது. மனையியல் பாடம் ஆரம்பிக்கப்பட்ட ஆரம்பக்கால வெகுசில கல்லூரிகளில் இதுவும் ஒன்று.
   1978ஆம் ஆண்டு அரசினர் சட்டக் கல்லூரி நிறுவப்பட்டு சுற்றுவட்டாரத்தின் சட்டக்கல்வி தேவைகளை நிறைவு செய்தது. மருத்துவக்கல்வி வழங்க கோவை மருத்துவக்கல்லூரி 1966ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1987ஆம் ஆண்டு தனியார் துறையில் பூ.சா.கோ மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வுக் கழகம் நிறுவப்பட்டது.
   கோவையில் பல புகழ் பெற்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. அவற்றில் சில பட்டியலிடப்பட்டுள்ளன:
  • ஜி.ஆர்.ஜி. பள்ளி
  • எஸ்.பி.ஒ.ஏ பள்ளி
  • கார்மல் கார்டன் பள்ளி
  • அவிலா பள்ளி
  • லிஸ்யூ மேனிலைப்பள்ளி
  • பாரதி மேல்நிலை பள்ளி
  • பாரதீய வித்யா பவன் பள்ளி
  • ஆஸ்ரம் மேல்நிலை பள்ளி
  • கிருஷ்ணா கல்லூரி
  • குமரகுரு கல்லூரி
  • சி.பி.எம். கல்லூரி
  • கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
  • ஸ்ரீ ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

விளையாட்டும் மனமகிழ்வும்

கரி தானுந்து விரைவுச்சாலையில் ஓர் தானுந்து ஓட்டப்போட்டி
 
      தானுந்து விளையாட்டுக்கள் நகரத்தின் முதன்மை இடம்பெற்ற விளையாட்டாக விளங்குகிறது. கோவையை இந்தியாவின் தானுந்து விளையாட்டுப்போட்டி தலைநகரம் என்றும் இந்திய தானுந்துவிளையாட்டு புறக்கடை என்றும் விளிப்பர். கோவையின் தொழிலதிபர்கள் சிலர்,கரிவரதன் போன்றோர், தங்கள் தானுந்து வடிவமைப்பை மாற்றுவதில் ஈடுபாடு கொண்டு பின்னர் தானுந்து பந்தயங்களில் பங்கெடுத்தனர். அவர்களது ஆர்வத்தினால் கோவையை நாட்டின் தானுந்து பந்தய மையமாக ஆக்கினர். நகரத்தில் ஃபார்முலா 3 பகுப்பைச் சேர்ந்த பந்தயச்சாலையும் மூன்று கோகார்ட் பந்தய சாலைகளும் உள்ளன. பார்முலா பந்தயம், விசையுந்து பந்தயம், கார்ட்டு பந்தயம் ஆகியவற்றிற்கு தேசிய சாதனைப் பந்தயங்கள் இங்குள்ள கரி தானுந்து விரைவுச்சாலையில் நடைபெறுகின்றன.  நெடுஞ்சாலைப் பந்தயங்களிலும் கோவை அணிகள் முதன்மை வகிக்கின்றன.ஃபார்முலா ஒன்று பந்தயத்தில் 2005ஆம் ஆண்டு பங்கெடுத்த கோவையின் நாராயண் கார்த்திகேயன் இவ்விளையாட்டில் பங்கெடுத்த முதல் இந்தியர். தொன்மையான தானுந்துகளை சேகரிப்பதும் கோவை தொழிலதிபர்களின் பொழுதுபோக்காகும்.

      நேரு விளையாட்டரங்கம் கால்பந்து போட்டிகளுக்காகக் கட்டப்பட்டப் போதும் இங்கு தடகள விளையாட்டுகளும் நடத்தப்படுகின்றன. தற்போது செயற்கை தடங்களுடன் நடுவில் கொரிய புல்தளம் அமைக்கப்பட்டுள்ளது.  தவிர பல விளையாட்டு மன்றங்களும் உள்ளன. புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை நிருபமா வைத்தியநாதன் கோவையைச் சேர்ந்தவர். கோயம்புத்தூர் குழிப்பந்தாட்ட மன்றம்  ஒர் 18 குழிகள் கொண்ட மைதானத்தை கொண்டுள்ளது. நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயம்புத்தூர் காஸ்மாபாலிட்டன் மன்றம்,  இந்தியர்களுக்கு மட்டுமே உறுப்பினராக உரிமை வழங்கியது.
  மனமகிழ்விற்கு பல புதிய தலைமுறை பொழுதுபோக்கு மையங்கள் மலர்ந்தாலும் நகரத்தின் பரவலான அரவணைப்பு திரையரங்குகளுக்கே ஆகும்

Ruler can do anything, so Born to rule the Galaxy

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...