Showing posts with label KONGU.K.NANDHAKUMAR. Show all posts
Showing posts with label KONGU.K.NANDHAKUMAR. Show all posts

Wednesday, 5 September 2018

குருவும் சீடனும்

ஒரு குருவும் சீடனும் அடர்ந்த காட்டின் வழியே நடந்து வந்து கொண்டிருந்தனர்.

இரவு நெருங்கவே ஒரு மரத்தின் அடியில் உறங்கி காலை நடை பயணத்தை தொடரலாம் என்று முடிவு செய்து ஒரு மரத்தை தேர்ந்தெடுத்து அதனடியில் உறங்கினர்.

மறுநாள் பொழுது விடிந்தது குருவும் சீடனும் ஆற்றில் நீராடினர் இருவரும் சூரியனை வணங்கினார்கள்

அப்பொழுது சூரிய பகவான் அசிரியாக தோன்றி

"வேத குருவே! உமக்கு வணக்கம் உங்கள் வணக்கத்தை நான் ஏற்றுக்கொண்டேன்

இன்று சூரியனான நான் மறைவதற்குள் உங்கள் சீடனின் உயிர் ஒரு ராஜநாகத்தால் தீண்ட பட்டு இறக்க நேரிடும். முடிந்தால் உங்கள் குரு வலிமையால் அவனை காப்பாற்றுங்கள் எ கூறி மறைந்தான்

குருவும் சூரியனை வாங்கிவிட்டு சீடனை கவலையோடு பார்த்தார்

இருவரும் சிறிது பழங்களை பறித்து பசியாறிய பின் அருகே உள்ள கோவிலின் இறைவனை வணங்கினர்

பின் ஊரை தாண்டி காடு வழியே நடந்து சென்றனர்.

சற்று களைப்பு ஏற்படவே இருவரும் ஒரு மரத்தடியில் அமர்ந்து கண் அயர சீடன் தூங்கினானே தவிர குரு தூங்கவில்லை.

சீடனின் உயிரை எப்படியாவது காப்பாற்றவேண்டும் என்று நினைத்து விழித்து இருந்தார்.

அப்பொழுது ஒரு ராஜநாகம் படம் எடுத்த படி சீடனின் அருகே அவனை கொல்ல வந்தது.

இதை பார்த்து பதை பதைத்த குரு ராஜநாகமே நில் என்று ஆணையிட்டார். ராஜநாகமும் குருவின் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நின்றது.

குரு ராஜநாகத்தைப் பார்த்து, "நீ என் சீடனின் உயிரை எடுக்கவே வந்துள்ளதை நான் அறிவேன். குரு பக்தி மிகுந்த சீடனை காப்பாற்றுவது ஒரு குருவின் கடமை. அதனால் என் சீடனின் உயிரை எடுக்க நான் அனுமதிக்கமாட்டேன்", என்று தடுத்தார்.

இப்பொழுது ராஜநாகம் பேசியது.

"வேத குருவே உங்கள் சீடனின் கழுத்தில் என் நாவை வைத்து ரத்தத்தை உறிஞ்சு எடுக்க வேண்டும் என்பது எனக்கு காலன் இட்ட கட்டளை. அனைத்தும் உணர்ந்த தாங்களே என் கடமையை செய்ய விடாமல் இப்படி தடுத்து என்னை நிறுத்தலாமா?" என்று முறை இட்டது.

உடனே குரு "அப்படி என்றால் என் சீடனின் ரத்தத்தை உறிஞ்ச வேண்டும் என்பது தானே உனக்கு காலன் இட்ட கட்டளை

சரி, சற்று பொறு! நானே அவனது ரத்தத்தை உனக்கு ஊட்டுகிறேன். அதை உறிஞ்சியதும் நீ உன் கடமையை செய்து விட்ட பலனை பெறுவாய்." என்று கூறி

ஒரு சிறு கத்தியை எடுத்த குரு அதை சீடனின் கழுத்தில் வைத்து ரத்தம் வரும் அளவு ஆழம் வைத்து கத்தியை கீறினர்.

தன் கழுத்தில் கூர்மையாய் எதோ கீறுவதை உணர்ந்த சீடன் கண் விழித்து பார்த்தான். குரு தன் கழுத்தில் கத்தியை வைத்து கீறுவதை உணர்ந்து பின் கண்மூடி சிறிதும் அசையாமல் படுத்த படியே இருந்தான்

சீடனின் பல துளி ரத்தத்தை எடுத்த குரு அதை ராஜநாகத்துக்கு ஊட்டிவிட்டார்

ராஜநாகமும் குருவின் சாபத்துக்கு நாம் ஆளாகாமல் நம் கடமை நிறைவேறியதே என்ற மகிழ்வோடு ரத்தத்தை உறிஞ்சி விட்டு வந்த வழியே சென்றது

குருவும் சீடனின் உயிரை காப்பாற்றிய நிம்மதியோடு அவனது கழுத்தில் முன்னமே தான் எடுத்து வைத்திருந்த பச்சிலை சாற்றை பிழிந்து சீடனின் கழுத்து பகுதியில் பற்று போட்டு விட்டு நிம்மதியோடு உறங்க சென்றார்.

சிறிது நேரம் இருவரும் நன்றாக களைப்பு தீர உறங்கிய பின் எழுந்து அமர்ந்தனர்.

அப்பொழுது சீடன் தன் கழுத்தில் பற்று இருப்பதை தொட்டு பார்த்து விட்டு எதுவும் குருவிடம் கேட்காமல்

"குருவே நாம் நடை பயணத்தை தொடரலாமா?" என்று கேட்டான்.

குரு புன்னகையுடன், "சீடனே! நீ சற்று முன் உறங்கும்போது நான் உன் கழுத்தில் கத்தி வைத்த போது நீ என்ன நினைத்தாய்? உனக்கு பயம் எதுவும் உண்டாகவில்லையா?" என்று புன்னகையுடன் கேட்டார்.

சீடன், "குருவே என் கழுத்தில் எதோ ஊறுவதை உணர்ந்தேன். விழித்தும் பார்த்தேன். கையில் கத்தியுடன் நீங்கள் என் கழுத்தை அறுப்பதை உணர்ந்தேன். ஆனால் என் குருநாதராகிய தாங்கள் எனக்கு எந்த கெடுதலும் செய்ய மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன். அதனால் நான் நிம்மதியாக உறங்கினேன்.

இப்பொழுது எழுந்ததும் என் கழுத்தில் உள்ள மூலிகை பற்றை பார்த்தேன் என் குருநாதராகிய உங்களுக்கு என் ஊன், உயிர், உள்ளம் அனைத்தும் அர்ப்பணம். அதனால், எனக்கு அதிலும் எந்த வித கவலையும் இல்லை." என்று கூறி பணிந்து நின்றான்.

குருவும் சீடனை ஆற தழுவி எழுந்து அவனோடு நடக்கலானார்.

நண்பர்களே! நமக்கு விதித்த படி நடக்கும் நல்லது, கெட்டது எல்லாவற்றுக்கும் இறைவனே பொறுப்பு என்று அவனை சரணடைந்து விட்டால், நமக்கு நடக்க இருக்கும் தீமையும் இறைவன் அருளால் நன்மையாக நடக்கும்.

இதில் சீடன் தான் நாம்

குரு தான் என் அப்பன் ஆதி சிவன்.

ராஜநாகம் தான் நம் விதி
நன்றி இணையம்

Tuesday, 13 February 2018

1008 சிவ லிங்கம்



1 அகர லிங்கம் 2 அக லிங்கம்
3 அகண்ட லிங்கம்
4 அகதி லிங்கம் 5 அகத்திய லிங்கம் 6 அகழ் லிங்கம் 7 அகில லிங்கம் 8 அகிம்சை லிங்கம் 9 அக்னி லிங்கம் 10 அங்கி லிங்கம் 11 அங்கு லிங்கம் 12 அசரிய லிங்கம் 13 அசுர லிங்கம் 14 அசை லிங்கம் 15 அசோக லிங்கம் 16 அச்சு லிங்கம் 17 அஞ்சா லிங்கம் 18 அட்ட லிங்கம் 19 அட்ச லிங்கம் 20 அட்சதை லிங்கம் 21 அட்டோ லிங்கம் 22 அடிமுடி லிங்கம் 23 அடி லிங்கம் 24 அணணா லிங்கம் 25 அண்ட லிங்கம் 26 அணி லிங்கம் 27 அணு லிங்கம் 28 அத்தி லிங்கம் 29 அதழ் லிங்கம் 30 அதிபதி லிங்கம் 31 அதிர்ஷ்ட லிங்கம் 32 அதிய லிங்கம் 33 அதிசய லிங்கம் 34 அதீத லிங்கம் 35 அந்தார லிங்கம் 36 அந்தி லிங்கம் 37 அநந்தசாயி லிங்கம் 38 அநலி லிங்கம் 39 அநேக லிங்கம் 40 அப்ப லிங்கம் 41 அப்பு லிங்கம் 42 அபய லிங்கம் 43 அபி லிங்கம் 44 அபிநய லிங்கம் 45 அபிஷேக லிங்கம் 46 அம்பல லிங்கம் 47 அம்பி லிங்கம் 48 அம்புசி லிங்கம் 49 அம்ம லிங்கம் 50 அமல லிங்கம் 51 அமர லிங்கம் 52 அமராவதி லிங்கம் 53 அமிர்த லிங்கம் 54 அர்ச்சனை லிங்கம் 55 அர்ச்சுண லிங்கம் 56 அர்த்த லிங்கம் 57அரச லிங்கம் 58 அரவ லிங்கம் 59 அரங்க லிங்கம் 60 அரம்பை லிங்கம் 61 அரளி லிங்கம் 62 அரி லிங்கம் 63 அரிணி லிங்கம் 64 அரிமா லிங்கம் 65 அருக லிங்கம் 66 அருணை லிங்கம் 67 அருமணி லிங்கம் 68 அரும்பு லிங்கம் 69 அருளி லிங்கம் 70 அரூப லிங்கம் 71 அல்லி லிங்கம் 72 அலை லிங்கம் 73 அவைய லிங்கம் 74 அழகு லிங்கம் 75 அளத்தி லிங்கம் 76 அற லிங்கம் 77 அறிவு லிங்கம் 78 அன்பு லிங்கம் 79 அன்புரு லிங்கம் 80 அன்ன லிங்கம் 81 அனுதாபி லிங்கம் 82 அனுபூதி லிங்கம் 83 அஷ்ட லிங்கம் 84 ஆக்கை லிங்கம் 85 ஆகம லிங்கம் 86ஆகாய லிங்கம் 87 ஆசான லிங்கம் 88 ஆசிரிய லிங்கம் 89 ஆசி லிங்கம் 90 ஆட லிங்கம் 91 ஆடரி லிங்கம் 92 ஆண் லிங்கம் 93 ஆண்டி லிங்கம் 94 ஆணுரு லிங்கம் 95 ஆத்ம லிங்கம் 96 ஆதார லிங்கம் 97 ஆதி லிங்கம் 98 ஆதிரி லிங்கம் 99 ஆதிசேவி லிங்கம் 100 ஆதிரை லிங்கம் 101 ஆதினா லிங்கம் 102 ஆபேரி லிங்கம் 103 ஆமிர லிங்கம் 104 ஆமை லிங்கம் 105 ஆய லிங்கம் 106 ஆயதி லிங்கம் 107 ஆர்த்தி லிங்கம் 108 ஆரண்ய லிங்கம் 109 ஆரண லிங்கம் 110 ஆராதனை லிங்கம் 111 ஆராபி லிங்கம் 112 ஆரூர லிங்கம் 113 ஆரோக்ய லிங்கம் 114 ஆலகால லிங்கம் 115 ஆலவாய் லிங்கம் 116 ஆலால லிங்கம் 117 ஆலி லிங்கம் 118 ஆவார லிங்கம் 119 ஆவி லிங்கம் 120 ஆவே லிங்கம் 121 ஆவுடை லிங்கம் 122 ஆழி லிங்கம் 123 ஆனந்த லிங்கம் 124 இக்கு லிங்கம் 125 இசை லிங்கம் 126 இடப லிங்கம் 127 இணை லிங்கம் 128 இதய லிங்கம் 129 இந்திர லிங்கம் 130 இமய லிங்கம் 131 இமை லிங்கம் 132 இரட்டை லிங்கம் 133 இராம லிங்கம் 134 இலக்கிய லிங்கம் 135 இலாப லிங்கம் 136 இளைய லிங்கம் 137 இறவா லிங்கம் 138 இறை லிங்கம் 139 இனிமை லிங்கம் 140 ஈகை லிங்கம் 141 ஈசான்ய லிங்கம் 142 ஈட லிங்கம் 143 ஈடண லிங்கம் 144 ஈடித லிங்கம் 145 ஈடிலி லிங்கம் 146 ஈர்ப்பு லிங்கம் 147 ஈழ லிங்கம் 148 ஈஸ்வர லிங்கம் 149 ஈஸ்வரி லிங்கம் 150 உக்ர லிங்கம் 151 உச்சி லிங்கம் 152 உசித லிங்கம் 153 உடம்பி லிங்கம் 154 உடுக்கை லிங்கம் 155 உணர் லிங்கம் 156 உத்தம லிங்கம் 157 உத்ராட்ச லிங்கம் 158 உதய லிங்கம் 159 உதிர லிங்கம் 160 உப்பிலி லிங்கம் 161 உப்பு லிங்கம் 162 உப லிங்கம் 163 உபதேச லிங்கம் 164 உபய லிங்கம் 165 உமா லிங்கம் 166 உமை லிங்கம் 167 உயிர் லிங்கம் 168 உரி லிங்கம் 169 உரு லிங்கம் 170 உருணி லிங்கம் 171 உருமணி லிங்கம் 172 உவப்பு லிங்கம் 173 உழவு லிங்கம் 174 உழுவை லிங்கம் 175 உற்சவ லிங்கம் 176 உன்னி லிங்கம் 177 ஊக்க லிங்கம் 178 ஊசி லிங்கம் 179 ஊதா லிங்கம் 180 ஊருணி லிங்கம் 181 ஊழி லிங்கம் 182 ஊற்று லிங்கம் 183 எட்டி லிங்கம் 184 எட்டு லிங்கம் 185 எதனா லிங்கம் 186 எந்தை லிங்கம் 187 எம லிங்கம் 188 எருது லிங்கம் 189 எல்லை லிங்கம் 190 எளிய லிங்கம் 191 எழிலி லிங்கம் 192 எழுத்தறி லிங்கம் 193 என்குரு லிங்கம் 194 ஏக லிங்கம் 195 ஏகம லிங்கம் 196 ஏகா லிங்கம் 197 ஏகாம்பர லிங்கம் 198 ஏகாந்த லிங்கம் 199 ஏடக லிங்கம் 200 ஏந்திழை லிங்கம் 201 ஏம லிங்கம் 202 ஏர் லிங்கம் 203 ஏரி லிங்கம் 204 ஏவச லிங்கம் 205 ஏழிசை லிங்கம் 206 ஏறு லிங்கம் 207 ஏனாதி லிங்கம் 208 ஐங்கர லிங்கம் 209 ஐய லிங்கம் 210 ஐராவத லிங்கம் 211 ஒப்பிலா லிங்கம் 212 ஒப்பிலி லிங்கம் 213 ஒருமை லிங்கம் 214 ஒளி லிங்கம் 215 ஓசை லிங்கம் 216 ஓடேந்தி லிங்கம் 217 ஓம் லிங்கம் 218 ஓம்கார லிங்கம் 219 ஓவிய லிங்கம் 220 ஔடத லிங்கம் 221 ஔவை லிங்கம் 222 கங்கா லிங்கம் 223 கச்ச லிங்கம் 224 கண்ட லிங்கம் 225 கடம்ப லிங்கம் 226 கடார லிங்கம் 227 கடிகை லிங்கம் 228 கடை லிங்கம் 229 கதிர் லிங்கம் 230 கதலி லிங்கம் 231 கந்த லிங்கம் 232 கபால லிங்கம் 233 கபில லிங்கம் 234 கமல லிங்கம் 235 கயா லிங்கம் 236 கயிலை லிங்கம் 237 கர்ண லிங்கம் 238 கர்ப்ப லிங்கம் 239 கரண லிங்கம் 240 கரு லிங்கம் 241 கருட லிங்கம் 242 கருமை லிங்கம் 243 கருணை லிங்கம் 244 கல்ப லிங்கம் 245 கல்வி லிங்கம் 246 கலி லிங்கம் 247கலை லிங்கம் 248 கவி லிங்கம் 249 கற்பக லிங்கம் 250 கற்பூர லிங்கம் 251 கன்னி லிங்கம் 252 கன லிங்கம் 253 கனக லிங்கம் 254 கனி லிங்கம் 255 கஸ்தூரி லிங்கம் 256 கஜ லிங்கம் 257 கருணாகர லிங்கம் 258 காசி லிங்கம் 259 காஞ்சி லிங்கம் 260 காடக லிங்கம் 261 காத்த லிங்கம் 262 காதம்பரி லிங்கம் 263 காந்த லிங்கம் 264 காப்பு லிங்கம் 265 காம லிங்கம் 266 கார் லிங்கம் 267கார்த்திகைலிங்கம் 268 காரண லிங்கம் 269 கால லிங்கம் 270 காவி லிங்கம் 271காவிய லிங்கம் 272 காவேரி லிங்கம் 273 காளி லிங்கம் 274 காளத்தி லிங்கம் 275 காளை லிங்கம் 276 கான லிங்கம் 277கிண்கிணி லிங்கம் 278 கிரி லிங்கம் 279 கிரியை லிங்கம் 280 கிரீட லிங்கம் 281 கிருப லிங்கம் 282 கிள்ளை லிங்கம் 283 கீத லிங்கம் 284 கீர்த்தி லிங்கம் 285 கீர்த்தன லிங்கம் 286 குக லிங்கம் 287 குங்கும லிங்கம் 288 குஞ்சு லிங்கம் 289 குட லிங்கம் 290 குடுமி லிங்கம் 291 குண லிங்கம் 292 குணக்ரி லிங்கம் 293 குபேர லிங்கம் 294 குருதி லிங்கம் 295 குமர லிங்கம் 296 குமரி லிங்கம் 297 குமுத லிங்கம் 298 குல லிங்கம் 299 குழலி லிங்கம் 300 குழவி லிங்கம் 301 குழை லிங்கம் 302 குற்றால லிங்கம் 303 குன்று லிங்கம் 304 குண்டலி லிங்கம் 305 குந்த லிங்கம் 306 கும்ப லிங்கம் 307 குரவ லிங்கம் 308 குறிஞ்சி லிங்கம் 309 கூததாடி லிங்கம் 310 கூத்து லிங்கம் 311 கூர்ம லிங்கம் 312 கெஜ லிங்கம் 313 கேச லிங்கம் 314 கேசரி லிங்கம் 315 கேசவ லிங்கம் 316 கேடிலி லிங்கம் 317 கேதார் லிங்கம் 318 கேள்வி லிங்கம் 319 கைலாய லிங்கம் 320 கொங்கு லிங்கம் 321 கொடி லிங்கம் 322 கொடு லிங்கம் 323 கொளஞ்சி லிங்கம் 324 கொற்றை லிங்கம் 325 கொன்றை லிங்கம் 326 கோ லிங்கம் 327 கோகழி லிங்கம் 328 கோகுல லிங்கம் 329 கோட்டை லிங்கம் 330 கோடி லிங்கம் 331 கோண் லிங்கம் 332 கோண லிங்கம் 333 கோதண்ட லிங்கம் 334 கோதை லிங்கம் 335 கோப லிங்கம் 336 கோபி லிங்கம் 337 கோமதி லிங்கம் 338 கோல லிங்கம் 339 கௌசிக லிங்கம் 340 கௌதம லிங்கம் 341 கௌரி லிங்கம் 342 சக்தி லிங்கம் 343 சக்கர லிங்கம் 344 சகஸ்ர லிங்கம் 345 சகல லிங்கம் 346 சங்க லிங்கம் 347 சங்கம லிங்கம் 348 சங்கர லிங்கம் 349 சங்கு லிங்கம் 350 சஞ்சீவி லிங்கம் 351 சடாட்சர லிங்கம் 352 சடைமுடி லிங்கம் 353 சண்முக லிங்கம் 354 சத்திய லிங்கம் 355 சதங்கை லிங்கம் 356சதய லிங்கம் 357 சதா லிங்கம் 358 சதாசிவ லிங்கம் 359 சதுர் லிங்கம் 360 சதுர்த்தி லிங்கம் 361 சதுரங்க லிங்கம் 362 சதுரகிரி லிங்கம் 363 சந்த லிங்கம் 364 சந்திர லிங்கம் 365 சந்தன லிங்கம் 366 சந்தான லிங்கம் 367 சப்த லிங்கம் 368 சபா லிங்கம் 369 சம்பந்த லிங்கம் 370 சம்பு லிங்கம் 371 சமுத்திர லிங்கம் 372 சயன லிங்கம் 373 சர்வேஸ லிங்கம் 374 சரச லிங்கம் 375 சரீர லிங்கம் 376 சவரி லிங்கம் 377 சற்குண லிங்கம் 378 சஹான லிங்கம் 379 சற்குரு லிங்கம் 380 சாட்சி லிங்கம் 381 சாணக்ய லிங்கம் 382 சாதக லிங்கம் 383 சாதனை லிங்கம் 384 சாதி லிங்கம் 385 சாது லிங்கம் 386 சாந்த லிங்கம் 387 சாந்து லிங்கம் 388 சாம்ப லிங்கம் 389 சாமுண்டி லிங்கம் 390 சிகர லிங்கம் 391 சிகா லிங்கம் 392 சிகரி லிங்கம் 393 சிகை லிங்கம் 394 சிங்கார லிங்கம் 395 சிசு லிங்கம் 396 சித்தி லிங்கம் 397 சித்திரை லிங்கம் 398 சிந்தாமணிலிங்கம் 399 சிந்து லிங்கம் 400 சிநேக லிங்கம் 401 சிப்பி லிங்கம் 402 சிபி லிங்கம் 403 சிம்ம லிங்கம் 404 சிர லிங்கம் 405 சிரஞ்சீவி லிங்கம் 406 சிரபதி லிங்கம் 407 சிருஷ்டி லிங்கம் 408 சிலம்பு லிங்கம் 409 சிவ லிங்கம் 410 சிவகதி லிங்கம் 411 சிவாய லிங்கம் 412 சிற்பவ லிங்கம் 413 சினை லிங்கம் 414 சிஷ்ட லிங்கம் 415 சீதன லிங்கம் 416 சீதாரி லிங்கம் 417 சீமை லிங்கம் 418 சீர்மை லிங்கம் 419 சீற்ற லிங்கம் 420 சீனி லிங்கம் 421 சுக்கிர லிங்கம் 422 சுக லிங்கம் 423 சுகந்த லிங்கம் 424 சுகநிதி லிங்கம் 425 சுகுண லிங்கம் 426 சுடர் லிங்கம் 427 சுத்த லிங்கம் 428 சுதர்சண லிங்கம் 429 சுந்தர லிங்கம் 430 சுந்தரி லிங்கம் 431 சுப்பு லிங்கம் 432 சுமித்ர லிங்கம் 433 சுய லிங்கம் 434 சுயம்பு லிங்கம் 435 சுரபி லிங்கம் 436 சுருதி லிங்கம் 437 சுருளி லிங்கம் 438 சுரை லிங்கம் 439 சுவடி லிங்கம் 440 சுவடு லிங்கம் 441 சுவர்ண லிங்கம் 442 சுவாச லிங்கம் 443 சுவாதி லிங்கம் 444 சுனை லிங்கம் 445 சூட்சம லிங்கம் 446 சூர லிங்கம் 447 சூரி லிங்கம் 448 சூரிய லிங்கம் 449 சூல லிங்கம் 450 சூள்முடி லிங்கம் 451 சூளாமணி லிங்கம் 452 செக்கர் லிங்கம் 453 செங்கு லிங்கம் 454 செண்பக லிங்கம் 455 செந்தூர லிங்கம் 456 செம்ம லிங்கம் 457 செம்பாத லிங்கம் 458 செரு லிங்கம் 459 செருக்கு லிங்கம் 460 செல்வ லிங்கம் 461 செழுமை லிங்கம் 462 சேகர லிங்கம் 463 சேலிங்கம் 464 சேது லிங்கம் 465 சேர்ப்பு லிங்கம் 466 சேற்று லிங்கம் 467 சைல லிங்கம் 468 சைவ லிங்கம் 469 சொக்க லிங்கம் 470 சொப்பன லிங்கம் 471 சொர்க்க லிங்கம் 472 சொரூப லிங்கம் 473 சோம லிங்கம் 474 சோண லிங்கம் 475 சோபன லிங்கம் 476 சோலை லிங்கம் 477 சோழ லிங்கம் 478 சோழி லிங்கம் 479 சோற்று லிங்கம் 480 சௌந்தர்ய லிங்கம் 481 சௌந்தர லிங்கம் 482 ஞான லிங்கம் 483 தகழி லிங்கம் 484 தகு லிங்கம் 485 தங்க லிங்கம் 486 தச லிங்கம் 487 தட்சண லிங்கம் 488 தடாக லிங்கம் 489 தத்துவ லிங்கம் 490 தந்த லிங்கம் 491 தந்திர லிங்கம் 492 தமிழ் லிங்கம் 493 தர்பை லிங்கம் 494 தர்ம லிங்கம் 495 தருண லிங்கம் 496 தவ லிங்கம் 497 தளிர் லிங்கம் 498 தன லிங்கம் 499 தனி லிங்கம் 500 தவசி லிங்கம் 501 தாண்டக லிங்கம் 502 தாண்டவ லிங்கம் 503 தாமு லிங்கம் 504 தாய் லிங்கம் 505 தார லிங்கம் 506 தாழி லிங்கம் 507 தாழை லிங்கம் 508 தாள லிங்கம் 509 தான்ய லிங்கம் 510 தாரகை லிங்கம் 511 திக்கு லிங்கம் 512 திகம்பர லிங்கம் 513 திகழ் லிங்கம் 514 தியாக லிங்கம் 515 தியான லிங்கம் 516 திரி லிங்கம் 517 திரிபுர லிங்கம் 518 திரு லிங்கம் 519 திருமேனி லிங்கம் 520 திருவடி லிங்கம் 521 திருவாசக லிங்கம் 522 திருவாத லிங்கம் 523 திலக லிங்கம் 524 திவ்ய லிங்கம் 525 தீ லிங்கம் 526 தீட்சை லிங்கம் 527 தீர்க்க லிங்கம் 528 தீர்த்த லிங்கம் 529 தீப லிங்கம் 530 தீர லிங்கம் 531 தீர்ப்பு லிங்கம் 532 துதி லிங்கம் 533 துர்கை லிங்கம் 534 துருவ லிங்கம் 535 துலா லிங்கம் 536 துளசி லிங்கம் 537 துறவு லிங்கம் 538 தூங்கா லிங்கம் 539 தூண்டா லிங்கம் 540 தூமணி லிங்கம் 541 தூய லிங்கம் 542 தூளி லிங்கம் 543 தெங்கு லிங்கம் 544 தெய்வ லிங்கம் 545 தெரிவை லிங்கம் 546 தெளி லிங்கம் 547 தென்னவ லிங்கம் 548 தேக லிங்கம் 549 தேகனி லிங்கம் 550 தேகி லிங்கம் 551 தேச லிங்கம் 552 தேசு லிங்கம் 553 தேயு லிங்கம் 554 தேர லிங்கம் 555 தேவ லிங்கம் 556 தேவபத லிங்கம் 557 தேவாதி லிங்கம் 558 தேவு லிங்கம் 559 தேன் லிங்கம் 560 தேன்மணி லிங்கம் 561 தேன லிங்கம் 562 தேனுக லிங்கம் 563 தைரிய லிங்கம் 564 தொகை லிங்கம் 565 தொட்டி லிங்கம் 566 தொடி லிங்கம் 567 தொடைய லிங்கம் 568 தொண்டக லிங்கம் 569 தொண்டை லிங்கம் 570 தொல் லிங்கம் 571 தோகச லிங்கம் 572 தோண்டி லிங்கம் 573 தோணி லிங்கம் 574 தோத்திர லிங்கம் 575 தோரண லிங்கம் 576 தோரி லிங்கம் 577 தோழ லிங்கம் 578 தோன்ற லிங்கம் 579 தௌத லிங்கம் 580 தௌல லிங்கம் 581 நகமுக லிங்கம் 582 நகு லிங்கம் 583 நகை லிங்கம் 584 நங்கை லிங்கம் 585 நசை லிங்கம் 586 நஞ்சு லிங்கம் 587 நடன லிங்கம் 588 நடம்புரி லிங்கம் 589 நடு லிங்கம் 590 நதி லிங்கம் 591 நந்தி லிங்கம் 592 நம்பி லிங்கம் 593 நம லிங்கம் 594 நயன லிங்கம் 595 நர்மதை லிங்கம் 596 நலமிகு லிங்கம் 597 நவ லிங்கம் 598 நவமணி லிங்கம் 599 நவிர லிங்கம் 600 நற்குண லிங்கம் 601 நற்றுணை லிங்கம் 602 நறுமண லிங்கம் 603 நன்மணி லிங்கம் 604 நன்மை லிங்கம் 605 நனி லிங்கம் 606 நா லிங்கம் 607 நாக லிங்கம் 608 நாச்சி லிங்கம் 609 நாசி லிங்கம் 610 நாட லிங்கம் 611 நாடி லிங்கம் 612 நாத்திர லிங்கம் 613 நாத லிங்கம் 614 நாரண லிங்கம் 615 நாரணி லிங்கம் 616 நாரி லிங்கம் 617 நாபிச லிங்கம் 618 நாயன லிங்கம் 619 நாயாடி லிங்கம் 620 நாவ லிங்கம் 621 நாற்கர லிங்கம் 622 நான்மறை லிங்கம் 623 நான்முக லிங்கம் 624 நிகர் லிங்கம் 625 நித்தில லிங்கம் 626 நித்ய லிங்கம் 627 நிதர்சண லிங்கம் 628 நிதி லிங்கம் 629 நிபவ லிங்கம் 630 நிர்மல லிங்கம் 631 நிரஞ்சன லிங்கம் 632 நிரம்ப லிங்கம் 633 நிருதி லிங்கம் 634 நிமல லிங்கம் 635 நில லிங்கம் 636 நிலை லிங்கம் 637 நிவேத லிங்கம் 638 நிறை லிங்கம் 639 நிஜ லிங்கம் 640 நிசாக லிங்கம் 641 நீடு லிங்கம் 642 நீடுநீர் லிங்கம் 643 நீத்தவ லிங்கம் 644 நீதி லிங்கம் 645 நீர்ம லிங்கம் 646 நீரச லிங்கம் 647 நீரேறு லிங்கம் 648 நீல லிங்கம் 649 நீள்முடி லிங்கம் 650 நீறாடி லிங்கம் 651 நீறு லிங்கம் 652 நுதற் லிங்கம் 653 நுதி லிங்கம் 654 நூதன லிங்கம் 655 நெகிழ் லிங்கம் 656 நெஞ்சு லிங்கம் 657 நெட்ட லிங்கம் 658 நெடு லிங்கம் 659 நெய் லிங்கம் 660 நெற்றி லிங்கம் 661 நெறி லிங்கம் 662 நேச லிங்கம் 663 நேர் லிங்கம் 664 நைச்சி லிங்கம் 665 நைவேத்ய லிங்கம் 666 நொச்சி லிங்கம் 667 நோக்கு லிங்கம் 668 நோன்பு லிங்கம் 669 பசு லிங்கம் 670 பசுவ லிங்கம் 671 பசுபதி லிங்கம் 672 பஞ்ச லிங்கம் 673 பஞ்சாட்சர லிங்கம் 674 பட்டக லிங்கம் 675 படரி லிங்கம் 676 படிக லிங்கம் 677 பண்டார லிங்கம் 678 பண்டித லிங்கம் 679 பத்ம லிங்கம் 680 பத்ர லிங்கம் 681 பத்திர லிங்கம் 682 பதி லிங்கம் 683 பதிக லிங்கம் 684 பர்வத லிங்கம் 685 பரசு லிங்கம் 686 பரத லிங்கம் 687 பரம லிங்கம் 688 பரமாத்ம லிங்கம் 689 பரமேஸ்வர லிங்கம் 690 பரணி லிங்கம் 691 பரிதி லிங்கம் 692 பவண லிங்கம் 693 பவணி லிங்கம் 694 பவநந்தி லிங்கம் 695 பவழ லிங்கம் 696 பவாணி லிங்கம் 697 பவித்ர லிங்கம் 698 பளிங்கு லிங்கம் 699 பன்னக லிங்கம் 700 பனி லிங்கம் 701 பரகதி லிங்கம் 702 பராங்க லிங்கம் 703 பராபர லிங்கம் 704 பவநாச லிங்கம் 705 பா லிங்கம் 706 பாக்ய லிங்கம் 707 பாக லிங்கம் 708 பாச லிங்கம் 709 பாசறை லிங்கம் 710 பாசுர லிங்கம் 711 பாத லிங்கம் 712 பாதாள லிங்கம் 713 பாதி லிங்கம் 714 பாதிரி லிங்கம் 715 பார்வதி லிங்கம் 716 பாரதி லிங்கம் 717 பாராயண லிங்கம் 718 பாரி லிங்கம் 719 பாரிஜாத லிங்கம் 720 பாயிர லிங்கம் 721 பாலக லிங்கம் 723 பாலா லிங்கம் 723 பாவை லிங்கம் 724 பானு லிங்கம் 725 பாஷான லிங்கம் 726 பாகோட லிங்கம் 727 பாசுபத லிங்கம் 728 பாணிக லிங்கம் 729 பார்த்திப லிங்கம் 730 பாநேமி லிங்கம் 731 பாம்பு லிங்கம் 732 பாழி லிங்கம் 733 பிச்சி லிங்கம் 734 பிச்சை லிங்கம் 735 பிட்டு லிங்கம் 736 பிடரி லிங்கம் 737 பிடாரி லிங்கம் 738 பிடி லிங்கம் 739 பிண்ட லிங்கம் 740 பித்த லிங்கம் 741 பிதா லிங்கம் 742 பிம்ப லிங்கம் 743 பிரகதி லிங்கம் 744 பிரகாச லிங்கம் 745 பிரசன்ன லிங்கம் 746 பிரணவ லிங்கம் 747 பிரதர்சன லிங்கம் 748 பிரபாகர லிங்கம் 749 பிரபு லிங்கம் 750 பிரம்ம லிங்கம் 751 பிரம்பு லிங்கம் 752 பிரமிள லிங்கம் 753 பிராண லிங்கம் 754 பிராசித லிங்கம் 755 பிரிய லிங்கம் 756 பிரேம லிங்கம் 757 பிள்ளை லிங்கம் 758 பிழம்பு லிங்கம் 759 பிறவி லிங்கம் 760 பிறை லிங்கம் 761 பீச லிங்கம் 762 பீட லிங்கம் 763 பீடு லிங்கம் 764 பீத லிங்கம் 765 பீதகார லிங்கம் 766 பீதசார லிங்கம் 767 பீதமணி லிங்கம் 768 பீதாம்பர லிங்கம் 769 பீர லிங்கம் 770 பீம லிங்கம் 771 புகழ் லிங்கம் 772 புங்கவ லிங்கம் 773 புங்கவி லிங்கம் 774 புடக லிங்கம் 775 புண்ணிய லிங்கம் 776 புத்தி லிங்கம் 777 புத்ர லிங்கம் 778 புதிர் லிங்கம் 779 புது லிங்கம் 780 புரட்சி லிங்கம் 781 புரவு லிங்கம் 782 பராண லிங்கம் 783 புரி லிங்கம் 784 புருஷ லிங்கம் 785 புருவ லிங்கம் 786 புலரி லிங்கம் 787 புலி லிங்கம் 788 புவன லிங்கம் 789 புற்று லிங்கம் 790 புற லிங்கம் 791 புன்னை லிங்கம் 792 புனித லிங்கம் 793 புனை லிங்கம் 794 புஜங்க லிங்கம் 795 புஷ்கர லிங்கம் 796 புஷ்ப லிங்கம் 797 பூசனை லிங்கம் 798 பூத லிங்கம் 799 பூதர லிங்கம் 800 பூதி லிங்கம் 801 பூபதி லிங்கம் 802 பூபால லிங்கம் 803 பூதவணி லிங்கம் 804 பூர்ண லிங்கம் 805 பூர்த்தி லிங்கம் 806 பூர்வ லிங்கம் 807 பூரணி லிங்கம் 808 பூமித லிங்கம் 809 பூமுக லிங்கம் 810 பூவிழி லிங்கம் 811 பூலோக லிங்கம் 812 பூஜித லிங்கம் 813 பெண் லிங்கம் 814 பெண்பாக லிங்கம் 815 பெரு லிங்கம் 816 பேரின்ப லிங்கம் 817 பேழை லிங்கம் 818 பைரவி லிங்கம் 819பொன்னம்பலலிங்கம் 820 பொன்னி லிங்கம் 821 பொருந லிங்கம் 822 பொருப்பு லிங்கம் 823 பொழி லிங்கம் 824 பொய்கை லிங்கம் 825 போக லிங்கம் 826 போதக லிங்கம் 827 போதன லிங்கம் 828 போதி லிங்கம் 829 போற்றி லிங்கம் 830 போனக லிங்கம் 831 பௌதிக லிங்கம் 832பௌர்ணமி லிங்கம் 833 மகர லிங்கம் 834 மகவு லிங்கம் 835 மகா லிங்கம் 836 மகிழ லிங்கம் 837 மகுட லிங்கம் 838 மகுடி லிங்கம் 839 மகேச லிங்கம் 840 மகேஸ்வர லிங்கம் 841 மங்கள லிங்கம் 842 மஞ்சரி லிங்கம் 843 மஞ்சு லிங்கம் 844 மண லிங்கம் 845 மணி லிங்கம் 846 மதன லிங்கம் 847 மதி லிங்கம் 848 மந்தாரை லிங்கம் 849 மந்திர லிங்கம் 850 மயான லிங்கம் 851 மயூர லிங்கம் 852 மரகத லிங்கம் 853 மருக லிங்கம் 854 மருத லிங்கம் 855 மருது லிங்கம் 856 மலர் லிங்கம் 857 மழலை லிங்கம் 858 மவுலி லிங்கம் 859 மன்னாதி லிங்கம் 860 மனித லிங்கம் 861 மனோ லிங்கம் 862 மலை லிங்கம் 863 மாங்கல்ய லிங்கம் 864 மாசறு லிங்கம் 865 மாசி லிங்கம் 866 மாசிவ லிங்கம் 867 மாட்சி லிங்கம் 868 மாணிக்க லிங்கம் 869 மாதங்கி லிங்கம் 870 மாதவ லிங்கம் 871 மாதவி லிங்கம் 872 மாது லிங்கம் 873 மாதேவி லிங்கம் 874 மாமிச லிங்கம் 875 மாயை லிங்கம் 876 மாலை லிங்கம் 877 மார்க்க லிங்கம் 878 மிசை லிங்கம் 879 மிண்டை லிங்கம் 880 மீளி லிங்கம் 881 மீன லிங்கம் 882 முக்கனீ லிங்கம் 883 முக்தி லிங்கம் 884 முகுந்த லிங்கம் 885 முடி லிங்கம் 886 முத்து லிங்கம் 887 மும்மல லிங்கம் 888 முரசு லிங்கம் 889 முருக லிங்கம் 890 முல்லை லிங்கம் 891 முனி லிங்கம் 892 மூர்த்தி லிங்கம் 893 மூல லிங்கம் 894 மெய் லிங்கம் 895 மேக லிங்கம் 896 மேதினி லிங்கம் 897 மேவி லிங்கம் 898 மேனி லிங்கம் 899 மொழி லிங்கம் 900 மொட்டு லிங்கம் 901 மோட்ச லிங்கம் 902 மோன லிங்கம் 903 மோலி லிங்கம் 904 மௌன லிங்கம் 905 யதி லிங்கம் 906 யாக லிங்கம் 907 யாசக லிங்கம் 908 யாத்திரை லிங்கம் 909 யுக்தி லிங்கம் 910 யுவ லிங்கம் 911 யோக லிங்கம் 912 யோகி லிங்கம் 913 ரகசிய லிங்கம் 914 ரம்ய லிங்கம் 915 ரமண லிங்கம் 916 ரத்தின லிங்கம் 917 ரத லிங்கம் 918 ராக லிங்கம் 919 ராட்சச லிங்கம் 920 ராவண லிங்கம் 921 ராஜ லிங்கம் 922 ரிஷப லிங்கம் 923 ரிஷி லிங்கம் 924 ருத்ர லிங்கம் 925 ரூப லிங்கம் 926 ரௌத்திர லிங்கம் 927 லகரி லிங்கம் 928 லாவண்ய லிங்கம் 929 லீலா லிங்கம் 930 லோக லிங்கம் 931 வசந்த லிங்கம் 932 வஞ்சி லிங்கம் 933 வடுக லிங்கம் 934 வர்ம லிங்கம் 935 வர லிங்கம் 936 வருண லிங்கம் 937 வல்லப லிங்கம் 938 வழக்கு லிங்கம் 939 வள்ளுவ லிங்கம் 940 வளர் லிங்கம் 941 வன லிங்கம் 942 வனப்பு லிங்கம் 943 வஜ்ர லிங்கம் 944 வாகை லிங்கம் 945 வாசி லிங்கம் 946 வாணி லிங்கம் 947 வாயு லிங்கம் 948 வார்ப்பு லிங்கம் 949 வாழ்க லிங்கம் 950 வான லிங்கம் 951 வானாதி லிங்கம் 952 வார்சடை லிங்கம் 953 விக்ர லிங்கம் 954 விக்ரம லிங்கம் 955 விகட லிங்கம் 956 விகார லிங்கம் 957 விகிர்த லிங்கம் 958 வசித்ர லிங்கம் 959 விடங்க லிங்கம் 960 வித்தக லிங்கம் 961 விதி லிங்கம் 962 விது லிங்கம் 963 விந்தை லிங்கம் 964 விநாசக லிங்கம் 965 விபீஷ்ண லிங்கம் 966 விபூதி லிங்கம் 967 விமல லிங்கம் 968 வியூக லிங்கம் 969 விருட்சக லிங்கம் 970 வில்வ லிங்கம் 971 விளம்பி லிங்கம் 972 விழி லிங்கம் 973 வினைதீர் லிங்கம் 974 வினோத லிங்கம் 975 விஜய லிங்கம் 976 விஷ்ணு லிங்கம் 977 விஸ்வ லிங்கம் 978 விஸ்வேஸ்வரலிங்கம் 979 வீர லிங்கம் 980 வீணை லிங்கம் 981 வெற்றி லிங்கம் 982 வெற்பு லிங்கம் 983 வெள்ளி லிங்கம் 984 வேங்கட லிங்கம் 985 வேங்கை லிங்கம் 986 வேட்டுவ லிங்கம் 987 வேத லிங்கம் 988 வேதாந்த லிங்கம் 989 வேம்பு லிங்கம் 990 வேழ லிங்கம் 991 வேள்வி லிங்கம் 992 வைகை லிங்கம் 993 வைர லிங்கம் 994 வைத்திய லிங்கம் 995 வைய லிங்கம் 996 ஜடா லிங்கம் 997 ஜதி லிங்கம் 998 ஜல லிங்கம் 999 ஜீவ லிங்கம் 1000 ஜெக லிங்கம் 1001 ஜெய லிங்கம் 1002 ஜென்ம லிங்கம் 1003 ஜோதி லிங்கம் 1004 ஸ்ரீ லிங்கம் 1005 ஸோபித லிங்கம் 1006 ஹேம லிங்கம் 1007 ஐஸ்வர்ய லிங்கம் 1008 சுப லிங்கம்

Ruler can do anything, so Born to rule the Galaxy

Monday, 20 November 2017

குழந்தையின் ஸ்டெம்செல்


சமீப காலமாக தனியார் மருத்துவமனைகளில் ஒருவருக்கு குழந்தை பிறக்கிறது என்றால் உங்கள் குழந்தையின் ஸ்டெம்செல்லை அதாவது தொப்புள்கொடியை நாங்கள் சேமிக்கலாமா என்றொரு கேள்வி மருத்துவமனை சார்பாக முன்வைக்கப்படுகிறது.

அப்படி தொப்புள்கொடியை சேமிக்க அவர்கள் வசூலிக்கும் தொகை சில லட்சங்கள் வரை தொடுகிறது. தொப்புள்கொடியை எதற்காக இவ்வளவு செலவு செய்து சேமிக்க வேண்டும் என்றால் குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களான பிறகு அவர்களுக்கு கேன்சர் போன்ற குணப்படுத்த முடியாத நோய்கள் வந்தால் இந்த தொப்புள்கொடியில் உள்ள செல்களை வைத்து எந்த நோயை வேண்டுமானாலும் குணப்படுத்திவிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பைசா செலவில்லாமல் நம் முன்னோர்கள் ஒரு சின்ன தாயத்து மூலமாக இந்த ஸ்டெம்செல் வைத்தியத்தை செய்து வந்தனர் என்றால் நம்புவீர்களா?
அந்த காலத்தில் குழந்தை பிறந்த சில நாட்களில் தொப்புள்கொடி காய்ந்து விழுந்தவுடன் அதை பத்திரமாக எடுத்து அதை ஒரு தாயத்தில் அடைத்து குழந்தையின் கழுத்திலோ அல்லது இடுப்பிலோ கட்டி விடுவார்கள்.

அல்லது குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காய வைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள்.

பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடி பவுடரை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் பறந்து போகும்.
இன்றளவும் இந்த தொப்புள்கொடி தாயத்து பழக்கும் சில வீடுகளில் உண்டு. ஆனால் பெரும்பாலான வீடுகளில் இந்த பழக்கம் தற்போது இல்லை என்பதுதான் வருத்தம்.

இவ்வளவு தெளிவான நம் முன்னோர்களின் அறிவியலை மூடநம்பிக்கை என்று நம் மனதில் பதியவைத்து தாயத்து எல்லாம் அசிங்கம் அதையெல்லாம் கட்டுவது வீண் என்று சொல்லி நம்மை முட்டாளாக்கி இன்று சில வெளிநாட்டு நிறுவனங்கள் நமது முன்னோர்களின் கண்டுபிடிப்பிற்கு ஸ்டெம்செல் தெரபி என்று அதற்கு பெயர் வைத்து அதை நமக்கே விற்கின்றனர்
உண்மையில் இன்று நாம் முட்டாளா இல்லை நம் முன்னோர்கள் முட்டாளா என்று சிந்தித்து பார் தமிழா... இனியாவது விழிப்போம். நமது முன்னோர்களின் அறிவியலை மீண்டும் தோண்டி எடுப்போம்.!!

Ruler can do anything, so Born to rule the Galaxy

மௌனம் ... !!!



பேசுபவன் விதைக்கிறான்
பேசாதவன் அறுவடை செய்கிறான் ...

நன்றும் தீதும் நாவினுள் அடக்கம் ...

நாவின் பெருமையோ மௌனத்தின் தொடக்கம் ... !!!

மௌன மூச்சே இறைவனின் பேச்சு ...

பேசிப் பேசி சாதித்தது என்ன ... ???

பேசாமல் சாதிப்போமே ... !!!

அறிவு விழித்தால் ஆற்றல் பெருகும் ...

ஆற்றல் பெருகினால் வாழ்கையில் அமைதி கிட்டும் ...

அமைதி கிட்டினால் ஆனந்தம் பெருகும் ...

ஆனந்தம் பெருகினால் அருள் நிறைந்திடும் ...

அருள் நிறைந்தால் அன்பு பெருகிடும் ...

அன்பு பெருகினால் ஆணவம் அழிந்திடும் ...

ஆணவம் அழிந்தால் இறை உணர்வு சித்திக்கும் ...

இறை உணர்வு சித்தித்தால் பிறவி பயணம் அறுபடும் ...

பிறவி பயணம் அறுபட்டால் பிறப்பின்  நோக்கம்  நிறைவுறும் ...

பிறப்பின் நோக்கத்தில் ... !!!

கிருஷ்ண கவுண்டர் வழி -

நந்தகுமார் கிருஷ்ண கவுண்டர்

Ruler can do anything, so Born to rule the Galaxy

ஹீமோகுளோபின் (Haemoglobin)

ஹீமோகுளோபின் குறைபாடு அதாவது ரத்த சோகை ஏற்பட்டால் உடல் முழுவதும் செயலிழந்ததை போல் இருக்கும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பிராண வாயுவான ஆக்ஸிஜனை கொண்டு சேர்க்கும் ரத்த அணுக்களின் அளவு குறைவதால் சோர்வு ஏற்படும். இதனால் சிறுநீரக பிரச்னை வருவதற்கான வாய்ப்பும் ஏற்படுகிறது. இதில் இருந்து தீர்வு பெற எந்தவொரு மாத்திரை மருந்தும் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவிலேயே ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும். காய்கறிகளுடன் சேர்த்து சில பழங்களையும் சாப்பிடுவது மேலும் சீரான உடற்பயிற்சி போன்றவையே இதற்கு போதுமானது.
1. கொய்யா:

தினமும் கொய்யாப் பழம் சாப்பிடுவதன் மூலம் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எவ்வளவு கசப்பாக கொய்ய இருக்கிறதோ அதில் அவ்வளவு ஹீமோகுளோபினை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது என்று அர்த்தம். மிகவும் சத்தான மற்றும் அதிக பயன்களை கொண்ட ஒரு பழம் இது.
2. மாம்பழம்:

பழ வகைகளில் மிகவும் சுவையானதும், அனைவராலும் விரும்பப்படும் ஒன்றானதாகவும் இருப்பது மாம்பழம். இவ்வளவு இனிப்பான பழத்தால் ரத்த சோகையில் இருந்து விடுபட முடியும் என்றால் எதற்காக கசப்பான மாத்திரைகளை விழுங்க வேண்டும்?
3. ஆப்பிள்:

நாள்தோறும் ஒரு ஆப்பிளை நாம் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்வதை தவிர்க்கலாம் என்பது பல காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு உண்மை. அந்த வகையில் பார்த்தால் தினமும் ஆப்பிள் சாப்பிடுவது ரத்த சோகை மட்டுமில்லாமல் இனி வரவிருக்கும் அனைத்து நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கக் கூடிய ஒன்றாகும்.
4. திராட்சை:

திராட்சையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. மாதவிலக்கு ஏற்படும் பெண்களுக்கு உடலில் தேவையான அளவு ரத்தம் உற்பத்தியாக இரும்புச் சத்து மிகவும் அவசியமான ஒன்று. புதிதாக ரத்தம் உற்பத்தி ஆகிறது என்றால் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் நிச்சயம் உயரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
5. பீட்ரூட்:

பீட்ரூட்டில் நிறைந்திருக்கும் கார்போஹைட்ரேட் ரத்தம் வீணாவதைத் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகமாவதற்குத் தேவையான சிவப்பு ரத்த அணுக்களை இவையும் உற்பத்தி செய்கிறது. அனீமியா நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து என்றே சொல்லலாம்.
6. துளசி:

துளசி ரத்தத்தைத் தூய்மையாக்கி சிவப்பணுக்கள் இறப்பதற்குக் காரணமான நச்சுகளை ரத்தத்தில் இருந்து நீக்குகிறது. தினமும் துளசி சாப்பிடுவதால் நிச்சயம் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
7. காய்கறிகள்:

பச்சை காய்கறிகளை உட்கொள்வது எப்போதும் பல நன்மைகளை வழங்கக் கூடியது. ரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரித்து ரத்த சோகையில் இருந்து நம்மையும் காக்கக் கூடியது காய்கறிகள்.
8. தேங்காய் எண்ணெய்:

உடலில் திசுக்கள், சதைகள் மற்றும் ரத்தம் உற்பத்தியாகத் தேங்காய் எண்ணெய் உதவுகிறது. இதன் மூலம் ஹீமோகுளோபின் அளவு கட்டாயம் அதிகரிக்கும்.
9. முட்டை:

முட்டையில் புரதம், கொழுப்பு, வைட்டமின், இரும்பு, கால்சியம் மற்று தாது ஆகிய அனைத்துச் சத்துக்களும் இருப்பதால் இது உடலும் அதிக நன்மைகளைத் தரக்கூடியது. உடலின் ஹீமோகுளோபின் அளவு மற்றும் இல்லாமல் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சில சத்துக்களும் இதனால் அதிகரிக்கக் கூடும்.

Ruler can do anything, so Born to rule the Galaxy

மறந்து கூட இந்த எண்ணெயில் தீபம் எற்றாதீங்க.....!


தீபம் எற்றுவதே தனி அழகு தான்.... நம் வீட்டில் பூஜை  அறையில் விலகு ஏற்றும் போது, அதிலிருந்து  வரும் அந்த ஒளியால் பிரகாசமாக  தெரியும் அல்லவா...
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.
விளக்கேற்ற கூடாத எண்ணெய்கள்....
கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளை கொண்டு எந்த நேரத்திலும் மறந்து கூட விளக்கு ஏற்ற வேண்டாம்..

இந்த மூன்று எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால், மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையும் பெருக்கும் வல்லவை இந்த எண்ணெயின்  மூலம்  ஏற்றப்படும் தீபத்திற்கு உண்டு என்பதை யாரும் மறந்து விடாதீர்.....
எண்ணெயின் பலன்கள் :
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொருத்து பலன் கிடைக்கும்.
நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்.
நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்.

இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி கிடைக்கும்.
ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய்,
நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய்) - அம்மன் அருள் கிடைக்கும்.
வேப்பெண்ணெய் - கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவிபெறவும்.
ஆமணக்கு எண்ணெய் - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது.

Ruler can do anything, so Born to rule the Galaxy

Thursday, 21 September 2017

ஆண்கள் என்றும் இளமையாக இருக்க சில டிப்ஸ்


பொதுவாக முதுமைத் தோற்றத்தை வெளிப்படுத்துபவையான சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் போன்றவை பெண்களுக்கு நன்கு வெளிப்படையாக தெரியும். ஆனால், ஆண்களுக்கு தெரிய சில நாட்கள் ஆகும். அதுமட்டுமல்லாமல் பெண்களை விட ஆண்கள் தான் விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெறுவார்கள்.

இப்போது இளமையைத் தக்க வைப்பதற்கு, ஆண்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்னவென்று பார்ப்போம்.

01. புகைத்தலை உடன் நிறுத்துங்கள்

இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது புகைப்பிடித்தலை நிறுத்துவது தான். ஏனெனில் புகைப்பிடித்தால், சருமத்தில் சுருக்கங்கள் விரைவில் வருவதோடு, சரும வறட்சியை உண்டாக்கும். மேலும் புகைப்பிடித்தலை நிறுத்துவதால், உடலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஆண்மைத் தன்மை குறைபாடு ஏற்படுவதிலிருந்து விடுபடலாம்.

02. ஷேவிங் செய்யும் போது சில செயல்கள்

ஆண்கள் தொடர்ச்சியாக ஷேவிங் செய்வதால், சருமமானது மிகவும் கடினமாவதோடு, வறட்சி மற்றும் ஒருவித சுருக்கமானது ஏற்படும். ஆகவே எப்போதும் ஷேவிங் செய்யும் போது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதோடு, ஷேவிங் செய்த பின்னர் ஷேவிங் லோசனைப் பயன்படுத்த வேண்டும்.

03. திராட்சை ஜூஸ்

ஆண்களின் இளமையானது நீடிக்க வேண்டுமெனில், தினமும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த திராட்சை பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சருமத்தில் நெகிழ்வுத்தன்னை நீள்வதோடு, இளமை தோற்றத்தை தக்க வைக்கலாம்.

04. அல்க்ககோல் தவிர்த்தல்

முதுமைத் தோற்றத்தை தடுப்பதற்கு ஒரு சிறந்த வழியென்றால், ஆல்கஹால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆல்கஹால் இரத்த நாளங்களை அளவுக்கு அதிகமாக விரிவடையச் செய்து, சரும சுருக்கத்தை ஏற்படுத்தும்.

05. உடற்பயிற்சி

முதுமைத் தோற்றமானது முகத்தில் மட்டும் வெளிப்படுவதில்லை, தசைகளின் மூலம் வெளிப்படும். எனவே தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தால், தசைகளானது இறுக்கமடைந்து, இளமையான தோற்றத்தைத் தரும்.

06. பால் கொண்டு முகம் கழுவுதல்

வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், பாலை கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுவதோடு, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும். அதிலும் இந்த முறையை தினமும் இரண்டு முறை செய்வது நல்லது.

07. மசாச்

முதுமையை தடுக்க வேண்டுமெனில், உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும். இத்தகைய இரத்த ஓட்டத்தை மசாஜ் செய்வதன் மூலம் அதிகப்படுத்தலாம். இதனால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த ஓட்டமானது சீராக சென்று, இளமையைத் தக்க வைக்கும்.

08. காய்கறிகள்

உணவில் காய்கறிகளின் அளவை அதிகரிக்க வேண்டும். அதிலும் பசலைக் கீரை அல்லது பீன்ஸ் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், சுருக்கங்கள் ஏற்படாமல் இருப்பதோடு, சருமமும் பொலிவோடு இளமையுடன் காணப்படும்.

09. சன் ஸ்கிறீன் க்றீம்கள்

முதுமையை தக்க வைக்க வேண்டுமெனில், அதிகமாக வெயிலில் சுற்றக்கூடாது. ஒருவேளை வெயிலில் செல்வதாக இருந்தால், சன் ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்தி செல்ல வேண்டும். ஏனெனில் சூரியக்கதிர்கள் சருமத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சுருக்கங்களை எளிதில் உண்டாக்கிவிடும்.

10. தண்ணீர்

தினமும் குறைந்தது 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி நீங்கி, உடலும் ஆரோக்கியமாக இளமையுடன் காணப்படும்.

Ruler can do anything, so Born to rule the Galaxy

Tuesday, 8 August 2017

வீட்டில் தோட்டத்தில் எறும்புத் தொல்லையை எளிமையாக போக்கும் வழிகள்

வீட்டில் எப்போதும் தீராத பிரச்னை என்ன என்றால், அது எறும்பு, கரப்பான்பூச்சி போன்ற பூச்சிகளின் தொல்லை தான். அதிலும் குறிப்பாக, இந்த செவ்வெரும்பு, கட்டெரும்பு, சாமி எறும்புகளின் தொல்லையைச் சொல்லி மாளாது.வீட்டில் எதையும் வெளியே வைத்துவிட முடிவதில்லை. கொஞ்ச நேரத்தில் சாரை சாரையாக, அந்த இடத்தை மொய்க்க ஆரம்பித்துவிடும். அந்த எறும்புகள் வராமல் தடுக்க என்ன தான் வழி?

கிச்சனில் என்ன வைத்தாலும் நமக்கு முன்னால் அதைப் பதம் பார்த்துவிட்டு 

செல்வது எறும்பு தான். இந்த எறும்புகளை அதே கிச்சனில் இருக்கும் சில 

பொருட்களைக் கொண்டு எப்படி விரட்டுவது? 

பட்டையை நாம் உணவில் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த பட்டையை வைத்து, வீட்டில் தொல்லை தரும் எறும்புகளையும் ஒழித்துக் கட்ட முடியும். 

வீட்டில் எறும்பு வருமிடத்தில் சிறிது பட்டையைப் போட்டு வைத்தால், 

விரைவாகவே எறும்புகள் வீட்டை விட்டு வெளியேறிவிடும். 

வெள்ளைப்பூண்டைத் தோல் உரித்துவிட்டு, சிறு சிறு துண்டுகளான நறுக்கி. 

எறும்பு அதிகமாக வரும் இடங்களில் போட்டு வைத்தால் எறும்புத் தொல்லை 

நீங்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது சாதாரண வினிகரை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, 

எப்போதெல்லாம் எறும்பு கண்ணில் படுகிறதோ அப்போது, அதன் மேல் 

தெளித்துவிடலாம். 

வீட்டில் எறும்புகள் வரும் இடங்களில் எல்லாம் மிளகைப் போட்டு வைத்தால், 

எறும்புகள் வெளியே வராமல் ஓடி ஒளிந்துவிடும்.எறும்புகளின் தொல்லை மிக அதிகமாக இருக்கிறதா? வீட்டில் அங்கங்கே ரோடு போட்டு, வரிசையாக சென் கொண்டிருந்தால், தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, எறும்புகள் அதிகமாக வருமிடஙகளில் ஊற்றவும்.

புதினாவின் வாசனைக்கு வீட்டுக்ள் எறும்புகள் நிச்சயம் வீட்டுக்குள் அண்டவே 

அண்டாது. அதனால் கிச்சனுக்குள் ஒரு சிறு தொட்டியில் புதினாவை வளர்க்கலாம். வீட்டுக்கு வெளியேயும் வீட்டைச் சுற்றிலும் புதினா செடிகளை வளர்க்கலாம். 

இதனால் பூச்சிகளின் தொல்லையும் குறையும். சமையலுக்கும் சுத்தமான புதினா கிடைக்கும்.

இதே வழிமுறைகளை உங்கள் தோட்டத்திலும் செயல்படுத்தலாம்.

சில உளவியல் உண்மைகள்!

1. அதிகம் சிரிப்பவர்கள்.....
தனிமையில் வாடுபவர்கள்..

2. அதிகம் தூங்குபவர்கள்,
சோகத்தில் இருப்பவர்கள்..

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள்,
அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. அழுகையை அடக்குபவர்கள்...
மனதால் பலவீனமானவர்கள்..

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!!
மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!!
அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்...
அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!!

பேச்சு -  உளவியல் ஆலோசனைகள்...!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள்.
அது உங்களை பலவீனமானவராக காட்டும்..

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும்.
அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!!

3   மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் ..

4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால்...
அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்..

5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர்...
உங்களை சோம்பேறியோ.... என நினைக்கக்கூடும். .

6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்...
அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்....

7. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும்.
அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..

8. நம்பிக்கையோடு கூடிய புன்னகை , நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்..

9. குழந்தைகளோடு பேசும்போது,  அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும். .

10. உங்கள் பேச்சை விளக்குவதற்கு , உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.. ...

தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

1. நீங்கள்தான்  அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். 
நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.

யாரும் சொன்னாலும் ரசித்தாலும்...தான்....   நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள்.
உங்களை நீங்களே ரசியுங்கள்..

2. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள்.  ...  உங்களை நக்கல் செய்பவரிடம்...
துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்...

இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..

3. உங்களால் எது முடியாது...
உங்களுக்கு எதுவும்  தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்..,  
அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..

4. என் வாழ்க்கை சோகம் நிறைந்தது
என்று நினைக்காதீர்கள்... 
எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை... என்பதே உண்மை....

5. உங்களுக்கு எதுவும் தெரியாது....
எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்... 

இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..

6. கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள்.... 

உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர்....

மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்....

7. அழும் போது தனியாக அழுங்கள்... 
நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ
இங்கு யாரும் வரப்போவதில்லை...
என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்...!!!

கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்...

8. உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,. 

நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.....

எங்கும் எப்போதும் சுயமரியாதையை விடாமல் நடை போடனுங்க....

Thursday, 3 August 2017

தீபம் ஏற்றும் முறையும் பலனும்

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.

வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமயலறை, துளசி மாடம்

போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.

தீபம் ஏற்றும் நேரம்

தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்).

காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.

விளக்கு ஏற்றும் முறை

ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.

இரு முகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை கிட்டும்.

முன்று முகம் ஏற்றினால்- புத்திரதோஷம் நீங்கும்.

நான்கு முகம் ஏற்றினால் - பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும்.

ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.

விளக்கேற்றும் திசை

கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி

மேற்கு - கடன், தோஷம் நீங்கும்

வடக்கு - திருமணத்தடை அகலும்

தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)

எண்ணெயின் பலன்

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.

நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்

நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்

தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்

இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி

விளக்கெண்ணெய் - புகழ் தரும்

ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ) - அம்மன் அருள்

வேப்பெண்ணை - கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்

ஆமணக்கு எண்ணை - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது

கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.

எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்

விநாயகர் - தேங்காய் எண்ணெய்

மகாலட்சுமி - பசுநெய்

குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்

பைரவர் - நல்லெண்ணெய்

அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த
5 கூட்டு எண்ணெய்

பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய்

திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள்

திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். திரிகளும்,பயன்களும் குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.

• பருத்திப் பஞ்சு - குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
• வாழைத் தண்டின் நார் - முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
• தாமரைத்தண்டு நூல் - முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
• வெள்ளை எருக்கம்பட்டை - செல்வம் பெருகும்.
• புதிய மஞ்சள் துணி - நோய்கள் குணமாகும்.
• புதிய சிவப்பு வண்ண துணி - குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
• புதிய வெள்ளை துணி திரி - அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.
(துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.)

விளக்கின் தன்மை

மண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும்

வெள்ளி விளக்கு – திருமகள் அருள் கிடைக்கும்

பஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம் உண்டாகும்

வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும்

இரும்பு விளக்கு – சனி கிரக தோஷம் விலகும்.

திருவிளக்கின் சிறப்பு

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

விளக்கு துலக்க நல்ல நாள்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.

விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்

ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.

தீபத்தை குளிர வைக்கும் முறை

பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.

விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது.

பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.

தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும்.

1. விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்

விளக்கு ஏற்றும் பொழுது :

விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
விளக்கினின் முன்னே வேதனை மாறும்
விளக்கை விளக்கும் விளக்குடையார்கள்
விளக்கில் விளங்கும் விளக்கவர்தாமே

விளக்கை ஏற்றியபின் மலர் சொரிந்து :

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமச்சி வாயவே.

2. தூபம் காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்

பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீரட்ட னாரே.

3. தீபம் (ஏகதீபம்) காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்

சோதியே சுடரே சூழலொளி விளக்கே சுரிகுழல் பணைமுலைமடந்தைப்
பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய் பங்கயத்தயனுமாலறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையுள் குருந்தம் மேவிய சீர்எம்
ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றருளாயே

4. கற்பூரப் பேரொளி காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்

கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புதக் கோலம் நீடி அருமறை சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி.

5. அமுது படைக்கும் போது பாட வேண்டிய மந்திரம்

அமுது படைக்கும் போது :

வேட்டவி யுண்ணும் விரிசடை நந்திக்குக்
காட்டவும் நாமிலம் காலையும் மாலையும்
ஊட்டவி யாவன உள்ளம் குளிர்விக்கும்
பாட்டவி காட்டுதும் பாலவி யாமே

எனவும் படைத்து :

பூந்தண் பொழில்சூழ் புலியூர் பொலிசெம்பொன் அம்பலத்தே
வேந்தன் தனக்கன்றி ஆட்செய்வ தென்னே விரிதுணிமேல்
ஆந்தண் பழைய அவிழை அன்பாகிய பண்டைப் பறைச்
சேந்தன் கொடுக்க அதுவும் திருவமிர் தாகியதே.

(என ஓதி வாயின் புறத்தில் நீர்காட்டி விடுக.)

6. திருநீறு பூசும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

திருநீறு :

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமைப் பங்கன் திருஆல வாயான்திரு நீறே.

குங்குமம் :

சிந்துரக் குங்குமம் சேர்த்தனன் போற்றி

கார்த்திகை பெண்களை போற்றும் நன்னாள்
நன்றி மறப்பது நன்றன்று என்பார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். தமிழ்த்தெய்வமான முருகப்பெருமானும் நன்றி மறவாமல் தன்னை வளர்த்த கார்த்திகைப் பெண்களைப் போற்றும் நாள் திருக்கார்த்திகைத் திருநாள். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகள் கிளம்பின. அப்பொறிகளை கங்கை தாங்கிக் கொண்டாள். ஆறு தாமரைகளில் ஆறு குழந்தைகளாக முருகப்பெருமான் அவதரித்தார். மகாவிஷ்ணு அப்பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும்படி கார்த்திகைப்பெண்கள் ஆறுபேருக்கு கட்டளையிட்டார். அவர்கள் ஆறுபிள்ளைகளுக்கும் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இதனால் அவர்கள் ஒரே நட்சத்திரமாக மாற்றப்பட்டு வானமண்டலத்தில் இடம் பிடித்தனர்.

இந்த நட்சத்திர நாளில் தன்னை வழிபட்டால் எல்லா வரங்களும் தந்தருள்வதாக குழந்தை முருகன் வரம் அளித்தார். முருகனுக்குரிய ஜென்ம நட்சத்திரம் விசாகம். ஆனால், அந்த நட்சத்திரத்தில் மாதவிரதம் மேற்கொள்ளும் வழக்கமில்லை. கார்த்திகை நட்சத்திரத்தன்று முருகனுக்கு அபிஷேக ஆராதனைகளும், விரதமும் மேற்கொள்வதில் இருந்து நன்றி மறவாத நாயகன் முருகன் என்பதை உணர முடிகிறது.

சிவசக்தி தீபம்
தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

நிலைத்த பலனுக்கு விளக்கு வழிபாடு
கிராமங்களில், திருவிளக்கை தாய் என்றும், நாச்சியார் என்றும் அழைப்பது வழக்கம். இதை விநாயகரின் வடிவம் என்றும் சொல்வதுண்டு. திருவிளக்கு வழிபாடு செய்யும் போது, விநாயகருக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களைப் பாடி, பொட்டுவைத்து, மாலை அணிவித்து, தூபதீபம் காட்டினால் நிலைத்த பலன் கிடைக்கும்.

தீபத்தைப் பெருமைப்படுத்தும் விதத்தில் முருகப்பெருமானையே அருணகிரிநாதர்""தீபமங்களஜோதீ நமோநம'' என்று திருப்புகழில் பாடுகிறார்.

இறையருள் கைகூட தண்ணீரால் விளக்கெரித்த நமிநந்தியடிகள், தன் உதிரத்தையே எண்ணெயாய் ஊற்றி தீபமேற்ற முயன்ற கலியநாயனார், தலைமுடியை விளக்குத் திரியாக்கிய கணம்புல்லர், அறியாமல் தீபத்தைத் தூண்டிவிட்ட காரணத்துக்காகவே, மறு பிறவியில் சக்ரவர்த்தியாய் பிறந்த மகாபலி ஆகியோரின் புண்ணிய கதைகள் தீப வழிபாட்டின் மகத்துவத்தை உணர்த்தும். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவனை ஓர் உருவில் அடக்காமல், ஒளி வடிவில் வழிபட்டுப் பலன் பெற தீபங்கள் உதவும். பரஞ்ஜோதியாய் திகழும் பரம்பொருளுடன் ஜீவ ஜோதியாகிய ஆன்மாக்கள் இரண்டறக் கலக்க வேண்டும். இதுவே, தீபங்கள் உணர்த்தும் வழிபாட்டுத் தத்துவம்.

ஆலயங்களில் இறைவனுக்குப் பதினாறு வகை உபசாரங்கள் செய்வார்கள். அவற்றுள் தூப - தீபம் சமர்ப்பித்தலும் ஒன்று. தீப சமர்ப்பணத்தில் 16 வகை தீபங்கள் இடம்பெறும். ஒவ்வொரு தீபத்துக்கும் ஒவ்வொரு தேவர்கள் உரிமையானவர்கள். புஷ்ப தீபம்- பிரம்மன்; புருஷாமிருகம் - கலைமகள்; நாகதீபம்-நாகராஜர்; கஜ தீபம் - விநாயகர்; வியாக்ர தீபம்-பராசக்தி; ஹம்ச தீபம் - பிரம்மா; வாஜ்ய தீபம்- சூரியன்; சிம்ம தீபம்-துர்கை; சூல தீபம்-மும்மூர்த்திகள்; துவஜ தீபம்-வாயு; வ்ருஷப தீபம்-ரிஷபதேவர்; பிரமா தீபம்-துர்காதேவி; குக்குட தீபம்-கந்தப்பெருமான்; கூர்ம தீபம்-மகாவிஷ்ணு; ஸ்ருக் தீபம்-அக்னி; சக்தி தீபம்-பராசக்தி.
ஒவ்வொரு தீபத்தை ஏற்றி இறைவனுக்குக் காட்டும்போது, அதற்குரிய தேவர்கள் சூட்சுமமாகத் தோன்றி இறைவனை வழிபடுவதுடன், நமக்கும் அருள்புரிவார்கள். திருக்கோயில்களில் நடைபெறும் இந்த தீப உபசாரத்தைத் தரிசிக்க, 16 பேறுகள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...