Tuesday 8 August 2017

வீட்டில் தோட்டத்தில் எறும்புத் தொல்லையை எளிமையாக போக்கும் வழிகள்

வீட்டில் எப்போதும் தீராத பிரச்னை என்ன என்றால், அது எறும்பு, கரப்பான்பூச்சி போன்ற பூச்சிகளின் தொல்லை தான். அதிலும் குறிப்பாக, இந்த செவ்வெரும்பு, கட்டெரும்பு, சாமி எறும்புகளின் தொல்லையைச் சொல்லி மாளாது.வீட்டில் எதையும் வெளியே வைத்துவிட முடிவதில்லை. கொஞ்ச நேரத்தில் சாரை சாரையாக, அந்த இடத்தை மொய்க்க ஆரம்பித்துவிடும். அந்த எறும்புகள் வராமல் தடுக்க என்ன தான் வழி?

கிச்சனில் என்ன வைத்தாலும் நமக்கு முன்னால் அதைப் பதம் பார்த்துவிட்டு 

செல்வது எறும்பு தான். இந்த எறும்புகளை அதே கிச்சனில் இருக்கும் சில 

பொருட்களைக் கொண்டு எப்படி விரட்டுவது? 

பட்டையை நாம் உணவில் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த பட்டையை வைத்து, வீட்டில் தொல்லை தரும் எறும்புகளையும் ஒழித்துக் கட்ட முடியும். 

வீட்டில் எறும்பு வருமிடத்தில் சிறிது பட்டையைப் போட்டு வைத்தால், 

விரைவாகவே எறும்புகள் வீட்டை விட்டு வெளியேறிவிடும். 

வெள்ளைப்பூண்டைத் தோல் உரித்துவிட்டு, சிறு சிறு துண்டுகளான நறுக்கி. 

எறும்பு அதிகமாக வரும் இடங்களில் போட்டு வைத்தால் எறும்புத் தொல்லை 

நீங்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் அல்லது சாதாரண வினிகரை ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி, 

எப்போதெல்லாம் எறும்பு கண்ணில் படுகிறதோ அப்போது, அதன் மேல் 

தெளித்துவிடலாம். 

வீட்டில் எறும்புகள் வரும் இடங்களில் எல்லாம் மிளகைப் போட்டு வைத்தால், 

எறும்புகள் வெளியே வராமல் ஓடி ஒளிந்துவிடும்.எறும்புகளின் தொல்லை மிக அதிகமாக இருக்கிறதா? வீட்டில் அங்கங்கே ரோடு போட்டு, வரிசையாக சென் கொண்டிருந்தால், தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைத்து, எறும்புகள் அதிகமாக வருமிடஙகளில் ஊற்றவும்.

புதினாவின் வாசனைக்கு வீட்டுக்ள் எறும்புகள் நிச்சயம் வீட்டுக்குள் அண்டவே 

அண்டாது. அதனால் கிச்சனுக்குள் ஒரு சிறு தொட்டியில் புதினாவை வளர்க்கலாம். வீட்டுக்கு வெளியேயும் வீட்டைச் சுற்றிலும் புதினா செடிகளை வளர்க்கலாம். 

இதனால் பூச்சிகளின் தொல்லையும் குறையும். சமையலுக்கும் சுத்தமான புதினா கிடைக்கும்.

இதே வழிமுறைகளை உங்கள் தோட்டத்திலும் செயல்படுத்தலாம்.

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...