Showing posts with label ENN2AAR Groukkke. Show all posts
Showing posts with label ENN2AAR Groukkke. Show all posts

Wednesday, 22 March 2017

நல்லதும் கெட்டதும்

*ஒரு சீடன் தன குருவிடம் கேட்டான், ”நல்லதைப் படைத்த ஆண்டவன் தானே கெட்டதையும் படைத்துள்ளான்.அதனால் நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றால் என்ன?’*

*‘குரு சிரித்துக் கொண்டே,”அது அவரவர் விருப்பம், ”என்றார். பகல் உணவு வேலை வந்தது. அந்த சீடன் தனக்கு அளிக்கப்பட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டான்.ஒரு கிண்ணத்தில் பாலும் மறுகிண்ணத்தில் பசு மாட்டு சாணமும் வைக்கப்பட்டு அவனிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது. சீடன் விழித்தான்.குரு புன்முறுவலுடன் அவனிடம் சொன்னார், ”பால்,சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது.பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?” என கேட்டார்.. சீடன் விழித்தான்..*

*குரு தொடர்ந்தார் பால் போன்ற நல்லவை நாம் மகிழ்வாய் வாழ... அதனை அப்படியே ஏற்கலாம்...*

*சாணியை விலக்கி மண்ணில் புதைத்து உரமாக்குவது போல தீயவைகளை விலக்கி புதைத்து  அது தரும் பாடத்தை வாழ்விற்கு உரமாக்கி உயரும் வல்லமை கற்க வேண்டும் என்றார்...*

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...