Tuesday 28 May 2019

கர்ப்பிணிகளுக்கும் புதிய தாய்மார்களுக்கும் - வெந்தயக் குழம்பு இதோ!


ஏன் வெந்தயம்?

 

  • கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுக்கும்
  • குழந்தை பிறந்த பிறகு, அதிகமாக தாய்ப்பால் சுரக்கும்
  • கர்ப்பப்பை நன்றாக சுருங்குவதால் அதிக நேரம் எடுக்காமல் பிரசவம் எளிதில் உடனே நடக்க வாய்ப்பு உள்ளது
  • மார்பக வளர்ச்சிக்கும் வெந்தயம் உதவும்

 

கவனிக்க வேண்டியவை

 

  • வெந்தயத்தை அதிகளவில் சாப்பிடுவதால் சில கர்ப்பிணிகளுக்கு வயிற்றுபோக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
  • சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்
  • பிரசவ நேரம் நெருங்கும் காலத்தில், வெந்தயத்தை அதிகளவில் சாப்பிட்டால் சிறுநீரில் ஒருவித வித்தியாசமான வாசனையும் ஏற்படலாம்.
  • வெந்தயம் சாப்பிடுவதில் எந்தவித கெடுதலும் இல்லை. ஆனால், அளவை மீறக்கூடாது. மேற்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால், வெந்தயத்தை சாப்பிடுவதை நிறுத்தி விடவும்.
  • மறக்காமல் உங்கள் மருத்துவரிடம் நீங்கள் வெந்தயம் சாப்பிடும் செய்தியை தெரிவிப்பது நல்லது

 

இப்படிப்பட்ட பயன்கள் நிறைந்த வெந்தயத்தை எப்படி குழம்பாக்குவது என்று பின்வருமாறு காணலாம்.

 

தேவையானவை

 

  • நான்கு டீஸ்பூன் வெந்தயம்
  • மூன்று டீஸ்பூன் மல்லி
  • நூறு  கிராம் சின்ன வெங்காயம்
  • ஒரு டீஸ்பூன் சீரகம்
  • நான்கு வரமிளகாய்
  • புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
  • ஒரு கொத்து கறிவேப்பிலை
  • பத்து பற்கள் பூண்டு
  • அரை கப் துருவிய தேங்காய்
  • தாளிக்கும் அளவு நல்லெண்ணெய்
  • தாளிப்பதற்காக கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு
  • தேவையான அளவு உப்பு

 

செயல்முறை:

 

  • முதல் நாள் இரவிலேயே வெந்தயத்தை ஊற வைக்கவும்.
  • மல்லி வரமிளகாய், சீரகம் ஆகிய மூன்றையும் நன்றாக வறுத்து அரைக்கவும்.
  • அதே போல, தேங்காயையும் மறக்காமல் தனியாக துருவி அரைத்து வைக்கவும்.
  • பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்தையும் தோலுரித்துவிட்டு இரண்டாக வெட்டி வைக்கவும்
  • அடுப்பில் தீயேற்றி வாணலியை வைக்கவும், அதில், தாளிக்கும் அளவு நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும்
  • பிறகு, கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகிய மூன்றையும் இட்டுத் தாளிக்கவும்
  • முதல் நாள் இரவில் ஊற வைத்த வெந்தயத்தை வடிக்கட்டவும். பிறகு, வாணலியில் இட்டு வதக்கவும்.
  • இக்கலவை வதங்கிய பிறகு, வெட்டி வைத்த பூண்டும் வெங்காயமும் சேர்த்து வதக்கவும்
  • முன்பு அரைத்து வைத்த மிளகாய் விழுதினை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு, அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து வதக்கவும்
  • மறக்காமல் புளியைக் கரைத்து ஊற்றிய பிறகு உப்பையும் சேர்த்துக் கலக்கவும்
  • பிறகு, குழம்பை லேசான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
  • எண்ணெய் தெளிந்ததும், கொதித்த குழம்பை இறக்கி வைக்கவும்

 

வெந்தயக் குழம்பு ரெடி!!

 

சாப்பிட்டு பார்த்து மறக்காமல் உங்கள் கருத்தையும் குழம்பின் புகைப்படத்தையும் ஷேர் செய்யவும்.


N2R NandhakumaR

CHANNEL N2R 


துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...