ஒவ்வொர் ஆண்டும் கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று கிருத்திகை நட்சத்திரத்தில் திருக்கார்த்திகை விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரம்மாவும்,விஷ்ணுவும் சிவபெருமானின் திருவடியையும் திருமுடியையும் அன்னமாகவும்,பன்றியாகவும் உருவெடுத்துத் தேடிக்காணாதபோது ,சிவபெருமான் பெரிய ஒளிப்பிழம்பாகக் காட்சி தந்தார்.நெருப்புத் தலமாகிய திருவண்ணாமலையில் இந்நிகழ்ச்சி நடந்ததால் அத்தலத்தில் இன்றும் மலைமீது பெருவிளக்கேற்றியும்,அத்திருக்கோயிலில் விழாக்கொண்டாடியும் வருகின்றனர்.
இயற்கையாகவே ஐப்பசி, கார்த்திகை மாதத்தில், அதிக மழை பெய்யும். அப்படிப்பட்ட காலங்களில் பூச்சிகள் அண்டாமல் இருக்கவும், இல்லம் வெளிச்சம் பெறவும் வீட்டு வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பதும், சொக்கப் பனை போன்ற தீபங்களை ஏற்றுதலும் வேண்டும் என நமது முன்னோர்கள் நமக்கு பழக்கப்படுதியிருக்கிறார்கள்.
எனவே பெருமை வாய்ந்த கார்த்திகை மாதத்தில் திருகார்த்திகை நாளில் நமது இல்லங்களில் ஒளி வீசும் தீபங்களை ஏற்றி மன சஞ்சலங்களையும், நோய்களையும், நமது துன்பங்களையும், பய இருளையும் போக்கி வாழ்வில் வளம் பல பெறுவோமாக..
நண்பர்கள் அனைவருக்கும் இனிய திருகார்த்திகை திருநாள் நல்வாழ்த்துக்கள்..
Thursday, 8 December 2011
கார்த்திகைத் திருநாள் வாழ்த்துக்கள்
Subscribe to:
Posts (Atom)
துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!
1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...
-
1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம். மற்றும் 2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம்...
-
🌟 சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது. 🌟 கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கலாகாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கக்கூடாத...
-
முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் ...