Friday, 14 August 2020

இரண்டாம் குழந்தை


அரை டஜன் பிள்ளை பெற்றது அந்தக்காலம்... ஒரு பிள்ளைக்கே ஓராயிரம் முறை யோசிப்பது இந்த காலம்...

  பிள்ளை பெற்று தன் சந்ததியை காப்பாற்ற சேர்ந்தது அந்தக் காலம்...
சிற்றின்பத்திற்கு சேர்ந்து நித்திரைக்கு கேடாய் வாழ்வது இந்தக் காலம்...

  துரோகமும்  வஞ்சகமும் இல்லாதது அந்தக் காலம்...
 வஞ்சகமில்லையென்றால் வாழ முடியாது என்று பகிரங்கமாய் சொல்வது இந்த காலம்...

  வளர்ந்த பிறகு ஆணுக்கு பெண்ணும் பெண்ணும் ஆணும் வேண்டும் என்று என்னும் மனித மனதுக்கு தன் குழந்தை வளரும் போது தனிமையில் வளர்கிறதே என்ற எண்ணம் வருவதில்லை...

 பசியால் வயிற்று வலியை சொல்ல தெரியாமல் அழும் குழந்தை ஒரு நாள் உணர்ந்து  தானே உண்ண காற்றுக்கொள்ளும்...
  ஆனால், சந்தர்ப்பவதிகளால் நாளுக்கு நாள் பரிணாம வளர்ச்சியடையும் இந்த உலகில்
 தனக்கென பாசத்திற்குரியவர்களும் நம்பிக்கைக்குரியவர்களும் இல்லை என்று  தனிமையில் வளரும் குழந்தை ஒரு நாள் ஏங்கும்...

   அமைதியும் நிம்மதியும் இல்லாத வாழ்வில் பணமும் நாகரிகமும் ஒருவனை முழுமை படுத்திவிடாது.

உடன் பிறப்புகளுடன் பிறந்தவர்களுக்காக...

என்
துயரங்களின் தோழனே தேழியே....

உன்
துணையுடன்தான்
என் எல்லாவற்றையும்
நான் கடந்திருக்கிறேன்...

நான்
தனியாள் இல்லை
என்பதனை எனக்கு
உணர்த்திச்செல்லும்
தாய்கரங்களாய்
என் தலைகோதியது நீதான்

இந்த
பூமிக்கு வரும் முன்பே
என் தாயின் கருவறையில்
என்னுடன் உருவானது
நீ மட்டுமே
என் இறுதிப்பயணத்திலும்
உடன் வர தகுதியான ஒரு ஜீவன் நீதான்...

பெருங்கூட்டங்களில்  தனிமை உணர்ந்த எனக்கு
தனித்திருக்கும் வேளைகளில்
தோள் கொடுத்த தாய்மனமே நீதானே....

 நீ இருக்கும் வரை
எனக்கு தனிமையில்லை...

N2R நந்தகுமார்

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...