Tuesday 11 August 2020

ஹிந்தி கற்பது குறித்த எமது அனுபவக் கருத்து

Published by 
N2R NandhakumaR

   2012,  13 களில் டெக்ஸ்டைல் தொழில் குறித்த அனுபவங்களுக்காக குஜராத்திலுள்ள சூரத் மற்றும் அகமதாபாத் சென்றிருந்தேன். அக் கால கட்டங்களில் எனக்கு ஹிந்தி மொழி கடுகளவும் தெரியாது. அங்கு தென் மாநிலங்களில்  பேசும் அளவில் கால் பாக மக்களுக்கு கூட ஆங்கிலம் சிறிதும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஹிந்தியும் குஜராத்தியும் மட்டும் தான். சாப்பிடுவதற்கும் தேநீர் அருந்துவதற்கும் ஏன் தண்ணீர் ஒரு பாட்டில் வாங்குவதற்கும் கூட ஆங்கிலத்தில் கூறி செய்கையாலும் காட்டுவேன் ஒரு உமைக்கு நிகராக. அங்கிருந்த பத்து நாட்களும் மிகவும் சிறமப்பட்டுள்ளேன் மொழி தெரியாததால்.

 அதற்கு பிறகு  சத்தீஸ்கர், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு பல முறை சென்றுள்ளேன். ஹிந்தி மொழியில் நேர்த்தியான உரையாடல் இல்லாவிட்டாலும் தேவையான அளவிற்கும்  எனது கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு கற்றுக் கொண்டு.

இருப்பினும், பத்து மாதங்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசம், மனவ்ரி என்ற ஊரிலுள்ள விமானப்படை தளம் செல்ல  அலாகபாத்திலிருந்து மனவ்ரி  வரை 18 கி.மீ ஆட்டோவில் சென்றிருந்தேன்.  அந்த ஆட்டோ காரர் 4 கி.மீ முன்பே சரியான இடத்திற்கு வந்து விடுடோம் என்று பொய் சொல்லி இறக்கிவிட்டு பணத்தையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். வட இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் மட்டுமே ஊர் பெயர் பலகைகளில் ஆங்கிமும் இடம் பெற்றிருக்கும் சிறிய நகரங்களிலெல்லாம் ஹிந்தியில் மட்டுமே எழுதியிருக்கும். ஹிந்தி படிக்கத்தெரியாத பலவீனத்தால் அங்குள்ளவர்களிடம் விசாரித்து பிறகொரு ஆட்டோ பிடித்து சேர வேண்டிய இடத்திற்கு வட இந்தியனிடம் ஏமாந்த தமிழனாக சென்றேன்.  ஏமாற்றியவன் ஒரு புரம் இருந்தாலும் ஹிந்தி படிக்கத் தெரியாமல் ஏமாந்தது என் தவறு தானே....

  கேரளா சென்றால் மலையாளம் தெரிந்திருக்க வேண்டும், கர்நாடகா சென்றால் கனடம் தெரிந்திக்க வேண்டும், ஆந்திர சென்றால் தெலுங்கு தெரிந்திருக்க வேண்டும் இருப்பினும்  இம் மாநிலங்களில் ஆங்கிலம் எடுபடும். வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஹிந்தி அல்லாமல் மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, காஷ்மீரி பேன்ற பல மொழிகள் பேசப்படுகிறது. வட இந்தியாவில் ஹிந்தி தெரியாத பெரும்பான்மையான மக்கள் தங்கள் தாய் மொழி மட்டுமே தெரிந்து வாழ்ந்துவருகின்றனர். மேலும், தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநிலத்தவர்கள் பலரும் தங்கள் வாழ்வாதரத்திற்காக தமிழையும் கற்று வாழ்ந்து வருகின்றனர்.

   இந்திய அரசியலமைப்பு உருவாகும் போது மாதராஸ் இந்தியாவின் தலைநகரமாக இருந்திருந்தால் தமிழ் இந்தியாவிற்கே தாய் மொழியாக இருந்திருக்கும்.

  இந்தியாவின் தாய்மொழி இந்தி என்பதற்காக இந்தியையும்  வேறு எந்த மொழியையும் கட்டாயம் படிக்க வேண்டுமென்பதில்லை. 

  மொழிக்கல்வியும் தொழிற்கல்வியும் வேறு வேறு. படிப்பறிவே இல்லாத பல லாரி ஓட்டுனர்கள் இந்தியவின் ஏழு எட்டு மொழிகள் சரளாமாக பேசுகின்றனர். தேவையிருந்தால் தேவைப்படும் மொழியை எந்த வயதிலும் கற்றுக்கொள்ளலாம்.

  தமிழகத்தை பெருத்தவரை இப்போதும் இரண்டு தலைமுறை மக்களுக்கு தமிழ் மட்டுமே தெரியும். ஆகவே, இந்த தலைமுறை வாழ நமது தாய் மொழியான தமிழை கட்டாயமான மொழிப் பாடமாகவும் ஆங்கிலத்தை இராண்டாவது மொழிப்பாடமாகவும் மூன்றாவதாக தேவைப்பட்டால்
 நம் விருபத்தின் படி பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுவதும் சிறந்த கல்வி முறையாக இருக்கும் என்பது எனது கருத்து.

ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் ஆயிரம் கருத்துக்களிலிருக்கலாம்!
 தமிழனுக்கு தமிழ் மட்டுமே முதல் நோக்கம்!!

N2R நந்தகுமார்

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...