Tuesday 11 October 2011

அமெரிக்காவில் பாரதிக்கு பரதாஞ்சலி


 
சான் ஃபிரான்சிஸ்கோ: அமெரிக்காவின் சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் சார்பில் பாரதிக்கு பரதாஞ்சலி என்னும் தலைப்பில் பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நடனக் கலைஞர் பத்மஸ்ரீ குரு சரோஜா வைத்தியநாதனும் அவரது மாணவர்களும் இணைந்து இந்நிகழ்ச்சியை நடத்தினர். இவ்விழாவிற்கான நடனங்களை சரோஜா வைத்தியநாதனே இயக்கி இருந்தார். மகாகவி பாரதியாரின் கவிதைகளை மையமாகக் கொண்டு நடன நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன. பெண்ணுரிமை, பெண் விடுதலை, வாழ்வின் மதிப்பு உள்ளிட்ட கருத்துக்களை வெளிபடுத்தும் வகையில் நடன கலைஞர்களின் பாவனைகள் அமைந்திருந்தது. பாரதியில் உணர்வுகளை தத்ரூபமாக வெளிப்படுத்திய நடன கலைஞர்களை பார்வையாளர்கள் வெகுவாகப் பாராட்டினர். இவ்விழாவில் தமிழ்ச் சங்க உருப்பினர்கள் மட்டுமின்றி, கலா ரசிகர்கள் பலரும் தங்களின் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...