Tuesday 11 October 2011

திருப்பூர் சிறப்பு




கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜவுளி நகரம் திருப்பூர். தமிழ்நாட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக இது விளங்குகிறது. பின்னலாடைகளுக்குப் பெயர்போன திருப்பூர், தென் இந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை நகரின் அருகே அமைந்துள்ளது. இங்கு பின்னலாடைகள் மற்றும் பனியன் ரக ஆடைகளுக்காக 10ம் நம்பரிலிருந்து 100ம் நம்பர் வரையான நூல் வகைகள் பயன்படுத்தப்படுகின்றன. டாலர் நகரம், பின்னலாடை நகரம், பருத்தி நகரம் என்றழைக்கப்படும் திருப்பூர், பனியன் ஆடைகளுக்கான மையமாக திகழ்கிறது.

இந்திய பொருளாதாரத்தில் திருப்பூரின் பனியன் தொழிற்சாலைகள் அதிக லாபம் உடையதாக விளங்கி வருகின்றன. இந்தியாவில் அதிக அளவில் அந்நிய செலாவணி ஈட்டித்தரும் நகர்களில் திருப்பூரும் ஒன்று. திருப்பூரிலிருந்து பல விதமான ஜவுளி ரகங்கள், ஆடைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் பின்னாலாடை ஏற்றுமதியில் 90 சதவீதம் திருப்பூரிலிருந்துதான் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நகரின் குறுக்கே நொய்யல் ஆறு ஓடுகிறது.


பரப்பளவு : 41500 சதுர கிலோமீட்டர்
மக்கள் தொகை : 346,551

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...