Tuesday 11 October 2011

புடவையும், ஜாக்கெட்டும் பறக்குது பண்ருட்டியில்! : தே.மு.தி.க., பெண் வேட்பாளர் கைது

கடலூர் : வாக்காளர்களுக்கு அன்பளிப்பு கொடுக்க, புதுச்சேரியிலிருந்து ஆட்டோவில் புடவை மற்றும் சட்டைகளை வாங்கி வந்த, பண்ருட்டி, தே.மு.தி.க., கவுன்சிலர் பெண் வேட்பாளரை, போலீசார் கைது செய்தனர். கடலூர் - பண்ருட்டி சாலையில், சாவடியிலிருந்து பண்ருட்டி சாலைக்குத் திரும்பிய, புதுச்சேரி மாநில பதிவெண் கொண்ட ஆட்டோவில், சேலையால் கட்டப்பட்ட, 10 மூட்டைகளும், பெண் ஒருவரும் இருந்ததை, அச்சாலையில் பாதுகாப்பில் இருந்த போலீசார் பார்த்து நிறுத்தினர். சோதனை செய்ததில், 335 சட்டைகளும், 182 புடவைகளும் இருந்தன.

அப்பெண், பண்ருட்டி, தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த முருகன் மனைவி சவுமியா என்பதும், பண்ருட்டி நகராட்சி 27வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு, தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்பதும் தெரிந்தது. புடவை, சட்டைகளின் மதிப்பு, 19 ஆயிரம் ரூபாய். பண்ருட்டி போலீசார், சவுமியா மற்றும் ஆட்டோ டிரைவரை கைது செய்து, ஜாமினில் விடுவித்தனர்.

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...