Tuesday 11 October 2011

காங்கிரசுக்கு எதிராக பிரசாரம்: அன்னா குழுவில் பிளவு?

பெங்களூரு: அரியானா மாநிலம் ஹிசாரில் நடைபெறும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், பா.ஜ.,வுக்கு மறைமுக ஆதரவு அளிக்கும் வகையில், அன்னா ஹசாரே குழுவின் நடவடிக்கை இருப்பதாக முணுமுணுப்பு எழுந்துள்ளதால் ஹசாரே குழுவில் பிரிவினை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

வலுவான லோக்பால் மசாதாவை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காந்தியவாதியான அன்னாஹசாரே நாடு முழுவதும் விழிப்புணர்வு மற்றும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். முன்னாள் போலீஸ் அதிகாரி கிரண்பேடி மற்றும் சமூக சேவகர் மேதா பட்கர் உள்ளிட்ட பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். விரைவில் லோக்பால் மசோதாவை நிறைவேற்றாவிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்போவதாக ஹசாரே அறிவித்தார். இந்நிலையில் அரியான மாநிலம் ஹிசாரில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஹசாரே குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் ஹசாரே குழுவின் மத்தியில் பிளவை உண்டாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

எந்த நோக்கத்திற்காக ஹசாரே போராட்டத்தை உருவாக்கினாரோ அந்த வழியில் செல்லாமல் காங்கிரஸ் கட்சியை மட்டுமே எதிர்ப்பது என்ற கொள்கையில் சென்று கொண்டிருப்பதாக குழுவின் ஒரு தரப்பினர் முணுமுணுக்க ஆரம்பித்துள்ளனர். மேலும் ஹசாரே குழுவில் முக்கிய இடம் பிடித்திருந்த பிரசாந்த் பூஷன் தற்போது ஓரம் கட்டப்படுள்ளதாகவும், தற்போதைய சூழ்நிலையில் கிரண்பேடி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணிஷ் சிசோடியா ஆகியோர் முடிவே இறுதியாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மேதாபட்கர் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை மறுத்துள்ள ஊழலற்ற இந்தியா இயக்கத்தை சேர்ந்த அஸ்வதி முரளிதரன் , 2ஜி வழக்கு காரணமாக கோர்ட் விவகாரங்களில் பிசியாக இருப்பதால் பிரசாந்த்பூஷன் பங்குபெற வில்லை என்றும், ஹிசார்பகுதியில் அணுமின் உலை அமைப்பதற்கு முழு எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...