Tuesday, 2 July 2019

அர்த்தமுள்ள வாழ்வை வாழ்வோம்

5 வயதில் விரல்களை எண்ணினான்,

10 வயதில் எண்களை எண்ணினான்,

15 வயதில் மதிப்பெண்களை எண்ணினான்,

20 வயதில் தேர்வு வினாக்களை எண்ணினான்

*Channel N2R*

25 வயதில் சம்பளத்தை எண்ணினான்,

30 வயதில் நண்பர்களை எண்ணினான்,

35 வயதில் வாரிசுகளை எண்ணினான்,

40 வயதில் கடன்களை எண்ணினான்,

45 வயதில் நோயை எண்ணினான்,

50 வயதில் சொந்தங்களை எண்ணினான்,

*Channel N2R*

55 வயதில் மாத்திரையை எண்ணினான்,

60 வயதில் பேரக் குழந்தைகளை எண்ணினான்,

அதற்கு பின் வயதை எண்ணினான்,

இறந்த பின், தனக்காக அழும் உள்ளங்களை எண்ணினான்.

எண்ணிப் பார்க்கையில் , 

தன்னிடம் கூடவே இருந்தது

கணிதம் மட்டும் தான் 

என எண்ணினான் !! விடை என்னவோ

தொடக்கமும் முடிவும்"0" தான்.


           - சேயோன் சேவகன் 

N2R நந்தகுமார்

Thursday, 20 June 2019

தேங்காய், தென்னை மட்டை மேலே விழுந்தால் செய்ய வேண்டியவை


1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம்.


மற்றும்


2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம் பரிபூரண இரட்சகம்" 


 பிரம்மமுகூர்த்தத்தில் அதாவது காலை 4.30 மணிமுதல் 5.45 மணிக்குள்  குளித்து வீட்டில் தீபமிட்டு மேற்கூறிய மந்திரத்தை  16 முறை சொல்லி வழிபட வேண்டும்.


 அதேபோல் மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிக்குள்  குளித்து வீட்டில் தீபமிட்டு மேற்கூறிய மந்திரத்தை  16 முறை சொல்லி வழிபட வேண்டும்.


இவ்வாறு 48 நாட்களுக்கு வழிபட நன்மை உண்டாகும்.


-N2R NandhakumaR

Channel N2R


Source From:

https://www.facebook.com/NandhakumarInSpiritualSurvey/

Friday, 7 June 2019

தெய்வத்தின் பார்வையில்......


எது நல்லநேரம் ?


• நல்லதை நினைக்கும் போது

• நல்லதைப் பார்க்கும் போது

• நல்லதைக் கேட்கும் போது

• நல்லதைப் பேசும் போது


எது இராகு காலம் ?


• அகங்காரம் கொள்ளும் நேரம்

• பாசம் கண்களை மறைக்கும் நேரம்

• ஆசைகள் எல்லையை மீறும் நேரம்

• கோபங்கள் உச்சத்தைத் தொடும் நேரம்

• தேகம் கவர்ச்சியில் மூழ்கும் நேரம்


எது குளிகை ?


• கவலைப்படும் நேரம்

• பயப்படும் நேரம்

• கலங்கும் நேரம்

• முயலாத நேரம்


எது எமகண்டம் ?


• பொறாமைப்படும் நேரம்

• புறம் கூறும் நேரம்

• கோள் சொல்லும் நேரம்

• சதி செய்யும் நேரம்


எது பிரம்மமுகூர்த்தம் ?


• தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம்

• கடமையில் வழுவாத நேரம்

• அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்


எது சுப முகூர்த்தம் ?


• சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்..

• சம்பாதிப்பதில் கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்..


எது சிறந்த ஞானம்?


பிரிந்து வாழ்வதைவிட புரிந்து வாழ்வது.


Friday, 31 May 2019

மோடியின் அடுத்த திட்டம் டிஜிட்டல் கிராமம்... 100 நாட்களில் 1000 கி.மீ. சாலை

புதிய அமைச்சரவை வியாழக்கிழமை பதவி ஏற்கும் நிலையில், புதிய அரசு உடனடியாக செய்ய உள்ள திட்டங்களுக்கான பட்டியல் தயாராகி உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைகள் துறை முதல் 100 நாட்களில் 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலையை அமைக்கும் திட்டத்தை தயாரித்து வைத்து உள்ளது.

போக்குவரத்து துறை செயலர் சஞ்சய் ரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 100 நாட்களில் செய்ய வேண்டிய பணிகளில் 20 ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்களை போக்குவரத்தில் இருந்து நீக்கும் திட்டமும் இடம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இதே போன்று டிஜிட்டல் கிராமத் திட்டத்தையும் உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் படி சுகாதாரம், நிதி சேவை, திறன் மேம்பாடு, கல்வி ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் கிராம மக்களுக்கு வழங்கப்படும். இதற்காக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா ஒரு கிராமம் என 700 ஊர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த கிராமங்களுக்கு பாரத் நெட் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் வைபை வசதி செய்யப்பட உள்ளது. அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்படும் பொது சேவை மையம் மூலம் கிராம மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் வைபை வசதி அளிக்கப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு சேவை மையத்திலும் கம்ப்யூட்டர் மையங்களும் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்களை கிராம மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த முடியும். இந்த மையங்கள் மூலம் கிராம மக்களுக்கு மருத்துவ ஆலோசனை, பணப் பரிமாற்றம், வங்கி சேவை, நிதி மேலாண்மை, விவசாயம் சார்ந்த தகவல்கள், கிராம தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி ஆகியவை அளிக்கப்படும்.

மேலும் கிராமத்து மாணவர்கள் சேவை மையம் மூலம் கல்வி அறிவை வளர்த்து கொள்ளவும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பட்சமாக 75 கிராமங்களும், மத்திய பிரதேசத்தில் 52 கிராமங்களும், பீகாரில் 38 கிராமங்களும் தேர்வு பெற்றுள்ளன. 
சுகாதார திட்டத்தின் படி, கிராமங்களில் உள்ளவர்கள் காணொலி காட்சி மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற முடியும்.

மிக அவசர சிகிச்சை தேவை படாத நோய்களுக்கு கிராம மக்கள், மருத்துவர்களிடம் காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை, மற்றும் மருந்துகள் குறித்த பரிந்துரையை பெற முடியும். இதன் மூலம் கிராம மக்கள் மருத்துவர்களை தேடி செல்லும் பயண நேரமும், செலவும் மிச்சமாகும். 
இதே போல கால்நடை மருத்துவ ஆலோசனைகளும் பெற வசதி செய்யப்பட உள்ளது.

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக பொருட்களின் பழுது நீக்கும் பயிற்சி, வாகன பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பயிற்சி, செல்பேசி பழுது பார்க்கும் பயிற்சி, மின்சாதன பொருள் பராமரிப்பு, பழுது நீக்கும் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட உள்ளன. இதன் மூலம் கிராமத்தினர் சுய தொழில் செய்ய வழிவகை செய்யப்படும்.

நிதிச் சேவை திட்டத்தின் படி, கிராம மக்கள் நிதி உதவி பெற ஆலோசனை, தொழில் மற்றும் விவசாய கடன்களை பெற வழிகாட்டுவது, சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாக சேமிக்கும் வழிமுறைகள் ஆகியவை அடங்குமென அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும் புதுப்பிக்க வல்ல எரிசக்தியை அதிகம் பயன்படுத்தும் வகையில் கிராம மக்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 Channel N2R  Narendra Modi Digital Village 100 Days 1000 kilometre Road

யார் இந்த காண்ட்ராக்ட்டர் நேசமணி | Who is Nesamani



நேசமணி, காரைக்குடி பக்கத்தில் கானாடுகாத்தான் என்ற ஊரில் பிறந்தவர். அவரின் பிறப்பு சாதாரணமானது கிடையாது. பிறக்கும் முன்பே ஒரு பேனில்லாமல், ஏசி இல்லாமல், திரும்பக்கூட இடமில்லாமல் வயிற்றில் பாடுபட்டு பிறந்தவர் நேசமணி. சிறு வயதிலேயே தன் அண்ணனை விட்டு பிரிந்த நேசமணி பல வருடங்கள் கழித்தே தன் அண்ணனுடன் சேர்ந்து கொண்டார்.


தன் அத்தை பெண் திவ்யாவை மனப்பூர்வமாக காதலித்தார் நேசமணி. அந்த காதல் கைகூடாதபோதும் கூட 'நீ யாரையோ நெனச்சி வாழாவெட்டியா இருக்கப்போற. நான் உன்னையே நெனச்சி வெட்டியா வாழாம இருக்கப்போறேன்' என்று பெருந்தன்மையாக விட்டுக்கொடுத்தவர் நேசமணி. வெறும் ஏரியா கவுன்சிலராக இருந்து சட்டம் படித்து வக்கீல் வண்டுமுருகனாகி, லண்டனில் வக்கீலாக வேலை செய்தாலும் நேசமணிக்கு வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கவில்லை. மீண்டும் குற்றாலத்தில் வந்து ஒரு டிவிஎஸ் 50 வாங்கிக்கொண்டு கடலைமிட்டாய் வாங்கித்தின்பதோடு சரி என்று எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர் நேசமணி. இப்படி இருந்தபோது தமிழ்நாடு போலீஸ் அவரை கைது செய்து கொரில்லா செல்லில் அடைத்தது. அதிலிருந்து ஹெல்மேட்டோடு ஒரு ஆட்டோவில் தப்பி வந்து மீன் வியாபாரம் செய்தபோதும் அவருடைய விற்பனை கரும்பலகையை அந்நிய சக்திகள் அழித்த கதையும் மிகவும் கவலைக்குரியது.


எதுவும் சரியாய்ப்போகவில்லை என்று திருடியாவது பிழைப்போம் என்று முடிவெடுத்தபோது ஒரு குதிரை ஏமாற்றிவிட பீச்சில் கையும் களவுமாக பிடிபட்டார் நேசமணி. வாழ்க்கை நேசமணியை துரத்தியது. ஆனால் நேசமணி துவண்டுபோகவில்லை. சண்முகம் சலூன் கடை வைத்து ஸ்டெப் கட்டிங்க், ஸ்டைல் கட்டிங்க், பாப் கட்டிங்க் என்று தொழிலை கற்றுக்கொண்டு சைன் பண்ண ஆரம்பித்தார் நேசமணி. ஆனால் அந்த வேலையும் சில சக்திகளால் போய்விட வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற தன்னார்வமற்ற சங்கத்தை துவங்கினார் நேசமணி. கட்டதுரையின் பொறாமையாலும் அரசியலாலும், அவர் தேசிக்காய் உரித்து வைக்க மற்றவர்கள் விளக்கை ஏற்றும் கொடூரமும் நேசமணியின் வாழ்வில் நடந்தேறியது.


யார்யாரோ காலை பிடித்து பேலஸ்ஸில் ஒரு கான்ட்ராக்ட்டை வாங்கி பங்களாவுக்கு வெள்ளையடிக்கப்போன நேரத்தில் தான், தன் அண்ணன் மகன் கிச்சுணமூர்த்தியால் சுத்தியல் தாக்குதலுக்குட்பட்டு தற்போது ICU வில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் நேசமணி. அவருக்காக பிரார்த்திக்க தேவையில்லை. கொஞ்சமாவது அனுதாபப்படுங்கள்.


#prayfornesamani #pray_for_nesamani Contractor Nesamani

Tuesday, 28 May 2019

கர்ப்பிணிகளுக்கும் புதிய தாய்மார்களுக்கும் - வெந்தயக் குழம்பு இதோ!


ஏன் வெந்தயம்?

 

  • கர்ப்ப கால நீரிழிவு நோயை தடுக்கும்
  • குழந்தை பிறந்த பிறகு, அதிகமாக தாய்ப்பால் சுரக்கும்
  • கர்ப்பப்பை நன்றாக சுருங்குவதால் அதிக நேரம் எடுக்காமல் பிரசவம் எளிதில் உடனே நடக்க வாய்ப்பு உள்ளது
  • மார்பக வளர்ச்சிக்கும் வெந்தயம் உதவும்

 

கவனிக்க வேண்டியவை

 

  • வெந்தயத்தை அதிகளவில் சாப்பிடுவதால் சில கர்ப்பிணிகளுக்கு வயிற்றுபோக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
  • சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம்
  • பிரசவ நேரம் நெருங்கும் காலத்தில், வெந்தயத்தை அதிகளவில் சாப்பிட்டால் சிறுநீரில் ஒருவித வித்தியாசமான வாசனையும் ஏற்படலாம்.
  • வெந்தயம் சாப்பிடுவதில் எந்தவித கெடுதலும் இல்லை. ஆனால், அளவை மீறக்கூடாது. மேற்கண்ட அறிகுறிகள் ஏற்பட்டால், வெந்தயத்தை சாப்பிடுவதை நிறுத்தி விடவும்.
  • மறக்காமல் உங்கள் மருத்துவரிடம் நீங்கள் வெந்தயம் சாப்பிடும் செய்தியை தெரிவிப்பது நல்லது

 

இப்படிப்பட்ட பயன்கள் நிறைந்த வெந்தயத்தை எப்படி குழம்பாக்குவது என்று பின்வருமாறு காணலாம்.

 

தேவையானவை

 

  • நான்கு டீஸ்பூன் வெந்தயம்
  • மூன்று டீஸ்பூன் மல்லி
  • நூறு  கிராம் சின்ன வெங்காயம்
  • ஒரு டீஸ்பூன் சீரகம்
  • நான்கு வரமிளகாய்
  • புளி - ஒரு எலுமிச்சம்பழ அளவு
  • ஒரு கொத்து கறிவேப்பிலை
  • பத்து பற்கள் பூண்டு
  • அரை கப் துருவிய தேங்காய்
  • தாளிக்கும் அளவு நல்லெண்ணெய்
  • தாளிப்பதற்காக கடுகு மற்றும் உளுத்தம் பருப்பு
  • தேவையான அளவு உப்பு

 

செயல்முறை:

 

  • முதல் நாள் இரவிலேயே வெந்தயத்தை ஊற வைக்கவும்.
  • மல்லி வரமிளகாய், சீரகம் ஆகிய மூன்றையும் நன்றாக வறுத்து அரைக்கவும்.
  • அதே போல, தேங்காயையும் மறக்காமல் தனியாக துருவி அரைத்து வைக்கவும்.
  • பூண்டை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  • சின்ன வெங்காயத்தையும் தோலுரித்துவிட்டு இரண்டாக வெட்டி வைக்கவும்
  • அடுப்பில் தீயேற்றி வாணலியை வைக்கவும், அதில், தாளிக்கும் அளவு நல்லெண்ணெயை ஊற்றி சூடாக்கவும்
  • பிறகு, கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை ஆகிய மூன்றையும் இட்டுத் தாளிக்கவும்
  • முதல் நாள் இரவில் ஊற வைத்த வெந்தயத்தை வடிக்கட்டவும். பிறகு, வாணலியில் இட்டு வதக்கவும்.
  • இக்கலவை வதங்கிய பிறகு, வெட்டி வைத்த பூண்டும் வெங்காயமும் சேர்த்து வதக்கவும்
  • முன்பு அரைத்து வைத்த மிளகாய் விழுதினை சேர்த்து வதக்கவும்.
  • பிறகு, அரைத்து வைத்த தேங்காயை சேர்த்து வதக்கவும்
  • மறக்காமல் புளியைக் கரைத்து ஊற்றிய பிறகு உப்பையும் சேர்த்துக் கலக்கவும்
  • பிறகு, குழம்பை லேசான சூட்டில் கொதிக்க வைக்கவும்.
  • எண்ணெய் தெளிந்ததும், கொதித்த குழம்பை இறக்கி வைக்கவும்

 

வெந்தயக் குழம்பு ரெடி!!

 

சாப்பிட்டு பார்த்து மறக்காமல் உங்கள் கருத்தையும் குழம்பின் புகைப்படத்தையும் ஷேர் செய்யவும்.


N2R NandhakumaR

CHANNEL N2R 


Sunday, 19 May 2019

ஆண்ணும் பெண்ணும் சமமானவர்களல்லர் – ஒரு உளவியல் பார்வை.


திருமண வாழ்க்கையில் ஆண் பெண் வித்தியாசத்தை விளங்கியிருக்கும்போது பிரச்சினைகள் ஏற்படுவது மிகவும் குறைவு. இதனை விளங்காதிருக்கும்போதுதான் “என்னால் முடியும் என்றால் ஏன் உன்னால் முடியாது? உன்னால் முடியுமென்றால் ஏன் என்னால் முடியாதா?” என்ற வெடுக்குத்தனமான கேள்விகளெல்லாம் எழுகின்றது. அதன் தொடராக பிரச்சினைகளும் வெடிக்கின்றன.


எனவே இல்லரத்தில் இணைந்தவர்களும் குறிப்பாக இணையவிருக்கின்றவர்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உள்ள உளவியல் மற்றும் பண்பியல் ரீதியான வித்தியாசங்களை அறிந்துகொள்வது மிக முக்கியமானதாகும்.


1. குரோமசோம்களில் உள்ள வேறுபாடு.


பரம்பரையைத் தீர்மானிப்பதில் செல்வாக்குச் செழுத்தும் குரோமசோம்களில்  ஆணின் குரோமசோம்களில் XY என்ற அமைப்பிலும் பெண்ணுடைய குரோமசோம்களில் XX என்ற அமைப்பிலும் காணப்படுகின்றது. இவைதான் ஒரு பிள்ளை ஆணாகப் பிறக்குமா? அல்லது பெண்ணாகப் பிறக்குமா? என்பதனைத் தீர்மானிக்கின்றது.


இதுவே அடிப்படை வித்தியாசம். எனவே எப்படி ஆணும் பெண்ணும் சமமாக முடியும்?


2. பார்வைப் புலன்.


பெண்களைப் பொருத்தவரை அவர்களால் 180 டிகிரி கோணத்தில் தமக்கு அருகாமையில் உள்ளவற்றை நன்கு தெளிவாகப் பார்க்க முடியும். ஆனால் தூர இருப்பவற்றை அவர்களால் தெளிவாகப் பார்க்க முடியாது. இதேவேளை ஆண்களைப் பொருத்தவரை அவர்களால் 90 டிகிரி கோணத்தில் தூர இருப்பவற்றைத் தெளிவாகப் பார்க்க முடியும். அருகில் உள்ளவற்றை அவர்களால் சரியாகப் பார்க்க முடியாது. 


உங்கள் வீட்டிலும் இந்தப் பிரச்சினை இருக்கும். கணவன் வேலைக்குச் செல்ல தயாராகும் போது “என் பைக் கீ எங்க? கார் கீ எங்க? ஆபீஸ் கீ எங்க?, சாக்ஸ பாத்தியா? ஷூவப் பாத்தியா? என்று மனைவியைப் போட்டு வதைப்பதும் மனைவியும் ”இது என்ன? கண்ணுக்கு முன்னே வச்சிக்கிட்டு தேடுறீங்க? எப்பவுமே நானே வந்து தேடிக் கையில தரனும்” என்று திட்டிக்கொண்டே அருகில் உள்ள பொருளைத் தேடிக்கொடுப்பதும் வீடுகளில் அன்றாடம் நடக்கும் சங்கதி.


இப்போது இதற்குக் காரணம் புரிந்திருக்கும். ஆண்களைவிட பெண்களால் இலகுவாக ஊசிக்கு நூல் கோர்க்க முடிவதும் இதனால்தான்.


3. கவனம் செழுத்தும் திறன்.


பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பலபணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை Multi Personality என்போம். உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும், பிள்ளைகளுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்யவும் முடியும். உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.


ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை மட்டுமே செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை Single Personality என்போம். உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது. அவர்களின் கவனம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது. கணவன் பத்திரிகையைத் திறந்து சோபாவில் அமர்ந்தால் மனைவி வாயைத் திறப்பார் “இந்த மனுசனுக்கு உலகமே அழிஞ்சாலும் ஒன்னும் தெரியாது. பேப்பர்தான் அவருக்கு உலகம்”


4. நிறங்கள் புலப்படும் விதம்.


ஆண்கள் ஆடைக் கடைகளுக்குச் சென்றால் குறுகிய நேரத்தில் தமக்கான ஆடையை பிடித்த நிறத்தில் பார்த்து எடுத்துக்கொண்டு வருவார்கள். ஆனால் பெண்கள் மிக நீண்ட நேரம் எடுப்பார்கள். காரணம் ஆண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்களை விட பெண்களின் கண்களுக்குப் புலப்படும் நிறங்கள் துல்லியமானவையாகவும் ஒரு நிறத்தில் உள்ள பல உப நிறங்களை வேறு பிரித்தறியும் விதத்திலும் இருப்பதனால்தான். எனவே ஆண்கள் மொத்தமாகப் பார்க்கும் பார்வையைவிடவும் பெண்கள் துல்லியமாகப் பார்ப்பதால் ஆடைகளைத் தெரிவுசெய்வதில் தாமதம் ஏற்படுகின்றது. 


5.மொழி.


பெண்களால் இலகுவாக பல மொழிகளைக் கற்றுக்கொள்ள முடியும். அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம். அவ்வாறே ஒரு நாளைக்குப் பெண்கள் சுமார் 7000 வார்த்தைகளைப் பேசுகின்றார்கள். 


ஆண்கள் ஒரு நாளைக்குப் பேசும் வார்த்தைகள் சுமார் 2000 மட்டும்தான். அனேக கணவன்மார் மனைவியைப் பார்த்துச் சொல்லும் வார்த்தைதான் “வாய மூடு, ஏன் எப்ப பாத்தாலும் சும்மா வள வளண்டு பேசுற?” பெண்கள் தமக்குள் உள்ளவற்றையெல்லாம் வாய் திறந்து பேசவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். கணவன் அன்றி வேறு யாரிடம்தான் அவர்களால் வாய் திறந்து பேச முடியும்? கணவன்மாரே மனைவியருக்கு சற்று செவிதாழ்த்தினால் என்ன?


6. பகுத்துணரும் திறன் (Analytical Skills)


ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து ஒரு தீர்மானத்திற்கு வருவதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாலான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆண்களின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.


உதாரணமாக வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் (Signal) என்பவற்றை முன் கூட்டியே விரைவாகக் கணித்து அதற்கு ஏற்றாற்போல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும்.


ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும். ஆண்களால் இவ்வாறு செய்ய முடிவதற்குக் காரணம், ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறனும் 90 டிகிரியில் தூரப் பார்க்கும் திறனுமாகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.


7. உடல் மொழிகளைப் பிரித்தறிதல்.


பெண்களால் இலகுவாக ஆண்களின் உடல் மொழிகளைப் (Body languages) படித்திட முடியும். சோர்வு, விரக்தி, கவலை, கோபம், சந்தோசம் என எதனையும் ஒரு பெண்ணால் இலகுவாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக இது பொய்தான் என்பதை அறிந்துகொள்வார்கள். ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை.  காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20%  உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் பிரித்தறிந்து உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை.


8. பிரச்சனைக்கான தீர்வுகள்.


பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள்.


ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்ணின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது.  யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாகவே திருப்தியடைந்துகொள்வார்கள். சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் சரி தீராவிட்டாலும் சரி அவர்கள் நிம்மதியாக படுத்துறங்குவார்கள்.


உதாரணமாக ஆண்கள் ஒரு பிரச்சினைக்கான தீர்வை யோசித்து, திட்டமிட்டு நடைமுறை ரீதியாக அதனைத் தீர்க்க முனையும்போது பெண்களோ அப்பிரச்சினையை உணர்ச்சி மூலம் தீர்த்துக்கொள்ள முற்படுகின்றனர். சிறு பிரச்சினைக்கும் பெண்கள் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுவது இதனால்தான்.


9. மகிழ்ச்சியின்மை:


ஒரு பெண்ணிற்கு தனது அன்புறவுகளிடையே பிரச்சினை அல்லது திருப்தியின்மை இருந்தால் அவர்களால், அவர்களின் வேலையில் ஒழுங்கு முறையாகக் கவனம் செலுத்த முடியாது. அதேபோன்று ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சினை இருந்தால் அவனின் அன்புறவுகளின் மீது சரியாகக் கவனம் செலுத்த முடியாது.


10. ஞாபக சக்தி.


இலக்கங்களை ஆண்களால் அதிகம் நினைவில் வைத்துக்கொள்ள முடியாது. மனைவியின் பிள்ளைகளின் பிறந்த நாளை நினைவு வைத்து கொள்ள ஆண் சிரமம் படுவான். பிள்ளையின் பிறந்த தேதி, வயது, எத்தனையாம் ஆண்டில் படிக்கிறான் என்று தந்தைமாரைக் கேட்டால் மனைவியைத்தான் திரும்பிப் பார்ப்பார்கள். மனைவியிடம் கேட்டுத்தான் சொல்வார்கள். எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும் மறந்துவிடுவார்கள். காரணம் ஆண்களின் இயல்புத் தன்மை அப்படித்தான். ஆனால் இந்தவிஷயத்தில் பெண்கள் நல்ல ஞாபக சக்தி உள்ளவர்கள். கணவன், பிள்ளைகள் என எல்லோருடைய பிறந்த தினத்தையும் அவர்கள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.


மேலே கூறிய குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சி கரமாணதாக இருக்கத்தேவையான காரணிகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களை கணவன், மனைவி இருவரும் அறிந்துகொள்வது அவசியாமாகும்.


மகிழ்ச்சிகரமாண குடும்ப வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்! நன்றி.


N2R NandhakumaR

Channel N2R

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...