Friday 31 May 2019

மோடியின் அடுத்த திட்டம் டிஜிட்டல் கிராமம்... 100 நாட்களில் 1000 கி.மீ. சாலை

புதிய அமைச்சரவை வியாழக்கிழமை பதவி ஏற்கும் நிலையில், புதிய அரசு உடனடியாக செய்ய உள்ள திட்டங்களுக்கான பட்டியல் தயாராகி உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைகள் துறை முதல் 100 நாட்களில் 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலையை அமைக்கும் திட்டத்தை தயாரித்து வைத்து உள்ளது.

போக்குவரத்து துறை செயலர் சஞ்சய் ரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 100 நாட்களில் செய்ய வேண்டிய பணிகளில் 20 ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்களை போக்குவரத்தில் இருந்து நீக்கும் திட்டமும் இடம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இதே போன்று டிஜிட்டல் கிராமத் திட்டத்தையும் உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் படி சுகாதாரம், நிதி சேவை, திறன் மேம்பாடு, கல்வி ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் கிராம மக்களுக்கு வழங்கப்படும். இதற்காக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா ஒரு கிராமம் என 700 ஊர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த கிராமங்களுக்கு பாரத் நெட் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் வைபை வசதி செய்யப்பட உள்ளது. அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்படும் பொது சேவை மையம் மூலம் கிராம மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் வைபை வசதி அளிக்கப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு சேவை மையத்திலும் கம்ப்யூட்டர் மையங்களும் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்களை கிராம மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த முடியும். இந்த மையங்கள் மூலம் கிராம மக்களுக்கு மருத்துவ ஆலோசனை, பணப் பரிமாற்றம், வங்கி சேவை, நிதி மேலாண்மை, விவசாயம் சார்ந்த தகவல்கள், கிராம தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி ஆகியவை அளிக்கப்படும்.

மேலும் கிராமத்து மாணவர்கள் சேவை மையம் மூலம் கல்வி அறிவை வளர்த்து கொள்ளவும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பட்சமாக 75 கிராமங்களும், மத்திய பிரதேசத்தில் 52 கிராமங்களும், பீகாரில் 38 கிராமங்களும் தேர்வு பெற்றுள்ளன. 
சுகாதார திட்டத்தின் படி, கிராமங்களில் உள்ளவர்கள் காணொலி காட்சி மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற முடியும்.

மிக அவசர சிகிச்சை தேவை படாத நோய்களுக்கு கிராம மக்கள், மருத்துவர்களிடம் காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை, மற்றும் மருந்துகள் குறித்த பரிந்துரையை பெற முடியும். இதன் மூலம் கிராம மக்கள் மருத்துவர்களை தேடி செல்லும் பயண நேரமும், செலவும் மிச்சமாகும். 
இதே போல கால்நடை மருத்துவ ஆலோசனைகளும் பெற வசதி செய்யப்பட உள்ளது.

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக பொருட்களின் பழுது நீக்கும் பயிற்சி, வாகன பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பயிற்சி, செல்பேசி பழுது பார்க்கும் பயிற்சி, மின்சாதன பொருள் பராமரிப்பு, பழுது நீக்கும் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட உள்ளன. இதன் மூலம் கிராமத்தினர் சுய தொழில் செய்ய வழிவகை செய்யப்படும்.

நிதிச் சேவை திட்டத்தின் படி, கிராம மக்கள் நிதி உதவி பெற ஆலோசனை, தொழில் மற்றும் விவசாய கடன்களை பெற வழிகாட்டுவது, சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாக சேமிக்கும் வழிமுறைகள் ஆகியவை அடங்குமென அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும் புதுப்பிக்க வல்ல எரிசக்தியை அதிகம் பயன்படுத்தும் வகையில் கிராம மக்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 Channel N2R  Narendra Modi Digital Village 100 Days 1000 kilometre Road

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...