Thursday, 13 August 2020

தூங்கும் போது கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்குபவரா? நீங்க பேரதிர்ஷ்டசாலிதான்! ஏன் தெரியுமா?

எவ்வளவு தான் நாள் முழுவதும் அயராது உழைத்தாலும், வீட்டிற்கு வந்து படுக்கையில் தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது. ஆனால் என்ன அவ்வாறு படுக்கையில் தூங்கும் போது ஆங்காங்கு சிறு வலிகளை சந்திப்போம். இதற்கு காரணம் நாம் தூங்கும் நிலை தான். ஒருவரின் முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு தூங்கும் நிலையானது மிகவும் முக்கியம். ஒரு நாளைக்கு 8 மணிநேரம் ஒரே நிலையில், அதுவும் தவறான நிலையில் தூங்கும் போது, முதுகெலும்பிற்கு போதுமான ஆதரவு கிடைக்கப் பெறாமல், அதன் விளைவாக வலி, பிடிப்பு மற்றும் உட்காயங்களை உண்டாக்கும

எனவே இரவு தூங்கும் போது சரியான நிலையில் தூங்க வேண்டியது அவசியம். எனவே தூங்கும் போது – முக்கியமாக பக்கவாட்டில் தூங்கும் போது கூட உங்கள் உடலை சரியான வழியில் நிலைநிறுத்துவதை உறுதி செய்ய வேண்டாம்.

மேலும் பொருத்தமான மெத்தை ஒன்றை தேர்ந்தெடுத்து, தலையணை பயன்படுத்தி முதுகெலும்பை ஆரோக்கியமான வளைவுக்கு மாற்றிவிடலாம்.

ஆரோக்கியமான தூக்கத்தினை பெற என்ன செய்யலாம்

தூங்கும் போது கால்களுக்கு இடையே தலையணையை வைத்துக் கொள்வதன் மூலம், அது ஆறுதலை அளிப்பதோடு, முழங்கால்களை ஒன்றின் மேல் ஒன்றாக வைத்திருப்பதன் மூலம் அழுத்தம் நீக்கப்படுகிறது.

இது உங்கள் இடுப்பு பகுதி சீரமைக்கப்படுவதை உறுதி செய்கிறது.

நன்மைகள்

முக்கிய குறிப்பு
  1. உடலின் ஆற்றலையும், மன விழிப்புணர்வையும் புதுப்பிக்க ஒரு நல்ல இரவு தூக்கம் அவசியம்.
  2. இது உங்கள் மனநிலையை மேம்படுத்தவும், அடுத்த நாளுக்கு உங்களை தயார்படுத்தவும் உதவுவது மட்டுமல்லாமல், நோயில் இருந்து மீளவோ அல்லது காயத்தில் இருந்து குணமடையவோ உதவும்.
  3. நீங்கள் தூங்கி எழுந்திருக்கும் போது, ஏதேனும் வலியை உணர்ந்தால், உடனே உங்கள் தூக்க தோரணையை சரிபார்க்கவும்.
  4. மேலும் ஒவ்வொரு இரவு தூங்கும் போதும் தூக்க தோரணையை கவனிக்க வேண்டியது அவசியம்.
  5. அதேப் போல் மறுநாள் காலையில் எழும் போது வலது பக்கம் திரும்பி எழ வேண்டும்.
N2R NandhakumaR
Channel N2R

Tuesday, 11 August 2020

ஹிந்தி கற்பது குறித்த எமது அனுபவக் கருத்து

Published by 
N2R NandhakumaR

   2012,  13 களில் டெக்ஸ்டைல் தொழில் குறித்த அனுபவங்களுக்காக குஜராத்திலுள்ள சூரத் மற்றும் அகமதாபாத் சென்றிருந்தேன். அக் கால கட்டங்களில் எனக்கு ஹிந்தி மொழி கடுகளவும் தெரியாது. அங்கு தென் மாநிலங்களில்  பேசும் அளவில் கால் பாக மக்களுக்கு கூட ஆங்கிலம் சிறிதும் தெரியாது. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஹிந்தியும் குஜராத்தியும் மட்டும் தான். சாப்பிடுவதற்கும் தேநீர் அருந்துவதற்கும் ஏன் தண்ணீர் ஒரு பாட்டில் வாங்குவதற்கும் கூட ஆங்கிலத்தில் கூறி செய்கையாலும் காட்டுவேன் ஒரு உமைக்கு நிகராக. அங்கிருந்த பத்து நாட்களும் மிகவும் சிறமப்பட்டுள்ளேன் மொழி தெரியாததால்.

 அதற்கு பிறகு  சத்தீஸ்கர், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு பல முறை சென்றுள்ளேன். ஹிந்தி மொழியில் நேர்த்தியான உரையாடல் இல்லாவிட்டாலும் தேவையான அளவிற்கும்  எனது கருத்துகளை பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு கற்றுக் கொண்டு.

இருப்பினும், பத்து மாதங்களுக்கு முன்பு உத்திரப்பிரதேசம், மனவ்ரி என்ற ஊரிலுள்ள விமானப்படை தளம் செல்ல  அலாகபாத்திலிருந்து மனவ்ரி  வரை 18 கி.மீ ஆட்டோவில் சென்றிருந்தேன்.  அந்த ஆட்டோ காரர் 4 கி.மீ முன்பே சரியான இடத்திற்கு வந்து விடுடோம் என்று பொய் சொல்லி இறக்கிவிட்டு பணத்தையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். வட இந்தியாவில் நெடுஞ்சாலைகளில் மட்டுமே ஊர் பெயர் பலகைகளில் ஆங்கிமும் இடம் பெற்றிருக்கும் சிறிய நகரங்களிலெல்லாம் ஹிந்தியில் மட்டுமே எழுதியிருக்கும். ஹிந்தி படிக்கத்தெரியாத பலவீனத்தால் அங்குள்ளவர்களிடம் விசாரித்து பிறகொரு ஆட்டோ பிடித்து சேர வேண்டிய இடத்திற்கு வட இந்தியனிடம் ஏமாந்த தமிழனாக சென்றேன்.  ஏமாற்றியவன் ஒரு புரம் இருந்தாலும் ஹிந்தி படிக்கத் தெரியாமல் ஏமாந்தது என் தவறு தானே....

  கேரளா சென்றால் மலையாளம் தெரிந்திருக்க வேண்டும், கர்நாடகா சென்றால் கனடம் தெரிந்திக்க வேண்டும், ஆந்திர சென்றால் தெலுங்கு தெரிந்திருக்க வேண்டும் இருப்பினும்  இம் மாநிலங்களில் ஆங்கிலம் எடுபடும். வட இந்தியாவில் பல மாநிலங்களில் ஹிந்தி அல்லாமல் மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, பெங்காலி, காஷ்மீரி பேன்ற பல மொழிகள் பேசப்படுகிறது. வட இந்தியாவில் ஹிந்தி தெரியாத பெரும்பான்மையான மக்கள் தங்கள் தாய் மொழி மட்டுமே தெரிந்து வாழ்ந்துவருகின்றனர். மேலும், தமிழகத்தில் பணிபுரியும் பிற மாநிலத்தவர்கள் பலரும் தங்கள் வாழ்வாதரத்திற்காக தமிழையும் கற்று வாழ்ந்து வருகின்றனர்.

   இந்திய அரசியலமைப்பு உருவாகும் போது மாதராஸ் இந்தியாவின் தலைநகரமாக இருந்திருந்தால் தமிழ் இந்தியாவிற்கே தாய் மொழியாக இருந்திருக்கும்.

  இந்தியாவின் தாய்மொழி இந்தி என்பதற்காக இந்தியையும்  வேறு எந்த மொழியையும் கட்டாயம் படிக்க வேண்டுமென்பதில்லை. 

  மொழிக்கல்வியும் தொழிற்கல்வியும் வேறு வேறு. படிப்பறிவே இல்லாத பல லாரி ஓட்டுனர்கள் இந்தியவின் ஏழு எட்டு மொழிகள் சரளாமாக பேசுகின்றனர். தேவையிருந்தால் தேவைப்படும் மொழியை எந்த வயதிலும் கற்றுக்கொள்ளலாம்.

  தமிழகத்தை பெருத்தவரை இப்போதும் இரண்டு தலைமுறை மக்களுக்கு தமிழ் மட்டுமே தெரியும். ஆகவே, இந்த தலைமுறை வாழ நமது தாய் மொழியான தமிழை கட்டாயமான மொழிப் பாடமாகவும் ஆங்கிலத்தை இராண்டாவது மொழிப்பாடமாகவும் மூன்றாவதாக தேவைப்பட்டால்
 நம் விருபத்தின் படி பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுவதும் சிறந்த கல்வி முறையாக இருக்கும் என்பது எனது கருத்து.

ஆரியத்திற்கும் திராவிடத்திற்கும் ஆயிரம் கருத்துக்களிலிருக்கலாம்!
 தமிழனுக்கு தமிழ் மட்டுமே முதல் நோக்கம்!!

N2R நந்தகுமார்

வள்ளலார் கூறும் 42 வகை பாவங்கள்

பாவம் செய்யாதிரு மனமே!
நாளும் பாவம் செய்யாதிரு மனமே! மனமே!!

1. நல்லவர் மனத்தை நடுங்க வைப்பது.

2. வலிய வழக்கிட்டு மானம் கெடுப்பது.

3. தானம் கொடுப்போரைத் தடுத்து நிற்பது.

4. கலந்த சிநேகிதருள் கலகம் உண்டாக்குவது.

5. மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்வது.

6. குடிமக்களிடம் வரி உயர்த்திக் கொள்ளையடிப்பது.

7. ஏழைகள் வயிறு எரியச்செய்வது.

8. தருமம் பாராது தண்டிப்பது.

9. ஒரு தலைச் சார்பாக வழக்குரைப்பது.

10. உயிர்க் கொலை செய்பவர்க்கு உபகாரம் செய்வது.

11. களவு செய்பவர்க்கு உளவுகள் சொல்வது.

12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.

13. ஆசை காட்டி மோசம் செய்வது.

14. பொது வழியை மூடி அடைப்பது.

15. வேலை வாங்கிக்கொண்டு கூலி குறைப்பது.

16. பசித்தோர் முகத்தைப் பாராமல் இருப்பது.

17. இரப்பவர்க்குப் பிச்சை இல்லை என்பது.

18. கோள் சொல்லிக் குடும்பத்தைக் குலைப்பது.

19. நட்டாற்றில் கை நழுவுவது.

20. கலங்கி ஒளிந்தவரைக் காட்டிக் கொடுப்பது.

21. கற்பிழந்தவளோடு கலந்துறைவது.

22. காவல் கொண்ட கன்னியை கற்பழிப்பது.

23. கணவன் வழி நிற்பவளைக் கற்பழிப்பது.

24. கருவைக் கலைப்பது.

25. குருவை வணங்கக் கூசி நிற்பது.

26. குருவின் காணிக்கை கொடுக்க மறுப்பது.

27. கற்றவர் தம்மிடம் கடுப்போடு நடப்பது.

28. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.

29. கன்றுக்குப் பாலூட்டாமல் கட்டி அடைப்பது.

30. ஊன் சுவை உண்டு உடல் வளர்ப்பது.

31. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.

32. அன்புடையவர்க்குத் துன்பம் செய்வது.

33. குடிக்கின்ற நீருள்ள குளத்தைத் தூர்ப்பது.

34. வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிப்பது.

35. பகை கொண்டு அயலவர் பயிர் அழிப்பது.

36. பொது மண்டபத்தைப் போய் இடிப்பது.

37. ஆலயக் கதவை அடைத்து வைப்பது.

38. சிவனடியாரைச் சீறி வைவது.

39. தவம் செய்வோரைத் தாழ்வு சொல்வது.

40. சுத்த ஞானியரைத் தூஷணம் செய்வது.

41. தந்தை தாய் மொழியைக் தள்ளி நடப்பது.

42. தெய்வத்தை இகழ்ந்து செருக்கு அடைவது.

N2R நந்தகுமார்
Channel N2R

Friday, 7 August 2020

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் 2020 ல் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன வெற்றி



Published by
Channel N2R
07.08.2020 4:30 am

   கலைக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான 9 வது நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 2020 ல் திட்டமிடபட்டிருந்தது. ஆனால், கொரானோ வைரஸ் பாதிப்பால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் 05.08.2020 புதன்கிழமை அன்று நடைபெற்றது.

    மொத்தமுள்ள 225 எம்.பிக்களில் 196 பேர் தேர்தல் மூலமும், 29 பேர் நியமன எம்.பிக்களாகவும் தேர்வு செய்யப்படுவர். இலங்கையின் 22 மாவட்டங்களில் 12,985 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு  இத் தேர்தல் நடைபெற்றது.

   இத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 06.08.2020 வியாழக்கிழமை நடைபெற்று 07.08.2020 இன்று அதிகாலையில் அதிகாரப்பூர்வ முடிவுகள் வெளியாகியுள்ளது.

   1,62,63,885 மொத்த வாக்காளர்களை  கொண்ட இலங்கையில் 1,23,43,302 வாக்குகள் (75.8%) பதிவாகியுள்ளது. பதிவான வாக்குகளில் 1,15,98,929  செல்லத்தக்க வாக்குகளும் 7,44,373 செல்லாத வாக்குகளாகவும் பதிவாகி இருந்தது.

  தேர்தல் நடைபெற்ற 196 இடங்களில் மகிந்த ராஜபக்ச தலைமையிலான இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) 128 இடங்களிலும் சஜித் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 47 இடங்களிலும் பிற கட்சிகள் 21 இடங்களிலும்வெற்றி பெற்றுள்ளது.

  இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

N2R நந்தகுமார்
Channel N2R

Friday, 24 July 2020

ஏழு கல் விளையாட்டு | Lagori Game

காலம் மறந்த பொக்கிசம் ஏழு கல் விளையாட்டு


⚾தமிழர்கள் கண்டுபிடித்த விளையாட்டுகள் அனைத்தும் நமது உடல், மனம், சிந்தனை, மொழி, கலாச்சாரம், பண்பாடு, கணிதம், நிர்வாகம், வாழ்க்கை முறை, விடாமுயற்சி என்று ஏதேனும் ஒரு வகையில் நம்முடைய மனதிற்கும், நம்முடைய உடலிற்கும் நன்மைகளை வழங்கக்கூடிய விளையாட்டாகவே இருந்துள்ளன.

⚾கிராமங்களில் விளையாடக்கூடிய ஒரு விளையாட்டுதான் இந்த ஏழு கல் விளையாட்டு. இதனை seven stones என்றால் தான் அனைவருக்கும் தெரியும்.

எத்தனை பேர் விளையாடலாம்?

👉பத்திற்கும் மேற்பட்டோர். இரண்டு அணிகளாக பிரிந்து விளையாடலாம்.

தேவையான பொருட்கள் என்ன?

👉7 தட்டையான கற்கள் ( பெரிய அளவிலிருந்து சிறிய அளவு வரை வேறுபட்டவை)

👉ஒரு பந்து

எப்படி விளையாடுவது?

⚾முதலில் இரு அணிகளை தேர்வு செய்து கொள்ள வேண்டும். எந்த அணி கற்களை அடுக்க வேண்டும் (முதலாவது அணி), எந்த அணி கற்களை களைக்க வேண்டும் (இரண்டாவது அணி) எனவும் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். இதை டாஸ் மூலமும் தீர்மானிக்கலாம்.

⚾முதலாவது அணி ஏழு கற்களையும் பெரிய கல் முதல் சிறிய கல் வரை ஒன்றன் மேல் ஒன்றாக வரிசையாக அடுக்கி வைப்பர்.

⚾'ரெடி" சொன்னவுடன் இரண்டாவது அணி கற்களின் மீது பந்தை எறிந்து அடுக்கிய கற்களை களைத்ததும் ஆட்டம் தொடங்கும்.


⚾முதலாவது அணி கற்களை அடுக்க முற்பட வேண்டும். ஆனால் இரண்டாவது அணி கற்களை அடுக்க விடாமல் அதை களைத்துக்கொண்டே இருப்பார்கள். கற்களை அடுக்க விடாமல் முதல் அணியில் உள்ள நபர்களை பந்தால் அடிப்பார்கள். அப்படி அடித்தால் இரண்டாம் அணிக்கு 1 பாயிண்ட்.

⚾முதலாம் அணி பந்தால் அடி வாங்காமல் ஏழு கற்களையும் அடுக்கிவிட்டு அதை சுற்றி வட்டம் வரைந்து விட்டால் முதல் அணி வெற்றி பெற்றதாகும்.


⚾கற்களை அடுக்கிவிட்டு வட்டம் வரைவதற்குள் இரண்டாம் அணி பந்தை எறிந்து கற்களை களைத்துவிட்டால் மீண்டும் ஆட்டம் தொடரும்.

⚾வெற்றிபெற்ற அணி மீண்டும் கற்களை அடுக்குவதா அல்லது களைப்பதா என்று தீர்மானித்து அடுத்த ஆட்டத்தை தொடங்குவர்.

பயன்கள் :

👉பொறுமை, விடாமுயற்சி கூடும்.

👉குழு ஒற்றுமை வளரும்.

👉இலக்கை அடையும் திறன் மேம்படும்.


Saturday, 27 June 2020

பெண்களை திருமணத்திற்கு முன்பு ஊஞ்சலாட சொல்வது எதற்காக தெரியுமா ??

    வீட்டில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.ஆனால் இப்போது இந்த பழக்கம் வெகுவாககுறைந்து விட்டது..முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் மகிழ்ச்சியாக ஆடினார்கள். இப்போது செல்போன் கையுமாகவே சுற்றுகிறார்கள். படிப்படியாய் குறைந்து தற்போது காணாமல் போய்விட்டது இந்த பழக்கம்…இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள்…

   இடவசதி குறைவாக உள்ளவர்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன. ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் விழாக்கள் இன்றும் உண்டு ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள நெகடிவ் எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றதது திருமணங்களில் ஊஞ்சல் சடங்கு’ இதன்
அடிப்படையிலேயே உருவானது.


    ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் அடையும்…நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு சைடுகளிலும் உள்ள சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேகமாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. கணிணியில் மணிக்கணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன்றைய தலைமுறையினர் இந்த ஊஞ்சல் பயிற்சியை தினமும் செய்தால் முதுகுத் தண்டுவடம் பலம் பெற்று
க ழுத்துவலி போன்ற பிரச்சனைகள் வராது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் இது பொருந்தும்.


    தோட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது…மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு(ஆக்சிஜன்) வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான ஆக்சிஜனை கொடுத்து இ தயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இ த ய நோய் கட்டுப்படும். ஊஞ்சல் ஆடுவதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு இரத்தம் சீராக செல்லும்.

   சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இது உதவும். உணவு மண்டலம் சீரடையும்.. கோ பமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோ பம் குறையும்.. வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக அமைதியாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும். பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள் வீட்டுக்குள் வரும் தேவதைகள் வீட்டின் முன் இருக்கும் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், என்று சொல்லி வைத்தார்கள்.

   ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது. இப்போது ஊஞ்சலை பார்ப்பது அரிதாக உள்ளது. வாஸ்து படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது என்று பலரும் கூறுகின்றனர்.

N2R நந்தகுமார்
Channel N2R

Sunday, 24 May 2020

உங்கள் வீட்டில், எறும்புகள் திடீரென்று கூட்டம் கூட்டமாக வருகிறதா? எறும்பு சாக்பீஸ் போட்டுட்டு அப்படியே விட்றாதீங்க! காரணத்தையும் தெரிஞ்சுக்கோங்க.


     வீடுகள் என்று இருந்தால் எறும்புகள் கட்டாயமாக வரும். இதற்கெல்லாம் காரண காரியங்கள் இருக்கின்றதா? என்ற கேள்வி உங்கள் மனதில் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கானது அல்ல. எறும்புகள் படை எடுத்து வருவதற்கும், காரணம் உண்டா? என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களிடம் இருந்தால், இந்த பதிவை தொடர்ந்து படிக்கலாம். குடித்தனம் செய்யும் வீட்டில் திடீரென்று எரும்பு வருவதற்கு காரணம், நம் வீட்டில் உணவு பண்டங்கள் சரியான முறையில் பராமரிக்கப்படாமல் இருப்பதும் ஒன்று. இதைத் தவிர்த்து வெயில் காலங்களில், குளிர்ச்சியான இடங்களைத் தேடி எறும்புகள் வருவது இயற்கைதான். இவை எதுவுமே இல்லாமல் உங்கள் வீட்டு வெளிப்புறங்களில், கதவுகளுக்கு பின் பக்கங்களில், இப்படி எறும்புகள் வருவதற்கு வாய்ப்பே இல்லாத சில இடங்களில் திடீரென்று சாரைசாரையாக வரும். இந்த எறும்புகள் உங்களுக்கு எதை உணர்த்துகிறது என்பதை நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள ஒரு அவசியம் இருக்கிறது. அதைப் பற்றித்தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

  எதிர்பாராமல் கூட்டம் கூட்டமாக உங்கள் வீட்டிற்குள் படையெடுக்கும் பிள்ளையார் எறும்பாக இருந்தாலும் சரி. கட்டெறும்பாக இருந்தாலும் சரி. யாருடைய கஷ்டத்திற்கோ, நீங்கள் காரணமாக இருக்கிறீர்கள் என்பதை குறிக்கிறது. அதாவது உங்கள் மேல் பாசம் வைத்துள்ள ஒருவரிடம், நீங்கள் நீண்ட நாட்களாக பேசாமல் இருக்கும் பட்சத்தில், அதை நினைவுபடுத்த கூட இந்த எறும்புகளானது உங்கள் வீட்டில் படையெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது உங்களுக்கு நெருங்கிய சொந்தமாக இருந்தாலும், தூரத்து சொந்தமாக இருந்தாலும் உங்கள் மீது உண்மையான பாசம் வைத்திருப்பவர்கள் யாரையும் நீங்கள் தள்ளி வைத்திருக்கிறீர்கள் என்பதை குறிக்கின்றது.

  

  பெண்களாக இருந்தால் கட்டாயம் அம்மா அப்பாவிடம் பேசாமல் இருக்க மாட்டீர்கள். உங்களுடைய மாமனார் மாமியார் உங்களுக்கு ஆகாதவர்கள் ஆக இருந்தாலும் கூட, அவர்கள் மனதில் உங்கள் மீது கொஞ்சம் பாசம் இருக்க வாய்ப்பு உண்டு. அவர்களின் ஏக்கத்திற்கு நீங்கள் காரணமாக இருந்தாலும், அதை வலியுறுத்த இந்த எறும்புகள் உங்கள் வீடு தேடி வரும்.

   சில ஆண்கள் தங்களுடைய தாய் தந்தையரிடம் சண்டை போட்டுக் கொண்டு பேசாமல் இருப்பவர்களும் உள்ளார்கள். அப்படி, இருக்கும் பட்சத்தில், அது மிகப்பெரிய தவறு. உங்களிடம் பாசம் வைத்திருப்பவர்கள் உங்களை நினைத்து கொண்டு ஏங்கிக் கொண்டிருக்கும் பட்சத்தில், அது பெரிய பாவத்தை கொண்டு வந்து, நம் சந்ததியினருக்கு சேர்த்து விடும் என்பதை நினைவில் கொண்டு, உங்கள் சொந்த பந்தங்களை, அலட்சியப்படுத்தாமல் நேரில் சென்று பார்க்க முடியவில்லை என்றாலும், தொலைபேசியிலாவது உரையாடும் வாய்ப்பை  ஏற்படுத்திக்கொள்ளுங்கள். சில வீடுகளில் கணவன் மனைவி பிரிந்து இருக்கும் பட்சத்தில், அவர்கள் மனதில் பாசம் இருக்க வாய்ப்பு உள்ளது. மனதிற்குள்ளேயே ஆயிரம் முறை மன்னிப்பு கேட்பவர்கள், வெளியில் ஒருமுறை மன்னிப்பு கேட்டால் போதுமே, பிரச்சனைகள் தீர்ந்துவிடும்.

   இதை எத்தனை பேர் நம்புவீர்கள் என்பது தெரியாது. ஆனால், சித்தர்களின் நூல்களில் குறிப்பிட்டுள்ள, குறிப்புகள் தான் இவை அனைத்துமே. யாருடைய ஏக்கத்திற்கும், யாருடைய ஏமாற்றத்திற்கும் கட்டாயம் நீங்கள் காரணமாக இருக்காதீர்கள். உங்கள் மீது பாசம் வைத்து இருப்பவர்களை உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், உங்களுக்கு நெருங்கிய சொந்தங்களாக இருந்தால், அவர்களிடம் பேசுவதில் எந்த தவறும் இல்லை.

  குறிப்பாக குழந்தைகளை தாத்தா பாட்டிகளிடம் பேச வைப்பது அவசியம். மகனாக இருந்தாலும் மகளாக இருந்தாலும், தன்னுடைய தாய் தந்தையரிடம் பேசுவது அவசியம். மருமகள், மருமகன் தங்களுடைய மாமனார் மாமியாரிடம் பேச வேண்டியது அவசியம். இந்த வரிசையில் அத்தை, மாமா, பெரியம்மா பெரியப்பா என்று யார் இருந்தாலும் உங்கள் மீது பாசம் வைத்திருப்பவர்கள் என்றால் அவர்களை ஒதுக்கி வைக்காமல் பேசுவதே நல்லது. இப்படி உங்க சொந்த பந்தங்களில் யாரையாவது நீங்கள் நீண்ட நாட்களாக பேசாமல் ஒதுக்கி வைத்து உள்ளீர்களா? என்று சிந்தித்துப் பாருங்கள்! உங்கள் வீட்டில் எறும்புகள் படை எடுத்து வருவதற்கு இது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

  உங்களால் சில சொந்த பந்தங்கள் இடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், பேச முடியாத சூழ்நிலை என்றால் கொஞ்சம் அரிசி மாவு அல்லது ரவையிலோ சிறிதளவு சர்க்கரையை சேர்த்து கலந்து கோவில்களுக்கு சென்று அங்கு இருக்கும்  எறுப்புகளுக்கு உணவாக அளிக்கலாம். இதேபோல், வீட்டின் அருகில் செடி கொடிகள் இருந்தால் அங்கு வாழும் எறும்புக்கு, அரிசி மாவு சர்க்கரை ரவை சேர்த்து, உணவாக போடலாம். உங்கள் வீட்டில் வரும் எறும்புகள் காணாமல் போய்விடும்.

  சொந்தபந்தங்கள் என்றுமே ஒன்றுகூடி இருப்பது நல்லது தானே இதை நமக்கு கூட்டம் கூட்டமாக, என்றுமே ஒன்றாக வாழும் எறும்புக் கூட்டம் வலியுறுத்துகிறது என்று சொன்னால் அதை நம்புவதில் ஒன்றும் தவறு இல்லையே! உங்கள் மீது அன்பு வைத்திருப்பவர்கள், யாருடைய ஏக்கத்திற்கும் நீங்கள் காரணமாக இருக்கக் கூடாது என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

N2R NandhakumaR
Channel N2R 

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...