Thursday, 11 July 2019

வெவ்வேறு ஊர்களில் பரமனுக்கு பல்வேறு திருப்பெயர்கள்


தஞ்சாவூரில் *பிரகதீஸ்வரர்*


திருவாரூரில் *தியாகராஜர்*


திருநெல்வேலியில் *நெல்லையப்பர்*


திருவையாறில் *ஐயாறப்பர்*


திருவண்ணாமலையில் *அண்ணாமலையார்*


திருவாவடுதுறையில் *கோமுக்தீஸ்வரர்*


திருவெண்காட்டில் *சுவேதாரண்யேஸ்வரர்*


திருவானைக்காவலில் *ஜம்புகேஸ்வரர்*


திருக்கருகாவூரில் *முல்லைவனநாதர்* 


திருவாலாங்காட்டில் *வடாரண்யேஸ்வரர்*


திருமருகலில் *ரத்தினகிரீஸ்வரர்*


திருவிசநல்லூரில் *யோகநந்தீஸ்வரர்* 


திருப்புகலூரில் *வர்த்தமானீஸ்வரர்*


திருத்தங்கூரில் *வெள்ளிமலைநாதர்*


திருக்கழுகுன்றத்தில் *வேதகிரீஸ்வரர்*


திருநீலக்குடியில் *நீலகண்டேஸ்வரர்*


திருச்சியில் *தாயுமானவர்*

 

திருநள்ளாரில் *தர்ப்பாரண்யேஸ்வரர்*

 

திருமணஞ்சேரியில் *உத்வாகநாதர்*


திருவேள்விக்குடியில் *கல்யாண சுந்தரேஸ்வரர்*


திருவேற்காட்டில் *வேதபுரீஸ்வரர்*


திருக்கண்ணபுரத்தில் *ராமநாதர்*


திருமழபாடியில் *வைத்தியநாதர்*


திருக்கோவிலூரில் *வீரட்டேஸ்வரர்*


திருப்புனவாசலில் *விருத்தபுரீஸ்வரர்*


திருவண்டுதுறையில் *வண்டுறைநாதர்*


திருமாணிக்குழியில் *வாமனபுரீஸ்வரர்*

 

திருவாளப்புத்தூரில் *மாணிக்கவண்ணர்*


*இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி , ஆறு கால பூசையில் , ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து, தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.*


*தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128. வடகரையில் அமைந்த தலங்கள் 63.*


*ஈழத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்த திருக்கோணேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கேதீச்சரத்தில் அமைந்த திருக்கேதீஸ்வரர் கோவிலும் தேவாரம் பாடப் பெற்ற தலங்களே.*


*தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும். ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.*


*எடுத்துக்காட்டு : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு , இதுவே காலப்போக்கில் திருவையாறாக மாறி இருக்கிறது. காவிரி , குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.*


*இப்போதெல்லாம் நம்ம பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர். வாழ்க தமிழர்களின் புகழ்.*


*திருச்சிற்றம்பலம்*


 -சேயோன் சேவகன்

N2R நந்தகுமார்

அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள்

🌸


வள்ளுவர் ஓர் இந்து

🌸


 ஒரு மனிதன்  எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக் கண்டுபிடிப்பது? 

🌸


இந்துக்களின் நெற்றி மதச் சின்னத்தைக் காட்டுகிறது.

 கிறிஸ்தவர்களின் கழுத்தில் தொங்கும் சிலுவை அவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதை க்குறிக்கிறது.

முஸ்லீம்களின் ஆடையும், தொப்பியும் கோஷாவும் அவர்கள் முஸ்லீம்கள் என்பதைத் தெளிவாக்குகின்றன.

ஆனால், இந்தச் சின்னங்கள் ஏதுமில்லா த நவநாகரிக இளைஞன் ஒருவனை, அவன் எந்த மதத்தைச் சேர்ந்தவன் என்று எப்படிக்கண்டுபிடிப்பது.?

🌸


ஒரு கதை உண்டு.

 ஒரு மனிதன் பன்னிரண்டு மொழிகள் பேசுவானாம்.

ஒவ்வொரு மொழியையும், அந்தந்த மொழிக்காரர்கள் எ ப்படிப் பேசுவார்களோ அப்படியே அதே தொனியொடும்  உச்சரிப்போடும் பேசுவானாம். 

அவனுடைய தாய்மொழி எது என்று யாருக்கும் தெரியவில்லையாம்.

அவனைக் கேட்டால் அவனும் சொல்ல மறுத்து விட்டானாம். அவனது தாய்மொழியைக் கண்டுபிடிக்க  அவனது நண்பர்கள் ஒரு வேலை செய்தார்களாம்.

ஒர நாள் அவன் நன்றாக த் தூங்கிக் கொண்டிருக்கும் போது ”பளார்” என்று அவன் முதுகிலே ஓங்கி அடித்தார்களாம்.

அவன் ஆத்திரத்தோடு எந்தடா நாயாடி மோனே” என்று சொல்லிக் கொண்டே எழுந்து உட்கார்ந்தானாம்.

அவனது தாய்மொழி மலையாளம் என்பது தெரிந்து விட்டதாம்.

🌸


தன்வயமற்ற நிலையில் ஒருவன் பேசுகிற பேச்சு தான்  உண்மையானப் பேச்சு.

அது போதையாயினும் சரி, உற்சாகமாயினும் சரியே.

🌸


நடக்கும் வழியில் ஒருகல்  தடுக்கிவிட்டதென்றால்  ஒருவன் கடவுளே “என்கிறான் அவன் இந்து.

அல்லா” என்றால் அவன் முஸ்லீம்.

கர்த்தரே” என்றால் அவன் கிறிஸ்தவன்.

🌸


ஒவ்வொரு மதத்துக்காரருக்கும் முக்கியமான கட்டங்களில் எல்லாம், தனது மத தத்துவம், தனது கடவுள் நினைவுக்கு வருவது போல ஒவ்வொரு மதக் கவிஞனுக்கும்  தனது எழுத்துகளில் தனது கடவுள்  பற்றிய சிந்தனையே வரும்.

வள்ளுவனும் அப்படியே!

🌸


இறைவனைப்பற்றி அவன் குறிப்பிடுகிற சில வார்த்தைகள் வேறு சில மதக்கடவுளுக்கும் பொருந்தும் என்றாலும், பெரும்பாலானவை  நேரடியாக இந்துமதக்கடவுள்களையே  குறிக்கின்றன.

🌸


உதாரணமாக ”வேண்டுதல் வேண்டாமை இலான்” என்பது எல்லா மதத்தின் மூலவருக்கும் 

பொருந்தும் என்றாலும் விருப்பு வெறுப்பற்றவன் என்று இந்துக்களே இறைவனை அதிகம் கூறுகிறார்கள்.

🌸


ஆழ்வார்கள் நயன்மார்கள் பாடல்கள் அனைத்திலும்  இந்த எண்ணம் பிரதிபலிக்கிறது.

🌸


கடவுள் என்ற வார்த்தையை வள்ளுவன் பயன்படுத்த வில்லை என்றாலும் ”கடந்து உள்ளிருப்பவன்” என்ற பொருளில்  இந்தக்கள் மட்டுமே அதனைப் பயன்படுத்துகிறார்கள். 

இறைவன் என்ற சொல் கடவுள் என்ற பொருளில் வளு்ளுவனால் இரண்டு இடங்களில் பயன்படுத்தப் படுகிறது.

🌸


ஐந்தாவது குறளில் ”இருள் சேர் இருவினையும்” சேரா இறைவன் என்றும்,

 பத்தாவது குறளில் ” பிறவிப்பெருங்கடல் நீந்துவார் நீந்தார்  இறைவனடி சேராதார்” என்றும் அது ஆளப்படுகிறது.

🌸


கடவுளை“இறைவன் ”என்று பௌத்தர்களோ,முஸ்லீம்களோ,கிறிஸ்தவர்களோ கூறத் தொடங்குவதற்குப்பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் வள்ளுவன் கூறியிருக்கிறான். மற்றவர்கள் பின்னால் எடுத்துக் கொண்டார்கள்.

🌸


வள்ளுவன் காலத்தில் பௌத்த மதமும் இந்தியாவிலேயே பிறந்த வேறு  சில மதங்களும் மட்டுமே  இருந்தன.

அந்நாளில் அவை கடவுளை இறைவன்” என்று அழைத்ததில்லை.

ஆனால் இந்துக்களின் கடவுள் பாடல்கள் பிரபந்தங்கள் அனைத்திலும்  அந்த வார்த்தை வருகிறது.

🌸


அதிலும் வினைகள் இருவகை, அவை நல்வினை, தீவினை எனச் சொல்வோர் இந்துக்கள்.

அஃதன்றியும்,இறைவன் என்ற சொல்லை அரசன் என்ற பொருளில் 690,733,778 ஆவது குறள்களில் வள்ளுவன் கையாள்கிறான்.

 இறைவனையும் , அரசனையும் வேறு எந்த மதத்தவரும் ஒன்றாகக் கருதுவதில்லை.ஒரே சொல்லால் அழைப்பதில்லை.

🌸


பிற்காலத்தில் தமிழ் இந்துக்கள் இன்னும் ஒர படி மேலே போய் ”கோ” என்ற வார்த்தைக்கு  “இறைவன்” அரசன்.பசு என்ற மூன்று அர்த்தத்தையும் கொடுத்திருக்கிறார்கள்.

இறைவனடி சேர்வது என்ற மரபு இந்துக்களுக்கு மட்டுமே உண்டு.

🌸


வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப்படும்.

என்ற குறளில் வரும்.”வானுறையும் தெய்வம்” இந்துக்களுக்கு மட்டுமே உண்டு.

🌸


தெய்வம் வானத்தில் இருக்கிறது என்பதை மற்ற மதத்தவர் ஒத்துக் கொள்வதில்லை.

பெயக்கண்டும்.நஞ்சுண்டமைவர்” என்ற குறள் ” திருப்பாற்கடல் கடையப்பட்ட போது ஆலகால விஷத்தை அள்ளியுண்ட பரமசிவனையே குறிக்கிறது.” அடியாருக்கு, நஞ்சமுதம் ஆவது தான் அற்புதமோ? என்கிறார் சேக்கிழார் பெருமான்.

🌸


நற்றிணையில் வரும் ”நஞ்சுண்பர் நனிநாகரிகர் ” என்ற தொடரும் சிவனாரைக் குறிப்பதாக நான் சொன்னால் யார் மறுக்க முடியும்?

🌸


அஃதன்றியும் , ஒரு குறளில் இந்துக்களுக்கு மட்டுமே உரிய இந்திரனைச் சாட்சிக்கழைக்கிறார் வள்ளுவர். 

🌸


வேறு எந்த மதத்தவருக்கும் ”இந்திரன்” என்று ஒருவன் இல்லை. அதிலும் இந்திரன் சம்பந்தப்பட்ட இந்து மதம் ஒன்றையே வள்ளுவர் உவமிக்கிறார்.

ஐந்தவித்தான் ஆற்றல்

அகல் விகம்புளார் கோமான்

இந்திரனே சாலுங் கரி.

ஐந்து பொறிகளையும் அடக்காது சாபம் எய்திய  இந்திரன் அடக்குவோனுடைய ஆற்றலுக்குச் சான்றாகிறான்  என்கிறார். 

கெட்டுப் போனவனைக் காட்டி நல்லவனைப் புகழ்வது போல் , பொறி அடக்காத இந்திரனைக் காட்டி அடக்குவோரின் ஆற்றலை வியக்கிறார் வள்ளுவர்.

🌸


 இந்துக்களின் புராணப்படி அகல் விசும்புளார் கோமான்” என்றே இந்திரனை அழைக்கிறார். 

அவர் கூறும் உவமான  கதை அகலிகையின் கதையாகும்.

🌸


இன்னுமோர் இடத்தில் 

 கோளில்  பொறியிற்  குணமிலவே எண்குணத்தான் 

 தாளை வணங்காத் தலை.

என்கிறார்.

 இந்துக்களின் இறைவனுக்கு மட்டுமே எட்டுக் குணங்கள் கற்பிக்கப் பட்டிருக்கின்றன.. 

🌸


பரிமேலழகர் சொற்படி அந்த எட்டுக் குணங்கள்  கீழ் கண்டவை

தன் வயத்தனாதல்

தூயவுடம்பினனாதல் 

இயற்கையுணர்வினனாதல்

முற்றுமுணர்தல்

இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்

பேரருளுடைமை

முடிவிலாற்றலுடைமை

வரம்பில் இன்பமுடைமை

-சைவ ஆகமத்திலும் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.

அப்பர் சுவாமிகளும், எட்டு வான் குணத்து ஈசன் எனப்பாடினார்.

🌸


 கற்றதனால் ஆயப்பயன் என்கொல் வாலறிவன்

நற்றாள் தொழா அர் எனின். 

என்றொரு குறள்.

இதில்”வாலறிவன்”” என்பது மற்ற மதக்கடவுள்களையும் குறிக்கக்கூடிய மயக்கத்தைத் தரும்.ஆயினும் எங்கும், எப்பொழுதும் , தானாகவே அனைத்தையும்  அறியும் ஞானத்தைக் குறிப்பதால்” அங்கிங்கெனாதபடி  எங்கும் பிரகாசமாய் ஆனந்தமூர்த்தியாகி நிற்கும் ஈசனைக்குறிப்பதாகக் கொள்ளலாம்.

🌸


அது போல ”தனக்கு வமை இல்லாதவன்”          என்ற சொல்லும் மயக்கத்தைத்தரும்.ஆயினும், அதுவும் ஈசனைக்குறிப்பதாக எடுத்துக்கொள்ள முடியும்.

🌸


அப்பர் சுவாமிகள் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டிப் பேராசிரியர் ஜி.சுப்பிரமணியபிள்ளை அவர்கள் இதனை விளக்கியிருக்கிறார்கள். 

ஒரு ”குறளில் வரும் ”மலர்மிசை ஏகினான்” என்ற வார்த்தை பல பொருள் தருமாயினும், பரிமேலழகர் உரைப்படியும், பிற்கால நாயன்மார்கள் பாடல்களின்  படியும், அதுவும் சிவபெருமானையே குறிக்கிறது.


பிறவியைப் ”பெருங்கடல்”என்று இந்துக்கள் மட்டுமே குறிப்பதால் நான் முன்பு  சொன்ன அந்தக்குறளும் வள்ளுவன் ஓர் இந்துவே எனக் காட்டுகிறது.

🌸


மற்றும்

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் 

பற்றுக பற்று விடற்கு

என்றும்

தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல் 

தாமரைக்கண்ணான் உலகு

என்றும் இந்துக்களின் துறவுத்தத்துவத்தையும்  தலைவன் பெயரையும் வள்ளுவர் குறிப்பிடுகிறார். 

வள்ளுவர் கூறும் தானமும் தவமும் இந்துக்களின் மரபுகளே.

🌸


 துறவறத்தின் பெருமையைப் புத்தமதமும் கூறுமாயினும், இந்திரனைப்பற்றிய குறிப்பு வள்ளுவரின் நீத்தார் பெருமை” என்ற அதிகாரத்திலேயே வருவது குறிப்பிடத்தக்கது  

🌸


இவ்வாறு வள்ளுவப்பெருந்தகை          தொட்ட இடமெல்லாம்  இந்துக் கடவுள்களையும், இந்துக்களின் மரபையுமே கூறுவதால் அவரும் ஓர் இந்துவே என்பது  சந்தேகத்திற்கு இடமில்லாத உண்மை.

🌸


 அவரைத் தூக்கத்தில் தட்டி எழுப்பியிருந்தாலும் ”இறைவா” என்று தான் சொல்லி இருப்பார்.

🌸


 அறத்துப்பாலில் காணும் அறமும், பொருட்பாலில் காணும் பொருள்களும், தமிழர்களுக்கு மட்டுமே உரியவையாக அன்று இருந்தன.

🌸


ஆகவே தமிழரான வள்ளுவர் ஓர் இந்து. இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே என்பது எனது துணிபு.

🌸

Tuesday, 9 July 2019

உலகின் முதல் சிவன் ஆலயம் மற்றும் அதன் சிறப்பு தகவல்கள்


சிவனின் சொந்த ஊர், உலகிலயே முதல் நடராஜர் தோன்றிய ஊர்,

உலகின் உள்ள அனைத்து ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் வந்து வழிபாடு செய்த கோவில். 


நவகிரகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான கோயில். நான்கு யுகங்கள் தோன்றுவதற்கு முன்னரே உருவான ஆலயம். ஆயிரம் சிவ  அடியார்கள் ஒரே சமயத்தில் மோட்சம் பெற்று சகஸ்கர லிங்கம் உருவாக்கிய ஆலயம்.


3000 ஆண்டுகளாய் பூத்து குலுங்கும் இலந்தை மரம் உள்ள ஆலயம். 


*தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி* என்ற வாக்கியம் உருவான இடம்.


மரகத நடராஜர் சிலை உள்ள ஆலயம். இப்படி பல அதிசயங்களையும், ஆச்சயர்களையும்   தன்னகத்தே கொண்டு சாந்தமாய் இருக்கும் ஆலயம் அதுதான் இராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருஉத்ரகோசமங்கை மங்களநாதார் மங்களநாயகி திருக்கோவில்.


தவறாமல் இத்திருக்கோவிக்கு ஒருமுறையாவது சென்று வாருங்கள்.


இராமநாதபுரம் மாவட்டதில் அமைந்துள்ள உத்தரகோச மங்கை புனித தலம் பற்றிய 60 சிறப்பு தகவல்கள் :-


1. உத்தரகோச மங்கையில் உள்ள மூலவர் சுயம்பு லிங்கம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கணிக்கப்பட்டுள்ளது.


2. உத்தரகோச மங்கை கோவில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.


3. உத்தரகோச மங்கையே சிவபெருமானின் சொந்த ஊர் என்று அழைக்கப்படுகிறது.


4. இத்தலத்துக்கு உமா மகேசுவரர் சன்னதி முன்பு நின்று வழிபாடுகள் செய்தால் தம்பதியர் ஒற்றுமை பலப்படும்.


5. திருவிளையாடல் புராணத்தில் வரும் ‘வலை வீசி மீன் பிடித்த படலம்‘ இத்தலத்தில்தான் நடந்தது.


6. உத்தரகோச மங்கை கோவிலில் முக்கிய திருப்பணிகளை பாண்டிய மன்னர்களே செய்தனர். பாண்டிய மன்னர்கள் ஆட்சி அதிகாரத்தில்


சிறந்து இருந்த போது, அவர்களது. தலைநகராக சிறிது காலத்துக்கு உத்திரகோசமங்கை இருந்தது.


7. ஆதி காலத்தில் இந்த தலம் சிவபுரம்,‘தெட்சிண கைலாயம்‘, சதுர்வேதி மங்கலம், இலந்தி கைப் பள்ளி, பத்ரிகா ஷேத்திரம்,


பிரம்மபுரம், வியாக்ரபுரம், மங்களபுரி, பதரிசயன சத்திரம், ஆதி சிதம்பரம் என்றெல்லாம் வேறு வேறு பெயர்களில் அழைக்கப்பட்டது.


8. மங்கள நாதர், மங்கள நாயகி இருவரையும் வழிபடும் முன்பு அங்குள்ள பாண லிங்கத்தை தரிசனம் செய்தால் முழுமையான பலன்கிடைக்கும்.


9. இத்தலத்தில் வழிபாடுகள் செய்பவர்களுக்கு இம்மையில் அனைத்து நன்மைகளும் கிடைக்கும். மறுமையில் முக்தி கிடைக்கும்.


10. மங்கள நாதர் தலத்தில் திருமணம் செய்தால் நிறைய மங்களம் உண்டாகும் என்பது ஐதீகம். எனவே முகூர்த்த நாட்களில் நிறைய


திருமணங்கள் இத்தலத்தில் நடைபெறுகின்றன.


11. மூலவருக்கு மங்களநாதர் என்ற பெயர் தவிர மங்களேசுவரர், காட்சி கொடுத்த நாயகர், பிரளயாகேசுவரர் என்ற பெயர்களும் உண்டு.


12. இறைவிக்கு மங்களேசுவரி, மங்களாம்பிகை, சுந்தரநாயகி ஆகிய பெயர்கள் உள்ளன.


13. இறைவி மங்களேசுவரி பெயரில் வ.த. சுப்பிரமணியப் பிள்ளை என்பவர் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். 1901-ம் ஆண்டு வெளியான


அந்த நூல் 1956-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிடப்பட்டது.


14. இத்தலத்தில் உள்ள கல்வெட்டுக்களில் ராவணனின் மனைவி மண்டோதரி பெயர் இடம் பெற்றுள்ளது. எனவே இத்தலம் ராமாயண


காலத்துக்கும் முன்பே தோன்றியதற்கான ஆதாரமாக இந்த கல்வெட்டு கருதப்படுகிறது.


15. இத்தலத்தில் வேதவியாசர், காக புஜண்டர், மிருகண்டு முனிவர், வாணாசுரன், மயன், மாணிக்கவாசகர், அருணிகிரிநாதர் ஆகியோர்


வழிபட்டு ஈசன் அருள் பேறு பெற்றுள்ளனர்.


16. இத்தலத்து பஞ்சலோக நடராஜர் மிகவும் வித்தியாசமானவர். இவர் வலது புறம் ஆண்கள் ஆடும் தாண்டவமும், இடது புறம் பெண்கள் ஆடும் நளினமான கலைப்படைப்பாக உள்ளார்.


17. கோவில் வாசலில் விநாயகப்பெருமானும், முருகப்பெருமானும் இடம் மாறியுள்ளனர்.


18. இத்தலத்து முருகனுக்கு வாகனமாக யானை உள்ளது. முருகப்பெருமானுக்கு இந்திரன் தனது ஐராவதத்தை இத்தலத்தில் அளித்தான்


என்று, இத்தலமான்மியமான ‘ஆதி சிதம்பர மகாத்மியம்’ கூறுகிறது.


19. ராமேஸ்வரத்தில் இருந்து 83 கிலோமீட்டர் தொலைவிலும், ராமநாதபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலும் இவ்வாலயம் இருக்கிறது.


20. சங்க இலக்கியத்தில் குறிக்கப்படும் “இலவந்திகைப் பள்ளி” என்பது உத்தரகோச மங்கையைக் குறிக்கும் என்கிறார்கள். மேற்குறித்த


கல்வெட்டில் இலவந்திகைப் பள்ளித்துஞ்சிய நன்மாறன் பெயரும் செதுக்கப்பட்டுள்ளது.


21. மாணிக்கவாசகருக்கு உருவக் காட்சிதந்த சிறப்புடைய தலம்.


22. இலந்தை மரத்தடியில் எழுந்தருளிய மங்கைப்பெருமான் என்று இப்பெருமான் போற்றப்படுகிறார்.


23. இத்தலத்தில் சுவாமியை அம்பாள் பூசிப்பதாக ஐதீகம்.


24. சொக்கலிங்கப் பெருமான் பரதவர் மகளாகச் சபித்துப் பின் சாபவிமோசனம் செய்து அம்பாளை மணந்துகொண்டு இத்தலத்திலேயே


அம்பாளுக்கு வேதப்பொருளை உபதேசம் செய்து, பின்னர் அம்பிகையுடன் மதுரை சேர்ந்ததாக மதுரைப்புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.


25. ஆதிசைவர்கள் வசமிருந்த இத்தலம் பின்னரே ராமநாதபுரம் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதுமுதல் இன்றுவரை ராமநாதபுர


சமஸ்தான ஆளுகைக்கு உட்பட்டதாக இருந்து வருகிறது இத்தலம்.


26. உட்பிரகாரம் நுழையும் பொழுது அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் யாழிகளில் இரண்டு யாளிகள் வாயில் கல்லால் ஆன


பந்தை கொண்டுள்ளது. நாம் கையை நுழைத்துக்கூட பந்தை நகர்த்த முடியும்.


27. இத்தலத்து கோவில் குளத்தில் வாழும் மீன்கள் நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லை. கடல்நீரில் வாழும் மீன்களாகும்.


28. பிரதோஷத்தன்று இங்கு தாழம்பூ வைத்து வழிபடுகின்றனர்.இந்த கோவிலில்சிவனுக்கு அம்பாளுக்கு தாழம்பூ மாலை


கட்டிப்போட்டால் அனைத்து தோஷங்களும் நீங்குவதாக ஐதீகம். இதனால் திருமணம் உடனே கைகூடும்.


29. இங்கு ஆதிகாலத்து வராகி கோவில் உள்ளது இங்கு ஒவ்வொரு வெள்ளி,செவ்வாய்.ஞாயிறு தினங்களில் ராகுகாலத்தில் பூஜை


தொடர்ந்து செய்தால் தீராத பிரச்னைகள்,திருமண்த்தடை போன்றவை விலகுகின்றன.


30.ராமேஸ்வரம் வருபவர்கள் இந்த கோவிலுக்கு செல்லலாம்.


31. டெல்லியை தலைநகராகக் கொண்டு 1300-ம் ஆண்டு ஆட்சி செய்து வந்த அலாவுதீன் கில்ஜி, உத்தரகோச மங்கையில் மரகதகல்


நடராஜர் சிலை இருப்பதை அறிந்து அதை கொள்ளையடிக்க முயன்றான். மங்களநாதர் அருளால் அவன் முயற்சிக்கு வெற்றிகிடைக்கவில்லை.


32. இத்தலத்தில் தினமும் முதல் - அமைச்சரின் அன்னத்தானத்திட்டம் நடைபெறுகிறது. ரூ. 700 நன்கொடை வழங்கினால் 50 பேருக்குஅன்னதானம் கொடுக்கலாம்.


33. காகபுஜண்ட முனிவருக்கு கவுதம முனிவரால் ஏற்பட்ட சாபம் இத்தலத்தில்தான் நீங்கியது.


34. சிவனடியார்கள் 60 ஆயிரம் பேர் இத்தலத்தில் தான் ஞான உபதேசம் பெற்றனர்.


35. இத்தலத்தில் உள்ள மங்களநாதர் சன்னதி, மங்களேசுவரி சன்னதி, மரகதகல் நடராஜர் சன்னதி சகஸ்ரலிங்க சன்னதி நான்கும்


தனிதனி கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், கொடி மரத்துடன் தனித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


36. நடராஜர் மரகத கல்லில் இருப்பதால் இத்தலத்தை சிலர் ரத்தின சபை என்கிறார்கள். ஆனால் உலகின் முதல் கோவில் என்பதால்


இது எந்த சபைக்கும் உட்படாதது என்றும் சொல்கிறார்கள்.


37. காரைக்கால் அம்மையாரும் இத்தலத்துக்கு வந்து ஈசனை வழிபட்டு சென்றுள்ளார்.


38. உத்தரகோசமங்கை கோவிலின் கட்டிடக்கலை திராவிட கட்டிடக்கலையை அடிப்படையாகக் கொண்டு கட்டப்பட்டதாகும்.


39. ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம், கிருத்திகை, சதுர்த்தி நாட்களில் இத்தலத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகின்றன.


40. சித்திரை மாதம் திருக்கல்யாண வைபவம் வைகாசி மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பதுநாள் சிவ உற்சவம், ஐப்பதி மாதம்


அன்னாபிஷேகம், மார்கழி மாதம் திருவாதிரை விழா மாசி மாதம் சிவராத்திரி ஆகியவை இத்தலத்தில் நடைபெறும் முக்கிய விழாக்கள்ஆகும்.


41. தினமும் இத்தலத்தில் காலை 5.30 மணிக்கு உஷத் காலம், 8 மணிக்கு கால சாந்தி, 10 மணிக்கு உச்சிக் காலம், மாலை 5 மணிக்கு


சாயரட்சை, இரவு 7 மணிக்கு இரண்டாம் காலம், இரவு 8 மணிக்கு அர்த்தஜாம பூஜைகள் நடத்தப்படுகிறது.


42. மங்களநாதருக்கு தினமும் காலை 6 மணிக்கு, மதியம் 12.30 மணிக்கு, மாலை 5.30 மணிக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது.


43. இத்தலத்தில் அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிற்பகல் 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் சாமி தரிசனம்செய்யலாம்.


44. மரகத கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் கூட தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை.


45. இத்தலத்தில் மொத்தம் 11 விநாயகர்கள் உள்ளனர்.


46. மங்களநாதர் சன்னதியை சுற்றி வரும் போது இடது பக்க மூலையில் மகாலட்சுமியை வழிபடலாம்.


47. இத்தலத்தில் உள்ள ராஜகோபுரத்தில் சர்பேஸ்வரர் சிலை உள்ளது.


48. உலகத்தில் முதலில் தோன்றிய கோவில் என்ற சிறப்பு உத்தரகோசமங்கை தலத்துக்கு உண்டு. இந்த ஆலயம் சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது.


49. நடராஜர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடினார்.


50. இது அம்பிகைக்கு பிரணவப்பொருள் உபதேசித்த இடம்.


51. இங்குள்ள மங்களநாதர் லிங்க வடிவில் உள்ளார்.


52. தலவிருட்சமான இலந்தமரம் மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல அருள் தலைமுறைகளையும்


முனிவர்கள் தரிசித்த தல விருட்சம் ஆகும். இந்த இலந்த மரம் 5000 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது.


53. வேதவியாசரும், பாராசரும் காகபுஜண்டரிஜி மிருகண்டு முனிவர்கள் பூஜித்த தலம்.


54. உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் இருக்கும் அருட் சக்திகளைத் தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ரலிங்கம் இங்குள்ளது.


55. ஆண்டுக்கு இரண்டு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது. ஒன்று சித்திரைத் திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா


56. இத்திருத்தலத்தில் ஒன்பது தீர்த்தங்கள் உள்ளது.


57. சிவபெருமானால் பரத நாட்டிய கலையை உலக மக்களுக்கு முதல் முதலில் அறிமுகம் செய்யப்பட்ட திருத்தலமாகும்.


58. ஈசன் ஈஸ்வரி பிறந்த ஊரான உத்திரகோச மங்கையில் ஒரு முறை பக்தர்கள் வந்து மிதித்தால் சொர்க்கம் செல்லுவது நிச்சயாமாகும்.


59. உத்தர கோசமங்கை திருத்தலமானது ஸ்ரீராமருக்கு ஈசன் சிவலிங்கம் வழங்கி சேது சமுத்திரத்தில் பாலம் போட உத்தரவு வழங்கிய இடமாகும்.


60. இத்தலத்தில் மாணிக்கவாசகர் பாடிய பொன்னூஞ்சல் பாடலை குழந்தைகளை தாலாட்டும்போது பாடினால், குழந்தைகள்

உயரமாகவும், உன்னத மாகவும் வாழ்வார்கள் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.


*இந்து மதத்தை எந்த சக்தியாலும் அழிக்க முடியாது* இது உண்மையிலும் உண்மை..


அதே சமயம் நம் இந்து மதத்தை போற்றி பாதுகாப்பதும், 

நம் இந்து மதத்தின் வரலாற்று உண்மையை பிறருக்கு தெரிய படுத்துவதும் நம் கடமை.


*ஒம் நம சிவாயா*

சேயோன் சேவகன்

N2R நந்தகுமார்

Channel N2R

Tuesday, 2 July 2019

அர்த்தமுள்ள வாழ்வை வாழ்வோம்

5 வயதில் விரல்களை எண்ணினான்,

10 வயதில் எண்களை எண்ணினான்,

15 வயதில் மதிப்பெண்களை எண்ணினான்,

20 வயதில் தேர்வு வினாக்களை எண்ணினான்

*Channel N2R*

25 வயதில் சம்பளத்தை எண்ணினான்,

30 வயதில் நண்பர்களை எண்ணினான்,

35 வயதில் வாரிசுகளை எண்ணினான்,

40 வயதில் கடன்களை எண்ணினான்,

45 வயதில் நோயை எண்ணினான்,

50 வயதில் சொந்தங்களை எண்ணினான்,

*Channel N2R*

55 வயதில் மாத்திரையை எண்ணினான்,

60 வயதில் பேரக் குழந்தைகளை எண்ணினான்,

அதற்கு பின் வயதை எண்ணினான்,

இறந்த பின், தனக்காக அழும் உள்ளங்களை எண்ணினான்.

எண்ணிப் பார்க்கையில் , 

தன்னிடம் கூடவே இருந்தது

கணிதம் மட்டும் தான் 

என எண்ணினான் !! விடை என்னவோ

தொடக்கமும் முடிவும்"0" தான்.


           - சேயோன் சேவகன் 

N2R நந்தகுமார்

Thursday, 20 June 2019

தேங்காய், தென்னை மட்டை மேலே விழுந்தால் செய்ய வேண்டியவை


1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம்.


மற்றும்


2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம் பரிபூரண இரட்சகம்" 


 பிரம்மமுகூர்த்தத்தில் அதாவது காலை 4.30 மணிமுதல் 5.45 மணிக்குள்  குளித்து வீட்டில் தீபமிட்டு மேற்கூறிய மந்திரத்தை  16 முறை சொல்லி வழிபட வேண்டும்.


 அதேபோல் மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிக்குள்  குளித்து வீட்டில் தீபமிட்டு மேற்கூறிய மந்திரத்தை  16 முறை சொல்லி வழிபட வேண்டும்.


இவ்வாறு 48 நாட்களுக்கு வழிபட நன்மை உண்டாகும்.


-N2R NandhakumaR

Channel N2R


Source From:

https://www.facebook.com/NandhakumarInSpiritualSurvey/

Friday, 7 June 2019

தெய்வத்தின் பார்வையில்......


எது நல்லநேரம் ?


• நல்லதை நினைக்கும் போது

• நல்லதைப் பார்க்கும் போது

• நல்லதைக் கேட்கும் போது

• நல்லதைப் பேசும் போது


எது இராகு காலம் ?


• அகங்காரம் கொள்ளும் நேரம்

• பாசம் கண்களை மறைக்கும் நேரம்

• ஆசைகள் எல்லையை மீறும் நேரம்

• கோபங்கள் உச்சத்தைத் தொடும் நேரம்

• தேகம் கவர்ச்சியில் மூழ்கும் நேரம்


எது குளிகை ?


• கவலைப்படும் நேரம்

• பயப்படும் நேரம்

• கலங்கும் நேரம்

• முயலாத நேரம்


எது எமகண்டம் ?


• பொறாமைப்படும் நேரம்

• புறம் கூறும் நேரம்

• கோள் சொல்லும் நேரம்

• சதி செய்யும் நேரம்


எது பிரம்மமுகூர்த்தம் ?


• தாய் தந்தையை ஆன்மா என உணர்ந்து அவர்களை மதித்து நினைக்கும் நேரம்

• கடமையில் வழுவாத நேரம்

• அறவழியில் பொருள் சேர்க்கும் நேரம்


எது சுப முகூர்த்தம் ?


• சுயநலம் கருதாது பிறருக்கு உதவி செய்யும் நேரம்..

• சம்பாதிப்பதில் கொஞ்சமாவது தானம் செய்யும் நேரம்..


எது சிறந்த ஞானம்?


பிரிந்து வாழ்வதைவிட புரிந்து வாழ்வது.


Friday, 31 May 2019

மோடியின் அடுத்த திட்டம் டிஜிட்டல் கிராமம்... 100 நாட்களில் 1000 கி.மீ. சாலை

புதிய அமைச்சரவை வியாழக்கிழமை பதவி ஏற்கும் நிலையில், புதிய அரசு உடனடியாக செய்ய உள்ள திட்டங்களுக்கான பட்டியல் தயாராகி உள்ளது. இதில் தேசிய நெடுஞ்சாலைகள் துறை முதல் 100 நாட்களில் 1000 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலையை அமைக்கும் திட்டத்தை தயாரித்து வைத்து உள்ளது.

போக்குவரத்து துறை செயலர் சஞ்சய் ரஞ்சன் தலைமையிலான அதிகாரிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் 100 நாட்களில் செய்ய வேண்டிய பணிகளில் 20 ஆண்டுகளை கடந்த பழைய வாகனங்களை போக்குவரத்தில் இருந்து நீக்கும் திட்டமும் இடம் பெற்றுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். 

இதே போன்று டிஜிட்டல் கிராமத் திட்டத்தையும் உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் படி சுகாதாரம், நிதி சேவை, திறன் மேம்பாடு, கல்வி ஆகியவற்றை டிஜிட்டல் முறையில் கிராம மக்களுக்கு வழங்கப்படும். இதற்காக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தலா ஒரு கிராமம் என 700 ஊர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த கிராமங்களுக்கு பாரத் நெட் மூலம் மிக குறைந்த கட்டணத்தில் வைபை வசதி செய்யப்பட உள்ளது. அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்படும் பொது சேவை மையம் மூலம் கிராம மக்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் வைபை வசதி அளிக்கப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு சேவை மையத்திலும் கம்ப்யூட்டர் மையங்களும் அமைக்கப்பட உள்ளன.

இந்த மையங்களை கிராம மக்கள் மிக குறைந்த கட்டணத்தில் பயன்படுத்த முடியும். இந்த மையங்கள் மூலம் கிராம மக்களுக்கு மருத்துவ ஆலோசனை, பணப் பரிமாற்றம், வங்கி சேவை, நிதி மேலாண்மை, விவசாயம் சார்ந்த தகவல்கள், கிராம தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி ஆகியவை அளிக்கப்படும்.

மேலும் கிராமத்து மாணவர்கள் சேவை மையம் மூலம் கல்வி அறிவை வளர்த்து கொள்ளவும் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன. இந்த திட்டத்தில் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பட்சமாக 75 கிராமங்களும், மத்திய பிரதேசத்தில் 52 கிராமங்களும், பீகாரில் 38 கிராமங்களும் தேர்வு பெற்றுள்ளன. 
சுகாதார திட்டத்தின் படி, கிராமங்களில் உள்ளவர்கள் காணொலி காட்சி மூலம் மருத்துவர்களிடம் ஆலோசனை பெற முடியும்.

மிக அவசர சிகிச்சை தேவை படாத நோய்களுக்கு கிராம மக்கள், மருத்துவர்களிடம் காணொலி காட்சி மூலம் மருத்துவ ஆலோசனை, மற்றும் மருந்துகள் குறித்த பரிந்துரையை பெற முடியும். இதன் மூலம் கிராம மக்கள் மருத்துவர்களை தேடி செல்லும் பயண நேரமும், செலவும் மிச்சமாகும். 
இதே போல கால்நடை மருத்துவ ஆலோசனைகளும் பெற வசதி செய்யப்பட உள்ளது.

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டத்தின் கீழ் வீட்டு உபயோக பொருட்களின் பழுது நீக்கும் பயிற்சி, வாகன பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் பயிற்சி, செல்பேசி பழுது பார்க்கும் பயிற்சி, மின்சாதன பொருள் பராமரிப்பு, பழுது நீக்கும் பயிற்சி ஆகியவை அளிக்கப்பட உள்ளன. இதன் மூலம் கிராமத்தினர் சுய தொழில் செய்ய வழிவகை செய்யப்படும்.

நிதிச் சேவை திட்டத்தின் படி, கிராம மக்கள் நிதி உதவி பெற ஆலோசனை, தொழில் மற்றும் விவசாய கடன்களை பெற வழிகாட்டுவது, சம்பாதிக்கும் பணத்தை சிக்கனமாக சேமிக்கும் வழிமுறைகள் ஆகியவை அடங்குமென அதிகாரிகள் கூறி உள்ளனர். மேலும் புதுப்பிக்க வல்ல எரிசக்தியை அதிகம் பயன்படுத்தும் வகையில் கிராம மக்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 Channel N2R  Narendra Modi Digital Village 100 Days 1000 kilometre Road

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...