Thursday 11 July 2019

வெவ்வேறு ஊர்களில் பரமனுக்கு பல்வேறு திருப்பெயர்கள்


தஞ்சாவூரில் *பிரகதீஸ்வரர்*


திருவாரூரில் *தியாகராஜர்*


திருநெல்வேலியில் *நெல்லையப்பர்*


திருவையாறில் *ஐயாறப்பர்*


திருவண்ணாமலையில் *அண்ணாமலையார்*


திருவாவடுதுறையில் *கோமுக்தீஸ்வரர்*


திருவெண்காட்டில் *சுவேதாரண்யேஸ்வரர்*


திருவானைக்காவலில் *ஜம்புகேஸ்வரர்*


திருக்கருகாவூரில் *முல்லைவனநாதர்* 


திருவாலாங்காட்டில் *வடாரண்யேஸ்வரர்*


திருமருகலில் *ரத்தினகிரீஸ்வரர்*


திருவிசநல்லூரில் *யோகநந்தீஸ்வரர்* 


திருப்புகலூரில் *வர்த்தமானீஸ்வரர்*


திருத்தங்கூரில் *வெள்ளிமலைநாதர்*


திருக்கழுகுன்றத்தில் *வேதகிரீஸ்வரர்*


திருநீலக்குடியில் *நீலகண்டேஸ்வரர்*


திருச்சியில் *தாயுமானவர்*

 

திருநள்ளாரில் *தர்ப்பாரண்யேஸ்வரர்*

 

திருமணஞ்சேரியில் *உத்வாகநாதர்*


திருவேள்விக்குடியில் *கல்யாண சுந்தரேஸ்வரர்*


திருவேற்காட்டில் *வேதபுரீஸ்வரர்*


திருக்கண்ணபுரத்தில் *ராமநாதர்*


திருமழபாடியில் *வைத்தியநாதர்*


திருக்கோவிலூரில் *வீரட்டேஸ்வரர்*


திருப்புனவாசலில் *விருத்தபுரீஸ்வரர்*


திருவண்டுதுறையில் *வண்டுறைநாதர்*


திருமாணிக்குழியில் *வாமனபுரீஸ்வரர்*

 

திருவாளப்புத்தூரில் *மாணிக்கவண்ணர்*


*இப்படி ஒரே ஒரு கடவுளுக்கு பல்வேறு பெயர்களில் பல்வேறு இடத்தில் கோவில் அமைத்து தேவாரத்தையும் திருவாசகத்தையும் பாடி , ஆறு கால பூசையில் , ஒவ்வொரு பூசையையும் ஒவ்வொரு ஊரில் சிறப்பாக செய்து, தமிழையும் கடவுளையும் ஒன்றாகவே வணங்கி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.*


*தேவாரம் பாடப் பெற்ற தலங்கள் மட்டுமே 274. இதில் சோழநாட்டில் காவிரியின் தென்கரையில் அமைந்த தலங்கள் மட்டுமே 128. வடகரையில் அமைந்த தலங்கள் 63.*


*ஈழத்தில் உள்ள திருகோணமலையில் அமைந்த திருக்கோணேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கேதீச்சரத்தில் அமைந்த திருக்கேதீஸ்வரர் கோவிலும் தேவாரம் பாடப் பெற்ற தலங்களே.*


*தமிழையும் கடவுளையும் ஒன்றாக பார்த்த தலைமுறை இவர்களுடையதாகத் தான் இருக்கும். ஊரின் சிறப்பைக் கொண்டே அந்த ஊர்களுக்கு பெயர் வைத்து , அந்த பெயரைக் கொண்டே அந்த ஊர் கடவுளையும் வணங்கி இருக்கின்றனர்.*


*எடுத்துக்காட்டு : திரு + ஐந்து +ஆறு = திரு ஐயாறு , இதுவே காலப்போக்கில் திருவையாறாக மாறி இருக்கிறது. காவிரி , குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு எனும் ஐந்து ஆறுகள் அந்த ஊரில் ஓடுவதால் இந்தப் பெயரை வைத்து கடவுளையும் ஐயாறப்பர் என்று அழைத்து இருக்கின்றனர்.*


*இப்போதெல்லாம் நம்ம பெயருக்கு காரணம் கேட்டாலே நம்மால் சொல்ல முடிவதில்லை. அவர்கள் ஊருக்கு பெயர் வைப்பதில் கூட இவ்வளவு கவனமாக இருந்திருக்கின்றனர். வாழ்க தமிழர்களின் புகழ்.*


*திருச்சிற்றம்பலம்*


 -சேயோன் சேவகன்

N2R நந்தகுமார்

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...