Tuesday, 25 December 2018

சிவனை தரிக்கும் சூரியன்... அதிசய நிகழ்வு....!!

 நம்மைச் சுற்றி அன்றாடம் ஏதேனும் ஓர் அதிசய நிகழ்வுகள் நடத்துக் கொண்டுதான் இருக்கிறது. நாம் அது குறித்து அறிந்துகொண்டுதான் வருகிறோம். அதிலும் குறிப்பாக கோவில்கள். கண் திறக்கும் பெருமாள்இ பால் குடித்த அம்மன்இ வியர்க்கும் முருகன் என பல நிகழ்வுகளை நினைவு கூறலாம்.

🌞 அந்த வகையில்இ இங்கே ஓர் கோவிலில் வருடத்தின் ஒரே நாளில் மட்டும் சூரியனின் ஒளி மூலவராக வீற்றிருக்கும் சிவபெருமானை மீது விழும் அரிய நிகழ்வு நிகழ்கிறது. வாங்க அப்படி அந்த கோவில் எங்கே உள்ளது? என்னவெல்லாம் சிறப்பு என்று பார்க்கலாம்.


🌞 இந்த அரிய நிகழ்வு நடைபெறும் கோவில் விருதுநகர் மாவட்டம் முடுக்கங்குளம் என்ற ஊரிலுள்ள அருள்மிகு அம்பலவாணர் திருக்கோவிலாகும். இப்பகுதி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

🌞 இக்கோவிலில் சிதம்பரம் நடராஜரின் திருநாமமான அம்பலவாணர் என்ற பெயர் சுவாமிக்கு சூட்டப்பட்டுள்ளது. அதுபோல அம்பாளுக்கும்இ சிவகாம சுந்தரி என்ற பெயர் உள்ளது.


🌞 மாசி சிவராத்திரி தினத்தில் வேறெங்கும் நிகழாத அதிசயமாக இங்கு சூரியனின் ஒளி சிவனின் மீது படர்கிறது. இதற்காக பலகணி என்னும் கல்சாளரம் ஒன்று மூலவரின் சன்னிதி எதிரே உள்ளது.

🌞 பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பாண்டியரின் ஆட்சிக் காலத்தில் இக்கோவில் கட்டப்பட்டதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. அவற்றின் அடையாளமாக கோவிலின் ஒரு பகுதியில் பாண்டியரின் மீன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

N2R_ NandhakumaR
Channel N2R

கோயிலை காவல் காக்கும் முதலை...!

👉 ஒவ்வொரு கோயில்களுக்கும் ஏதாவது ஒரு தனி சிறப்பு ஒன்று இருக்கும். அந்த தனித்துவமே அந்த கோயில்இ மக்களிடையே பிரசித்திப் பெற காரணமாக அமைவதும் உண்டு.

👉 அந்த வகையில் கேரள மாநிலம் காசர்கோட்டில் உள்ள அனந்தபுரா கோயிலும் பிரசித்திப் பெற்ற ஒன்று. இந்த கோயிலில் என்ன தனித்துவம் இருக்கிறது என கேட்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.

👉 கேரளாவின் புகழ்பெற்ற புனித ஸ்தலங்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் அனந்தபுரா கோயில்இ அனந்த பத்பநாப சுவாமியின் மூலஸ்தானமாக கருதப்படுகிறது.


👉 அனந்தபுரா கோயில் 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அதோடு பிரதான கோயிலை சுற்றி தலைவாயில் ஒன்றும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது.

👉 பச்சைப் பசேல் என்று இருக்கும் இந்த கோயில் குளத்தில் கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு முதலை ஒன்று வாழ்ந்து வருகிறது. இதை அங்குள்ள மக்கள் பபியா என பெயரிட்டு அழைக்கிறார்கள்.

👉 இந்த முதலை கோயிலின் பாதுகாவலாக கருதப்படுவதோடுஇ பக்தர்களால் மிகவும் மரியாதைக்குரிய பிராணியாகவும் மதிக்கப்படுகிறது.

👉 அதோடு இந்த முதலை இறந்து போனாலும்இ அதன் இடத்தில் கோயிலை பாதுகாக்க மற்றொரு முதலை இந்த ஏரிக்கு வரும் என்றும் நம்பப்படுகிறது.


👉 இதில் என்ன விசேஷம் என்றால்இ பொதுவாக முதலை இனமானது அசைவ வகையைச் சார்ந்தது. ஆனால்இ இந்த முதலையோ குளத்தில் உள்ள மீன்களைக்கூட சாப்பிடாது.

👉 இந்த முதலைக்கு கோயில் குருக்கள்இ உச்சிக்கால பூஜையின் போது சாதம் வெல்லம் கலந்த உருண்டைகளை சாப்பிடக் கொடுக்கிறார். இதற்கு முசலி நைவேத்யா என்கிறார்கள்.

👉 கோயில் குளத்தில் குளிக்க வரும் பக்தர்கள் மற்றும் குருக்கள்களை இதுவரை பபியா தாக்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

👉 சரியாக பிரசாதம் வழங்கப்படும் வேளைகளில் இந்த முதலை குறிப்பிட்ட இடத்திற்கு வந்து சேர்ந்து விடுகிறதாம். ஒன்றுக்கு மேற்பட்ட முதலையை இந்தக் குளத்தில் எவரும் கண்டதில்லை.

👉 ஒரு முதலை இறந்து விடுமேயானால்இ மறுதினமே இன்னொரு முதலை தென்படுமாம். அருகில் வேறு ஆறுகளோஇ குளங்களோ இல்லாத நிலையில் எப்படி இந்தக் கோயில் குளத்திற்குள் முதலை வந்தது என்பது எவருக்கும் புதியாத புதிர் என்கிறார்கள்.

N2R_NandhakumaR
Channel N2R

மார்கழி மாதம் பற்றிய உங்கள் அபிப்ராயம் சரியானதா?

மார்கழி மாதம் பற்றிய தவறான அபிப்ராயம்!!...

👉வருஷத்தில் முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள் இருக்கின்றன. அவை அனைத்தையும் சுபநாட்கள் என்று சொல்ல முடியாது. எந்த நாளில் சுப கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கிறதோ அந்த நாளை சுப நாள் என்று சொல்கிறோம். சுப நாள் என்று வருகின்ற போது அது மனிதர்களின் தனிப்பட்ட வாழ்வில் நடத்துவதற்குரிய நிகழ்வுகளுக்காகவும் சமுதாயத்தில் அனைவரும் கூடி விழாவாக கொண்டாடுவதற்காகவும் சில சுபநாட்கள் இருக்கின்றது. மனிதர்களுக்கு என்று தனியாக இருப்பது போல தெய்வங்களை நினைத்து நன்றி கடன் செலுத்தவும், பிரார்த்தனைகள் வைக்கவும் என்றே சில நாட்கள் இருக்கின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த மாதம் தான் மார்கழி மாதம்.

👉மார்கழி மாதம் பீடை மாதம் என்பதெல்லாம் கிடையாது. அது தனுர் மாதம். பீடை என்று சொல்லக்கூடாது. ஏனென்றால் ஆரோக்கியத்திற்கு உரிய மாதம் மார்கழி மாதம்.

👉தட்சணாயணம் மார்கழி மாதத்துடன் முடிகிறது. அதாவது சூரியனுடைய தென் பகுதி இயக்கம் இந்த மாதத்துடன் முடிகிறது. இந்த மாதத்தில் அதிகாலையில் எழுந்து இறைவனை வணங்குவதால், நாடி நரம்புகள் வலுவடைகிறது. நீண்ட ஆயுள் கிடைக்கிறது. அதனால்தான் இந்த மாதத்தை இப்படி ஒதுக்கி வைத்தார்கள்.

👉இந்த நேரத்தில் சூரியனுடைய கதிர்வீச்சு சில பிரச்சனைகளைத் தரக்கூடியது. அதனால் தியானம், யோகா, தெய்வீகம், ஆன்மீகம் என்று இருந்தால் சாதகமான வைப்ரேஷனைக் கொடுக்கும் என்று சொல்லியிருக்கிறார்களே தவிர கெடுதலான மாதம் கிடையாது.

👉மாதங்களிலே மிகவும் மகத்துவம் மிக்கது மார்கழி மாதம் தான். பீடை மாதம் என்பதன் அர்த்தத்தை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். பீடுடைய மாதம் என்பதே நாளடைவில் மருவி பீடை மாதம் என்றாகிவிட்டது. பீடுடைய என்றால் செல்வம் பொருந்திய, சிறப்புக்கள் நிரம்பிய என்று அர்த்தம். மாதங்களில் நான் மார்கழி என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மாவே கூறியிருக்கிறார் என்றால் அதன் சிறப்பை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

👉நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். மார்கழி மாதம் என்பது தேவர்களது ஒரு நாளின் விடியற்காலை பொழுதாகும். விடியற்காலை என்றாலே மங்களகரமானது தானே? எனவே இந்த பெருமை பொருந்திய மாதம் முழுவதும் இறை வழிபாட்டுக்கு என்றே பெரியோர்கள் ஒதுக்கிவைத்துள்ளனர். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, மார்கசீர்ஷம் என்று வட மொழியில் சொல்வர். மார்கம் என்றால் - வழி, சீர்ஷம் என்றால் - உயர்ந்த வழிகளுக்குள் தலைசிறந்தது என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது.

N2R_ NandhakumaR
Channel N2R

தெய்வ திருமேனிகள் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

சிவாய நமஓம்

இன்றைய ஆன்மீக வளர்ச்சி காரணமாக பல பக்தர்கள் இல்லத்தில் தெய்வ திருமேனிக்களை வைத்து பூஜை செய்து கொண்டு வருகின்றனர்.

மிக்க மகிழ்ச்சி.

தெய்வ  உருவ திருமேனிகள் வைத்திருப்பவர்கள் சில விசயங்களை என்னென்ன கடைபிடிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

*1. திருமேனிகளுக்கு  தினமும் தாங்கள் வழிபாடு செய்து கொண்டே இருக்க வேண்டும்.*

*2. திருமேனிகளை என்றும் புதியதாக இருக்கும் பொருட்டு தினமும் அபிஷேகமும் அலங்காரமும் செய்து புதுமையாக வைத்திருக்க வேண்டும்.*

*3. நீங்கள் எந்த திருமேனிகள்  வைத்திருக்கின்றீரோ அத்திருமேனியின் காயத்திரி மந்திரம் மற்றும் இதர மந்திரங்களை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.*

*4. அஷ்டோத்தர நாமாவளி தெரிந்திருக்க வேண்டும்.*

*5. எந்தெந்த திருமேனிக்கு என்ன அபிஷேகம் , அலங்காரம், பூ , போன்ற ஒரு சில பாலபாடங்களை சிவாச்சாரியார் மூலம் அறிந்து அதன் படி பூஜைகள் செய்ய தொடங்க வேண்டும்*.

*6. நீங்கள் வைத்திருக்கும் திருமேனியின் வரலாறுகளை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்*.

*7. முதன் முதலாக திருமேனிகளை வாங்குபவர்கள் ஆச்சார்யார்கள் மூலம் யாகம் செய்து தீர்த்தம் ஊற்றி பெற்றுக் கொள்ள வேண்டும்.*

*8. நீங்கள் வாங்கும் திருமேனி சாத்திரத்திற்கு ஒத்திருக்க வேண்டும்.*

*9. திருமேனிகள் என்றும் பின்னம் படாமல் வைத்திருக்க வேண்டும் .*

*10. வருடத்திற்கு ஒரு முறைக்கு இரு முறையாவது யாகம் செய்வது திருமேனிக்கு ஆற்றல் உண்டாகும்.*

*11. ஒவ்வொரு திருமேனிக்கு சாத்திர நூல் அடிப்படையில் அங்க லட்சனம் உண்டு.. அதன்படி வாங்க வேண்டும்.*

ஆதாரம் : உங்கள் அருகில் இருக்கும் சிவாலயத்தில் திருமேனிகளை காணலாம்..

*12. திருமேனிக்கு நீங்கள் மட்டுமே பூஜை செய்ய வேண்டும்.*

*13. தங்களால் ஒரு சில காரணங்களால் முடியாமல் போனால் நீங்கள் யாரை நியமித்து உள்ளீர்களோ அவர்கள் பூஜை செய்யலாம்.* இதற்கு விதி விலக்கு உண்டு. அவர்கள் குருவின் மூலம் தீட்சை பெற்றிருக்க வேண்டும்.

ஆதாரம் : மடாதிபதிகள் பூஜைகளை காணலாம்.

*14. திருமேனிகளுக்கு பூஜை செய்பவர்கள் சிவ பூஜை செய்பவர்களாக இருப்பின் உத்தமம் என்று ஆச்சார்யா பெருமக்கள் குறிப்பிடுவது உண்டு*.

*15. உருவ திருமேனிகளை வைத்து பூஜை செய்பவர்கள் வெளியில் எடுத்துச் செல்லக்கூடாது. அது பாவச்செயலாகும்.

*16. உருவ மற்றும் அருவுருவ திருமேனிகள் என்று இரண்டாக பிரிக்கலாம். அவையாவன.

I. லிங்க திருமேனி. அருவுருவ திருமேனி.

II. உருவ திருமேனி . முருகன் , பெருமாள் போன்ற ஐம்பொன் சிலைகள்..

*17. உருவ திருமேனிகள் வைத்து பூஜை செய்பவர்கள் மற்றவர்கள் இல்லத்தில் வைத்து அழகு பொருட்களாக பூஜை செய்யக்கூடாது.*

*18. உருவ திருமேனிகளை வாடகைக்கோ தொண்டுக்கோ கூட மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது.*

*19. நீங்கள் பூஜை  செய்யும் திருமேனி உங்களுக்கே உரியது.* நீங்கள் மட்டுமே பூஜை செய்ய வேண்டும்.*.

*20. வாடகைக்கு திருமேனி கொடுப்பது வாங்குவது சிவக்குற்றமே..* இது பெரும் பாவமே. தயவு செய்து இனி செய்யாமல் இருப்பது நல்லது.

*21. உங்கள் இல்லத்திற்கு சிவனடியார்கள் வந்தால் தங்கள் உருவ திருமேனிக்கு பூ வைக்கலாம் , தீபாரதனை காட்டலாம், தொடலாம் , சில உதவிகள் செய்யலாம் அதற்கு எவ்வித தடங்கள் இல்லை.

ஆனால் நீங்கள் தான் பிரதானமாக இருக்க வேண்டும்..

எனவே தெய்வ திருமேனிகளை வைத்து சிவகாம முறைப்படி பூஜித்து சிவனருள் பெறுமாறு அடியேன் வேண்டுகிறேன்.

என்றும் அடியார்க்கு அடியவன்.

சேயோன் சேவகன் N2R NandhakumaR

Sunday, 23 December 2018

பித்தா பிரைசூடி  பெருமானே அருளாளா  சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே... திருவருட்செல்வர்


பித்தா பிரைசூடி 
பெருமானே அருளாளா 
எத்தாள் மறவாதே 
நினைக்கின்றேன் மனது உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் 
வெண்ணை நல்லுர் அருள் துரையுள் 
அத்தா உனக்கு ஆளாய் 
இனி அல்லேன் எனலானேன்

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே... இறைவா... 
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே... உன்னை 
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே... 
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே... உன்னை 
சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே 
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை 
அத்தன் இல்லாமல் ஒரு அம்மை இல்லை 
அந்த அம்மை இல்லாமல் இந்த பிள்ளை இல்லை
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக 
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக 
பக்தி பெருக்கில் எந்தன் ஊன் உருக 
அந்த பரவசத்தில் உள்ளே உயிர் உருக
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக 
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக 
எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடிபணிய...இறைவா...
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே

கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே
கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே 
கண்ணை திறந்து வைத்த கருப்பொருளே
கோவில் கதவை திறந்தழைத்த திருவருளே
வெண்ணை நல்லூர் உரையும் அருட்கடலே 
வெண்ணை நல்லூர் உரையும் அருட்கடலே 
வந்து என்னை என்றும் ஆளுகின்ற பரம்பொருளே...இறைவா...

சித்தம் எல்லம் எனக்கு சிவமயமே 
உன்னை சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே 
சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே... இறைவா...

Thursday, 13 December 2018

ஸ்ரீலிங்காஷ்டகம் _வரலாற்றின்_மகிமை


ஸ்ரீலிங்காஷ்டகம்_படிப்பதால் ஜாதகத்தில் சூரியன், குரு நீசனாக இருந்தாலும் தலைவலி, தலைசுற்றல், மயக்கம், நரம்புத் தளர்ச்சி முதலியவைகள் இருந்தாலும் அந்த தோஷங்கள் விலகும். ஸகல மங்களங்களும் உண்டாகும்.

1. ப்ரும்ஹ முராரி ஸுரார்ச்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம்I
ஜன்மஜது:க வினாஸக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

பிரம்மதேவன், ஸ்ரீமஹாவிஷ்ணு, தேவர்கள் இவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நிர்மலமாகவும், பிரகாசத்துடன் கூடியதாகவும், சோபையுடன் கூடியதாகவும் உள்ள லிங்க மூர்த்தியை, பிறப்பினால் ஏற்படும் துக்கத்தைப் போக்குகின்ற லிங்கமூர்த்தியை, எப்பொழுதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

2. தேவமுனிப்ரவரார்சித லிங்கம்
காமதஹம்கருணாகர லிங்கம்I
ராவணதர்ப்ப வினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

தேவர்களாலும் சிறந்த முனிவர்களாலும் அர்ச்சிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, மன்மதனை பஸ்மமாகச் செய்தவரும், கருணையைச் செய்யும் லிங்க மூர்த்தியை, ராவணனுடைய கர்வத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

3. ஸர்வஸுகந்திஸுலேபித லிங்கம்
புத்திவிவர்த்தனகாரண லிங்கம்I
ஸித்தஸுராஸுரவந்தித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

எல்லாவித வாசனை திரவியங்களாலும், பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, புத்தியை விருத்தி செய்வதற்கு காரணமான லிங்க மூர்த்தியை, ஸித்தர்கள், தேவர்கள் அஸுரர்கள் முதலியவர்களால் பூஜிக்கப்பட்ட எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

4. கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்I
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்க்ப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷயாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

5. குங்குமசந்தனலேபித லிங்கம்
பங்கஜஹாரஸுஸோபித லிங்கம்I
ஸஞ்சிதபாபவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

குங்குமம், சந்தனம் இவைகளால் பூசப்பட்ட லிங்க மூர்த்தியை, தாமரை புஷ்பங்களாலான மாலைகளால் விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, குவிக்கப்பட்ட பாபங்களை நாசமாக்குகிற லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

6. தேவகணார்ச்சிதஸேவித லிங்கம்
பாவைர்பக்திபிரேவச லிங்கம்I
தினகரகோடிப்ரபாகர லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

தேவகணங்களால் அர்ச்சிக்கப்பட்டதுடன், ஸேவிக்கப்பட்டதுமான லிங்க மூர்த்தியை, நல்ல எண்ணங்களாலும் பக்தியாலும் ஸேவிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

7. அஷ்டதளோபரிவேஷ்டித லிங்கம்
ஸர்வஸமுத்பவகாரண லிங்கம்I
அஷ்டதரித்ரவினாஸித லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

எட்டு தளங்கள் உள்ள ஆஸனத்தில் அமர்ந்த லிங்க மூர்த்தியை, எல்லா வஸ்துக்களின் உற்பத்திக்கும் காரணமான லிங்க மூர்த்தியை, எட்டுவித தரித்திரங்களையும் நாசம் செய்யும் லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

8. ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்
ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்I
பராத்பரம் பரமாத்மக லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்II

பொருள்:

ப்ருகஸ்பதியினாலும், இந்திரனாலும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியும், இந்திரனுடைய தோட்டத்திலிருந்து கொண்டு வந்த புஷ்பத்தினால் எப்போதும் பூஜிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, ப்ரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்ட பரமாத்ம ஸ்வரூபியான லிங்க மூர்த்தியை, எப்போதும் மங்களத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன்.

லிங்காஷ்டகமிதம் புண்யம் ய:படேச்சிவஸன்னிதௌ
ஸிவலோகமவாப்னோதி ஸிவேன ஸஹ மோததேII

மகாலிங்கத்தைப் பற்றிய எட்டு ஸ்லோகங்கள் கொண்ட இந்தப் புண்ணியமான ஸ்தோத்திரத்தை ஸ்ரீபரமேஸ்வரரின் திருமுன், எவர் படிப்பாரோ… அவர், சிவலோகம் சென்று சாட்சாத் சிவபெருமானுடன் ஆனந்தத்தை அனுபவிப்பான்.

சிவாய நம!

Channel N2R

Saturday, 8 December 2018

ரசம்

ரசம் என்னும் அருமையான திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.

புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.

நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.

அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.
சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.

ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.

ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது.

நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது. அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.

கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது.

மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது. வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது.

கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.

ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.

இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.

தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. ஆண்மைக்குறைவையும் போக்குகிறது. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி. ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது.

தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.

ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது.

வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.

ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள்.

மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம். வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.

எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...