Tuesday 25 December 2018

தெய்வ திருமேனிகள் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

சிவாய நமஓம்

இன்றைய ஆன்மீக வளர்ச்சி காரணமாக பல பக்தர்கள் இல்லத்தில் தெய்வ திருமேனிக்களை வைத்து பூஜை செய்து கொண்டு வருகின்றனர்.

மிக்க மகிழ்ச்சி.

தெய்வ  உருவ திருமேனிகள் வைத்திருப்பவர்கள் சில விசயங்களை என்னென்ன கடைபிடிக்க வேண்டும் என்று பார்ப்போம்.

*1. திருமேனிகளுக்கு  தினமும் தாங்கள் வழிபாடு செய்து கொண்டே இருக்க வேண்டும்.*

*2. திருமேனிகளை என்றும் புதியதாக இருக்கும் பொருட்டு தினமும் அபிஷேகமும் அலங்காரமும் செய்து புதுமையாக வைத்திருக்க வேண்டும்.*

*3. நீங்கள் எந்த திருமேனிகள்  வைத்திருக்கின்றீரோ அத்திருமேனியின் காயத்திரி மந்திரம் மற்றும் இதர மந்திரங்களை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும்.*

*4. அஷ்டோத்தர நாமாவளி தெரிந்திருக்க வேண்டும்.*

*5. எந்தெந்த திருமேனிக்கு என்ன அபிஷேகம் , அலங்காரம், பூ , போன்ற ஒரு சில பாலபாடங்களை சிவாச்சாரியார் மூலம் அறிந்து அதன் படி பூஜைகள் செய்ய தொடங்க வேண்டும்*.

*6. நீங்கள் வைத்திருக்கும் திருமேனியின் வரலாறுகளை விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும்*.

*7. முதன் முதலாக திருமேனிகளை வாங்குபவர்கள் ஆச்சார்யார்கள் மூலம் யாகம் செய்து தீர்த்தம் ஊற்றி பெற்றுக் கொள்ள வேண்டும்.*

*8. நீங்கள் வாங்கும் திருமேனி சாத்திரத்திற்கு ஒத்திருக்க வேண்டும்.*

*9. திருமேனிகள் என்றும் பின்னம் படாமல் வைத்திருக்க வேண்டும் .*

*10. வருடத்திற்கு ஒரு முறைக்கு இரு முறையாவது யாகம் செய்வது திருமேனிக்கு ஆற்றல் உண்டாகும்.*

*11. ஒவ்வொரு திருமேனிக்கு சாத்திர நூல் அடிப்படையில் அங்க லட்சனம் உண்டு.. அதன்படி வாங்க வேண்டும்.*

ஆதாரம் : உங்கள் அருகில் இருக்கும் சிவாலயத்தில் திருமேனிகளை காணலாம்..

*12. திருமேனிக்கு நீங்கள் மட்டுமே பூஜை செய்ய வேண்டும்.*

*13. தங்களால் ஒரு சில காரணங்களால் முடியாமல் போனால் நீங்கள் யாரை நியமித்து உள்ளீர்களோ அவர்கள் பூஜை செய்யலாம்.* இதற்கு விதி விலக்கு உண்டு. அவர்கள் குருவின் மூலம் தீட்சை பெற்றிருக்க வேண்டும்.

ஆதாரம் : மடாதிபதிகள் பூஜைகளை காணலாம்.

*14. திருமேனிகளுக்கு பூஜை செய்பவர்கள் சிவ பூஜை செய்பவர்களாக இருப்பின் உத்தமம் என்று ஆச்சார்யா பெருமக்கள் குறிப்பிடுவது உண்டு*.

*15. உருவ திருமேனிகளை வைத்து பூஜை செய்பவர்கள் வெளியில் எடுத்துச் செல்லக்கூடாது. அது பாவச்செயலாகும்.

*16. உருவ மற்றும் அருவுருவ திருமேனிகள் என்று இரண்டாக பிரிக்கலாம். அவையாவன.

I. லிங்க திருமேனி. அருவுருவ திருமேனி.

II. உருவ திருமேனி . முருகன் , பெருமாள் போன்ற ஐம்பொன் சிலைகள்..

*17. உருவ திருமேனிகள் வைத்து பூஜை செய்பவர்கள் மற்றவர்கள் இல்லத்தில் வைத்து அழகு பொருட்களாக பூஜை செய்யக்கூடாது.*

*18. உருவ திருமேனிகளை வாடகைக்கோ தொண்டுக்கோ கூட மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது.*

*19. நீங்கள் பூஜை  செய்யும் திருமேனி உங்களுக்கே உரியது.* நீங்கள் மட்டுமே பூஜை செய்ய வேண்டும்.*.

*20. வாடகைக்கு திருமேனி கொடுப்பது வாங்குவது சிவக்குற்றமே..* இது பெரும் பாவமே. தயவு செய்து இனி செய்யாமல் இருப்பது நல்லது.

*21. உங்கள் இல்லத்திற்கு சிவனடியார்கள் வந்தால் தங்கள் உருவ திருமேனிக்கு பூ வைக்கலாம் , தீபாரதனை காட்டலாம், தொடலாம் , சில உதவிகள் செய்யலாம் அதற்கு எவ்வித தடங்கள் இல்லை.

ஆனால் நீங்கள் தான் பிரதானமாக இருக்க வேண்டும்..

எனவே தெய்வ திருமேனிகளை வைத்து சிவகாம முறைப்படி பூஜித்து சிவனருள் பெறுமாறு அடியேன் வேண்டுகிறேன்.

என்றும் அடியார்க்கு அடியவன்.

சேயோன் சேவகன் N2R NandhakumaR

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...