Wednesday 22 March 2017

கங்காரு பெயர்க்காரணம்


.

கங்காரு என்ற துள்ளிக்குதிக்கும் விலங்கை யாவரும் அறிவர். அதற்கான பெயர் அமைந்த சூழல் மிகவும் நகைச்சுவைக்குரியதாகும். ஆத்திரேலியாவில் வாழும் பழங்குடி மக்களிடம் அங்கு வந்தவர்கள் கேட்டார்களாம்..

புதுமையாகத் துள்ளிக் குதிக்கும் இந்த விலங்கின் பெயர் என்ன என்று..
அதற்கு அந்த பழங்குடி மக்கள் “கங்காரு“ என்றார்களாம்.

கங்காரு என்றால் அவர்கள் மொழியில் “தெரியாது“ என்று பொருள். இன்று வரை நாம் நமக்கும் தெரியாது தெரியாது என்று தான் அழைத்து வருகிறோம்.

இப்படி பெயர் வைப்பதில் பல உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.

நான் என் மாணவர்களை முதல் வகுப்பில் சந்திக்கும்போதே கேட்கும் முதல்கேள்வி..
உங்கள் பெயர் என்ன? அதன் பொருள் என்ன? என்பதே..

என்னால் முடிந்தவரை அவர்களின் பெயர்களுக்கான காரணத்தையும் அவர்களுக்குப் புரியவைத்திருக்கிறேன்.

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே“ என்று பெருமிதத்துடன் சொல்லும் பெருமை நம் தமிழ்மொழிக்கு மட்டுமே உண்டு.

பெயரிட்டு அழைக்கும் மரபு காலகாலமாகவே நமக்கு இருந்திருக்கிறது. பெரும்பாலும் காரணம் கருதியே பெயரிட்டு வந்திருக்கிறோம்

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...