Wednesday 22 March 2017

ராமாயணமும் மகாபாரதமும்

1. ராமாயணமோ த்ரேதா யுகத்தில் நடந்தது. மகாபாரதமோ த்வாபர யுகத்தில் நடந்தது.

2. த்ரேதா யுகத்திருக்கு பிறகே த்வாபர யுகம் .

3. ராமபிரானோ அரண்மனையில் பிறந்தவர், கிருஷ்ணரோ சிறைச்சாலையில் பிறந்தவர்.

4. ராமாயணத்திலோ ராமபிரான் கையில் கோதண்டம் உள்ளது. அந்த கோதண்டத்தினாலே அனைத்து அரக்கர்களையும் அழித்தார். மகபாரதத்திலோ எந்த ஆயுதமும் இல்லாமல் வெறும் சாரதியாகவே வந்து அனைவரையும் அழித்தார்.

5. ராமாயணத்திற்கு ஒரு ஹனுமார், மகாபாரதத்திற்கு ஒரு பீஷ்மர்.

6. ஹனுமாரோ ராம பஷத்தில் இருந்தும் ராம பக்தர். பீஷ்மரோ துர்யோதன பஷத்தில் இருந்தும் கிருஷ்ண பக்தர்.

7.எதிரி எப்படி யுத்தம் செய்தாலும் ராமபிரான் நேர்மையாகவே யுத்தம் செய்வார், அவர் ஒருபோதும் அதர்ம வழியில் எதிரியை அழிக்க மாட்டேன் என்று இருந்தார். ஆனால் கிருஷ்ணரோ எதிரி தர்ம யுத்தம் செய்தால் அவரும் தர்மப்படியே யுத்தம் செய்வார், அதர்மவழியில் யுத்தம் செய்தால் அவரும் அதர்ம வழியிலேயே யுத்தம் செய்வார். அபிமன்யுவின் மரணத்திற்கு காரணமான அனைவரையும் அநீதியாலேயே அழித்தார்.

8.ராமாயணத்திற்கு ஒரு மந்தரை, மகாபாரதத்திற்கு ஒரு சகுனி. சகுநியோ கையில் தாயக்கட்டையை எடுத்தான், ஆனால் மந்தரை எதனையும் எடுக்க வில்லை.

9.ராமாயணத்தில் வரும் மந்தரையை விட மகாபாரதத்தில் சகுனி வரும் இடங்கள் அதிகம்.

10.ராமாயணத்திலோ ராவணன் விபீஷணனை துரத்திவிட்டான். ஆனாலும் விபீஷணன் ராமபிரானை சரணாகதி செய்தார். மகாபாரதத்திலோ துர்யோதனன் விதுரரை துரத்திவிட்டான். ஆனாலும் விதுரர் யுதிஷ்டிரரை சரணாகதி செய்யவில்லை.

11.ராமாயண யுத்தமோ பகல் பூராவும் நடந்து கொண்டே இருந்தது. மகாபாரத யுத்தமோ கால வரம்புப்படி நடந்தது.

12.ராமாயணத்திலோ சஹோதரர்களுக்குள்ள பற்றுதலைக் காண முடிகிறது. மகாபாரதத்தில் காண முடிவதில்லை.

13. ராவணனுக்கும் மண்டோதரிக்கும் உள்ள முதல் எழுத்தை சேர்த்துப் பார்த்தால் ராம என்ற எழுத்து ராமாயணத்தில் வரும். ஆனால் மகாபாரதத்தில் இப்படி வருவது இல்லை.

14.உலகம் எப்படி இருக்க வேண்டும் என்பதை ராமாயணம் முக்கியமாக காண்பிக்கிறது. உலகம் எப்படி இருக்குமென்பதை மகாபாரதம் முக்கியமாக காண்பிக்கிறது.

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...