Friday 6 April 2012

தியாகி தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடமான சங்ககிரியில், தமிழக அரசு சார்பில், நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது.

தியாகி தீரன் சின்னமலை தூக்கிலிடப்பட்ட இடமான சங்ககிரியில், தமிழக அரசு சார்பில், நினைவுச் சின்னம் அமைக்கப்பட உள்ளது.

"ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்ட தியாகி தீரன் சின்னமலைக்கு, சங்ககிரியில் விரைவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும்' என்று, முதல்வர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் அறிவித்தார்.

தீரன் சின்னமலை வரலாறு: தீரன் சின்னமலை, 1756ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி, ஈரோடு அருகே மேலப்பாளையம் என்ற ஊரில் பிறந்தவர். கொங்கு மண்டலத்தில் ஆட்சி செய்தவர். அவரது, 1,000 பேர் கொண்ட படை வலிமை மிக்கதாகக் கருதப்பட்டது. அவரது படை, பிரான்ஸ் ராணுவத்திடம் போர்ப் பயிற்சி பெற்றது. வெள்ளையர்களுடன், 1801, 1802, 1804 ஆகிய ஆண்டுகளில், கிழக்கிந்திய கம்பெனியுடன் நடந்த சண்டையில், திப்பு சுல்தானின் படை வெற்றிபெற தீரன் சின்னமலையும், அவரது படை வீரர்களும் துணை நின்றனர். திப்பு சுல்தான் மறைவுக்குப் பின், ஈரோடு அருகே ஓடாநிலை என்ற இடத்தில் கோட்டை அமைத்து, வெள்ளையர்களுக்கு சவாலாக விளங்கினார். பின், வெள்ளையர்களின் பீரங்கி தாக்குதலில் இருந்து தப்ப, பழனி அருகிலுள்ள கருமலையில் தங்கி, கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டவர். தீரன் சின்னமலையை போரின் மூலம் வெல்ல முடியாததால், வெள்ளையர்கள் சூழ்ச்சி மூலம் அவரைக் கைது செய்து, சங்ககிரி கோட்டையில் வைத்து, 1805ம் ஆண்டு ஜூலை 31ம் தேதி ஆடிப்பெருக்கு தினத்தன்று தூக்கிலிட்டனர். வெள்ளையனை எதிர்த்துப் போரிட்டு உயிர் நீத்த தீரன் சின்னமலையை, கவுண்டர் சமுதாயத்தினர் தியாகியாகவும், போர் வீரனாகவும் கொண்டாடி வருகின்றனர்.

நினைவுச் சின்னங்கள்
* சென்னையில் தீரன் சின்னமலைக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.
* கடந்த 95ம் ஆண்டு, காங்கேயத்தில் நினைவு விழா நடத்தப்பட்டு, அவரது வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர்.
* தீரன் சின்னமலை நினைவு தினமான ஆடி 18ம் நாளை, அரசு விழாவாக அனுசரிக்க, 2003ம் ஆண்டு உத்தரவிடப்பட்டது.
* ஈரோடு மாவட்டம், அரச்சலூர் கிராமம், ஓடாநிலையில், 30 லட்ச ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டப்பட்டு, 2006ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
Ruler can do anything, so Born to rule the Galaxy

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...