Friday 6 April 2012

வசப்படுத்தும் வசம்பு!

 ஈரப்பசை உள்ள நிலப்பரப்புகளில் வளரக்கூடிய ஒருவிதப் பூண்டு வகையைச் சேர்ந்த மூலிகைத் தாவரமே வசம்பு. உக்கிரம், வசம், வசை, வேணி, சுடுவான், உரைப்பான், பேர் சொல்லா மருந்து, பிள்ளை மருந்து, பிள்ளை வளர்த்தி ஆகிய மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு!

சுத்தம் செய்து நன்கு வெயிலில் உலர்த்தி, காய்ந்த நிலையில் இருக்கும் வசம்பு வேர்கள் நல்ல மணம் வீசும். வாசத்துக்கு மட்டும் அல்ல... உடலை வசமாக்கும் மருத்துவக் குணங்களுக்கும் வசம்பில் வரம்பு இல்லை.
குழந்தைகளின் வயிற்று வலி நீங்க...

வசம்பை விளக்குத் தீயில் சுட்டுக் கரியாக்க வேண்டும். கரியானத் தூளைச் சிறிது அளவு (100 மி.கி.) எடுத்துக்கொண்டு அதனுடன் ஒரு பாலாடை அளவு தாய்ப்பால் சேர்த்துக் கலக்கி குழந்தைகளுக்குக் கொடுத்தால் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை குணமாகும்.
திக்குவாய் அகல...
குழந்தைகளுக்கு ஏற்படும் நாக்குத் தடுமாற்றம் (திக்குவாய்), வாயில் நீர் ஒழுகுதல் போன்ற பிரச்னைகள் குணமாக வேண்டும் எனில், விளக்குத் தீயில் சுட்ட வசம்பைத் தாய்ப்பால் விட்டு அரைத்து அந்தப் பசையை சிறிதளவு நாக்கில் தடவிவர வேண்டும்.
வாந்தி உணர்வைக் கட்டுப்படுத்த...

வசம்பைச் சுட்டு சாம்பலாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். சுட்ட வசம்புச் சாம்பலை சிறிதளவு எடுத்து தேனில் குழைத்து நாக்கில் தடவினால் வாந்தி உணர்வு நன்கு கட்டுப்படும்.

Ruler can do anything, so Born to rule the Galaxy

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...