கொங்கு நாட்டின் முதற்குடிமக்கள் கொங்கு வேளாளர்கள். கூடி வாழும் பண்பு விலங்கு பறவைகளுக்கும் உண்டு. எறும்புகளும் உண்டு. "ஒரு குடிப்பிறந்த பல்லோர்" கூட்டம் என்றனர். உற்றார் உறவினர்கள் "கூடிவாழ்ந்தால் கோடி நன்மை" என்ற பழமொழிப் படி சுற்றம் தழுவி வாழ்ந்தனர். கூட்டத்தையே குலப்பிரிவாக அமைத்தனர். கொங்கு வேளாளர் இயற்கையோடு இணைந்து - இயைந்து வாழ்ந்தவர்கள். தங்களோடு இயைந்த பறவைகள், தாவரங்கள், பூக்கள், சிறப்புடைய பெயர்கள் முன்னோர்கள் வழிமுறைப் பெயர்களையே குலப்பெயர்களாக அமைத்தனர். பண்டைக் காலத்தில் அறுபது குடிப் பெயர்கள் மட்டுமே இருந்தன. சமுதாய மரபுகள் மாறும் போது கூட்டம் விரிவடையும் போதும் இந்த எண்ணிக்கையும் விரிவடைகின்றன. பிற்காலத்தில் பாடப்பட்ட ஓதாளர் அழகுமலைக் குறவஞ்சியில் 142 குடிப்பெயர்கள் கூறப்பட்டுள்ளன. குடி அமைப்பு குலக்கணியாக - குலதெய்வ வழிபாடாக மாறியது. கொங்கு வேளாளக் கவுண்டர்களின் குலதெய்வங்கள் அக்கூட்டத்தின் முன்னோர் வழிபாடாக அமைந்திருப்பதை அறியலாம். | ||
| ||
உலகையே காக்கும் வேளாளர் | ||
"மேழி பிடிக்கும் கையே ஆழிவேந்தனை ஆக்கும் கை" - ஒளவை. கார் நடக்கும்படி காராளர் தம்முடைய ஏர் நடக்கும் எனில் புகழ்சால் இயலிசை நாடகம் நடக்கும் சீர் நடக்கும் திறம் நடக்கும் திரு அறத்தின் செயல் - ஏர் எழுபது பார் நடக்கும் படை நடக்கும் பசிநடக்க மாட்டாதே. வேளாளர் இனத்தைப் பற்றி ஆயிரம் ஆயிரம் பெருமைகள் உண்டு. வேளாண் குடியிலே பிறந்த நான் பண்பாட்டுக் கல்வியோடு தொழிற் கல்வி கற்றுத் தொழில் துறையிலே மேலும் முன்னேற வேண்டும். உழவுத்துறையை முறையாக சீர்படுத்தி, விளைச்சலை பெருக்கி, நாம் மட்டும் வாழ்வதோடு அல்லாமல் இந்த உலகிற்கே வழி காட்ட வேண்டும். http://www.knmkparty.com |
Thursday, 8 March 2012
உலகையே காக்கும் கொங்குவேளாளக் கவுண்டர்களின் குலங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!
1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...
-
1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம். மற்றும் 2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம்...
-
🌟 சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது. 🌟 கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கலாகாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கக்கூடாத...
-
முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் ...
No comments:
Post a Comment