Saturday, 24 August 2019

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா - அருந்தமிழ் மருத்துவம்


_மூளைக்கு வல்லாரை முடிவளர நீலிநெல்லி ஈளைக்கு முசுமுசுக்கை எலும்பிற்கு இளம்பிரண்டை_


பல்லுக்கு வேலாலன்

  பசிக்குசீ  ரகமிஞ்சி

கல்லீரலுக்கு  கரிசாலை

  காமாலைக்கு கீழாநெல்லி


கண்ணுக்கு நந்தியாவட்டை

  காதுக்கு சுக்குமருள்

தொண்டைக்கு அக்கரகாரம்

  தோலுக்கு அருகுவேம்பு


நரம்பிற்கு அமுக்குரான்

  நாசிக்கு நொச்சிதும்பை

உரத்திற்கு  முருங்கைப்பூ

ஊதலுக்கு நீர்முள்ளி


முகத்திற்கு சந்தனநெய் 

  மூட்டுக்கு முடக்கறுத்தான் 

அகத்திற்கு  மருதம்பட்டை

  அம்மைக்கு வேம்புமஞ்சள்


உடலுக்கு  எள்ளெண்ணை

  உணர்ச்சிக்கு  நிலப்பனை

குடலுக்கு ஆமணக்கு

   கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே


கருப்பைக்கு அசோகுபட்டை

  களைப்பிற்கு சீந்திலுப்பு

குருதிக்கு அத்திப்பழம்

  குரலுக்கு  தேன்மிளகே!


விந்திற்கு ஓரிதழ்தாமரை

  வெள்ளைக்கு கற்றாழை

சிந்தைக்கு  தாமரைப்பூ

  சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை


 கக்குவானுக்கு வசம்புத்தூள்

  காய்ச்சலுக்கு  நிலவேம்பு                           

விக்கலுக்கு மயிலிறகு

   வாய்ப்புண்ணிற்கு மணத்தக்காளி


நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்

  நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்

வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ  

   வெட்டைக்கு சிறுசெருப்படையே 


தீப்புண்ணா குங்கிலியவெண்ணை

  சீழ்காதுக்கு நிலவேம்பு

நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்

   நஞ்செதிர்க்க அவரிஎட்டி 


குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்

    குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்

பெரும்பாட்டிற்கு அத்திநாவல்

  பெருவயிறுக்கு மூக்கிரட்டை


கக்கலுக்கு  எலுமிச்சைஏலம்

  கழிச்சலுக்கு தயிர்சுண்டை 

அக்கிக்கு வெண்பூசனை

  ஆண்மைக்கு பூனைக்காலி


வெண்படைக்கு பூவரசு கார்போகி

   விதைநோயா கழற்சிவிதை 

புண்படைக்கு புங்கன்சீமையகத்தி

  புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு


கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்

  கரும்படை வெட்பாலைசிரட்டை

கால்சொறிக்கு வெங்காரபனிநீர்

  கானாகடிக்கு குப்பைமேனி உப்பே


உடல்பெருக்க உளுந்துஎள்ளு

   உளம்மயக்க கஞ்சாகள்ளு

உடல்இளைக்க தேன்கொள்ளு

   உடல் மறக்க இலங்கநெய்யே


அருந்தமிழர் வாழ்வியலில்

  அன்றாடம் சிறுபிணிக்கு

அருமருந்தாய் வழங்கியதை

  அறிந்தவரை உரைத்தேனே!!





N2R NandhakumaR

Channel N2R

ChinnaKodangipalayam

Thursday, 8 August 2019

N2R Logo


N2R Groups, Channal N2R, N2R Logo, N2R Vehicle Consultancy, N2R Tours and Travels, N2R Logistics, N2R NandhakumaR
Live With An Emotional Life,
Live With N2R.

Monday, 5 August 2019

அது என்ன article 370 ?


தற்போது விவாத பொருளாகியுள்ள இந்த அரசியல் சாசன சட்டத்தை பார்ப்போம்.அதில் இடம் பெற்றுள்ள சலுகைகளை காண்போம். இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் ஏன் இந்த சட்டத்தை எதிர்க்கிறார்கள் என்று பார்ப்போம்.


கடைசி வரை படித்து பாருங்கள் அப்ரோம் நீங்களும் article 370 ஐ எதிர்ப்பீர்கள்.


1.காஷ்மீர் மாநிலத்தில் உள்ள மக்கள் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள்.அவர்கள் இந்தியாவிலும் குடியேறலாம் பாகிஸ்தானிலும் குடியேறலாம்.


2.ஜம்மு காஷ்மீருக்கு என்று தனி கொடி உள்ளது..அங்கு இந்திய தேசிய கொடியை அவமதித்தாலும் அது தேச துரோகம் கிடையாது.


3.ஜம்மு காஷ்மீரில் மாநில அரசு 6 ஆண்டுகள் பதவியில் இருக்கலாம்.ஆனால் நம்மை போன்ற மற்ற மாநிலங்களில் 5 வருடங்கள் தான் வெற்றி பெற்ற அரசு ஆட்சி அமைக்க முடியும்.


4.இந்திய கொடி, தேசிய சின்னங்கள் மற்றும் தேசிய கீதத்தை அவமதித்தால் அங்கு அது தவறு கிடையாது என்று article 370 இல் உள்ளது.


5.இந்தியாவின் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளும் காஷ்மீரை தவிர அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும்..


6.பாராளுமன்றத்தால் ஜம்மு காஷ்மீரில் உள்ள சில இடங்களுக்கு மட்டுமே சட்ட திருத்தங்களை செய்ய உரிமை உள்ளது.


7.ஜம்மு காஸ்மீரில் உள்ள ஒரு பெண் மற்ற மாநிலங்களில் உள்ள ஒரு ஆணை திருமணம் செய்தால் அந்த பெண்ணிடம் உள்ள காஷ்மீருக்கன.குடியுரிமை பறிக்கப்படும்.


அதே அந்த பெண்.பாகிஸ்தானில் இருக்கும் ஒரு ஆணை திருமணம் செய்தால் அந்த பாகிஸ்தான் ஆணுக்கும் இந்திய.குடியுரிமை.அளிக்கப்படும்.இதனால் பாகிஸ்தானில் இருந்து பல்வேறு பிரிவினைவாத தலைவர்கள் இந்தியாவின் உள்ளே வருகின்றனர்.


8.அரசியல் சாசன சட்டம் 370 காரணமாக இந்தியாவின் RTI, RTE மற்றும் CAG போன்ற எந்த சட்டமும் ஜம்மு காஷ்மீரில் செல்லாது..


9.இஸ்லாமியர்கள் பின்பற்றும் சரியத் சட்டம் ஜம்மு காஷ்மீரில் நடைமுறையில் உள்ளது.பஞ்சாயத்து போன்ற அமைப்புகளுக்கு அங்கு உரிமை இல்லை.மேலும் ஜம்மு காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள சீக்கியர்கள் மற்றும் இந்துக்களுக்கு 16 சதவீதம் இடஒதுக்கீடு இல்லை..


10.article 370 படி இந்தியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள மக்கள் ஜம்மு காஷ்மீரில் நிலங்களை வாங்க முடியாது.சொந்த நாடாக இருந்தாலும் நமக்கு உரிமைகள் அங்கு மறுக்கப்படும்.


11.காஷ்மீரி பெண்களை திருமணம் மட்டும் செய்து கொண்டு பாக்கிஸ்தானியர்கள் இந்திய குடிமகனாக மாற முடியும். ஆனால் இந்தியாவில் உள்ள மற்ற மாநில மக்கள் காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொண்டு காஷ்மீரில் குடியுரிமை வாங்க முடியாது..


12.காஷ்மீரில் உள்ள மக்களுக்கு என்று இந்திய அரசு வரிச்சலுங்க செய்ய வேண்டும் என்று article 370 கூறுகிறது.இதற்காக மட்டும் இந்தியா பல்லாயிரக்கணக்கான கோடிகளை செலவு செய்கிறது.


Channel N2R

பல கோடீஸ்வரர்களை உருவாக்கிய பிரம்ம முகூர்த்தம்: முக்கியத்துவமும் பலன்களும் !


பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றி  அதி காலையில் எழு! பல நன்மைகளை தரும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன!

வைகறைப் பொழுதில் சூரியனிடம் இருந்து பூமியை வந் தடையும் ஒளிக் கதிர்கள் சக்தி வாய்ந்தவை. இவை நம் உடலில் படும்போது நரம்புகளுக்கு புது தன்மை பெறுகின்றன. உற்சாகத்தையும் கொடுக்கின்றன. கண்கள் ஆரோக்கியத்தையும் உடல் வலிமையும் பெறுகின்றன. அதனால்தான் சூரிய நமஸ்காரம் செய்வது மிகச் சிறந்த வழிபாடு என்று நம் முன்னோர்கள் கூறினார்கள்!. 


சனிக்கிழமை அன்று அதிகாலை நேரத்தில் சனி பகவானுடைய கிரகண சக்தி பலம் பெற்றிருப்பதால் அன்றைய தினம் நல்லெண்ணெய் குளியல் செய்வது மிகவும் சிறப்புடையது என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன!                           


 இந்த அதிகாலை நேரத்தில் எழுவதால் உடல் சுறுசுறுப்படையும் ஆரோக்யமாக இருக்கும். சத்தம் இல்லாமலும் பரபரப்பு இல்லாமலும் காரியங்கள் சிறப்பாக முடியும். உடலுக்கும் உள்ளத்துக்கும் ஊட்டம் தருவது காலையில் கண் விழிப்பதாகும்!                                       


உஷஸ் என்னும் பெண் தேவதையைப் பற்றி ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இவள் தோன்றிய பின்பே சூரியன் உதயமாகின்றதாம். இதனாலேயே விடியற் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கி சாய்வதால் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுவதால் விசேஷமாக சொல்லப்படுகிறது. இதனால்தான் அதிகாலை நேரத்தில் நீரும் வெதுவெதுப்பாக காணப்படுகிறது. 

கிரகங்களிலேயே மிகவும் பாசமானவர் நீதி அரசர் சனி பகவான்: 


அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. பிரம்ம முகூர்த்தம் என்பது எல்லாமே ஒரு குறிப்பிட்ட நேரத்தில், வீட்டில் வேலை செய்ய வேண்டும். பின்பு குறிப்பிட்ட நேரத்தில் ஓய்வு எடுக்க வேண்டும். உறங்க வேண்டிய நேரத்தில் விழித்திருந்தால் நோய்கள் எல்லாம் நம்மை நோக்கி வரும். அதனால்தான் நமது பெரியோர்கள் அதிகாலையில் எழ வேண்டும் என்றார்கள். அந்த நேரத்தில் இறைவனிடம் வைக்கின்ற அனைத்துவித பிரார்த்தனைகள் கண்கூடாகவே நிறைவேறுகிறது!


சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மா நான்முகனை குறிக்கின்றது. படைக்கும் தொழில் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதி அமரச்செய்து 24 கலைகளையும் படைத்தார். பிரம்ம முகூர்த்தத்தில் திருமணம் மற்றும் வீடு கிரகபிரவேசம் செய்வது சிறப்பாக கருதப்படுகிறது! 


பிரம்ம முகூர்த்தத்தின் மகத்துவம் அனைவரும் அறிந்திருப்பார்கள். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் இணைந்து மறுபிறவிதானே எனவே ஒவ்வொரு நாளும் காலையில் மறுபிறவி பெறுவதை சிருஷ்டி படைத்தல் என்று சொல்லலாம். இத்தொழிலைச் செய்பவர் பிரம்மா எனவே இவரது பெயரால் விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளார்கள்!


பிரம்ம முகூர்த்தத்தில் திதி வார நட்சத்திர யோக தோஷங்கள் கிடையாது. இந்த நேரம் எப்போதுமே சுபவேளை தான் இந்நேரத்தில் எழுந்து குளித்து இறைவழிபாட்டைச் செய்து நமது வேலையை செய்ய துவங்கினால் அன்று முழுவதும் வெற்றிதான். பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வழிபடுவதன் மூலம் சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது ஐதீகம்!


தெய்வீகத்தன்மை இருக்கக்கூடிய நேரம் பிரம்ம முகூர்த்தம். ஒவ்வொரு நாள் காலையிலும் 4 மணி முதல் 6 மணிக்குள் பிரம்ம முகூர்த்தத்தில் எடுத்துக் கொள்ளலாம். உங்கள் வாழ்வில் மாற்றத்தை சரிசெய்ய லட்சுமி கடாட்சத்தை நினைத்த காரியங்களை நிறைவேற்ற நீங்கள் இந்த பிரம்மமுகூர்த்தத்தில் பயன்படுத்தலாம்!


நீங்கள் எதை அடைய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதை மீண்டும் மீண்டும் நினைப்பதற்கும் மந்திரம் யந்திரம் தந்திரம் நோக்கி நீங்கள் செல்ல வேண்டும் என்றால் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் ஒரு நேரம் பிரம்மமுகூர்த்தம்!


அதுபோல் நமது மனதில் இருக்கும் எண்ணங்களை வைப்பதற்கான நேரம் தான் இந்த பிரம்மம் உங்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பிரம்ம முகூர்த்த தினம் தினமும் காலையில் தொடர்ந்து எந்த விஷயங்களை செய்கிறோமோ அதில் நாம் மாபெரும் வெற்றியை அடைய முடியும். 


சாதித்திருக்கக் கூடிய மிகப் பெரும் கோடீஸ்வரர்கள் அனைவருமே இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் எழுந்து செயல்பட ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் மட்டுமல்ல ஆதிக்கால தமிழர்கள் அனைவருமே இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் தான் செயல்பட ஆரம்பிப்பார்கள். ஆரம்பிப்பது சரியாக இருந்தால் முடிவும் சரியாக இருக்கும் .ஆரம்பிக்கும் நேரம் நேரம் பிரம்ம முகூர்த்தம் ஆக இருந்தால், நம் வாழ்வில் வெற்றி இடம்பெறும். ஆகையால் சூரியனுக்கு முன் எழுந்து, சூரியனை விட உயர்ந்த வாழ்க்கையை நீங்கள் நிச்சயம் அடைய முடியும். பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 4 மணி முதல் 6 மணி வரை கடைபிடியுங்கள் வளமும் நலமும் பெற்று வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துங்கள்!!!  என்றும் அன்புடன்.


N2R நந்தகுமார்

Sunday, 28 July 2019

மன மாசுகள் எதிரி ஞானம்

ஒரு வீட்டை வாடகைக்கு விடவேண்டுமென்றால் உடைசல். விரிசல்களைப் பூசி வெள்ளையடித்து அதன் பிறகு தான் மனிதர்களை குடி அமர்த்துகிறோம். சாதாரண மனிதர்களை குடிவைப்பதற்கே இத்தனை பிரயத்தனமென்றால் சர்வ வல்லமை படைத்த இறைவனை நம் உள்ளத்தில் குடிவைக்க நமக்குள் இருக்கும் எத்தனை மாசுகளை நாம் துடைத்தெறிய வேண்டும்? அதற்கு நாம் எவ்வளவு அரும்பாடுபட்டு உழைக்க வேண்டும் என்பதை உணரும்போது பெரும்மலைப்பாக இருக்கிறது.


நம் அனைத்து தீய செயல்களுக்கும், நம் தவறான நடவடிக்கைகள் எல்லாவற்றிற்கும் நம் மனமே மூல காரணமாக இருக்கிறது, ஒரு மீன் வியாபாரி இருந்தான், வியாபாரத்தை முடித்துக் கொண்டு வீட்டிற்குத் திரும்பும் போது பெரும்மழை பிடித்துக் கொண்டதால் வழியில் இருந்த அவன் பூக்கார நண்பன் வீட்டில் இரவு தங்கினான், அன்று இரவு முழுக்க அவனுக்கு உறக்கம் வரவில்லை ஏன்? மீன் நாற்றத்திலேயே உறங்கிப்பழக்கப்பட்டவனுக்கு பூவாசம் பெரும் தொல்லையாக இருந்தது,அதேபோன்றுதான் நம் மனம் முடைநாற்றம் வீசும் எண்ணங்களுக்குஉள்ளேயே முடங்கிக் கிடப்பதனால் பக்திப் படியேறி ஞானரதத்தில் பயணம் செய்ய முடியாமல் தட்டுத் தடுமாறி தரங்கெட்டுக் கிடக்கிறோம்,


இல்லையே? நான் அப்படி இல்லையே? நான் தினசரி பூஜை செய்கிறேன், தியானம் செய்கிறேன் அனைத்து விரதங்களையும் தவறாமல் கடைபிடிக்கிறேன், ஆனாலும் ஞானரதப் பயணம் எனக்குக் கிடைக்கவில்லையே? துன்பத்திலே அல்லவா துவண்டு கிடக்கிறேன்? தோல்வியில்அல்லவா துடிதுடித்து சாகின்றேன்? என்று சிலர் முணுமுணுப்பது நமக்குக் கேட்கிறது,


 உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள் உங்கள் விரதமும். பூஜையும்பகவானை நோக்கியா? பகட்டான வாழ்வை நோக்கியா? நிச்சயமாக நாம் வெளிப் பொருள் வேண்டியே வேள்விகள் செய்கிறோம், ஒரு விவசாயி இரவு முழுவதும் கரும்புத் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சினான்,விடிந்தபின் தோட்டத்தைப் பார்த்த விவசாயி பதைத்து போனான்,காரணம் இரவு முழுவதும் கஷ்டப்பட்டு இரைத்து பாய்ச்சிய தண்ணீர் தோட்டத்திற்குள் துளிகூட இல்லை, எலி ஒன்று தோண்டிய வளையால் வாய்க்கால் வழி உடைந்து வெற்று நிலத்திற்கு நீரெல்லாம் போய்விட்டது, புகழ். வெற்றி. பொருள் ஆகியவற்றில் கருத்தூன்றி பக்தன் செய்யும் அனைத்து விதமான ஈஸ்வர ஆராதனை ஒரு பலனும் இல்லாமல் எலி வளைத் தண்ணீராகத் தான் முடியும்,


இப்படிப்பட்ட பூஜையும்.பிரார்த்தனையும் ஆயுள் முழுக்க செய்தாலும் புறப்பட்ட இடத்திலேயே நகரவே நகராமல் நடந்து கொண்டிருப்போம், குழந்தை தாயிடம் ஆடை கேட்கிறதா? அணிகலன்கள் கேட்கிறதா? ஆனாலும் தாய் அவைகளை குழந்தைக்குத் தராமலா இருக்கிறாள், தாய்க்குத் தெரியும் தன் குழந்தைக்கு எதை எப்போது கொடுக்க வேண்டுமென்று, நாம் விவரம் புரியாமல் வெய்யில் காலத்தில் கம்பளியும். பனிக்காலத்தில்ஜஸ்கிரிமும் கேட்டால் எந்தத் தாய்தான் தருவாள்? தாயை விட சாலப்பரிவு உடையவன் இறைவன், அவனிடம் உன்னை முழுவதுமாகஒப்படைத்து விடு, உன் குறைகளை நிறையாக்குவது அவன் வேலை,அவனை மட்டுமே அடைய அழுவதும். தொழுவதும் தான் உன்வேலை, அவனை நீ அடைய வேண்டுமென்றால் உன்னை அவன் முதலில் அடையவேண்டும், அதற்கு நீ ஆமைபோல் ஐம்புலன் களையும் அடக்க பிரயத்தனம் எடுக்க வேண்டும், மந்திரித்த கடுகை பேய் பிடித்தவன் மீது அள்ளி வீசினால் பேய் அகன்று விடும்,


ஆனால் பேய் கடுகுக்குள்யே புகுந்து விட்டால் அந்தக் கடுகு எப்படிப் பேயை விரட்டும், அதேபோன்றுதான் பகவானை மனதால் தியானிக்க வேண்டும், தியானிக்க வேண்டிய மனதிலேயே காமகுரோதங்கள் நிறைந்து விட்டால் அதைக் கொண்டு எப்படி தியானிப்பது,படகைக்கொண்டு தான் ஆற்றைக் கடக்க வேண்டும், படகே பாம்பானால்அக்கரையுமில்லாமல். இக்கரையுமில்லாமல் நடு ஆற்றிலே நிற்கதியாகப்போகவேண்டியதுதான்.


மன மாசுக்களை அகற்றும் எண்ணம் ஞானத்தால் மட்டுமே உருவாகும், அந்த ஞானத்தைத் தருவது சூரியனாகும், சூரியன் என்பது வானத்தில் உள்ள வட்டப் பொட்டு அல்ல! உன் புருவங்களுக்கு மத்தியில்உள்ள மூளையின் வாசல் . ஓடுகின்ற மனத பிடித்து இழுத்து வந்து அந்த மையத்தில் கட்டு மனதிற்குள் மண்டிக் கிடக்கும் அஞ்ஞானக் குப்பைகள் பற்றி எரியும் அகங்கார கோபங்கள் வெந்து சாம்பலாகும்…..

பழமையான வாகனங்களுக்கு தடை?


govt-proposes-scrapping-of-vehicles-older-than-15-yrs

நாடு முழுவதும் 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களை பயன்பாட்டில் இருந்து நிறுத்தி கொள்வதற்கான சட்டத் திருத்த கருத்துருவை மத்திய அரசு முன்வைத்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அரசு வரைவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் ஓராண்டுக்கு ஒருமுறை தகுதி சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்பதை ஆறு மாதத்துக்கு ஒருமுறையாக மாற்ற வேண்டும் என்ற கருத்துரு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அதன்படி, புதிதாக பெட்ரோல் அல்லது டீசல் கார் வாங்கும்போது அதை பதிவு செய்வதற்கான கட்டணம் 600 ரூபாயில் இருந்து பத்தாயிரம் ரூபாயாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்களுக்கு பதிவு கட்டணம் 20 ஆயிரமாகவும் புதுப்பித்தல் கட்டணம் 40 ஆயிரம் ரூபாயாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Channel N2R 
N2R NandhakumaR

Wednesday, 24 July 2019

தேவைப்படும் தேவைகள்


 உடல் தேவை : உணர்ச்சியை நிறைவு செய்வது


மனதின் தேவை : இன்னது தான் வேண்டும் என்று கேட்பது


உயிரின் தேவை : அனுபவிப்பது


ஆன்மாவின் தேவை : தேவை இல்லை என்பது 


Channel N2R


உடலுக்கு ஒன்று தேவை 


மனதிற்கு ஒன்று தேவை 


உயிருக்கு ஒரு தேவை 


உள்ளமென்னும் ஆன்மவிற்கு ஒரு தேவை 


இந்த தேவைகளின் அடிப்படையில் உண்டாகும்  உரசலகள் தான்  துன்பங்கள் 


தேவைப்படும் தேவை ஒன்று, 


கிடைக்கும் தேவை வேறொன்று


உதாரணத்திற்கு உடலுக்கு தேவை உணவு.   


அந்த உணவு குறிப்பிட்ட  இந்த உணவாக தான் வேண்டும் என்று எண்ணுவது மனதின் தேவை 


உயிரின் தேவையோ ருசியை இன்னதென்று அறிந்து கொள்வது 


ஆனால் 


ஆன்மாவின் தேவை என்ற ஒன்று எதுவுமில்லை 


தேவையற்றதே ஆன்மாவின் தேவை 


இந்த வேறுபட்ட மன நிலை தான் நமக்குள் திரிபு நிலை உண்டாகக் காரணமாக இருக்கிறது 


நாம்  உடலாக நம்மை கருதும் பட்சத்தில் 


உடலின் தேவை என்பது உபத்திரவம் இல்லாமல் பூர்த்தியாகிறது 


ஆனால் அகங்காரம் என்னும் மனம் சஞ்சரிக்கும் போது 


வெவ்வேறு வகையான வேறுபட்ட எண்ணங்களும்,  ஆசைகளும் உண்டாகி 


உயிரின் தேவையையும், ஆன்மாவின் தேவையையும் கண்டுகொள்ள முடியாமல் செய்து விடுகிறது 


உண்பதற்கு கஞ்சி கிடைத்தால் அதுவே தேவாமிருதம் என்று ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்டால் 


ஆன்மாவின்  தேவையற்ற தேவையை உணர்ந்து கொள்ள முடியும் 


கஞ்சியில் எனக்கு இந்தக் கஞ்சி தான் வேண்டும், 


இது பிடிக்காது, 


அல்லது சேராது என்று பாகுபாடு உண்டாகும் போது 


மனம் அதிலேயே சிக்கி அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்ற நிலை உண்டாகிறது 


இந்த தவிப்பு உணவோடு நின்று விடுகிறதா என்றால் இல்லை 


அனைத்திலும் இதே மாறுபாடுகள் தான் 


வாழ்க்கை துணை விஷயத்திலும் சரி, 


குழந்தைகள் விஷயத்திலும் சரி,


உறவினர்கள் விஷயத்திலும் சரி...


பாகுபாடுகளை உண்டாக்கி 


உணர்வு நிலைக்கு நம்மை போக விடாமல் தடுத்துக் கொண்டு இருப்பது மனம் என்னும் அகங்காரம் கொண்ட மாய வலை 


மனம் இன்னதென்று அறிந்து 


அதன் சூட்சுமத்தை உணர்ந்து, 


அதன் வழியிலேயே பயணித்து, 


அதை அங்கேயே நிலை நிறுத்தி 


அதைக் கடந்தால் 


ஆன்மாவின் தேவை தேவையற்றது தான் என்று உணர்ந்து கொள்ள முடியும் 


அதற்கு "நான் யார்" என்ற விசாரத்தில் தேர்ச்சி பெற்றால் 


"தான்" என்ற தயாபர நிலையை உணர்ந்து கொள்ள முடியும்


மனமென்னும் மாயையை 


விழிப்புணர்வோடு கண்காணிக்க தொடங்குவோம் ஒவ்வொரு கணமும்...


சேயோன் சேவகன் 

N2R நந்தகுமார்

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...