Wednesday, 24 July 2019

தேவைப்படும் தேவைகள்


 உடல் தேவை : உணர்ச்சியை நிறைவு செய்வது


மனதின் தேவை : இன்னது தான் வேண்டும் என்று கேட்பது


உயிரின் தேவை : அனுபவிப்பது


ஆன்மாவின் தேவை : தேவை இல்லை என்பது 


Channel N2R


உடலுக்கு ஒன்று தேவை 


மனதிற்கு ஒன்று தேவை 


உயிருக்கு ஒரு தேவை 


உள்ளமென்னும் ஆன்மவிற்கு ஒரு தேவை 


இந்த தேவைகளின் அடிப்படையில் உண்டாகும்  உரசலகள் தான்  துன்பங்கள் 


தேவைப்படும் தேவை ஒன்று, 


கிடைக்கும் தேவை வேறொன்று


உதாரணத்திற்கு உடலுக்கு தேவை உணவு.   


அந்த உணவு குறிப்பிட்ட  இந்த உணவாக தான் வேண்டும் என்று எண்ணுவது மனதின் தேவை 


உயிரின் தேவையோ ருசியை இன்னதென்று அறிந்து கொள்வது 


ஆனால் 


ஆன்மாவின் தேவை என்ற ஒன்று எதுவுமில்லை 


தேவையற்றதே ஆன்மாவின் தேவை 


இந்த வேறுபட்ட மன நிலை தான் நமக்குள் திரிபு நிலை உண்டாகக் காரணமாக இருக்கிறது 


நாம்  உடலாக நம்மை கருதும் பட்சத்தில் 


உடலின் தேவை என்பது உபத்திரவம் இல்லாமல் பூர்த்தியாகிறது 


ஆனால் அகங்காரம் என்னும் மனம் சஞ்சரிக்கும் போது 


வெவ்வேறு வகையான வேறுபட்ட எண்ணங்களும்,  ஆசைகளும் உண்டாகி 


உயிரின் தேவையையும், ஆன்மாவின் தேவையையும் கண்டுகொள்ள முடியாமல் செய்து விடுகிறது 


உண்பதற்கு கஞ்சி கிடைத்தால் அதுவே தேவாமிருதம் என்று ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்டால் 


ஆன்மாவின்  தேவையற்ற தேவையை உணர்ந்து கொள்ள முடியும் 


கஞ்சியில் எனக்கு இந்தக் கஞ்சி தான் வேண்டும், 


இது பிடிக்காது, 


அல்லது சேராது என்று பாகுபாடு உண்டாகும் போது 


மனம் அதிலேயே சிக்கி அதிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கின்ற நிலை உண்டாகிறது 


இந்த தவிப்பு உணவோடு நின்று விடுகிறதா என்றால் இல்லை 


அனைத்திலும் இதே மாறுபாடுகள் தான் 


வாழ்க்கை துணை விஷயத்திலும் சரி, 


குழந்தைகள் விஷயத்திலும் சரி,


உறவினர்கள் விஷயத்திலும் சரி...


பாகுபாடுகளை உண்டாக்கி 


உணர்வு நிலைக்கு நம்மை போக விடாமல் தடுத்துக் கொண்டு இருப்பது மனம் என்னும் அகங்காரம் கொண்ட மாய வலை 


மனம் இன்னதென்று அறிந்து 


அதன் சூட்சுமத்தை உணர்ந்து, 


அதன் வழியிலேயே பயணித்து, 


அதை அங்கேயே நிலை நிறுத்தி 


அதைக் கடந்தால் 


ஆன்மாவின் தேவை தேவையற்றது தான் என்று உணர்ந்து கொள்ள முடியும் 


அதற்கு "நான் யார்" என்ற விசாரத்தில் தேர்ச்சி பெற்றால் 


"தான்" என்ற தயாபர நிலையை உணர்ந்து கொள்ள முடியும்


மனமென்னும் மாயையை 


விழிப்புணர்வோடு கண்காணிக்க தொடங்குவோம் ஒவ்வொரு கணமும்...


சேயோன் சேவகன் 

N2R நந்தகுமார்

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...