Monday, 20 November 2017

மௌனம் ... !!!



பேசுபவன் விதைக்கிறான்
பேசாதவன் அறுவடை செய்கிறான் ...

நன்றும் தீதும் நாவினுள் அடக்கம் ...

நாவின் பெருமையோ மௌனத்தின் தொடக்கம் ... !!!

மௌன மூச்சே இறைவனின் பேச்சு ...

பேசிப் பேசி சாதித்தது என்ன ... ???

பேசாமல் சாதிப்போமே ... !!!

அறிவு விழித்தால் ஆற்றல் பெருகும் ...

ஆற்றல் பெருகினால் வாழ்கையில் அமைதி கிட்டும் ...

அமைதி கிட்டினால் ஆனந்தம் பெருகும் ...

ஆனந்தம் பெருகினால் அருள் நிறைந்திடும் ...

அருள் நிறைந்தால் அன்பு பெருகிடும் ...

அன்பு பெருகினால் ஆணவம் அழிந்திடும் ...

ஆணவம் அழிந்தால் இறை உணர்வு சித்திக்கும் ...

இறை உணர்வு சித்தித்தால் பிறவி பயணம் அறுபடும் ...

பிறவி பயணம் அறுபட்டால் பிறப்பின்  நோக்கம்  நிறைவுறும் ...

பிறப்பின் நோக்கத்தில் ... !!!

கிருஷ்ண கவுண்டர் வழி -

நந்தகுமார் கிருஷ்ண கவுண்டர்

Ruler can do anything, so Born to rule the Galaxy

ஹீமோகுளோபின் (Haemoglobin)

ஹீமோகுளோபின் குறைபாடு அதாவது ரத்த சோகை ஏற்பட்டால் உடல் முழுவதும் செயலிழந்ததை போல் இருக்கும். உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் பிராண வாயுவான ஆக்ஸிஜனை கொண்டு சேர்க்கும் ரத்த அணுக்களின் அளவு குறைவதால் சோர்வு ஏற்படும். இதனால் சிறுநீரக பிரச்னை வருவதற்கான வாய்ப்பும் ஏற்படுகிறது. இதில் இருந்து தீர்வு பெற எந்தவொரு மாத்திரை மருந்தும் இல்லாமல் நாம் சாப்பிடும் உணவிலேயே ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க முடியும். காய்கறிகளுடன் சேர்த்து சில பழங்களையும் சாப்பிடுவது மேலும் சீரான உடற்பயிற்சி போன்றவையே இதற்கு போதுமானது.
1. கொய்யா:

தினமும் கொய்யாப் பழம் சாப்பிடுவதன் மூலம் ரத்த அணுக்களின் அளவு அதிகரிக்கிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எவ்வளவு கசப்பாக கொய்ய இருக்கிறதோ அதில் அவ்வளவு ஹீமோகுளோபினை அதிகரிக்கும் ஆற்றல் இருக்கிறது என்று அர்த்தம். மிகவும் சத்தான மற்றும் அதிக பயன்களை கொண்ட ஒரு பழம் இது.
2. மாம்பழம்:

பழ வகைகளில் மிகவும் சுவையானதும், அனைவராலும் விரும்பப்படும் ஒன்றானதாகவும் இருப்பது மாம்பழம். இவ்வளவு இனிப்பான பழத்தால் ரத்த சோகையில் இருந்து விடுபட முடியும் என்றால் எதற்காக கசப்பான மாத்திரைகளை விழுங்க வேண்டும்?
3. ஆப்பிள்:

நாள்தோறும் ஒரு ஆப்பிளை நாம் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்வதை தவிர்க்கலாம் என்பது பல காலமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு உண்மை. அந்த வகையில் பார்த்தால் தினமும் ஆப்பிள் சாப்பிடுவது ரத்த சோகை மட்டுமில்லாமல் இனி வரவிருக்கும் அனைத்து நோய்களில் இருந்தும் நம்மை பாதுகாக்கக் கூடிய ஒன்றாகும்.
4. திராட்சை:

திராட்சையில் இரும்புச் சத்து நிறைந்துள்ளது. மாதவிலக்கு ஏற்படும் பெண்களுக்கு உடலில் தேவையான அளவு ரத்தம் உற்பத்தியாக இரும்புச் சத்து மிகவும் அவசியமான ஒன்று. புதிதாக ரத்தம் உற்பத்தி ஆகிறது என்றால் சிவப்பணுக்களின் எண்ணிக்கையும் நிச்சயம் உயரும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
5. பீட்ரூட்:

பீட்ரூட்டில் நிறைந்திருக்கும் கார்போஹைட்ரேட் ரத்தம் வீணாவதைத் தடுக்கிறது. ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகமாவதற்குத் தேவையான சிவப்பு ரத்த அணுக்களை இவையும் உற்பத்தி செய்கிறது. அனீமியா நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த மருந்து என்றே சொல்லலாம்.
6. துளசி:

துளசி ரத்தத்தைத் தூய்மையாக்கி சிவப்பணுக்கள் இறப்பதற்குக் காரணமான நச்சுகளை ரத்தத்தில் இருந்து நீக்குகிறது. தினமும் துளசி சாப்பிடுவதால் நிச்சயம் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.
7. காய்கறிகள்:

பச்சை காய்கறிகளை உட்கொள்வது எப்போதும் பல நன்மைகளை வழங்கக் கூடியது. ரத்தத்தில் இரும்புச் சத்தை அதிகரித்து ரத்த சோகையில் இருந்து நம்மையும் காக்கக் கூடியது காய்கறிகள்.
8. தேங்காய் எண்ணெய்:

உடலில் திசுக்கள், சதைகள் மற்றும் ரத்தம் உற்பத்தியாகத் தேங்காய் எண்ணெய் உதவுகிறது. இதன் மூலம் ஹீமோகுளோபின் அளவு கட்டாயம் அதிகரிக்கும்.
9. முட்டை:

முட்டையில் புரதம், கொழுப்பு, வைட்டமின், இரும்பு, கால்சியம் மற்று தாது ஆகிய அனைத்துச் சத்துக்களும் இருப்பதால் இது உடலும் அதிக நன்மைகளைத் தரக்கூடியது. உடலின் ஹீமோகுளோபின் அளவு மற்றும் இல்லாமல் உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சில சத்துக்களும் இதனால் அதிகரிக்கக் கூடும்.

Ruler can do anything, so Born to rule the Galaxy

உடலின் இயக்கம் உணவை பொருத்தது

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. இந்த உணவானது நம் உடல் நிலையை பொறுத்தும், சூழ்நிலையை பொறுத்தும்தான் இருக்க வேண்டுமே தவிர அட்டவணைப்படி எடுத்து கொள்ள கூடாது.

ஒரு நாள் முழுவதும் குடிக்க வேண்டிய தண்ணீரை காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அரைமணி நேரத்திற்குள் குடிக்க வேண்டும். சிலர் வெந்நீர் அருந்துவார்கள், ஆனால் குளிர்ந்த நீர் குடிப்பதுதான் நல்லது. ஏனெனில் குளிர்ந்த நீருக்கு அசிடிட்டியை குறைக்கும் தன்மை வெந்நீரை காட்டிலும் அதிகம். தண்ணீரானது அமிலத்தின் அதிகப்படியான வீரியத்தை சமன்செய்து, வயிற்றை சீராக இயக்க உதவுகிறது. தொடர்ந்து தண்ணீர் குடித்து வந்தால் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, உடல்பருமன், சிறுநீரகக் கோளாறு, போன்ற நோய்களின் தாக்கத்தையும் நம்மால் வெகுவாக குறைக்க முடியும்.
முக்கால் லிட்டர் நீரை முழுமையாக குடிக்க முடியாதவர்கள் 5 நிமிட இடைவெளியில் நான்கு டம்ளராக பிரித்து குடிக்கலாம். சர்க்கரை நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வரபிரசாதம் வெந்தயம். உடல் சூட்டை தணிக்கும் அருமருந்து இதுதான். வெந்தயத்தை முதல் நாள் இரவே குளிர்ந்த நீரில் ஊறவைத்து, மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தை தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும். வெந்தயத்தை அப்படியே தண்ணீருடனோ அல்லது மோருடனோ சாப்பிடுவது கூடாது.
வெந்தயத்தை ஊற வைக்காமல் சாப்பிட்டால் அதன் மேல் உள்ள உறை செரிமானத்தை தாமதப்படுத்தி மலச்சிக்கலை ஏற்படுத்திவிடும். வெந்தயம் மோர் இரண்டுமே குளிர்ச்சியை தரக்கூடியது என்பதால் உடனடியாக சளி பிடிக்கக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. சில நேரங்களில் வயிற்று போக்கிற்கும் வழிவகுத்துவிடும்.
அல்சருக்கு அருமருந்து அருகம்புல் சாறுதான். பைகளில் அடைத்து விற்கப்படும் அருகம்புல் பொடி நம் உடலுக்கு உகந்தது அல்ல. அருகம்புல்லின் தண்டு மட்டும்தான் மருத்துவகுணம் கொண்டது. இந்த இலையின் ஓரங்களில் காணப்படும் வெண்மையான சுனை பகுதியானது நச்சு தன்மை கொண்டதால் வயிற்று போக்கை ஏற்படுத்திக் கூடிய வாய்ப்பு உள்ளது. எனவே அருகம்புல் செடியை வீட்டிலேயே அரைத்து சாறு எடுத்து வெந்நீருடன் பயன்படுத்துவது நல்லது.
இஞ்சியில் தோல் பகுதி நச்சுத்தன்மை வாய்ந்தது. இஞ்சி தோலை நீக்கிவிட்டு சாறு எடுத்து அதோடு தேன் கலந்து குடித்து வந்தால் தேவையில்லாத கொழுப்பை குறைப்பதோடு, நுரையீரல் தொடர்பான நோய்களும் சரியாகும். ஆனால் வாய்ப்புண், வயிற்றிப்புண் உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது.
காலையில் வெறும் வயிற்றில் நீராகாரம் அருந்துவதால் உடலுக்கு குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது. இவற்றுடன் மோர் சேர்த்து குடிப்பது நல்லது.
காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறூ குடித்துவந்தால் தேவையற்ற கொழுப்பு கரைவதோடு, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும்.

Ruler can do anything, so Born to rule the Galaxy

இந்த மூன்று பழங்களைச் சாப்பிடுவதால் உங்களுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கும்!



பேரீச்சம்பழம்
தினமும் இரவில் படுக்க செல்லும் முன்னர் ஒரு டம்ளர் காய்ச்சிய பசும் பாலையும், இரண்டு பேரீட்ச்சம் பழத்தினையும் உண்டு வந்தால் உடல் நல்ல பலம்பெறும். புதிய ரத்தமும் உண்டாகும்.
தோல் பகுதிகள் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருக்கும்.
கண் சம்மந்தமான கோளாறுகளும், நரம்பு சம்மந்தமான கோளாறுகளும் நீங்கும்.
தொற்று நோய் கிருமிகள் நம்மை அணுகாது.
பல் சம்மந்தமான வியாதிகளும் குணமடைந்து, பல் கெட்டிப்படும்.
ஆரஞ்சுப்பழம்
ஆரஞ்சில் வைட்டமின் …ஏ அதிகமாகவும், வைட்டமின் – சி, பி பி-2 உள்ளன. மேலும் இதில் சுண்ணாம்புச் சத்தும் மிகுந்து காணப்படுகிறது. பல நாட்களாக வியாதியால் பாதித்து தேறியவர்களுக்கு இதுவொரு சிறந்த இயற்கை டானிக் ஆகும்.
இரவில் தூக்கமில்லாமல் கஷ்டப்படுபவர்கள் படுக்கபோவதற்கு முன்பாக அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறுடன் சிறிது சுத்தமான தேனை சேர்த்து சாப்பிட இரவில் நன்றாக தூக்கம் வரும்.
பல் சதை வீக்கம், சொத்தை விழுந்து வலி ஏற்படுதல், பல் வலி, பல் ஈறுகளில் ரத்தக் கசிதல் இருப்பவர்கள் ஒரு வாரம் அரை டம்ளர் ஆரஞ்சு பழச்சாறை கொப்பளித்து விழுங்க உடன் நிவாரணம் பெறலாம்.
வாழைப்பழம்
மலச்சிக்கல் இருப்பவர்கள், மூலநோய் குறைபாடு இருப்பவர்கள் தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம்.
மேலும் தினமும் இரவு உணவிற்கு பின் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் நல்ல ஜீரண சக்தி உண்டாகும்.
எந்த வயதினராக இருந்தாலும், கண்பார்வை குறைய ஆரம்பித்தவுடன் அவர்களுக்கு தினசரி உணவில் செவ்வாழைப்பழம் வேளைக்கு ஒன்று வீதம் 21 நாட்களுக்கு கொடுத்து வந்தால் கண் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பிக்கும்.
திருமணமாகி பல ஆண்டுகளாகியும் கர்ப்பமே தரிக்கவில்லை என்று மனம் வருந்தி கொண்டிருக்கும் தம்பதியர்கள் செவ்வாழை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உயிர் சக்தி அணுக்கள் போதுமான அளவில் பெருகி கருத்தரிக்க வாய்ப்பாகும்.
ரஸ்தாளி வாழைப்பழத்தினை தண்ணீர் விட்டு கரைத்து மூன்று வேளை கொடுத்தால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.

Ruler can do anything, so Born to rule the Galaxy

கற்களில் ஆண் , பெண் அலி தன்மை உள்ள கற்கள்

கற்களில் ஆண் , பெண் அலி தன்மை உள்ள கற்கள் உள்ளன.
அந்தகாலத்தில் சிற்பிகளின் அறிவு அதி நுட்பமானது.
ஒரு கல்லின் ஒலியை கொண்டு சப்தசுரங்களை ஒலிக்க செய்யும் தூண்களையே நிறுவும் வல்லமை இருந்தது.
இன்றும் பல கோவில்களில் இசைத்தூண்கள் இருக்கின்றன.
லிங்கமும் அவ்வாறே கீழ்பாகம், மேல் பாகம், ஆகியவை வெவ்வேறு  தன்மையுள்ள கற்களினாலேயே நிறுவ பட்டு இருக்கும்.
அவற்றை பினைக்க சாத்தப்படும் மருந்தும்
கொம்பரக்கு பங்கு 1 .
கருங்குங்கிலியம் பங்கு 3 .
சுக்கான் பங்கு - முக்கால் .
காவிக்கல் - பங்கு 3 .
வெண்மெழுகு பங்கு 3 .
வெண்ணெய் பங்கு 3 .
செம்பஞ்சு பங்கு 3 .
சாதிலிங்கம் பங்கு - கால் . இவற்றை நெய்யில் காய்ச்சி சாத்தபட்டு அதன்மேல் நிறுவப்படும்.
(இதில் சாதி லிங்கம்  = பாதரசமும் + கந்தகமும் இனைந்த இயற்க்கை பாதரச தாது பொருள்)
இதன் பின்னனி இன்றும் இரகசியமானகவே உள்ளது. 
நிறுவ பட்ட சிவலிங்கத்தை வேண்டி வரம் பெறுவதும் இரகசியமே.
என்னாடுடைய சிவனே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
சிவ சிவ சிவ

மறந்து கூட இந்த எண்ணெயில் தீபம் எற்றாதீங்க.....!


தீபம் எற்றுவதே தனி அழகு தான்.... நம் வீட்டில் பூஜை  அறையில் விலகு ஏற்றும் போது, அதிலிருந்து  வரும் அந்த ஒளியால் பிரகாசமாக  தெரியும் அல்லவா...
ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோவில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாக செய்துள்ளனர்.
விளக்கேற்ற கூடாத எண்ணெய்கள்....
கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், பாமாயில் போன்றவைகளை கொண்டு எந்த நேரத்திலும் மறந்து கூட விளக்கு ஏற்ற வேண்டாம்..

இந்த மூன்று எண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால், மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையும் பெருக்கும் வல்லவை இந்த எண்ணெயின்  மூலம்  ஏற்றப்படும் தீபத்திற்கு உண்டு என்பதை யாரும் மறந்து விடாதீர்.....
எண்ணெயின் பலன்கள் :
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொருத்து பலன் கிடைக்கும்.
நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்.
நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்.
தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்.

இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி கிடைக்கும்.
ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணெய், நெய்,
நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய்) - அம்மன் அருள் கிடைக்கும்.
வேப்பெண்ணெய் - கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவிபெறவும்.
ஆமணக்கு எண்ணெய் - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது.

Ruler can do anything, so Born to rule the Galaxy

Wednesday, 27 September 2017

ஆலய தரிசன விதி முறைகள்


1. குளித்து தூய ஆடை அணிந்து ஆலய
தரிசனத்திற்குச் செல்ல வேண்டும்.
2. ஆலயத்திற்குள் செல்லும் முன்
கோவிலின் கோபுரத்தைப் பார்த்து வணங்க
வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
என்பர் பெரியோர்.
3. மகாசிவநாமமாகிய, “ஓம் சிவாய நம
“ என்ற
ஐந்தெழுத்து மந்திரத்தை மனதினுள்
செபித்துக்
கொண்டே கொடிமரத்தைப்
பார்த்து வணங்க வேண்டும்.
4. பின்பு விநாயகப்
பெருமானை தோப்புக்கரணம்
இட்டு வணங்க வேண்டும். இதுவும்
ஒரு வகை யோகப் பயிற்சியுமாகும்.
5. ஈச்சுவரரை தரிசிக்கும் முன்னர்
நந்திதேவரை வணங்கி ஆசி பெற்று உள்ளே
வேண்டும்.
6. பின்பு ஈச்சுவரரின் காவல்
தெய்வங்களாகிய
துவாரபாலகர்களிடம்
அனுமதி பெற்று ஈச்சுவரனை வணங்க
வேண்டும்.
7.
எம்பெருமானை வணங்கி மும்முறை வலம்
வர வேண்டும்.
8. வலம் வரும் போது குருவாகிய
தட்சிணாமூர்த்தி சுவாமிமுன்
நின்று கண்களை திறந்து அவரைப்
பார்த்து வணங்க வேண்டும்.
9.
அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராய
காட்சியளிக்கும் முருகப்
பெருமானை தரிசிக்க வேண்டும்.
10 . சண்டிகேசுவரர் சன்னதிக்குச் சென்று,
அவரிடம் ஆசி பெற வேண்டும்.
எக்காரணம் கொண்டும்,
தியானத்தில் ஈடுபட்டிருக்கும் சண்டிகேசுவரர்
சந்நிதியில் கைதட்டியோ,
ஒலி எழுப்பியோ இடையூறு செய்தல் ஆகாது

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...