Monday, 31 December 2018

🌸இல்லற தர்மம்🌸

கட்டிய மனைவியை
கடைசி வரை
கண் கலங்காமல்
காப்பவன்,
தவம் செய்ய தேவை இல்லை.

🌸

இருபத்தி ஒரு வயது வரை
அவனவன் சொந்த ஆன்ம கர்மா
செயலுக்கு வராது.

அந்த ஆன்மாவின்
ஸ்தூல தாய் தந்தை
கர்மாவே வழி நடத்தும்.

96 தத்துவங்கள்
முடிவு பெறுவது
இருபத்தி ஒரு வயதிலே.

அதன் பிறகே
அவனது
சொந்த
ஆன்ம கர்மா
செயலில் இறங்கும்.

🌸

சிவமாக இருந்தால் மட்டும்
சிரசு ஏற முடியாது.
சக்தியோடு
துணை சேர வேண்டும்.

சிரசு ஏற பல வழி...

தியானம் மூலம்
பக்தி மூலம்
ஞான மூலம்
யோக மூலம்
தீட்சை மூலம்
சிவசக்தி மூலம்
இன்னும்
எத்தனையோ மூலம்
வழி உள்ளது
சிரசு ஏற.

ஆனால்
சிறந்த மூலம்
இல்லற தர்மம்.

🌸

சிவம் பிறக்கையிலே
அவனுக்கு முன்பே
சக்தி பிறந்து விடுகிறது.

சக்தி மாறி
சிவம் சேர்ந்தாலே
பிறவியே சிக்கலே..

மன பொருத்தம்
பூமியிலே ஜெயிப்பது இல்லை.

ஆன்ம பொறுத்தமே
பிறவியை ஜெயிக்கும்.

அந்த சக்தியோடு
சிவம் சேரும் போதே
சர்வமும் சாந்தி ஆகும்.

சிவ சக்தி இடையே
ஊடலும் கூடலும்
உற்சாகம் தானே...!

🌸

ஆனால்...
சக்தியின் கண்ணீருக்கு
சிவம் காரணமானால்
அதை விட
கொடிய கர்மா
உலகில் இல்லை.

ஒருவன்
வாழ்வை ஜெயிக்க
ஆயிரம் வழி
தர்மத்தில் உள்ளது.
உண்மையே.

ஆனால்
உறவுகளை கொண்டே
உலகை வெல்வதும்
பிறவி பிணி அறுக்கவும்
ஒரு வழி உள்ளது...
உலகம் அறியாதது.

🌸

சொந்தம் என்பது
பழைய பாக்கி என
அறிந்தவனுக்கு
சொந்தம் சுமை இல்லை.

நட்பு என்பது
பழைய பகை என்பதை
பண்போடு அறிந்தவனுக்கு
பதற்றம் இல்லை.

எதிரி என்பவன்
தனது கர்மாவின்
தார்மீக கணக்கே
என தன்மையோடு
உணர்ந்தவனுக்கு
எதிரி இல்லையே..

🌸

உனது எதிரியும் நீயே!

உனது செயலே
கர்மா ஆகி
அந்த கர்மாவே
நீ எதிரி என நினைக்கும்
ஒரு உயிருள்ள சடலத்தை
உனக்கு எதிராக
பயன்படுத்துகிறது
என நீ உணரும் போது,

உன் எதிரி முகத்தில
உனது கர்மா
உனது கண்களுக்கு
தெரிய வந்தால்..

எதிரி...
உனக்கு எதிரே இருந்தாலும்
கலக்கம் தேவை படுவதில்லை.

🌸

உன்னை
உடனிருந்தே கொல்லும்
உறவும்,
உன்னோடு பிறக்கும்
உனது
பழைய கணக்காலே!

பழைய கணக்கு புரிந்தால்,
பந்த பாசம்;
சகோதரத்துவம் மீது
பற்று அற்ற பற்று
வைத்து...
பிறவி கடமை வெல்லலாம்.

கர்மாவின் கணக்கு புரிந்தால்,
உனது பக்கத்தில்
சரி பாதி அமரும் மனைவி...
யார் என்றும் புரியும்.

🌸

தாய் தந்தையை
அன்போடு
பூஜிப்பவன்
தந்தை வழி
தாய் வழி
ஏழு ஜென்ம கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்.

உறவுகளுக்கு
அவர்கள் தரும் இன்னல்கள்
பொறுத்து
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
உபகாரமாக உதவி வந்தால்,

உனது
ஏழு ஜென்ம
சமூதாய கர்மாவில்
இருந்து தப்பிக்கலாம்.

🌸

கோயில் போனாலோ
மகா குளத்தில்
குளித்தாலோ
ஒன்னும் மாறாது

சிறு இன்பம் மட்டும்
சிறிது காலம் கிடைக்கும்
அவ்வளவே..

🌸

ஆனால்.....
ஒரே ஒரு உறவை
நீ பூஜித்தால்
பிறவி பிணி
மொத்தமாக தீரும்
அது,
மனைவியே!!

மனைவியை
மகிழ்ச்சியாக வைப்பது
உலகிலேயே
சிரமம் மட்டும் அல்ல.
அது தான்
உலகிலேயே
சிறந்த
தவம்.

தவம் என்பது
சாமான்யன்களுக்கு சிரமமே.

கட்டிய மனைவியையும்
உன் மூலம்
அவள் பெற்ற பிள்ளைகளையும்
உளமாற நேசித்து
உன்னதமாக
உனது வாழ்வை
ஆனந்தமாக நீ
அர்ப்பணித்தால்
அதுவே
உலகின் சிறந்த தர்மம்
சிறந்த தவம்!

🌸

தாய் தந்தையை
வணங்கினால்...
- ராமேஸ்வரம் போக
தேவை இல்லை
பித்ரு தோஷம் நீங்க!

உறவுகளை மதித்தால்...
- கிரக தோஷம் நீங்க
திருவண்ணாமலை,
இடைக்காடரை
தேட தேவை இல்லை!
நவ கிரகமும்
சுற்ற தேவை இல்லை!

மனைவியை,
பெற்ற பிள்ளையை நேசித்தால்,
அவர்களை
ஆனந்தமாக வைத்தால்...
- கர்ம விமோஜனம் தேட
அகத்தீசனை தேடி
பாபநாசம்
போக தேவை இல்லை!

இதற்கு தான்
இல்லற வாழ்க்கை
அமைத்தான்...
நமது
முப்பாட்டன்!
ஆதி யோக வம்சம்!

🌸

#சக்தி
உணர்ந்தாலே மட்டுமே,
#சிவம்
ஜோதி ஆக ஜொலிக்கும்!

திருச்சிற்றம்பலம்!!
திருச்சிற்றம்பலம்!!

🌸

Channel N2R
N2r_NandhakumaR

Thursday, 27 December 2018

ஐயப்பன் வரலாறு !!


ஆலயம் எழுப்புதல் :

மணிகண்டன் இருக்கும் ஆலயத்தை எவ்விதம் அமைப்பது என்பது பற்றிய சிந்தனையில் ஆழ்ந்தார் மன்னன். எப்படி வடிவமைப்பது? எதன் அடிப்படையில் அமைப்பது என்று புரியாமல் குழம்பிய மனநிலையில் இருந்த பொழுது ஒரு அசரீரி ஒன்று உருவானது.

அந்த அசரீரி மூலம் மணிகண்டன் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் ஆலயமானது இவ்விடத்தில் எவ்விதம் உருவாக வேண்டும் என்றும், அந்த ஆலயத்தில் பதினெட்டு படிகளும் அமைத்தல் வேண்டும் என்று அசரீரி கூறியது.

படிகளின் விளக்கம் :

மன்னரோ... ஆலய அமைப்பை பற்றி நன்கு அறிந்து கொண்டார். இருப்பினும் அந்த பதினெட்டு படிகளின் விளக்கம் யாதென்று அந்த அசரீரியிடம் கேட்க தொடங்கினார். அசரீரியோ அந்த படிகளின் விளக்கத்தைப் பற்றி எடுத்துரைக்க துவங்கியது.

இந்த பதினெட்டு படிகள் ஒவ்வொன்றும் ஒரு பொருளைக் குறிக்கும் என தெரிவித்து அதை பற்றி கூற துவங்கியது.

முதல் படி கண்களை குறிக்கும். இது நல்லதை மட்டுமே பார்க்க வேண்டும்.

இரண்டாம் படி மூக்கை குறிக்கும். சுத்தமான காற்றை மட்டும் சுவாசிக்க வேண்டும்.

மூன்றாம் படி காதுகளை குறிக்கும். நல்ல வார்த்தைகளைக் கேட்க வேண்டும்.

நான்காம் படி வாயைக் குறிக்கும். நல்ல சொற்களைப் பேச வேண்டும்.

ரூ. 289 மதிப்புள்ள ஏயுழு மற்றும் குரூப் 4
தேர்வுக்கான பயிற்சிப் புத்தகம்

50மூ சலுகை விலையில் ரூ. 145 மட்டுமே
+ ளுர்ஐPPஐNபு ஊர்யுசுபுநு நுஓவுசுயு.

ஐந்தாம் படி உணர்வை குறிக்கும். எப்போதும் மணி மாலையை மட்டுமே தொட வேண்டும்.

ஆறில் இருந்து பதின்மூன்று படி வரை உள்ள எட்டு படிகளும், அஷ்டரகஸ் என்பதைக் குறிக்கும். இது காமம், குரோதம், பேரார்வம், மோகம், கர்வம், போட்டி, பொறாமை, தற்பெருமை ஆகியவற்றைக் குறிப்பதாகும்.

பதினான்காம் படி சாத்வீகம் என்பதையும், பதினைந்தாம் படி ராஜஸம் என்பதையும், பதினாறாம் படி தாமஸம் என்பதையும் குறிக்கும்.

இம்மூன்றும் மூன்று குணங்கள் ஆகும். சோம்பலை விட்டு விட்டு, ஒருவர் சுறுசுறுப்புடன் இருக்க வேண்டும் என்பதைக் குறிக்கக்கூடியது இந்த மூன்று படிகள் என்றும், பதினேழாம் படி வித்யா என்பதைக் குறிக்கும். வித்யா என்றால் அறிவு ஆகும்.

பதினெட்டாம் படி அவித்யா என்பதைக் குறிக்கும். அதாவது மோட்சத்தைப் பெற வேண்டும் என்பதைக் குறிக்கும்.

இந்த பதினெட்டு படிகளின் தத்துவத்தை அறிந்ததும் மிகவும் மகிழ்ச்சி கொண்டார் மன்னன். பின்பு ஆலயத்தில் எவ்விதம் கருவறையில் மணிகண்டனின் விக்கிரகத்தை அமைப்பது என்று கேட்டார்.

அதற்கு அசரீரியோ காலம் கடந்த பின் முனிவர் ஒருவரால் மணிகண்டனின் விக்கிரகம் ஆலயத்தை வந்தடையும் என்று கூறியது.

-தொடரும்...

Tuesday, 25 December 2018

திருமணத்திற்கு நாள் பார்க்கும்போது கவனத்தில் கொள்ள‍ வேண்டிய விதிகள்


1. முதல் விதி
திருமணம் மல மாதத்தில் இடம்பெறக்கூடாது. (மலமாதம் என்பது
இரண்டு அமாவாசை அல்லது இரண்டு பவுர்ணமி ஒரே மாதத்தில் வருவது.)

2. இரண்டாவது விதி
சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, தை, பங்குனி தவிர இதர மாதங்களில் திருமணம் செய்வதைத் தவிர்ப்பது நல்லது.

3. மூன்றாவது விதி
இயன்றவரை சுக்கில பட்ச காலத்திலேயே திருமணம் செய்வது நல்லது என்பது மூன்றாவது விதி.

4. நான்காவது விதி
புதன், வியாழன், வெள்ளிபோன்ற சுப ஆதிபத்தியமுடைய கிழமைகள் மிக ஏற்றவை. இதர கிழமைகள் அவ்வளவு உகந்தவை அல்ல.

…ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, மீனம் ஆகிய சுப லக்கினங்களில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும் என்பது தான்

5. ஐந்தாவது விதி
துவிதியை, திரிதியை, பஞ்சமி, ஸப்தமி, தசமி, திரயோதசி ஆகிய சுப திதிகள் தவிர இதர திதிகளை தவிர்ப்பது

6. ஆறாவது விதி
முகூர்த்த லக்கினத்துக்கு 7ம் இடம். முகூர்த்த நாளன்று சுத்தமாக இருக்க வேண்டும்.

7. ஏழாவது விதி
அக்கினி நட்சத்திரம், மிருத்யூ பஞ்சகம், கசரயோகங்கள் போன்ற காலகட்டத்தில் திருமணம் நடத்தக்கூடாது.

8. எட்டாவது விதி
திருமணத்தின் போது குரு, சுக்கிரன் போன்ற சுபகிரகங்கள் திருமண லக்கினத்துக்கும் மணமக்களின் ஜனன ராசிக்கும் எட்டாம் வீட்டில் இடம் பெற்றிருக்கக்கூடாது.

9. ஒன்பதாவது விதி
திருமணநாள் மணமக்களின் சந்திராஷ்டம தினமாக இல்லாமல் இருப்பது மிகமிக முக்கியமான விதி.

10. பத்தாம் விதி.
மணமக்களின் ஜனன நட்சத்திர நாளிலும் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 2வதாக வரும் நட்சத்திர தினங்களிலும் திருமணம் நடத்தக்கூடாது.

11. பதினொன்றாம் விதி
கடைசியாக மணமக்களின் பிறந்த தேதி அல்லது கிழமைகளிலும் கல்யாணம் பண்ணக்கூடாது.

- இவ்வளவு விஷயங்கள் தெரிந்து கொண்டபின் நீங்களே அனைத்து சுபகாரியங்களுக்கும் நல்ல நாள் பார்த்துவிடுவீர்கள் தானே. அவரவர் குலதெய்வத்தை மனதில் வேண்டிக்கொண்டு உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியுடன் நல்லதொரு நாளைக்
குறியுங்கள்.

N2R_NandhakumaR
Channel N2R

உடலுறவைப் பற்றி படித்த நீங்கள் ஏன் இவற்றை உணர்வதில்லை..?


ஒரு பசுவின் சாபம்:-புணர்வதற்குக் காளை தேவை…!
         
         உடலுறவைப் பற்றி மெத்தப் படித்த மனிதர்களாகிய நீங்கள் என்ன கருத்துகளைக் கொண்டிருக்கிறீர்கள் என எனக்குத் தெரியவில்லை.
நான் ஒரு மாடு. எனக்கு ஐந்தறிவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. என்னையும் என் இனத்தவரையும் பொறுத்தவரை, உடலுறவு கொள்வது மிகுந்த இன்பம் தரும் செயல்.
         
          பிள்ளை பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் ‘கடமை’ என்று உங்களில் சில மேதாவிகள் உடலுறவைப் புரிந்துகொள்வது எனக்குத் தெரியும்.
நான் கன்று ஈன்று நான்கு மாதங்களுக்கு மேல் கடந்துவிட்டன.

          இன்னும் சில நாட்களில் எனக்கு உடலுறவுகொள்ள வேண்டிய தேவை உருவாகிவிடும். இப்போதே எனது முலைகளில் பால் சுரப்பு குறைகிறது, முலை மடி இறுகத் துவங்கிவிட்டது, பிறப்புறுப்பு அவ்வப்போது துடிக்கத் துவங்கிவிட்டது.

           இந்த அறிகுறிகளை எல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டிய நிலையில் நானும் என்போன்ற மாடுகளும் இருக்கிறோம்.

            பால் சுரப்பு நிற்கும் காலத்தில் எங்கள் அடிவயிறு பிசையும் உணர்ச்சி அதிகரிக்கும். அவ்வாறான உணர்ச்சி நிலைகளில் எங்களை அறியாமல் அடி வயிற்றிலிருந்து கத்தத் துவங்குவோம். பசியில் கத்துவதற்கும் காமத்தில் கத்துவதற்கும் எங்கள் குரலில் வேறுபாடுகள் இருக்கும். காமம் மிகும்போது எங்கள் கண்கள் வெறித்து, வால் மயிர்கள் சிலிர்த்து, பிறப்புறுப்பு புடைத்து இருப்பதை உங்களில் எத்தனைப் பேர் பார்த்திருப்பீர்களோ தெரியவில்லை.

              சில காலம் முன்புவரை இவ்வாறான அறிகுறிகளைப் பார்த்ததும் எங்களை வளர்ப்பவர்கள் எங்களை ஏதேனும் ஒரு காளையிடன் ஓட்டிச் செல்வார்கள்.
காமம் தீரத் தீர எங்களுக்கு புணர்ச்சி கிடைக்கும்.

               காடுகளில் மேயும்போது கிடைக்கும் புணர்ச்சிகள் இன்னும் சிறப்பானவை. பசுக்களாகிய எங்கள் குரலில் எழும் காமம் மனிதர்களிடன் உதவி கேட்பதற்கானது அல்ல, காளைகளை சுண்டி இழுப்பதற்காக என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.
இப்போதெல்லாம் எங்களுக்குக் காமம் மிகுந்தால் காளைகளிடம் ஓட்டிச் செல்வதில்லை; மருத்துவர்களிடம் கூட்டிச் செல்கிறார்கள்.

            மருத்துவர்கள் மெத்தப் படித்தவர்கள், அறிவாளிகள், நாகரிகம் தெரிந்தவர்கள், விலங்கியல் பயின்றவர்கள், மேதைகள். காமம் எனும் உணர்வு, கன்று போடுவதற்காக மட்டுமே தோன்றுகிறது என்ற அதி புத்திசாலித்தனமான புரிதல் மருத்துவர்களுக்கு உள்ளது.

              மருத்துவர்கள் எங்கள் காமத்தில் இரசாயனக் கழிவுகளைக் கொட்டி அழித்துவிட்டு, விந்தணுக்களை பிறப்புறுப்பில் பீச்சிவிடுகிறார்கள்.
காளை செய்ய வேண்டிய வேலையை மருத்துவர்கள் செய்கிறார்கள்.

               ஆனாலும் காளையைப் போன்ற வேலையை அவர்கள் செய்வதில்லை, செய்யவும் முடியாது. அந்தக் காளைகளுக்கு பசுக்களின் யோனி மறுக்கப்படுகிறது. பசுக்களாகிய எங்களுக்கு காளைகளின் ஆண்குறிகள் மறுக்கப்படுகின்றன.

                இவ்வாறு ஆண்குறி,
பெண்குறிகளுக்கிடையில் கூட அறிவியலைப் புகுத்தும் நாகரிக மனிதர்களின் காலத்தில் பிறந்ததை எண்ணி நானும் என் சக மாடுகளும் அவமானமும் துக்கமும் கொள்கிறோம்.

                எங்கள் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டு, நீங்கள் மட்டும் நன்றாக வாழ்ந்துவிடலாம் என நம்புகிறீர்கள்.
ஆண்குறி நுழையாத எங்கள் யோனிகளின் சாபம், முலைக்காம்புகளில் வழியும் பாலின் வளத்தைச் சீரழித்துக்கொண்டுள்ளது.

                 காளையைப் புணர்ந்து பெற்ற கன்றுக்காகச் சுரக்கும் பால் வேறு, மருத்துவர் செலுத்தும் விந்துவில் பிறக்கும் கன்றுக்கான பால் வேறு.
பிறப்புறுப்பு மரத்துப் போன பசுக்களின் எண்ணிக்கைதான் இப்போது அதிகம்.

                அவற்றின் பாலைத்தானே அருந்திக் களிக்கிறீர்கள். அவற்றில் என்னென்ன சத்துகள் இருக்கின்றன என்று ஆய்வு செய்து முடித்தாயிற்று அல்லவா. அவற்றில் உயிர் உருவாக்கும் ஆற்றல் இருக்கிறதா எனப் பாருங்கள் மேதைகளே.

                சத்தியமாகச் சொல்கிறேன், காய்ந்த யோனிப் பசுக்களின் பாலில் உயிராற்றல் இருக்காது.

                புணர்ச்சி என்பது பிள்ளை பெறும் ‘வேலை’ அல்ல. மனங்கள் கூடிக் களித்து, உடலுக்குள் மழை பொழிந்து, கருப்பை நனைந்து, உயிர் வளரும் படைப்புத்தொழில்.
அந்தப் படைப்புத் தொழிலில் குறுக்கிட்டு விந்தணுக்களை பீச்சிவிட்டால் கன்று பிறக்கும். அந்தக் கன்று இயற்கையான உடல் வலுவுடன் வாழாது, அக்கன்றுக்காகச் சுரக்கும் பாலில் உயிர் ஆற்றல் இருக்காது.

                 இவ்வாறு பிறக்கும் கன்றுகள் யாவும் மருத்துவமனைகளையும் இரசாயன தீவனங்களையும் நம்பித்தான் வாழ்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா?

        நீங்கள் எப்படி மருத்துவமனைகளையும், இரசாயனம் கலந்த உணவுகளையும் நம்பி வாழ்கிறீர்களோ அதேபோல, செயற்கைக் கன்றுகள் வாழ்கின்றன.
                  எங்களுக்கு இழைக்கும் கொடுமைகளை உங்களுக்கும் வழங்கிக்கொண்டுதான் இருக்கிறோம்.
நீங்கள் புத்திசாலிகள் என்பதால் உங்களுக்கு இந்தத் தகவல் வந்து சேரவில்லை. இப்போதும்கூட உங்களில் பலர் இந்தத் தகவலை நம்பப்போவதில்லை. உங்களுக்கு ஆய்வறிக்கைகள் தேவை, சோதனைகள் தேவை.

            எங்களுக்கோ காளைகளின் விறைத்த குறிகள் தேவை.

             பசுக்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு ஒரு மேதாவிக் கூட்டம் காளைகளை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டுள்ளது. காளைகளுடன் மனிதர்கள் ஆடும் விளையாட்டுகளைத் தடை செய்தது அக்கூட்டம்.

              இப்போது காளைகளை வளர்ப்பது தேவையற்ற செயலாக மாறிவிட்டது.
ஒருபக்கம், விந்து ஊசிகள் மறுபக்கம் காளை விளையாட்டுகளுக்குத் தடை.

              பசு என்றால், உயிர் என்றும் பொருள். மாடு என்றால், செல்வம் என்றும் பொருள். உயிரின் ஆதி, செல்வத்தின் உருவம் நாங்கள்தான். காளை என்றால் உயிர்களின் குறியீடு. காளை மீது இறைவன் அமர்கிறான் என்பது, எல்லா உயிர்களையும் அடக்கி ஆள்பவன் என்ற விரிந்த கருத்தின் உருவகம்.

            உங்களில் மனசாட்சியை விற்றுவிடாத ஒரு சிலரை நோக்கி இக்கடிதம் வழியாக நான் உதவி கேட்கிறேன்.

             காளை மாடுகள் யாவும் இப்போது இறைச்சிக்காக விற்கப்படுகின்றன.
ஏர் இழுத்த எங்கள் காளைகள், மலைமலையாகக் குவிந்த நெல்லைப் போர் அடித்த எங்கள் காளைகள், செக்குகளை இழுத்து எண்ணெய் வளம் பெருக்கிய எங்கள் காளைகள், வண்டிகளை இழுத்து கோடானு கோடி மக்களுக்கான வாகனங்களைத் தந்த எங்கள் காளைகள், ஏறு தழுவலில் ஓடி விளையாண்டு இன்புற்ற எங்கள் காளைகள், காடுகளில் எங்கள் மீது ஏறி விழுந்து தடித்த குறிகளால் எங்கள் யோனிகளை விரித்துப் புணர்ந்து பெருமழை பெய்த எங்கள் காளைகள், இப்போது கசாப்புக்கடைகளில் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

          மாட்டிறைச்சி உண்பதும் உண்ணாததும் உங்கள் கொள்கை, உங்கள் உரிமை. பசுக்களாகிய நாங்கள் பால் கறப்பதால் தப்புகிறோம். காளைகளுக்கென வேலை ஏதும் உங்கள் நாகரிக சமூகத்தில் இல்லை. ஆகவே, ஆணாகப் பிறக்கும் எல்லா மாடுகளும் கறிக் கடைகளுக்கு மட்டுமே அனுப்பப்படுகின்றன.

             ஒருகாலத்தில், உழைத்துக் களைத்து இளைத்த மாடுகளைக் கறிக்கு வெட்டினார்கள். இப்போது கொழுத்துத் திரியும் காளைகளாகத் தேடித் தேடி வெட்டுகிறார்கள்.
          
             உங்கள் சமூகத்தின் மேதைகளுக்கு பசுக்கள் வேண்டும், காளைகள் வேண்டாம். மாடுகளாகிய எங்களுக்கோ புணர்வதற்குக் காளைகள் வேண்டும். இதில் ஏதேனும் தவறு இருப்பதாக நினைக்கிறீர்களா?
இன்னும் சில நாட்களில் எனக்குப் புணர்ச்சி தேவைப்படும்.
            
              நான் வாழும் ஊரில் காளைகள் இல்லை, மருத்துவர்கள் இருக்கிறார்கள். எனக்குக் காளையுடன் புணரும் வேட்கை எழுகிறது, மருத்துவர்களின் விந்து ஊசிகள் மீது வெறுப்பு மிகுந்துகொண்டுள்ளது.

              என்னை வளர்ப்பவர் என்னிடம் இது பற்றிப் பேசினார். எ்ப்படியாவது காளை தேடித் தருவதாகக் கூறியுள்ளார். இதற்காக அவர் இறையிடம் வேண்டிக் கொண்டும் இருக்கிறார்.

                என்னைப் புணர்வதற்காகவேனும் ஒரு காளை மாட்டை விலைக்கு வாங்கவும் அவர் தயாராக இருக்கிறார்.
என்னைப் போன்ற பசுக்கள் ஏராளமாக உள்ளனர். அவர்களுக்கெல்லாம் புணரும் உரிமை வேண்டும் என்பதற்காக இக்கடிதத்தின் வழியாக நான் உரையாடுகிறேன்.

               இந்தப் பூமியில் மனிதர்கள் இல்லாத காலம் மிக அதிகம். மாடுகள் இல்லாத காலம் மிகக் குறைவு. நேரடியாகச் சொல்வதானால், பூமிக்கு மனிதர்களைவிட மாடுகளை அதிகம் பிடிக்கும்.

               உங்கள் மலம் கூட புழுக்களுக்கு உணவாகாத வகையில், இரசாயனத்தில் கழுவி புதைக்கிறீர்கள். எங்கள் சாணத்தில் ஒவ்வொரு நாளும் கோடானு கோடி புழுக்கள் வாழ்ந்து மடிகின்றன.
புணராத கோழிகளிலிருந்து முட்டைகள் பெறுகிறீர்கள், மலட்டு விதைகளைத் தூவி பழங்கள் அறுக்கிறீர்கள், விதையற்ற பயிர்களை உணவாகக் கொள்கிறீர்கள்.

              உங்களோடு பழகும் எல்லா உயிர்களிடமிருந்தும் புணர்ச்சி உரிமையைப் பறித்துக்கொண்டீர்கள்.   எல்லா உயிரினங்களின் அடி வயிற்று சூட்டிலிருந்து கூறுகிறேன், ‘இதற்கெல்லாம் நீங்கள் அனுபவிப்பீர்கள்’

இப்போதும் அனுபவித்துக்கொண்டுதானிருக்கிறீர்கள்.

             படும்பாடுகளுக்கெல்லாம் நாம் செய்த பாவம்தான் காரணம் என்று உணராமல், அனுபவிக்கிறீர்கள்.

      "இப்போதும் உங்களால் மாற முடியும்."

       மலட்டுத் தன்மை கொண்ட எல்லா உணவுகளையும் நிராகரியுங்கள். விந்து ஊசிகளுக்கு எதிராகப் பேசுங்கள், செயலாற்றுங்கள். காளைகளைப் பாதுகாக்க ஏதேனும் செய்யுங்கள்.

         பசுக்களை மட்டும் பாதுகாப்போரின் எண்ணிக்கை உயர்கிறது, காளைகளைக் காப்பவர்கள் குறைந்துகொண்டிருக்கிறார்கள். காளைகளைப் பாதுகாப்பதற்கென கூடிப் பணியாற்றுங்கள்.

         உங்கள் புள்ளிவிவரங்களை விட எங்கள் உணர்ச்சிக் குமுறலுக்கு வலிமை அதிகம்.
நாங்கள் அப்படி என்ன பெரிதாகக் கேட்கிறோம்? எங்களுடன் புணர்வதற்குக் காளை வேண்டும் என்கிறோம். கேவலம், நாங்கள் மாடுகள்தானே!
(இந்த பசுவின் கேள்வி நியாயம்தானே ? )…

N2R_NandhakumaR
Channel N2R

இருமுடி கட்டுதலும் அதற்கு தேவையான பொருட்களும் !! இருமுடி கட்டுதலும் அதற்கு தேவையான பொருட்களும் !!

🔥 ஐயப்பன் என்றால் அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே விஷயம் இருமுடி. ஐயப்பன் வழிபாட்டில் இருமுடி மிகவும் புனிதமானது. தனது உடலையும், உள்ளத்தையும் தூய்மையாக்கி மனம் உருகி ஐயப்பனை வேண்டும் பக்தர்கள், அய்யனின் திருமேனி அபிஷேகத்துக்கு நெய்யையும், பூஜை பொருட்களையும் கட்டி சுமந்து செல்வது தான் இருமுடி. இருமுடியை கோவிலில் வைத்தும் கட்டலாம். வீடுகளில் வைத்தும் கட்டலாம்.

🔥 வீடுகளில் வைத்து கட்டும் போது சபரிவாசனே அங்கு வாசம் செய்வான் என்று கூறுவார்கள். ஐயப்பனின் அருள் ஒளி வீசும். இருமுடி கட்டும் நாளில் வீட்டை சுத்தப்படுத்தி ஐயப்பன் படத்தை மலர்களால் அலங்காரம் செய்து படத்தின் முன்பு நெய்விளக்கேற்றி வைக்க வேண்டும். இருமுடி கட்டுவதற்காக வரும் குருசாமியை வாசலில் பாதபூஜை செய்து வீட்டிற்குள் அழைத்து வர வேண்டும்.

🔥 குருசாமி வந்ததும் பூஜைகளை தொடங்குவார். அப்போது ஐயப்பன் பக்தர்கள் பஜனை பாடல்களை பாடுவார்கள். இருமுடி கட்டும் பக்தர் குருசாமியின் அருகில் ஐயப்பன் படத்திற்கு முன்பு அமர்ந்து இருக்க வேண்டும். தேங்காயில் நெய்நிறைக்க தொடங்கும் போது நமது பிரார்த்தனைகளோடு சாமியே சரணம் என்றபடி தேங்காயில் நெய்யை நிறைக்க வேண்டும்.

🔥 நெய் நிறைந்ததும் அதை மூடி சந்தனம், குங்குமம் பூசி ஒரு சிறிய பையில் வைப்பார்கள். அதற்குள் காணிக்கை பணமும், அன்னதானத்துக்கு சிறிதளவு அரிசியும் வைக்கப்பட்டு இருக்கும். வீட்டில் யாராவது நெய் நிறைக்க விரும்பினால் அவர்களும் நெய் நிறைத்து கொள்ளலாம். மற்றொரு சிறு பையில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டிருக்கும்.

🔥 அதில் மஞ்சள் பொடி, பன்னீர், தேன், சந்தன வில்லைகள், குங்குமம், விபூதி, ஊது பத்தி, சாம்பிராணி, கற்பூரம், பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, முந்திரி, கல்கண்டு, அச்சு வெல்லம், அவல், பொரி, கடலை, மிளகு, கல் உப்பு, எலுமிச்சம் பழம், வெற்றிலை பாக்கு, பாசிபருப்பு, வளையல், கண்ணாடி, சீப்பு, ரவிக்கை துணி ஆகியவை இடம் பெற்றிருக்கும்.

🔥 முன் முடியில் (இருமுடியில் முன்பக்கம் இருக்கும் கட்டு) நெய், தேங்காய் மற்றும் பூஜை பொருட்கள் வைத்து கட்டப்படும். பின் முடிக்குள் சபரிமலை தரிசனம் முடிந்து திரும்பும் போது பதினெட்டாம் படி அருகில் உடைக்கவும், வீட்டின் முன்பு உடைக்கவும் இரண்டு தேங்காய்களும் மற்றும் மாலை அணிந்தவருக்குத் தேவையான பொருட்களும் வைத்து கட்டப்பட்டிருக்கும்.

🔥 வசதி வாய்ப்புகள் இல்லாத காலத்தில் பின்முடியில் சமையலுக்கு தேவையான அரிசி மற்றும் வழியில் சாப்பிடுவதற்கு தேவையான தின்பண்டங்களையும் சுமந்து சென்றிருக்கிறார்கள். இருமுடி கட்டி முடித்ததும் வீட்டில் நம்மால் முடிந்த அளவு அன்னதானம் வழங்கலாம். இருமுடி கட்டை குருசாமி தூக்கி நமது தலையில் வைக்கும் போது அவரது பாதங்களை தொட்டு வணங்க வேண்டும்.

🔥 தலையில் இருமுடியை சுமந்ததும் வீட்டு வாசலில் தேங்காய் உடைத்து விட்டு திரும்பி பார்க்காமல் தலையில் இருமுடி கட்டும், மனதில் ஐயப்பன் நினைவுமாக புனித யாத்திரையை தொடங்க வேண்டும்.

🔥 இதனால் ஆண்டு தோறும் வீடுகளில் சகல ஐஸ்வரியமும் அதிகரித்து ஆண்டவனின் அருளும் நிறைகிறது. கோவில்களில் வைத்தும் இருமுடி கட்டி புறப்படலாம்.

🔥 பள்ளிக்கட்டு சபரிமலைக்கு... யாரைக் காண.. சுவாமியைக் காண... என்ற சரண கோஷத்தோடு மலை ஏறுவோம்! வாழ்வில் வளம் பெறுவோம்!

N2R_NandhakumaR
Channel N2R

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...