Wednesday 5 September 2018

நல்ல பாம்பு கடி


                                            நல்லபாம்பின் விஷமானது மணிதர்களின் நரம்பு மண்டலத்தையும், சுவாச மண்டலத்தையும் பாதிக்கக்கூடியது. பாம்புக்கடியில் பாம்பு செலுத்தப்படும் விஷத்தை பொறுத்து அதன் ஆபத்து அதிகமாகிறது. சில தருணங்களில் பாம்பு கடிக்கும் பொழுது விஷத்தை செலுத்தாமலும் விட்டு விடும், இதனை பொய்க்கடி எனலாம்,  இயற்கையில் பாம்புகளுக்கு விஷம் படைக்கப்பட்டது அதன் இரையை வேட்டையாடி கொன்று விழுங்குவதற்காக மட்டுமே. பாம்பின் விஷத்தில் புரோட்டின்களும், என்சைம்களும் மற்றும் பல வேதிப்பொருட்களும் அடங்கியுள்ளன. பாம்புகள் தேவையில்லாமல் விஷத்தை வெளியேற்ற சற்று யோசிக்கும். அதற்கு ஆபத்து என்று உணரும் போது மட்டுமே கடிக்கும். எந்த ஒரு பாம்பும் யாரையும் தேடி வந்து கடிப்பது இல்லை. பாம்புக்கடி என்பது ஓர் எதிர்பாராமல் நடக்கும் விபத்து மட்டுமே. நாம் பாம்புகளை தாக்க முற்படும் பொழுதோ அல்லது அவற்றை கால்களால் தெரியாமல் மிதிக்கும் பொழுதோ பாம்பு வலியினால் அதிக விஷத்தை செலுத்திவிடுகின்றது, விரைவில் அரசு மருத்துவமனையை அணுகினால் விரைவில் உயிர் காப்பாற்றபடலாம். நல்லபாம்பின் விஷம் உடலில் பரவியவுடன் நரம்புகளின் இணைப்புகளில் இருந்து மூளைக்கு செல்லும் தகவல்கள் துண்டிக்கப்படுகின்றன.  நல்லபாம்பு கடித்த பின்பு நம் உடலில் சில மாற்றங்கள் ஏற்படும் அவை,  கடிபட்டவுடன் அதிக வலி, வீக்கம் மற்றும் வாந்தி, குமட்டல், மயக்கம், நாக்கு தடித்தல், பேச்சு குளறுதல், பார்வை மங்குதல், மூச்சு விடுவதில் சிரமம், இன்னும் சில பிரச்சனைகள் ஏற்படும். நாம் காலம் தாழ்த்தாமல் பாம்பு கடிபட்டவரை மருத்துவமனை அழைத்துச் சென்றால் பாம்பு கடி பட்டவரை காப்பாற்றி விடலாம்.

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...