Wednesday 12 August 2015

மூதாதையர் மூடநம்பிக்கையால் சிலைகளை வைக்கவில்லை தூய காற்று தரும் மரங்களை பாதுகாக்கவே சிலைகளை வைத்தார்கள்

காற்றோட்டம் பெற .....
மரங்களுக்கிடையில் ....
நடந்துசென்றேன் .....
மரங்கள் என்னோடு ....
பேசத்தொடங்கின .....!!!


வேப்பமரம் ....!
ஏய் இனியவரே .....
எனக்கு கீழ் ஒரு அம்மன் ....
உருவத்தை வைத்துவிட்டு ....
செல் என்றது - திகைத்தேன் ....
நான் என்ன ஞானியா ...?
மந்திர வாதியா ....?
சிலையை உடன் வரவழைக்க ....?


அரசமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பிள்ளையார் ....
சிலையொன்றை வைத்துவிட்டு ...
செல் என்றது - புன்னகைத்துவிட்டு ....
மேலும் சென்றேன் .....!!!


ஆலமரம் .....!
ஏய் இனியவரே ....
எனக்கு கீழ் ஒரு பைரவர் ...
சூலத்தை வைத்துவிட்டு ...
செல் என்றது - ஒரு பெரு மூச்சை ...
ஆழமாக எடுத்துவிட்டு சென்றேன் ....


அடுத்த மரம் என்னிடம் .....
எதையும் கேட்கவில்லை .....
வியப்படைந்தேன் - ஏய் மரமே ....
உனக்கு கடவுள் நம்பிக்கை ....
இல்லையா ...? ஏன் எதையும் ....
கேட்கவில்லை என்று நான் ...
வினாவினேன் .....!!!


போங்க இனியவரே ....
அவைகளெல்லாம் ஞானத்தால் ....
சிலைகளை கேட்கவில்லை ....
தம்மை வெட்டி  விட கூடாது ...
என்ற பயத்தால் கேட்கிறார்கள் ....
அப்படியென்றாலும் தம்மை ....
வெட்டும் அளவு குறையுமே ....
அற்ப ஆசை தான் இனியவரே .....!!!


அப்போ உன் நிலை ....?
என்னை விலைபேசி விட்டார்கள் ....
இன்று நான் இறக்கபோகிறேன் ....
எதையும் நான் கேட்டு பயனில்லை .....
முடிந்தால் இனியவரே ....
அவர்களை காப்பாற்றுங்கள் ....
அவர்கள் விரும்பியதை செய்யுங்கள் ...!!!


இப்போதுதான் புரிந்தது .....
மூதாதையர் மூடநம்பிக்கையால் ....
சிலைகளை வைக்கவில்லை ....
தூய காற்று தரும் மரங்களை ....
பாதுகாக்கவே சிலைகளை ...
வைத்தார்கள் - அன்றைய கருவி ....
அன்றைய விழிப்புணர்வு இவைகளே ....!


இன்றைய நவீன உலகில் வாழும் ...
மேதாவிகள் இதனை மூடநம்பிக்கை ....
அறிவிலிகள் என்கிறார்கள் ....!!!


Ruler can do anything, so Born to rule the Galaxy

No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...