Saturday 5 November 2011

பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்கமுடியாதது

பெட்ரோல் விலை உயர்வு தவிர்க்கமுடியாதது : ஐ.ஓ.சி

நவம்பர் 04,2011
புதுடில்லி : பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 1.82 என்ற அளவிற்கு நேற்று நள்ளிரவு முதல் உயர்ந்துள்ள நிலையில், இந்த விலையுயர்வு தவிர்க்க முடியாதது என்று நாட்டின் முன்னணி எரிபொருள் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறி்த்து, பத்திரிகையாளர்களை சந்தித்த இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவன தலைவர் பி எஸ் பியூட்டோலா கூறியதாவது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு தொடர்ந்து அதிகரி்த்து வருவது மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவது உள்ளிட்ட காரணங்களினாலேயே இந்த விலை உயர்வு என்று அவர் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக,, பெட்ரோலின் விலை , செப்டம்பர் 16ம் தேதி அன்று உயர்த்தப்பட்டது. அப்போது, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 46.29 என்ற அளவில் இருந்தது. ஆனால், இன்றைய நிலையில், டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 49.40 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் ஒட்டுமொத்த பெட்ரோல் தேவையில், நாம் 79 சதவீதம் இறக்குமதியை சார்ந்துள்ளோம். கடந்த நிலையைக் கணக்கிடும் போது, அமெரிக்க டாலர் அளவில் பெ‌ட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.49 அதிகரித்துள்ளது. ஆனால், தற்போது, லிட்டருக்கு ரூ. 1.80 என்ற அளவில் மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வி‌லை அதிகரிப்பு மூலம், எண்ணெய் நிறுவனங்களுக்கு லாபம் கிடைப்பதாக கூறுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது ஆகும். சர்வதேச சந்தையில், நா‌ளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக, கச்சா எண்ணெய் விலையில் மாற்றம் இருந்து கொண்டே வருகிறது. அதன் அடிப்படையில், தாங்கள் பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் விலையை ஏற்றுவதில்லை. அவ்வாறு நாங்கள் இந்நேரம் ஏற்றிருந்தால், லிட்டருக்கு ரூ. 2.50 என்ற அளவில் விலை உயர்வு இருந்திருக்கும் என்று அவர் கூறினார்.




No comments:

Post a Comment

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...