Tuesday, 16 October 2018

காமத்தை கடந்து வாழ்வில் பேரின்பம் அடைய இதோ ஒரு வழி...!


   காமத்தை கை விடுங்கள் அப்போதுதான் அப்போது மட்டும் தான் கடவுள் தரிசனத்தை பெற முடியும் என்று பெரியவர்கள் பல காலமாக சொல்லி வருகிறார்கள் ஞானிகளும் சித்தர்களும் கூட இதை தான் சொல்கிறார்கள் நமது அன்றாட வாழ்வில் அனுபவத்தில் காமம் என்ற பாலுணர்ச்சி புனிதமான சிந்தனைகள் நமக்குள் ஏற்படாமல் தடை செய்வதை காண்கிறோம் 
நிறையே பேர் சொல்கிறார்கள் மனம் நிம்மதியில்லாமல் தவிர்க்கிறது தரையில் விழுந்த மீனை போல் துன்பத்தால் துடிக்கிறது அதை மாற்ற கடவுளை வணங்குகிறேன் ஒரு நிமிடம் மட்டும் ஏற்படுகின்ற இறை சிந்தனை நிம்மதியை தருகிறது மூச்சி விட காற்றியில்லாமல் தவித்தவனுக்கு தென்றல் காற்று வந்து தடவி கொடுத்தது போல் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பேரானந்தம் இதயத்தை சூழ்கிறது ஆனால் அது ஒரே ஒரு நிமிடம் மட்டும் தான் அது நிலைக்கிறது தவிர அடுத்த நிமிடமே மனம் காம சிந்தனையில் விழுந்து விடுகிறது குளித்து முடித்தவன் கூவத்தில் விழுவது போல் சிந்தனை எங்கும் சாக்கடை நாற்றம் வீசுகிறது பழையப்படி துயர மேகங்கள் சூழ்ந்து இதைய வீட்டை இடி இடித்து மின்னல் வெட்டி நடு நடுங்க செய்கிறது ஆகவே காமத்தை ஒழிக்காத வரை மனிதனுக்கு கதி மோட்சம் இல்லை என்று பேசுவதை அன்றாடம் கேட்கிறோம்
காமம் என்பது இவ்வளவு கொடியது என்று மனிதனுக்கு தெரிந்திருந்தாலும் கூட அவன் ஏன் மீண்டும் மீண்டும் அதையே நாடுகிறான் எத்தனை பேர் பிடித்து தடுத்தாலும் அதன் மீதே ஏன் போய் விழுகிறான் சிலர் சொல்கிறார்கள் காம உணர்வு என்பது மலம் கழிப்பது போல சிறுநீர் கழிப்பது போல ஒரு இயற்கை உந்துதல் தான் பெற்ற பிள்ளையை பறிகொடுத்தால் கதறி அழுவது எப்படி இயற்கையானதோ அப்படி தான் காமமும் அதை ஆபாசம் என்று நினைப்பதும் புனித வாழ்வுக்கு தடை என்று கருதுவதும் முட்டாள் தனமாகும் என்கிறார்கள் 
இது சரியான கருத்து என்பதில் மாற்றமில்லை கடவுள் மனிதனுக்கு கொடுத்திருக்கும் எந்த உணர்வுகளையும் தவருதலானது என்றோ தேவையற்றது என்றோ யாரும் சொல்ல முடியாது அதே நேரம் அந்த உணர்வுகள் அதிகப்படியாக மனிதனை ஆட்டுவிக்கும் போது தான் சிக்கல்களே ஏற்படுகின்றன மல ஜலம் கழிப்பது கூட ஒரு வரையறைக்குள் இருக்க வேண்டும் அதிகப்படியாகப் போனால் அது நோயாகி விடும் காமம் என்பதும் அப்படி தான் வரையறைகளை தாண்டும் போது மனிதனை குப்புற தள்ளிவிடுகிறது 
தலையை நுழைக்க விட்டால் ஒட்டகம் வீட்டுக் கூரையையே தின்றுவிடும் என்பார்கள் காம உணர்வும் சிறிய நெருப்பு துண்டாக மனதிற்குள் விழுந்து உடல் முழுவதையுமே பற்றி எரிய செய்து விடுகிறது இந்த நெருப்பில் தர்மம் ஒழுக்கம் தொண்டு போன்ற நற்பண்புகள் எல்லாம் சாம்பலாகி விடுகிறது ஆனாலும் மனது மீண்டும் மீண்டும் அந்த நெருப்பில் குளிர்காய விரும்புகிறதே அது ஏன் என்று நமது அறிவு மனம் விடாமல் கேட்கிறது 
பொதுவாக மனிதர்களாகிய நாம் ஒன்று நடந்து முடிந்ததை பற்றி சிந்தித்துக் கொண்டிருப்போம் அல்லது நடக்கப் போவதை பற்றி கற்பனை தேரில் பறந்து கொண்டிருப்போம் நிகழ்காலத்தில் அதாவது இந்த வினாடியில் நாம் வாழுகின்ற வாழ்க்கையை மனம் ரசனையுடன் நோக்காது இதனால் தான் நாம் துன்பம் அடைந்து கொண்டே இருக்கிறோம் ஆனால் காம வசப்படும் போது காம உறவில் இடுப்படும் போது நமது மனம் கடந்த காலத்தை மறக்கிறது எதிர்காலத்தை பற்றிய சிந்தனையை கை விடுகிறது நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கிறது இப்படி நிகழ்காலத்தில் மனமானது நிலைக்கும் போது தான் நமக்குள் மறைந்திருக்கும் ஆனந்த ஊற்றின் கதவுகள் திறந்து கொள்கிறது 
நமக்குள் இருக்கும் ஆனந்த ஊற்று திறக்கப்பட்டு அதன் ஒளிவெள்ளம் நம்மை குளிப்பாட்டுவது சில வினாடிகள் தான் ஒரு நீர்குமிழி போல கண நேரத்தில் தோன்றி கண நேரத்தில் மறைந்து விடுகிறது அதற்கு காரணம் நம் புலன்களும் மனதும் உடனடியாக நிகழ்காலத்தை விட்டு விட்டு மற்ற காலங்களில் சவாரி செய்ய துவங்கி விடுகிறது இந்த உண்மை நமக்கு தெரிவதில்லை அதனால் தான் காமம் என்பது அளப்பரிய சந்தோசத்தை தரக்குடியது என்று மீண்டும் மீண்டும் ஒரு விட்டில் பூச்சி போல அதையே நாடி சென்று வீழ்ந்து கிடக்கிறோம் காமம் மட்டுமல்ல எந்த செயலை நாம் செய்தாலும் அதில் நமது மனது ஆழ்ந்து விடுமானால் அதுவே நாம் தேடுகின்ற இன்பத்தை தரவல்லது இந்த உண்மை பலருக்கு தெரிவதில்லை அதனால் தான் காம சேற்றில் காலமெல்லாம் மூழ்கிகிடக்கிறார்கள் 
காமத்தில் கிடைகின்ற சுகமானது வெளிப்பொருளால் அல்லது மற்ற பாலின உடலால் உறவால் கிடைப்பது இல்லை அது நமக்குள்ளேயே மறைந்து கிடக்கும் மகிழ்ச்சிதான் என்பதை பலர் அறிந்து கொண்டால் நிறைய பேர் காம விலங்குகளை உடைத்தெறிந்து விடுதலை பெறுவார்கள் இந்த ரகசியம் பலருக்கு தெரியாமல் தான் காமத்தை அடக்க பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள் 
காம உணர்வை அடக்க முயல்கின்ற எவரும் இதுவரை வெற்றி பெற்றதில்லை என்பது மறுக்க முடியாத மறைக்க முடியாத உண்மையாகும் மனித குணங்களின் இயற்கை சுபாவம் என்னவென்றால் எந்த உணர்வை அடக்க அழிக்க முயற்சி செய்கிறிர்களோ அந்த உணர்வு பல மடங்கு வேகத்தோடு பதுங்கி இருந்து சீறி பாயும் என்பது தான் உண்மையாகும் எனவே காம உணர்வை அடக்க முயன்றால் அது அபாயத்தை தான் ஏற்படுத்தும் 
காமத்தை அடக்க முடியாது என்றால் அதிலிருந்து விடுதலை பெறுவது எப்படி புலன்களை கட்டுக்குள் கொண்டுவந்தால் தானே இறை காட்சி பெற முடியுமென்று வள்ளுவரும் பதஞ்சலி மகரீஷியும் சொல்கிறார்கள் கட்டுப்படுத்தாமல் கடவுள் தரிசனத்தை பெறாமல் மானிட பிறப்பை வீணடித்துக் கொள்வாதா என்று சிலர் பதறக் கூடும் 
அவர்கள் ஒரு நிஜத்தை நிச்சயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் நீங்கள் இதுவரை செய்கின்ற தியானமும் பூஜையும் அது நிகழ்கின்ற காலத்தில் காம சிந்தனைகளால் தாக்கப்படாமல் இருக்கிறதா உறுதியாக இந்த கேள்விக்கு ஆமாம் என்ற பதிலை மனசாட்சிக்கு விரோதமில்லாமல் உங்களால் தரமுடியுமா முடியாது என்றே நான் நினைக்கிறேன் காரணம் பலரின் பூஜையும் தியானமும் காம எண்ணங்களால் தடை படுகிறது என்பதே நிதர்சனமாகும் 
எனவே காமத்தை அடக்கும் எண்ணத்தையே முற்றிலும் விட்டுவிடுங்கள் தனிமையில் உட்க்காருங்கள் உங்கள் மனதில் எழும்புகின்ற கட்டுப்பாடற்ற காம சிந்தனையை அதன் போக்கிலேயே விட்டு விட்டு உங்களுக்குள் நீங்கள் தனித்திருந்து அந்த சிந்தனை எதுவரை போகிறது என்று கண்காணியுங்கள் எதற்கும் ஒரு எல்லை உண்டு ஒரு முடிவு உண்டு நம் மனதிற்குள் எழும்புகின்ற காம விகாரங்கள் ஒரு நிலையில் செயல் படாமல் நின்று விடும் 
அதாவது சிந்தனை ஓட்டம் அடுத்த கட்டத்தை தொட முடியாமல் ஆடாமல் அசையாமல் நகர முடியாமல் நின்று விடும் அப்போது உங்கள் மனதை பிடியுங்கள் அடம்பிடிக்காமல் சண்டித்தனம் செய்யாமல் நீங்கள இழுத்த இழுப்புக்கு மனம் கூடவே வரும் அந்த மனதை தரை விரிப்பாகப் போட்டு தியானம் செய்ய பழகுங்கள் ஆரம்பத்தில் சற்று சிரமமாகத்தான் இருக்கும் ஆனால் போகப் போக எல்லாம் சுலபமாகி விடும் 
தியானம் செய்யும் போதே காம எண்ணம் ஆட்டிப்படைக்கிறதே அதை தடுக்காமல் தியானத்தில் எப்படி அமர முடியும் என்று சிலர் கேட்பது காதில் விழுகிறது உங்கள் மனது காமத்தை எண்ணுகிறதா அதை பற்றி கவலை படாதிர்கள் ஐயோ இப்படி நான் கீழ் பிறவியாக இருக்கிறேனே என்று வருத்தப்படாதிர்கள் ஞானிகளுக்கும் யோகிகளுக்கும் கூட ஆரம்ப காலம் இப்படித் தான் இருக்கும் காலம் கனியும் போது தான் எல்லாம் கூடி வரும் எனவே மனதுக்குள் ஓடும் காம வண்டியை ஓடும வரை விட்டு விட்டு அதை கவனிக்காமல் சட்டை செய்யாமல் தியானம் செய்யுங்கள் ஓடி ஓடி அந்த வண்டி ஒரு நாள் அச்சாணி கழன்று விழுந்து விடும் திரும்பவும் அது ஓடவே ஓடாது 
அதாவது காம எண்ணத்தை அடக்க முயல வேண்டாம் அதில் மனிதர்களால் வெற்றி பெற இயலாது காமத்தை கடக்க முயலுங்கள் அதுவே அதை சுலபமாக வாகை சூடும் வழியாகும் என்று சொல்கிறேன் ஒரு குழந்தையை தொட்டால் உங்களுக்கு என்ன உணர்வு வருகிறதோ அதே உணர்வு ஒரு குமரியை தொட்டாலும் வர வேண்டுமென்றால் காமத்தை கடக்க முயற்சித்தால் தான் நடக்கும் காமத்தை கடக்க முயல்வது கடினமான ஒன்றல்ல செய்ய வேண்டுமென்ற மன உறுதி இருப்பவர்கள் நிச்சயம் செய்து முடித்து விடலாம்
காமத்தை கடக்க ஒரே வழி அதை அலச்சியம் செய்ய வேண்டும் அதாவது மனதை நிகழ்காலத்தில் வைக்க பழகுங்கள் குளிக்கும் போது அலுவலக சிந்தனையோ பூஜை அறையில் மளிகைக்கடை சிந்தனையோ வேண்டாம் அந்த அந்த நேரத்தில் அந்த அந்த செயலில் மட்டுமே சிந்தனையை வைக்க பழகுங்கள் புளியம் பழமும் தோடும் கனிய கனிய வேறு வேறாக பிரிவது போல் மனதிலிருந்து காம சிந்தனை தானாக விலகி விடும் 
குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்று சொல்வார்கள் அதே போல தான் காமமும் தன்னை கண்டு பயப்படுகின்றவனை துரத்திக் கொண்டே ஓடும் அதை ஓட விட்டுவிட்டு ஓரமாக நில்லுங்கள் காம சிந்தனை மாறி இயல்பான சிந்தனையில் ஐக்கியமாகி வாழ்க்கையில் பேரின்பமடைவீர்கள்.
N2R
ENN2AAR
N2R_NandhakumaR
நந்தகுமார் கிருஷ்ணகவுண்டர்

Thursday, 27 September 2018

ராசிகளின் குணங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் முறை


------------------------------------------------------------------------------------
ராசிகளின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்வதற்காக ஜோதிடத்தில் ராசி உருவங்கள் ஒரு வகையான சங்கேத குறியீடுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக, மேச ராசியின் குணாதிசயங்கள் ஆடுகளின் குணாதிசயங்களை ஒத்திருக்கும்.இது போல் அந்தந்த ராசியின் குணாதிசயங்கள் அந்தந்த ராசிக்குரிய உருவத்திற்குள் மறைந்திருக்கிறது
-
மேசம்
மேச ராசியின் உருவம் ஆடு ஆகும்.எனவே ஆடுகளின் நடவடிக்கைகளை உற்று நோக்கினால் மேச ராசியின் குணாதிசயங்களை எளிதில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளலாம். ஆட்டு மந்தையைக்கவனியுங்கள்,அங்கே குறைந்தது இரண்டு ஆடுகள் ஒன்றோடு ஒன்று முட்டிக்கொண்டிருக்கும். இதன் காரணத்தினாலேயே மேச ராசிக்காரர்களை கலகக்காரர்கள் எனக்குறிப்பிடுகிறார்கள். ஆட்டுக்கு பயம் என்றால் என்னவென்றே தெரியாது,அவை நஞ்சிலும் நான்கு வாய் தின்னும். இதனால்தான் மேச ராசிக்காரர்களை தைரியசாலிகள் என்று கூறுகிறார்கள். ஆடுகள் ஒரு மரத்தின் மீதோ அல்லது ஒரு கட்டிடத்தின் மீதோ எளிதில் ஏறிவிடும்,ஆனால் இறங்கத்தெரியாது,இதனால் மேச ராசிக்காரர்களை விவேகமில்லாதவர்கள் என குறிப்பிடுகிறார்கள். ஆடுகளுக்கு இனபெருக்க காலம் என தனியாக எதுவும் கிடையாது. மனிதர்களைப்போல் எந்த பருவக்காலத்திலும் அவை இன விருத்தியில் ஈடுபடும். இதனால் ஆட்டு மந்தையில் தினமும் உடல் உறவுக்காட்சிகளைக்காணலாம். இதனால் மேச ராசிக்காரர்களுக்கு காம உணர்ச்சி அதிகம் எனக்கூறப்படுகிறது
-.
ரிசபம்
ரிசப ராசியின் உருவம் மாடு ஆகும். மாடுகளை கடினமான வேலைகளை செய்வதற்கு நாம் பயன்படுத்துகிறோம், அதாவது நமக்கு பயன்படும் வகையில் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம்.இதனால் ரிசப ராசியினர் பிறருக்கு கீழ்படிந்து நடப்பர் என்றும்,நல்ல உழைப்பாளிகள் எனக்கூறப்படுகிறது. மாடுகளை ஒரு குறிப்பிட்ட வேலைக்கு பழக்கிவிட்டால் அவை தன் பழக்கத்தை எளிதில் மாற்றிக்கொள்ளாது,உதாரணத்திற்கு செக்கு மாடுகளைக்கூரலாம். இதனால் ரிசப ராசியினர் மாற்றங்களை விரும்பாதவர் எனப்படுகிறார்கள். மாடுகளுக்கும் இனபெருக்க காலம் என தனியாக எதுவும் கிடையாது. மனிதர்களைப்போல் எந்த பருவக்காலத்திலும் அவை இன விருத்தியில் ஈடுபடும். இதனால் மாட்டு மந்தையில் தினமும் உடல் உறவுக்காட்சிகளைக்காணலாம். இதனால் ரிசப ராசிக்காரர்களுக்கும் காம உணர்ச்சி அதிகம் எனக்கூறப்படுகிறது
-.
மிதுனம்
மிதுன ராசியின் உருவம் இரட்டையர் ஆகும்.அதாவது ஒரு ஆணும், ஒரு பெண்ணும் சேர்ந்திருப்பது போன்ற உருவ அமைப்பாகும். அதாவது சக மனிதர்களோடு சேர்ந்திருப்பதை பெரிதும் விரும்புபவர்கள் மிதுன ராசியினர். மனிதர்கள் சந்திக்கும்போது அவர்களுக்குள் பேச்சுவார்த்தை நடக்கும். மிதுன ராசிக்காரர்கள் நட்பு விரும்பிகள்,தனிமையில் அவர்களால் இருக்க முடியாது. எப்பொழுதும் யாரிடமாவது பேசிக்கொண்டிருப்பதையே விரும்புவார்கள். இவர்கள் நல்ல தூதுவர்களாக செயல்படுவார்கள். மனிதர்களை பெரிதும் நேசிப்பார்கள். எதிர்பாலார் மீது இவர்களுக்கு அதிக நாட்டம் இருக்கும். காதல் உணர்வு அதிக மாக இருக்கும்
-
கடகம்
கடக ராசியின் உருவம் நண்டு ஆகும். நண்டு தாய்மையின் அடையாளமாகும். அதாவது நண்டானது எப்பொழுதும் தன் குஞ்சிகளை சுமந்து திரிவதில் அலாதி பிரியமுடையவை.இதன் காரணத்தினால் கடக ராசிக்காரர்கள் தாய்மை உள்ளம்கொண்டவர்கள் என்றும்,தன் குடும்பத்தை கட்டிக்காப்பதில் விருப்பம் உடையவர்கள் என்றும் கூறப்படுகிறது. நண்டுகள் மிகவும் எச்சரிக்கை உடையவை, இதனால் கடக ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள் என்றும்,யாரையும் முழுமையாக நம்பமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. பாசம் என்றால் என்னவென்று இவர்களிடம்தான் கற்றுக்கொள்ளவேண்டும்.
-
சிம்மம்
சிம்ம ராசியின் உருவம் சிங்கமாகும். சிங்கத்திற்கு பசி எடுத்தால் மட்டுமே பிற மிருகங்களை வேட்டையாடும்.மற்ற நேரங்களில் பிற மிருகங்களை வேட்டையாடுவதில்லை. இதன் காரணத்தினால், சிம்மராசிக்காரர்கள் அவசியம் கருதி செயல்படுபவர்கள் எனக்கூறப்படுகிறது. சிங்கங்கள் எப்பொழுதும் ஓய்வாக,எதை பற்றியும் கவலையில்லாதது போல் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும். இதனால் சிம்ம ராசிக்காரர்கள் எந்த ஒரு விசயத்தையும் பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள் என்றும், எப்பொழுதும் ஓய்வாகவே இருக்க விரும்புவார்கள் என்றும் கூறப்படுகிறது. சிங்கங்கள் எப்பொழுதும் தங்கள் எல்லைக்குள் பிறர் நுழைவதை விரும்புவதில்லை. இதனால் சிம்ம ராசிக்காரர்கள் தனியாக இருக்கவே விரும்புவார்கள் என்றும்,தங்கள் சுதந்திரத்தில் பிறர் தலையிடுவதை விரும்புவதில்லை என்றும் கூறப்படுகிறது. சிங்கம் விலங்குகளின் அரசன் போல் விளங்குவதால், சிம்மராசிக்காரர்கள் தங்களை எப்பொழுதும் ஒரு தலைவனாகக்காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள் எனக்கூறப்படுகிறது
-.
கன்னி
கன்னி ராசியின் உருவம் கன்னிப்பெண்ணாகும். கன்னிப்பெண்கள் எப்பொழுதும் தங்களை அழகாக,இளமையாக,கவர்ச்சியாக காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள்.எனவே கன்னி ராசிக்காரர்கள் தங்களை அழகாக,கவர்ச்சியாக,இளமையாக வைத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துவார்கள் எனக்கூறப்படுகிறது.கன்னிப்பெண்கள் எப்பொழுதும் ஆடிப்பாடி மகிழ்ச்சியாக இருப்பார்கள்.இதனால் கன்னி ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.
துலாம்
துலாம் ராசியின் உருவம் கண்களைக்கட்டிக்கொண்டு ஒரு கையில் தராசு ஏந்தி நிற்கும் பெண் ஆகும். தராசு பெரும்பாலும் வியாபார நிறுவனங்களிலேயே காணப்படும்,இதனால் துலாம் ராசிக்காரர்கள் வியாபார தந்திரம் உடையவர்கள் என்றும்,எதையும் சீர்தூக்கிப்பார்த்து திறம்பட செயல்படக்கூடியவர்கள் என்றும் கூறப்படுகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் நடுநிலை தவறாதவர்கள்.
-
விருச்சிகம்
விருச்சிக ராசியின் உருவம் தேள் ஆகும். தேள்கள் எப்பொழுதும் மறைவிடங்களிலேயே வசிக்கும்.மறைந்திருந்து தாக்கும் குணமுடையவை. இதனால் விருச்சிக ராசிக்காரர்கள் எதிலும் வெளிப்படையாக நடந்துகொள்ளமாட்டார்கள். இவர்களை புரிந்துகொள்வது சிரமமாகவே இருக்கும். இரண்டு தேள்கள் ஒரே இடத்தில் வசிக்காது. அப்படி வசித்தாலும் அவை ஒன்றோடொன்று சண்டையிட்டு மடிந்து போகும். இதனால் விருச்சிக ராசிக்காரர்களிடம் போட்டி,பொறாமை போன்ற குணங்கள் காணப்படும். பெண் தேளானது குஞ்சி பொறித்தால் தாய்த்தேள் இறந்துவிடும்,இதனால் விருச்சிக ராசியினர் சிலருக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது
-.
தனுசு
தனுசு ராசியின் உருவம் பாதி குதிரையும்,பாதி மனிதனுமாக வில்லேந்திய உருவமாகும். இந்த ராசியின் உருவம் பாதி மிருகமாகவும்,பாதி மனிதனாகவும் காட்டப்பட்டுள்ளதால் ,இந்தராசிக்காரர்கள் தங்களுடைய மிருக குணங்களிலிருந்து விடுபட்டு மனித தன்மையை வளர்த்துகொள்வதில் அதிக ஆர்வம் காட்டுவார்கள். முடிந்தவரை தங்கள் குறைகளை திருத்திக்கொல்வதற்கு தயாராகவே இருப்பார்கள். இந்த ராசி உருவம் வில்லேந்தி குறி பார்ப்பது போல் உள்ளது,இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு லட்சியத்துடனேயே நடத்திசெல்வார்கள் எனக்கூறப்படுகிறது. மன ஒருமைப்பாடு இருந்தால் மட்டுமே வில் வீரன் சரியாக குறிபார்க்க முடியும்,இதன் காரணத்தால் தனுசுராசிக்காரர்கள் இயற்கையாகவே மன ஒருமைப்பாடுடையவர்களாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.இவர்களுக்கு உள்ளுணர்வு அதிகமாக இருக்கும். தர்மர்த்தை நிலை நாட்ட ஸ்ரீராமன் வில்லேந்தினான் என்பர்,இதனால் வில் தர்மத்தின் குறியீடாக கருதப்படுகிறது. தனுசு ராசிக்காரர்கள் தர்மத்திற்காக போராடுவார்கள்
-
மகரம்
மகர ராசியின் உருவம் முதலையாகும். முதலை தன் இரைக்காக ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் காத்துக்கிடக்கும் குணமுடையவை,இதனால் மகர ராசிக்காரர்கள் உட்கார்ந்த இடத்திலேயே இருந்துகொண்டு தங்கள் காரியங்களை நடத்தி செல்வதில் வல்லவர்கள் எனக்கூறப்படுகிறது. இவர்கள் எப்பொழுதும் தங்கள் காரியத்திலேயே கண்ணாக இருப்பார்கள். முதலைகள் போல் பாசாங்கு காட்டுவதில் வல்லவர்கள். தன்னை சுற்றி நடப்பவைகளை உன்னிப்பாக கவனிப்பார்கள்,ஆனால் எதுவும் தெரியாதது போல் நடந்துகொள்வார்கள். வாய்ப்புகளுக்காக தவம் கிடப்பார்கள்,கிடக்கின்ற வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக்கொள்வார்கள்.பொறுமை இவர்களுக்கு அதிகம்
-.
கும்பம்
கும்ப ராசியின் உருவம் பானயை தலையில் சுமந்தபடி நிற்கும் மனிதனாகும். பானையானது சேகரிப்பு மற்றும் சேமிப்பின் அடையாளமாகும். இதனால்,கும்ப ராசிக்காரர்கள் யாரிடம் பழகினாலும் அவர்களிடமிருந்து தனக்கு என்ன கிடைக்கும் என்பதிலேயே குறியாக இருப்பார்கள் எனக்கூறப்படுகிறது.அதாவது இவர்கள் எதை செய்தாலும் லாபம் கருதியே செயல்படுவார்கள். பிறரிடம் உதவி கேட்பதற்கு இவர்கள் தயங்கவே மாட்டார்கள்,யாரிடம் பழகினாலும் அவர்களிடம் ஏதாவது ஒரு உதவியை எதிர்பார்ப்பார்கள். மனிதன் பானையை தலையில் சுமந்தபடி நிற்பதால்,இந்த ராசிக்காரர்கள் பிறர் சுமைகளையும் தானே சுமப்பதற்கு தயாராக இருப்பார்கள். அதாவது அடிமை வேலை செய்வதற்கு தயங்க மாட்டார்கள்.
-
மீனம்
மீன ராசியின் உருவம் இரட்டை மீன்களாகும். மீன்கள் எப்பொழுதும் தன்னையும்,தன் சுற்றுப்புறத்தையும் சுத்தம் செய்துகொண்டே இருக்கும். இதனால் மீன ராசிக்காரர்கள் தன்னையும் தன் சுற்று புறத்தையும் எப்பொழுதும் தூய்மையாக வைத்துக்கொள்வார்கள் எனக்கூறப்படுகிறது. மீன்கள் எப்பொழுதும் நீருக்குள் ஓடியாடி, துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருப்பவை, இதனால் மீன ராசிக்காரர்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எனக்கூறப்படுகிறது. மீன்கள் எப்பொழுதும் கூட்டமாகவே வசிக்கும்,இதனால் மீன ராசிக்காரர்கள் கூட்டுக்குடும்பமாக வசிப்பதை பெரிதும் விரும்புவார்கள் எனக்கூறப்படுகிறது.
எனக்குத்தெரிந்தவரை ஒரு சில குணாதிசயங்களை மட்டும் இக்கட்டுரையில் விளக்கியிருக்கிறேன்.
***********************************************************************************

நீல நிற தினம்!

சிவப்பு என்றால் புரட்சி, வெள்ளை என்றால் சமாதானம் என்று ஒவ்வொரு நிறத்துக்கும் அரசியல் அர்த்தம் சொல்பவர்கள், நீல நிறத்தை ஒடுக்கப்பட்டோரின் உரிமைக் குரலோடு பொருத்துகிறார்கள். அரசியல் களத்தில் அதுதான் அர்த்தம். ஆனால், அகத் திணையில் அது காதலின் நிறம். கூடலும் கூடல் நிமித்தமும் குறிக்கும் குறிஞ்சியின் நிறம் நீலம். குறிஞ்சி என்பது முதலில் கூடலைத்தான் சொன்னது. பின்னரே, அது நிலத்துக்கு உரிப்பொருளாயிற்று என்று வாதிட்ட தமிழறிஞர்களும் உண்டு.

மலரே குறிஞ்சி மலரே என்று தலைவியையே மலராக்கியவர்கள் நமது திரைக்கவிஞர்கள். தலைவன் சூட நீ மலர்ந்தாய், பிறவிப்பயனை அடைந்தாய் என்ற அடுத்தடுத்த வரிகள் பெண்ணுரிமைப் போராளிகளைச் சினஞ்கொள்ளச் செய்யலாம். மணம் முடித்த பின்னரே பெண்கள் மலரணிவது பழந்தமிழர் வழக்கம். தலைவன் தலைவியின் கூந்தலில் மலர் சூட்டுதல் மணச்சடங்காயிருந்தது. அதையெல்லாம் சொல்லி அந்தத் திரைப்பாடலின் பல்லவி மலரைப் பார்த்து பாடியதுதான் என்றும் மலர்கள் மங்கையரின் கூந்தலேறிய பிறகே பிறவிப்பயனை அடைகின்றன என்றும் பொருள்விளக்கம் கொடுக்கலாம்தான். ஆனால், இறைவனடி சேர்வதே பிறவியின் பெரும்பயனும் பேரின்பமும் என்ற இடைக்கால பக்திநெறிக்கு மாற்றாக, தனது பாடல்களில் காதலையே பேரின்பமாகப் பாடி பரவசமடைந்த வாலிக்கு அது துரோகமாகிவிடும்.

2006-க்குப் பிறகு 12 ஆண்டுகள் கழித்து, வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் நீலக்குறிஞ்சி மலர்களால் பூத்துக்குலுங்கப்போகிறது மேற்குத் தொடர்ச்சி மலை. நீலம் பரவட்டும்!

Wednesday, 26 September 2018

உங்கள் தலையெழுத்தை மாற்றி அருளும் திருப்பட்டூர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம் !


‘ஹூம்… எல்லாம் என் தலையெழுத்து. பிரம்மா எழுதின தலையெழுத்தை யாரால மாத்த முடியும்?’ என்று அலுத்துக் கொள்கிற சராசரி மனிதர்கள்தானே நாம்! கவலைப்படாதீர்கள். நாம் சீரும் சிறப்புமாக வாழ்வதற்கு, நம் தலையெழுத்தை மாற்றி அருளத் தயாராக இருக்கிறார் பிரம்மா. 

இந்த அற்புதத் தலத்தை அறிவதற்கு முன்பு சிறியதொரு கதை!

‘தீதும் நன்றும் பிறர் தர வாரா!’ என்பது சத்தியமான வார்த்தை! நம் தீவினை நமக்குள்ளேயேதான் உள்ளது. அது… கர்வம்! ‘நான்’ என்பதை அழிக்க, முனிவர்களும் ஞானிகளும் தெளிவுற வலியுறுத்தியுள்ளனர். கர்வத்தால் துயரத்தைச் சந்தித்த இன்னொருவரும், ‘கர்வம் கூடாது; தலைக்கனம் வேண்டாம்’ என அறிவுறுத்தியுள்ளார்; கர்வத்தால் தன் தலையையே இழந்த அவர்- பிரம்மா! தலையை இழந்தார்; பதவியை இழந்தார்; பணியை இழந்தார்; வெறுமனே இருந்தார்.

‘சிவபெருமானுக்கு நிகரானவன் நான்; அவருக்கும் தலைகள் ஐந்து; எனக்கும் ஐந்து தலைகள்’ என்று ஆணவம் கொண்டிருக்க… பிரம்மாவின் தலையில் ஒன்றைக் கொய்தார் சிவபெருமான். இழந்த ஆற்றலைப் பெறுவதற்காக சிவனாரையே பூஜித்து, வரம் பெற்றார்! பிரம்மா வணங்கியதால் சிவனாருக்கு பிரம்மபுரீஸ்வரர் எனும் திருநாமம் உண்டானது! ஆனால், வரம் கொடுத்த சிவனார், கூடவே நிபந்தனை ஒன்றும் விதித்தார்.

நிபந்தனையா? அதென்ன…?

‘இழந்த ஆற்றலையும் தேஜஸையும் வழங்குங்கள் ஸ்வாமி’ என சிவனாரை நோக்கி கடும் தவம் இருந்த பிரம்மாவின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், ‘நீ இழந்தவற்றை திரும்பப் பெற வேண்டுமெனில், ‘கர்ம விதியால் அவதியுறும் பக்தர்கள், இந்தத் தலத்துக்கு வரும் வேளையில், ‘விதி இருப்பின் விதி கூட்டி அருள்க!’ என்றார். அதாவது முன்பு எழுதிய விதியைத் திருத்தி, செம்மையாகவும் சிறப்பாகவும் விதியை மாற்றி எழுதச் சொன்னார் சிவபெருமான்! பிரம்மாவும் ஏற்றார்; வரம் பெற்றார்; இழந்த ஆற்றலைப் பெற்றார். பக்தர்களுக்கு விதியை மாற்றி, தலையெழுத்தை திருத்தி அருள்கிறார் பிரம்மா!

திருச்சி சமயபுரத்தை அடுத்து, சிறுகனூருக்கு அருகில் உள்ளது திருப்பட்டூர் கிராமம். இந்த ஊரில், பிரமாண்ட ஆலயத்தில், பிரம்மா தனிச் சந்நிதியில் அருள்பாலித்து வருகிறார்.

இந்தத் தலத்தின் இன்னொரு சிறப்பு… பிரம்ம புரீஸ்வரர், பழமலைநாதர், பாதாளலிங்கேஸ்வரர், தாயு மானவர், மண்டூகநாதர், ஏகாம்பரேஸ்வரர், அருணா சலேஸ்வரர், கயிலாசநாதர், ஜம்புகேஸ்வரர், களத்திர நாதர், சப்தரிஷீஸ்வரர், சுத்த ரத்னேஸ்வரர் என சிவபெருமான், 12 லிங்கத் திரு மேனியாக, தனிச் சந்நிதியில் அருள்பாலிக்கிறார். எனவே இங்கே வந்து தரிசித்தால், 12 தலங்களை தரிசித்த புண்ணியம் கிட்டுமாம்!

தலத்தின் நாயகி-  கருணைக் கடலான ஸ்ரீபிரம்ம சம்பத் கௌரி! சிவபெருமானுடன் சேர்ந்து பிரம்மனுக்கு அருளிய தால், பிரம்ம சம்பத் கௌரி எனும் திருநாமம் இவளுக்கு! பங்குனி மாதத்தில் மூன்று நாட்கள், சிவனாரின் சந்நிதியில் விழும் சூரிய ஒளி, அம்பாளின் திருப் பாதங்களிலும் விழுமாம்!

குருர் பிரம்மா குருர் விஷ்ணு: குருர் தேவோ மகேஸ்வர: குருசாட்சாத் பர பிரம்ம தஸ்மை ஸ்ரீகுரவே நம: என்பதற்கு ஏற்ப, ஆலயத்துள்… சிவ சந்நிதியின் கோஷ்டத்தில் உள்ள குரு தட்சிணாமூர்த்தி, அடுத்து அருகில் தனிச்சந்நிதியில் ஸ்ரீபிரம்மா, கோஷ்டத்தில் ஸ்ரீவிஷ்ணு, அடுத்து மூலவரான ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் என காட்சி தருவது விசேஷம் என்கின்றனர் பக்தர்கள்.

ஆரம்பத்தில், திருப்படையூர் என அழைக்கப்பட்டதாம்! முருகப்பெருமான், அசுரர்களை அழிப்பதற்காக இங்கே… சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு, அதன் பிறகு படை திரட்டிச் சென்றாராம். இதனால் இந்த ஊர் திருப்படையூர் எனப்பட்டு திருப்பட்டூர் என்றானதாகச் சொல்கிறது தல வரலாறு! இங்குள்ள ஸ்ரீகந்தபுரீஸ்வரரை வணங்கினால், சகல நலனும் பெறலாம்.

இன்னொரு விஷயம்… பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான… அதாவது முக்தி அடைந்த தலங்களாக, ராமேஸ்வரம் முதலான பத்து தலங்களைச் சொல்வர். இவற்றுள், திருப்பட்டூர் தலமும் ஒன்று! இங்கு, சிவபெருமானுடன் பதஞ்சலி மகரிஷி ஐக்கியமான இடத்தில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்துள்ளனர். சித்தர் பாடலில் ‘பதஞ்சலி பிடவூர்’ என இந்தத் தலம் சிறப்பிக்கப்படுகிறது. இப்போது இந்தப் பகுதியையே தியான மண்டபமாக அமைத்துள்ளனர். யோக நிலையை அடைய விரும்புபவர்கள், மனதில் அமைதி இன்றி தவிப்பவர்கள், இங்கே வந்து பதஞ்சலி

மகரிஷி சமாதிக்கு எதிரே அமர்ந்து தியானம் செய்து வழிபட்டால், நன்மை உண்டு என்கின்றனர் பக்தர்கள்! வைகாசி சதய நாளில், குரு பூஜை விசேஷம். தவிர, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் எண்ணற்ற பக்தர்கள், மகரிஷியை வணங்குகின்றனர்.

இந்த வேளையில்… நம் புத்தியில் அகந்தை அகன்று, புதுவாழ்க்கை மலர, பிரம்மபுரீஸ்வரர் ஆலயத்துக்கு வந்து, பிரம்மாவை தலை வணங்கி வேண்டுங்கள்; நம் தலையெழுத்தை திருத்தி அருளுவார், பிரம்மா!

மஞ்சள் காப்பு… புளியோதரை!

வாழ்வில் துன்பம், கடன் தொல்லை, நிலையான வேலையின்மை, குழந்தை பாக்கியம் ஆகியன கிடைக்கப் பெறாதவர்கள், இங்கே வந்து பிரம்மாவுக்கு மஞ்சள் காப்பிட்டு, புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபட, விரைவில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும்; தொட்டில் சத்தம் கேட்கும்! வியாழக்கிழமை காலை 6 மணி; மற்ற நாளில் 8 மணிக்கு பிரம்மாவுக்கு அபிஷேகம் நடைபெறும்!

7ஆம் தேதி பிறந்தவரா?

ஏழு நிலை ராஜகோபுரத்துடன் கூடிய ஆலயம்! இந்த ஏழு நிலைகளைக் கடந்து, சுமார் 300 அடி தூரத்தில் மூலவரான பிரம்மபுரீஸ்வரரின் சந்நிதியில், பங்குனியில், சூரிய பகவான் தனது வெளிச்சக் கதிர்களால் சிவனாரை வழிபடுகிறார். ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் ஏறி, ஏழு நிலை கோபுரத்தைக் கடந்து, ஏழு நிமிடங்கள்… சிவனாரின் மீது சூரிய ஒளி படும். ஆகவே 7-ஆம் தேதி பிறந்தவர்கள் இங்கு வந்து வழிபட, நினைத்தது நிறைவேறும் என்பர். அதுமட்டுமா? ஜாதகத்தில் 7-ஆம் இடத்தைப் பொறுத்தே ஒருவருக்கு நல்ல மனைவி மற்றும் நல்ல நண்பர்கள் அமைவார்கள். எனவே தோஷ நிவர்த்திக்காகவும் பிரம்மபுரீஸ்வரர் மற்றும் பிரம்மாவை வழிபடுகின்றனர்.

ஜென்ம நட்சத்திர நாளில் தரிசிப்பது விசேஷம்!

மாதந்தோறும் வருகிற… உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில்,  பிரம்மாவை தரிசித்தால், செல்வம் பெருகும்; ஐஸ்வரியம் கொழிக்கும்; இழந்ததைப் பெறுவீர்கள்!

எங்கே இருக்கிறது?

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பஸ் உண்டு; ஆனாலும் குறைவுதான்!

சமயபுரத்தில் இருந்து சிறுகனூர் வரை பேருந்து வசதி நிறையவே உண்டு. இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பட்டூர். ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ வசதி உண்டு.

கோயில் தொடர்புக்கு:
94438 17385 / 98949 26090

N2R_NandhakumaR
Channel N2R
ENN2AAR Groups

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...