Saturday, 22 September 2018

இலிங்காஷ்டகம் | Lingashtagam - ஸ்லோகமும் பொருளும்.


இலிங்காஷ்டகம்  

ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம்
நிர்மல பாஸித ஸோபித லிங்கம் 
ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

 ப்ரஹ்ம முராரி ஸுரார்சித லிங்கம் - நான்முகப் பிரம்மனாலும் முரனை அழித்த முராரியாம் விஷ்ணுவாலும் எல்லாத் தேவர்களாலும் அர்ச்சிக்கப் பட்ட லிங்கம்

நிர்மல பாஸித ஸோபித லிங்கம் - குற்றமற்ற மிகுந்த ஒளியுடன் ஜொலிக்கும் லிங்கம்

 ஜன்மஜ துக்க வினாசக லிங்கம் - பிறப்பு இறப்பினால் ஏற்படும் துன்பங்களை நீக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை அடியேன் வணங்குகிறேன்.

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம்
காம தஹன கருணாகர லிங்கம் 
ராவண தர்ப வினாஷன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

தேவ ரிஷி ப்ரவரார்சித லிங்கம் - தேவர்களிலும் ரிஷிகளிலும் சிறந்தவர்களாக இருப்பவர்களால் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்

 காம தஹன கருணாகர லிங்கம் - மறைந்திருந்து மலர்க்கணைகளை விட்ட காமனை எரித்து பின்னர் அவனை மீண்டும் உயிர்ப்பித்த கருணையுடன் கூடிய லிங்கம்

 ராவண தர்ப வினாஷன லிங்கம் - இராவணனின் கர்வத்தை கால் கட்டை விரலால் நசுக்கி அழித்த லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

ஸர்வ  ஸுகந்த ஸுலேபித லிங்கம் 
புத்தி விவர்த்தன காரண லிங்கம் 
சித்த சுராசுர வந்தித லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம் - எல்லாவிதமான நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்கம்

புத்தி விவர்த்தன காரண லிங்கம் - உண்மையறிவு அடையக் காரணமாக இருக்கும் லிங்கம்

சித்த சுராசுர வந்தித லிங்கம் - சித்தர்களாலும் தேவர்களாலும் அசுரர்களாலும் வணங்கப்படும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

 கனக மஹாமணி பூஷித லிங்கம் 
பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் 
தக்ஷ ஸுயக்ஞ விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

 கனக மஹாமணி பூஷித லிங்கம் - பொன்னாலும் மிகச்சிறந்த மாணிக்கங்களாலும் அழகு செய்யப்பெற்ற லிங்கம்

பணிபதி வேஷ்டித ஸோபித லிங்கம் - நாகங்களின் அரசனை அணிந்து ஒளிவீசும் லிங்கம்

 தக்க்ஷ  ஸுயக்ஞ விநாசன லிங்கம் - தனக்குரிய மரியாதையைத் தரத் தவறிய தக்ஷப் பிரஜாபதியின் யாகத்தை அழித்த லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

குங்கும சந்தன லேபித லிங்கம் 
பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் 
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

குங்கும சந்தன லேபித லிங்கம் - குங்குமத்தாலும் சந்தனத்தாலும் அலங்கரிக்கப் பட்ட லிங்கம்

பங்கஜ ஹார ஸுஸோபித லிங்கம் - தாமரை மலர் மாலை அணிந்து ஒளிவீசும் லிங்கம்
  
ஸஞ்சித பாப விநாசன லிங்கம் - பற்பல பிறப்புகளில் சேர்த்து வைத்த எல்லா வினைகளின் பயன்களையும் அழிக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் 
பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் 
தினகர கோடி ப்ரபாகர லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

 தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம் - தேவ கணங்களால் அர்ச்சிக்கப்பட்டும் சேவைகள் செய்யப்பட்டும் விளங்கும் லிங்கம்

பாவைர் பக்தி ப்ரவேசக லிங்கம் - உணர்வுடன் கூடிய பக்தியை தோற்றுவிக்கும் லிங்கம்

தினகர கோடி ப்ரபாகர லிங்கம் - கோடி சூரியன்களின் ஒளியினைத் கொண்டிருக்கும் லிங்கம்

தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்
ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் 
அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம் - எட்டிதழ் தாமரையால் சூழப்பட்ட லிங்கம் ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம் - எல்லாவிதமான செல்வங்களுக்கும் காரணமான லிங்கம்

அஷ்ட தரித்ர விநாசன லிங்கம் - எட்டுவிதமான ஏழ்மையை அழிக்கும் லிங்கம் தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் 
ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் 
பராத்பரம் பரமாத்மக லிங்கம் 
தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம்

ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம் - தேவ குருவாலும் தேவர்களில் சிறந்தவர்களாலும் பூஜிக்கப்பட்ட லிங்கம்.

ஸுரவன புஷ்ப சதார்சித லிங்கம் - தேவலோக நந்தவன மலர்களால் எப்போதும் அர்ச்சிக்கப்பட்ட லிங்கம்.

பராத்பரம் பரமாத்மக லிங்கம் - பெரியதிலும் பெரியதான, பரமாத்ம உருவான லிங்கம். தத் ப்ரணமாமி சதாசிவ லிங்கம் - அப்படிப்பட்ட சதாசிவ லிங்கத்தை நான் வணங்குகிறேன்.

லிங்காஷ்டகம் இதம் புண்யம் யே படேத் சிவ சன்னிதௌ சிவலோகம் அவாப்நோதி சிவே ந ஸஹமோததே. லிங்காஷ்டகம் இதம் புண்யம் - இந்த லிங்காஷ்டகம் மிகப் புனிதமானது யே படேத் சிவ சன்னிதௌ - இதனை சிவ சன்னிதானத்தில் படித்தால் சிவலோகம் அவாப்நோதி - சிவலோகம் கிடைக்கும் சிவே ந ஸஹமோததே - சிவனுடன் தோழமை பாராட்டி என்றும் ஆனந்தமாக இருக்கலாம்.  

N2R_NandhakumaR

Saturday, 15 September 2018

வற்றிப்போன கடல் eral

                                                                                                                                  
                         1960 களில் அந்த கடலில் ஆண்டுக்கு 40 ஆயிரம் டன்கள் மீன்களை அள்ளி எடுத்தார்கள். அப்படிப்பட்ட நீர் பரப்பு வற்றிப் போனது ஏன்? உலக வெப்பமயமாதலினால் அது வற்றி போனதற்கு காரணமா ? என்றால் அதுவும் இல்லை பின் என்னதான் காரணமாக இருக்க முடியும் ? கடல் வற்றி விட்டதா ? தொடர்ந்து வாசியுங்கள்…                                                   
                                                                                            
                                                                                            
                              சுமார் 50 வருடங்களுக்கு முன்னால் மிச்சிகன் ஏரியை விடவும் நீர்பரப்பில் பெரிதாக இருந்தது அது. அது உலகத்தின் நான்காவது மிகப்பெரிய ஏரியாக இருந்தது. ஏரி என்பதை விடவும் அதை கடல் என்று சொல்லலாம் அந்த அளவு விரிந்து பரந்தது. தாஷ்கண்ட் நகரத்தில் இருந்து 400 மைல்கள் தொலைவில் இருந்தது. அமுதர்யா, ஸைர்தர்யா எனு இரண்டு ஆறுகள் ஆஃப்கனிஸ்தான், தஜ்கிஸ்தான் மற்றும் க்ரிஜிஸ்தான் மலைத் தொடர்களில் உருவாகி ஓடி வளம் கொடுத்து இந்த ஏரியில் சங்கமித்தன.

நிலப்பரப்பிற்குள் பெரிய தண்ணீர் தீவு போல இருந்ததாலோ என்னவோ இதற்கு ஏரல் கடல் என அழைத்தனர். (அவர்கள் மொழியில் ஏரல் = தீவு )
1100 குட்டித்தீவுகள் இதனுள் இருந்தன. அப்போது இதன் பரப்பளவு 68000 சதுர கிலோமீட்டர்கள்.

சோவியத்தின் பொருளாதார வல்லுநர்கள் ஒரு முடிவெடுத்தனர். அதாவது
மத்திய ஆசியாவின் வரண்ட நிலப்பரப்பை வளமாக்க வேண்டுமானால் அந்த பகுதியில் பருத்தி செடிகளை விளைவித்து பசுமையை வரவழைத்து பஞ்சத்தை பஞ்சாக பறக்க வைத்துவிடலாம் என்ற அபார முடிவெடுத்தனர். ஆனால் அதை செயல் படுத்திய விதத்தில் சொதப்பி விட்டனர். அமோக விளைச்சலை கொண்டுவர அதிக அளவில் வேதியல் மற்றும் உரங்களை பயன் படுத்தினர். மேற்சொன்ன இரண்டு ஆறுகளின் நீர் வளத்தை இதற்காக திருப்பி விட்டனர். ஏரலுக்கு வரும் நீரை வீழலுக்கு இறைத்தனர். நீர் வரத்து குறையத்தொடங்கியது. 1960ல் 4 மில்லியன் பாசனப் பரப்பு 1980ல் இரண்டு மடங்காக அதிகரித்தது. ஆறுகளின் 90 சதவீத தண்ணீர் பருத்தி பயிர் விளைவிப்பதற்காக உபயோகிக்கப் பட்டன.

1970ல் 6 அடிகள் நீர் மட்டம் குறைந்தது. மட்டம் குறைய குறைய நீரின் உப்பளவு அதிகமானது. அத்தோடு இருந்தால் கூட ஏரல் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால் வேதியல் கழிவுகளை முழுக்க முழுக்க ஏரலில் கொட்டினர்.

ஒரு சில மீன் இனங்கள் மட்டுமே ஏரலில் தாக்கு பிடித்த நிலையில் 80 களின் ஆரம்பத்தில் சுத்தமாக அழிந்து போய்விட்டன. மீன் வளம் மட்டுமல்ல அதை சார்ந்து வாழ்ந்த பறவை இனங்களும் விலங்கினங்களும் காணாமல் போயின
இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் படைகளை எதிர்ப்பதற்காக பெரிய பெரிய போர் கப்பல்கள் இந்த ஏரலில் நங்கூர மிட்டிருந்தன. அவைகள் மெல்ல மெல்ல கரை தட்டி மண்ணுக்குள் புதைந்தன.

1991ல் சோவியத் யூனியன் பிளவுபட்ட போது உஸ்பெகிஸ்தான், கஸக்ஸ்தான் கைகளுக்குள் வந்தது ஏரல் ஆனாலும் சோவியத்தின் விவசாய பார்முலாவை விடாமல் பின்பற்றி ஏரலுக்கு சாவு மணி அடித்தன. இதன் மொத்த நீர் பரப்பானது பத்தில் ஒன்றாக சுருங்கிப் போனது.

தண்ணீர் பரப்பு குறைய குறைய அதன் அடிவண்டலில் தடிமனாக படிந்து இருந்த வேதி படிமங்கள் சுழற்காற்றில் அப்பகுதி முழுக்க புளுதிக் காடாக மாற்றியது. இதன் பாதிப்பினால் 10 க்கு 1 குழந்தை ஒருவயதுக்கு முன்னால் மரணித்துப் போனது.

ஆரோக்கியமான சூழ்நிலையில் இருந்த பகுதியை பேராசையாலும் தவரான திட்டங்களாலும் மிதமிஞ்சிய வேதி உரங்களாலும் ”பிசாசுப் பகுதி “ ஆக மாற்றிவிட்டான் மனிதன்.

பின் எப்போதும் மீட்டெடுக்க முடியாத அதல பாதாளத்தில் புதைந்து போனது ஏரல் கடல்.

Friday, 14 September 2018

பகவானுக்கும் பக்தனுக்கும் போட்டி


ஆயிரக்கணக்கில்‌ நந்த குமாரன் விஷமங்கள் செய்த போதிலும், அவர்கள் வீட்டில்‌ சென்று த்வம்சம்‌ செய்த போதிலும், அவனது அத்தனை லூட்டிகளுக்கும் ஈடு கொடுத்துக்கொண்டு, அவன் மீது மாறாத அன்பு கொண்டிருந்தனர் கோகுல வாசிகள்.

எவ்வளவு அழிச்சாட்டியங்கள் செய்தாலும், ஒரு புறம் புகார்களாக  அடுக்கிய போதும், மற்றொரு புறம் அவன் வரவில்லையென்றாலோ, அவனைப் பார்க்கவில்லையென்றாலோ ஏங்கிப்‌போவார்கள்.
பழம் விற்கும் ஏழைப்பாட்டியின் குரல் கேட்டு, வாசலில் ஓடி வந்தான் கண்ணன்.

பாட்டீ, நில்லுங்க..

பழம் வேணுமா சாமீ...

எனக்குத் தருவீங்களா?

குட்டிக் கண்ணனின் அழகு அவளை என்னவோ‌செய்தது. போதாகுறைக்கு பாட்டி என்று உறவு கொண்டாடுகிறான்.
உறவுகள் ஏதுமின்றி, தனியாக பழங்கள் விற்று வயிற்றைக் கழுவிக் கொள்பவளுக்குப் புதிய உறவு. அதுவும் இறைவனோடு.
சின்னக் கண்ணன் ‌இதழ்களைக் குவித்துக் குவித்துப் பேசும் எழிலைக் காண்போர் பேச்சற்றுப் போவாரன்றோ.

உங்களுக்குதான் எல்லமே...

அப்படியா? எல்லமே ‌எனக்கா?
ஆமாங்க துரை.. எல்லாம் உங்களுக்குத் தான்..

இருங்க வரேன்..

உள்ளே ஓடிச்சென்று இரண்டு பட்டுக் கரங்கள் நிறைய தானியங்களை அள்ளிக்கொண்டு வந்தான்.

தத்தித் தத்தி  அவன் ஓடி வரும் வேகத்தில், கைஇடுக்குகள் வழியாக தானியங்கள் சிந்திக்கொண்டே வந்தது.
மூன்றாம் கட்டிலிருந்து வாசலுக்கு வருவதற்குள் எல்லா தானியங்களும் கீழே சிந்திவிட,

இந்தாங்க பாட்டி, நீங்க எனக்கு சும்மா தரவேணாம். இதை எடுத்துக்கோங்க.

கையை நீட்டியது.
கீழே இரைந்ததுபோக மீதி சில தானியங்கள் கைகளில் மிஞ்சியிருந்தன.

சரிங்க சாமீ,  உங்க கையால எது கொடுத்தாலும் போதும்..

கூடையை நீட்டினாள். கண்ணன் தாமரைக் கைகளைக் கூடையில் உதற, அக்ஷயமான செல்வங்களை அளிக்கும் வரத ஹஸ்தங்களிலிருந்து, கூடையில் விழுந்த தானியங்களை பழைய துணியில் சுற்றி வைத்துக்கொண்டாள். கொண்டு வந்த அத்தனை பழங்களையும் கண்ணன் கை நிறைய அடுக்கினாள்.

உண்மையில், பழங்களை விற்றால்தான் அன்றைய உணவு என்ற நிலையில், அவள் மனம் கண்ணனைப் பார்த்ததும் நிறைந்துவிடிருந்தது.
பசியும், பட்டினியும் பழகிப்போனவைதாம். ஆனால், இப்பேர்ப்பட்ட குழந்தை பாட்டீ,‌பாட்டீ என்று பத்து தடவைக்கு மேல் அழைத்தானே..
நினைத்துக் கொண்டே வீடு போய்ச் சேர்ந்தாள்.

வீட்டுக்குச் சென்றால் அவளது கூடை நிறைய விலை உயர்ந்த ரத்தினங்கள் நிரம்பியிருந்தன.

இரண்டு‌ நாட்கள் சென்றன. பழம்‌ விற்கும் பாட்டியின் ஏழ்மையைப் போக்கிவிட்ட சந்தோஷம் கண்ணனுக்கு. இனி அவள் வாழ்நாள்‌ முழுதும் உட்கார்ந்து  சாப்பிடலாம். தள்ளாத வயதில் வீதிவீதியாய் அலைய வேண்டியதில்லை.

மூன்றாம் நாள் காலை..
பழம் வாங்கலியோ.. பழம்...

அதே பாட்டியின் குரல்தான்.
ஓடி வந்தான் கண்ணன்.

ஏன் பாட்டீ, உங்களுக்கு அவ்வளவு ரத்தினம் தந்தேனே. பாத்தலியா ?

நீங்க குடுத்தீங்க சாமீ.. இதோ பாருங்க.. கூடை நிறைய பழங்களுக்கு அடியில் கண்ணனுகான நகைகள்.
நீங்க பாட்டீ பாட்டீன்னு கூப்பிட்டீங்க.. பாட்டியால முடிஞ்சது. எல்லாம் நீங்க தந்ததுதான். இதெல்லாம் நான் வெச்சுட்டு என்ன செய்யப்போறேன்? எனக்கு ஒரு கால் வயத்துக் கஞ்சி போதுமே...
சொல்லிக்கொண்டே அத்தனை நகைகளையும் கண்ணனுக்குப் பூட்டி அழகு பார்த்தாள்.

கண்ணனுக்கு ஒரே புதிராய்ப் போனாள் அவள். ஏழையாய் இருக்கிறாள். செல்வத்தைக் கொடுத்தால், எனக்கே ‌திருப்புகிறாளே..
கொஞ்சம் அசந்துதான் போனான் கண்ணன்.

மறுநாள் காலை மறுபடியும்
பழம் வாங்கலியோ.. பழம்...

பாட்டியின் குரல் கேட்டு, கண்ணன் மிகவும் ஆச்சாரியப்பட்டான்.

ஓடி வந்தான். இப்போது பாட்டியைப் பார்க்கக் கண்ணனுக்கு ஆவல்.
பாட்டீ உங்க வீடு..?

ஆமா சாமீ, நீங்க என் குடிசையைவே அரணமனை போலாக்கிட்டீங்க...

அது பத்தலையா பாட்டீ? மறுபடி ஏன் பழம் விக்கறீங்க..

அதிருக்கட்டும். நீங்க என் கூட என் வீட்டுக்கு வருவீங்களா‌ சாமீ?

ஓ வரேனே...

ப்ரம்மம் பாட்டியின் கையைப் பிடித்துக்கொண்டு தளர்நடை நடந்து சென்றது.
அங்கே...
ஒரு பெரிய அரண்மனை போன்ற வீட்டில் கண்ணனின்  அழகான சித்திரம் வைத்து கோவில்போல் செய்து, ஆராதனைகள் நடந்து கொண்டிருந்தன.அதன் எதிரே சிறிய குடிசை போட்டுக் கொண்டாள் அவள்.

என் ஒருத்திக்கு எதுக்கு சாமீ மாளிகை? சாமிக்குதான் எல்லாம்.என்றாளே

அவளது பக்திக்கு ஈடு செய்யமுடியாத கண்ணன் திணறிப்போனான்.

பக்தனுக்கும் பகவானுக்கும் உள்ள போட்டி, பக்திக்கும் கருணைக்கும் உள்ள போட்டி. அதில் பகவான் எப்போதும்  தன்னைத் தோற்பவனாகவே கருதுகிறான். அதனாலேயே பக்தனுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் தன் நிலையை விட்டு  இறங்கியும் வருகிறான் அல்லவா..?

* N2R NandhakumaR*

Wednesday, 12 September 2018

கண்களின் மொழி

👁
👁👁👁👁👁👁👁👁👁
1). *கண்கள்* வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது.
2). *கண்கள்* இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.
3). *கண்கள்* மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.
4). *கண்கள்* கீழே பார்த்தால் அடிபணிகிறது.
5). *கண்கள்* விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,
ஆசைப்படுகிறது.
6). *கண்கள்* சுருங்கினால் சந்தேகப்படுகிறது.
7). *கண்கள்* கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.
8). *கண்கள்* வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.
9). *கண்கள்* வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.
10). *கண்கள்* படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது.
11). *கண்கள்* மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது.
12). *கண்கள்* எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.
13). *கண்கள்* கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்.
14). *கண்கள்* கண்ணுக்குள் பார்த்தால் காதல்.
15). *கண்கள்* இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது
16). *கண்கள்* இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது.
17). *கண்கள்* வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது.
18). *கண்கள்* வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது.
19). *கண்கள்* உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால் எதையோ தேடுகிறது.
20). *கண்கள்* ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது.
21). *கண்கள்* மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது.
22). *கண்களை* கைகள் மறைத்தால் எதையோ மறைக்கிறது.
23). *கண்களை* கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது.
24). *கண்கள்* மூடித்திறந்தால் வெறுக்கிறது.
25). *கண்* புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது.
26). *கண்* புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை.
27). *கண்களும்* புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்.
28). ஒரு *கண்* திறந்திருந்தால் சேட்டை.
29). இரண்டு *கண்களும்* மூடி இருந்தால் தூக்கம்.
30). *கண்கள்* திறக்கவில்லையென்றால் மரணம்

Saturday, 8 September 2018

எழுதிங்கள் சீர்


கொங்கு வெள்ளாளர் இனத்தில், பெண்ணிற்குப் பெண்பிள்ளை பிறந்து, அந்த குழந்தை பெரியவளாகி ருதுவாவதற்கு முன் அப்பெண்ணிற்கு அவள் தகப்பன்-தாய் வீட்டீல் செய்யும் சீர்தான் எழுதிங்கள்சீர். கொங்கு வெள்ளாளர் இனத்தில் இது ஒரு திருமண நிகழ்ச்சி போல் நடைபெரும். திருமணம் போல அனைத்து சொந்தகாரர்களையும் நேரில் சென்று அழைப்பர். குறித்த நல்ல நாளில் மாலை நல்ல நேரத்தில் உறவினர்சூழ அருமைக்காரர் முகூர்த்தகால் நடுவார். பின்வரும் சடங்குகள் எழுதிங்கள்சீர் பாட்டாக…

கற்பு குலையாத காராள வம்சம்
வேற்பு குலையாத வேளாளர் வம்சம்
காப்பு குலையாத கவுண்டர்கள் வம்சம்
காராள குலதிலகர் கவுண்டர்கள் வம்சம்
கொங்கு வெள்ளாள கவுண்டர்கள் வம்சம்
ஆல்போல் தழைத்து அருகுபோல் வேறூன்றி
பட்டி மரவு
எலந்த மரம் குடை மரவு
நுகம்
கொலுவு
குழவி லிங்கம்
உரல் லிங்கம்
அம்மி
நிறைக்குடம்
புடைச்சட்டி
வாணைச்சட்டி
பிறந்தான் பிறந்த மணைக்கு எழுதிங்கள்சீர் செய்ய பிறந்தாளை ஊரிலிருந்து அழைத்துவர
புது துணி எடுத்து விரத விருந்து வைத்து
வெள்ளைமாத்தில் எழுகுடம் வைக்க எழுதிங்கள்காரிகள் அருமைக்காரருடன் ஏழு கிணற்றிலிருந்து சீர்தண்ணீர் கொண்டு வந்து
வெள்ளைமாத்தில் வைத்து, கங்கணம் கட்டி, மூன்று முறை அரிசி போட்டு கணபதி பூசை செய்து
உரல், நுகம் அம்மி குழவி புடைச்சட்டி வாணைச்சட்டி பூசை செய்து
பாலக்கால் வெட்டி வந்து முகூர்த்தகால் நட்டு
வாசல் தொளித்து வண்ண கோலமிட்டு செம்மண் சுண்ணாம்பினால் சீராக கரைகட்டி
எழுதிங்கள்காரிக்கு வெற்றிலைப் பாக்கு வைத்து
ஐந்துபடி திணை மாவில் நீர்விட்டு நன்றாகப் பிசைந்து, இருகூராக்கி, இடையில் ஆச்சுவெல்லமிட்டு மாவால் நன்கு மூடி, ஆரச இலையிலிட்டு,
மூன்று படி தண்ணீர் விடு, குறுக்கே குச்சி வைத்து, கோதை மாவை மூழ்காமல் புதுப் புடைச்சட்டில் வைத்து
பிறந்தான் புடைச்சட்டியை எடுத்து அடுப்பில் வைத்து, கோதைமாவை வேகவிட
எழுதிங்கள்காரிக்கு ஆக்கையிட்டு தண்ணீர் ஊற்றி, அரூமை பெரியவர் அருகுமணம் எடுக்க
எழுதிங்கள்காரியை மரஉரல் முன் நிறுத்தி, எலந்தமுள் குடையை உடன்பிறந்தான் தான் பிடிக்க
நல்ல நாவிதன் கொழுமுனையை காய்ச்சி, எழுதிங்கள்காரி முன்வைத்து சுட சுட மோர்விட
எழுதிங்கள்காரி உரலை உதைத்து தள்ளி வீட்டினுள் சென்று அமர
நங்கை கொழுந்தியாள் குழவிகல் எடுத்து வந்து எழுதிங்கள்காரியின் மடியிலிட
எழுதிங்கள்காரிக்கு ஆக்கையிட்டு தண்ணீர் ஊற்றி, பட்டிமாவு பந்தலில் நுகத்தருகே ஒருசிந்திவிட (விரத விருந்து வைத்தல்)
வீட்டு வாசல் நிலவுமேல் பேழை கூடையில் கோதைமாவை வைக்க, கோடாரியில் துணி சுற்றி அறுமை பெரியவருடன் சீர்காரி கோதையை பிளக்க, சீர் வெல்லம் குழையாமல் முழுதாக இருக்க நல்லதென்பார்.
பின், சீர்காரி படி சாதம் பானையில் சமைத்து உறவினற்கு பரிமாறி, கோதை மாவுடன் ஒருசிந்திவிட்டு (விரத விருந்து வைத்தல்) கணபதி பூசை செய்து பெரியவரை வணங்கியதுடன் எழுதிங்கள் சீர் இனிதே முடிந்தது.

எழுதிங்கள் சீருக்காகும் செலவுகள் அனைத்தும் தாய் வீட்டாரே செய்வர். சீர்காரியின் சகோதரன் பணமுடுப்பு, நகை மற்றும் சீர்குடையில் அரிசி, வெல்லம், தேங்காய், பழம், வெற்றலை, பாக்கு, பட்டுபுடவை வைத்து பிறந்தான் ஏடுத்துவர ஊர்பிள்ளையரை வணங்கி சீருடன் கணவன் வீடு செல்வாள்.
கொங்குவேள்ளாளர்களில் எழுதிங்கம் செய்துகொண்ட பெண்கள்தான் சுபகாரிங்களில் முன் நிற்பார்கள். அப்பெண் அருமைகாரருடன் நல்லகாரியாங்களில் சீர்-சடங்கு செய்யும் தகுதியை பெறுகிறாள். இதனால் அவள் முழுச்சுமங்கலியாகிறாள்.

Wednesday, 5 September 2018

*திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!*

பெண்ணானவள் தான் பிறந்து வளர்ந்த குடும்பத்தை விட்டு புதிய சூழலில் வாழ வருவதால் எல்லாமே புதிதாக இருக்கும்.

கணவர் வீட்டார் கூறும் வார்த்தைகளில் தவறாக புரிதல் வரும் அதிலும் கேலி கிண்டல் ஏன் சில நேரம் அதட்டல் என ஏற்படலாம்.
அந்த நேரங்களில் பெண்ணே ஒருபசு மாடு எப்படி விஷத்தையே உண்டாலும் அது தரும் பாலில் துளிகூட விஷம் இராதோ, அது போல கணவன் வீட்டார் உனக்கு தீமையே செய்தாலும் விஷம் போன்ற வார்த்தைகளை கொட்டி விடாதே என குறிக்க பாலும்.

வாழைபழம் எப்படி விதையே இல்லாவிட்டாலும் மூலமரத்தை சார்ந்து கன்றை தருகிறதோ அது போல் கணவனை சார்ந்து வம்சவிருத்தியை நீ தரவேணும் என குறிக்க பழமும் தருவர்.

மணமகனுக்கு ஏன் தருகிறார்கள் என்றால்,
ஏ ! மணமகனே பாலில் எப்படி தயிரும் நெய்யும் உள்ளதோ அதுபோல் இந்த பெண்ணிடமும் அறிவும் ஆற்றலும் உள்ளது பக்குவமாக உறையிட்டு பக்குவமாக கடைந்து வெண்ணையை நெய்யை எடுப்பாயாக பாலை கெட வைத்துவிடாதே என குறிக்க பாலும்.

வாழைமரத்தை எப்படி அதன் தாய் மரத்தில் இருந்து பக்குவமாக பிரித்து நடுவரோ அது போல் இந்த பெண்ணை உங்கள் குடும்ப தோட்டத்தில் நட்டுள்ளோம் அதை பட்டுபோக விடாமல் அதை பக்குவமாக கவனித்து அதிலிருந்து உங்கள் சந்ததிகளை வாழையடி வாழையாக விருத்தி செய்து கொள்ளுங்கள் என உணர்த்தவே பழமும் கொடுக்கிறார்கள்.

திருமணத்தில் பால் பழம் கொடுப்பது சும்மா ஒரு வேடிக்கையான செயல் அல்ல.

_ஒவ்வொரு செயலிலும் ஓர் அர்த்தம் உள்ளது._

#N2R #ENN2AAR #KnR2547

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...