Tuesday, 12 October 2021

சைக்கிள் ஓட்ட உரிமம் தேவைப்பட்டது. இது பற்றி யாருக்காவது தெரியுமா? Cycling license required. Does anyone know about this?


1960 ஆம் ஆண்டுகளில் சைக்கிள் வைத்திருப்பது ஆடம்பரமாக கருதப்பட்டது, அப்போது சைக்கிள் ஓட்ட உரிமம் தேவைப்பட்டது.

In the 1960s, owning a bicycle was considered a luxury, and cycling licenses were required.

1960 കളിൽ, സൈക്കിൾ സ്വന്തമാക്കുന്നത് ഒരു ആഡംബരമായി കണക്കാക്കപ്പെട്ടിരുന്നു, സൈക്കിൾ ലൈസൻസുകൾ ആവശ്യമാണ്.

Saturday, 15 May 2021

இந்த உலகில் கொரானோ தொற்று ஏற்படாமல் உங்களை காப்பாற்ற ஒரே ஒருவரால் மட்டுமே முடியும்!



அது நீங்கள் தான்

நீங்கள் தான் உங்களின் பாதுகாவலர்!
நீங்கள் தான் உங்களின் மருத்துவர்!
நீங்கள் தான் உங்களின் துப்புரவாளர்!
நீங்கள் தான் உங்கள் உடலை தாக்கவந்த கொரானோ எனும் அசுரனை வேட்டையாடும் கடவுள்!

*அது நீங்கள் தான்!*
*நீங்கள் மட்டும் தான்!!*

ஆரோக்கியமான வாழ்விற்கு விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.


மக்களின் செல்வன்
N2R நந்தகுமார்

Wednesday, 23 December 2020

தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளாக அமைந்துள்ள ஊர்கள்



_1.திருவள்ளூர் மாவட்டம்_
    🏛கும்மிடிப்பூண்டி
    🏛பொன்னேரி
    🏛திருத்தணி
    🏛திருவள்ளூர்
    🏛பூந்தமல்லி
    🏛ஆவடி

_2.சென்னை மாநகரம்_
    🏛மதுரவாயல்
    🏛அம்பத்தூர்
    🏛மாதவரம்
    🏛திருவொற்றியூர்
    🏛ராதாகிருஷ்ணன் நகர்
    🏛பெரம்பூர்
    🏛கொளத்தூர்
    🏛வில்லிவாக்கம்
    🏛திரு. வி. க நகர்
    🏛எழும்பூர்
    🏛ராயபுரம்
    🏛துறைமுகம்
    🏛சேப்பாக்கம்
    🏛ஆயிரம் விளக்கு
    🏛அண்ணா நகர்
    🏛விருகம்பாக்கம்
    🏛சைதாப்பேட்டை
    🏛தி நகர்
    🏛மயிலாப்பூர்
    🏛வேளச்சேரி
    🏛ஆலந்தூர்

_3.செங்கல்பட்டு மாவட்டம்_
    🏛சோழிங்கநல்லூர்
    🏛பல்லாவரம்
    🏛தாம்பரம்
    🏛செங்கல்பட்டு
    🏛திருப்போரூர்
    🏛செய்யூர்
    🏛மதுராந்தகம்

_4.காஞ்சிபுரம் மாவட்டம்_
    🏛திருப்பெரும்புதூர்
    🏛உத்திரமேரூர்
    🏛காஞ்சிபுரம்

_5.ராணிப்பேட்டை மாவட்டம்_
    🏛அரக்கோணம்
    🏛சோளிங்கர்
    🏛ராணிப்பேட்டை
    🏛ஆற்காடு

_6.வேலூர் மாவட்டம்_
    🏛காட்பாடி
    🏛வேலூர்
    🏛அணைக்கட்டு
    🏛கீழ்வைத்தியணான்குப்பம்
    🏛குடியாத்தம்

_7.திருப்பத்தூர் மாவட்டம்_
    🏛வாணியம்பாடி
    🏛ஆம்பூர்
    🏛ஜோலார்பேட்டை
    🏛திருப்பத்தூர்

_8.கிருஷ்ணகிரி மாவட்டம்_
    🏛ஊத்தங்கரை
    🏛பர்கூர்
    🏛கிருஷ்ணகிரி
    🏛வேப்பனஹள்ளி
    🏛ஓசூர்
    🏛தளி

_9.தர்மபுரி மாவட்டம்_
    🏛பாலக்கோடு
    🏛பென்னாகரம்
    🏛தர்மபுரி
    🏛பாப்பிரெட்டிப்பட்டி
    🏛அரூர்

_10.திருவண்ணாமலை மாவட்டம்_
    🏛செங்கம்
    🏛திருவண்ணாமலை
    🏛கீழ்பென்னாத்தூர்
    🏛கலசபாக்கம்
    🏛போளூர்
    🏛ஆரணி
    🏛செய்யாறு
    🏛வந்தவாசி

_11.விழுப்புரம் மாவட்டம்_
    🏛செஞ்சி
    🏛மயிலம்
    🏛திண்டிவனம்
    🏛வானூர்
    🏛விழுப்புரம்
    🏛விக்கிரவாண்டி

_12.கள்ளக்குறிச்சி மாவட்டம்_
    🏛திருக்கோயிலூர்
    🏛உளுந்தூர்பேட்டை
    🏛ரிஷிவந்தியம்
    🏛சங்கராபுரம்
    🏛கள்ளக்குறிச்சி

_13.சேலம் மாவட்டம்_
    🏛கங்கவள்ளி
    🏛ஆத்தூர்
    🏛ஏற்காடு
    🏛ஓமலூர்
    🏛மேட்டூர்
    🏛எடப்பாடி
    🏛சங்ககிரி
    🏛மேற்கு சேலம்
    🏛வடக்கு சேலம்
    🏛தெற்கு சேலம்
    🏛வீரபாண்டி

_14.நாமக்கல் மாவட்டம்_
    🏛ராசிபுரம்
    🏛சேந்தமங்கலம்
    🏛நாமக்கல்
    🏛பரமத்தி வேலூர்
    🏛திருச்செங்கோடு
    🏛குமாரபாளையம்

_15.ஈரோடு மாவட்டம்_
    🏛கிழக்கு ஈரோடு
    🏛மேற்கு ஈரோடு
    🏛மொடக்குறிச்சி
    🏛பெருந்துறை
    🏛பவானி
    🏛அந்தியூர்
    🏛கோபிசெட்டிபாளையம்
    🏛பவானிசாகர்

_16.திருப்பூர் மாவட்டம்_
    🏛தாராபுரம்
    🏛காங்கேயம்
    🏛அவிநாசி
    🏛வடக்கு திருப்பூர்
    🏛தெற்கு திருப்பூர்
    🏛பல்லடம்
    🏛உடுமலைப்பேட்டை
    🏛மடத்துக்குளம்

_17.நீலகிரி மாவட்டம்_
    🏛உதகமண்டலம்
    🏛கூடலூர்
    🏛குன்னூர்

_18.கோயம்புத்தூர் மாவட்டம்_
    🏛மேட்டுப்பாளையம்
    🏛சூலூர்
    🏛கவுண்டம்பாளையம்
    🏛வடக்கு கோயம்புத்தூர்
    🏛தொண்டாமுத்தூர்
    🏛தெற்கு கோயம்புத்தூர்
    🏛சிங்காநல்லூர்
    🏛கிணத்துக்கடவு
    🏛பொள்ளாச்சி
    🏛வால்பாறை

_19.திண்டுக்கல் மாவட்டம்_
    🏛பழநி
    🏛ஒட்டன்சத்திரம்
    🏛ஆத்தூர்
    🏛நிலக்கோட்டை
    🏛நத்தம்
    🏛திண்டுக்கல்
    🏛வேடசந்தூர்

_20.கரூர் மாவட்டம்_
    🏛அரவக்குறிச்சி
    🏛கரூர்
    🏛கிருஷ்ணராயபுரம்
    🏛குளித்தலை

_21.திருச்சிராப்பள்ளி மாவட்டம்_
    🏛மணப்பாறை
    🏛ஸ்ரீரங்கம்
    🏛மேற்கு திருச்சி
    🏛கிழக்கு திருச்சி
    🏛திருவெறும்பூர்
    🏛லால்குடி
    🏛மண்ணச்சநல்லூர்
    🏛முசிறி
    🏛துறையூர்

_22.பெரம்பலூர் மாவட்டம்_
    🏛பெரம்பலூர்
    🏛குன்னம்

_23.அரியலூர் மாவட்டம்_
    🏛அரியலூர்
    🏛ஜெயங்கொண்டம்

_24.கடலூர் மாவட்டம்_
    🏛திட்டக்குடி
    🏛விருத்தாசலம்
    🏛நெய்வேலி
    🏛பண்ருட்டி
    🏛கடலூர்
    🏛குறிஞ்சிப்பாடி
    🏛புவனகிரி
    🏛சிதம்பரம்
    🏛காட்டுமன்னார்கோயில்
    
_25.நாகப்பட்டினம் மாவட்டம்_
    🏛சீர்காழி
    🏛மயிலாடுதுறை
    🏛பூம்புகார்
    🏛நாகப்பட்டினம்
    🏛கீழ்வேளூர்
    🏛வேதாரண்யம்
    
_26.திருவாரூர் மாவட்டம்_
    🏛திருத்துறைப்பூண்டி
    🏛மன்னார்குடி
    🏛திருவாரூர்
    🏛நன்னிலம்
    
_27.தஞ்சாவூர் மாவட்டம்_
    🏛திருவிடைமருதூர்
    🏛கும்பகோணம்
    🏛பாபநாசம்
    🏛திருவையாறு
    🏛தஞ்சாவூர்
    🏛ஒரத்தநாடு
    🏛பட்டுக்கோட்டை
    🏛பேராவூரணி

_28.புதுக்கோட்டை மாவட்டம்_
    🏛கந்தர்வகோட்டை
    🏛விராலிமலை
    🏛புதுக்கோட்டை
    🏛திருமயம்
    🏛ஆலங்குடி
    🏛அறந்தாங்கி

_29.சிவகங்கை மாவட்டம்_
    🏛காரைக்குடி
    🏛திருப்பத்தூர்
    🏛சிவகங்கை
    🏛மானாமதுரை

_30.மதுரை மாவட்டம்_
    🏛மேலூர்
    🏛கிழக்கு மதுரை
    🏛சோழவந்தான்
    🏛வடக்கு மதுரை
    🏛தெற்கு மதுரை
    🏛மத்திய மதுரை
    🏛மேற்கு மதுரை
    🏛திருப்பரங்குன்றம்
    🏛திருமங்கலம்
    🏛உசிலம்பட்டி
    
_31.தேனி மாவட்டம்_
    🏛ஆண்டிபட்டி
    🏛பெரியகுளம்
    🏛போடிநாயக்கனூர்
    🏛கம்பம்

_32.விருதுநகர் மாவட்டம்_
    🏛ராஜபாளையம்
    🏛திருவில்லிபுத்தூர்
    🏛சாத்தூர்
    🏛சிவகாசி
    🏛விருதுநகர்
    🏛அருப்புக்கோட்டை
    🏛திருச்சுழி

_33.ராமநாதபுரம் மாவட்டம்_
    🏛பரமக்குடி
    🏛திருவாடானை
    🏛ராமநாதபுரம்
    🏛முதுகுளத்தூர்

_34.தூத்துக்குடி மாவட்டம்_
    🏛விளாத்திகுளம்
    🏛தூத்துக்குடி
    🏛திருச்செந்தூர்
    🏛ஸ்ரீவைகுண்டம்
    🏛ஒட்டப்பிடாரம்
    🏛கோவில்பட்டி

_35.தென்காசி மாவட்டம்_
    🏛சங்கரன்கோவில்
    🏛வாசுதேவநல்லூர்
    🏛கடையநல்லூர்
    🏛தென்காசி
    🏛ஆலங்குளம்

_36.திருநெல்வேலி மாவட்டம்_
    🏛திருநெல்வேலி
    🏛அம்பாசமுத்திரம்
    🏛பாளையங்கோட்டை
    🏛நாங்குநேரி
    🏛ராதாபுரம்

_37.கன்னியாகுமரி மாவட்டம்_
    🏛கன்னியாகுமரி
    🏛நாகர்கோவில்
    🏛குளச்சல்
    🏛பத்மநாபபுரம்
    🏛விளவங்கோடு
    🏛கிள்ளியூர்

Channel N2R 

Friday, 11 December 2020

ஏழை மக்களின் பசியாற்றிய மக்கள் சேவகர் சுப்பிரமணியம் சாந்தியடைந்தார்! சாந்தி கியர்ஸ் அறங்காவலர் மரணம்!!


கோவை : பல்வேறு விதங்களில் மக்களுக்கு சேவை செய்து வந்த கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (வயது 78) இன்று உயிரிழந்தார்.

இவர் கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 துவங்கி, இயந்திர உதிரி பாகங்களை பலவேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தவர் சுப்ரமணியம்.

கடந்த 1996 ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கினார்.
இந்த அமைப்பின் அறங்காவலராக இருந்து வந்தார் சுப்ரமணியம். சாந்தி கியர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வேறு நிறுவனத்திற்கு விற்கபட்டது.

சாந்தி சோசியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.

உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றை நடத்தி லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தார்.

மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஏராளமானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.

சாந்தி மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் வெறும் ரூ.30 மட்டும் வசூலிக்கப்பட்டு வருகிறது. மருத்தகங்களிலும் 30 சதவீதம் விலை குறைவில் அனைத்து மருந்துகளும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் மருத்துவ ஆலோசனை பெறவும் , பரிசோதனைகள் செய்யவும்,மருந்துகள் வாங்கவும் பொது மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். சாந்தி சோசியல் சர்வீஸ் பெட்ரோல் பங்கில், புதிய ஸ்டாக் வரும் போது என்ன விலையோ, அதே விலை அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படும்.

சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின்மயானமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்தகைய சேவைகளை செய்து வந்த சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுப்பிரமணியம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

tamil


நீங்க நல்ல படிச்சா உங்க இங்கிலீஷ் டீச்சர விட நல்ல இங்கிலீஷ் பேசலாம்...

நீங்க எவ்வளவு நல்லா படிச்சாலும் உங்க தமிழ் வாத்தியரை விட சிறப்பா தமிழ் பேசமுடியாது...

-N2R நந்தகுமார் 

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...