Tuesday, 23 April 2019

பஞ்ச பாண்டவர்களின் தாகம் தீர்த்த நஞ்சுப் பொய்கைத் தீர்த்தம் எங்கிருக்கிறது தெரியுமா..?

 குமரி மாவட்டத்தில், கன்னியாகுமரி முக்கடல் சங்கமம் மிகவும் புனிதம் மிக்கதாக போற்றப்படுகிறது.அந்தப் பகுதியில் இயற்கை எழில் சூழ்ந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் இடம் சொத்தவிளை கடற்கரை. இந்தக் கடற்கரையை ஒட்டியவாறு பஞ்சபாண்டவர்களில் நான்குபேர் தண்ணீர் அருந்தி இறந்துபோன நஞ்சுப் பொய்கையும் அதையொட்டி மஹாவிஷ்ணு ஆலயமும் அமைந்திருக்கிறது. பஞ்ச பாண்டவர்களில் தர்மனைத் தவிர மற்ற நால்வரும் தண்ணீர் குடித்து செத்துப்போனதால் இந்த பகுதிக்கு செத்தவிளை எனப் பெயர் இருந்திருக்கிறது. காலப்போக்கில் மருவி சொத்தவிளை என மாறியிருக்கிறது. பாண்டவ சகோதரர்களில் நான்குபேர் தடாகத்தில் தண்ணீர் குடித்ததால் மாண்டுபோனது பற்றி மஹாபாரதத்தில் சொல்லப்படும் சம்பவத்தைப் பார்ப்போம்.


நஞ்சுப் பொய்கை : 


மஹாபாரதத்தில் சகுனியின் சூழ்ச்சியால் சூதாட்டத்தில் துரியோதனனிடம் நாட்டை இழந்தனர் பஞ்ச பாண்டவர்கள். சூதாட்டத்தில் தோற்றுப்போனதால் 12 வருடங்கள் வனவாசமும், ஓர் ஆண்டு அஞ்ஞாத வாசமும் (தலைமறைவு வாழ்க்கை) செய்யும் நிலை பஞ்சபாண்டவர்களுக்கு ஏற்பட்டது. பாண்டவர்களும் பாஞ்சாலியுடன் வனவாசத்தில் ஈடுபட்டனர். 12 ஆண்டுகால வனவாசம் ஒருசில தினங்களில் முடிவுறும் தருவாயில் இருந்த சமயத்தில்தான் அந்தச் சம்பவம் நேர்ந்தது. அந்தணர் ஒருவருடைய வேள்வி தீ மூட்டும் அரணிக்கட்டை ஒரு மானின் கொம்புகளில் மாட்டிக்கொண்டது. மருண்டுபோன மான் திக்குத்தெரியாமல் ஓட்டம்பிடித்தது. மானிடமிருந்து அரணிக்கட்டையை மீட்டுத் தரும்படி பாண்டவர்களிடம் அந்தணர் வேண்டினார். பாண்டவர்கள் மானைத் துரத்தியபடி ஓடினர். வனத்தில் வெகுதூரம் சென்றபிறகும் மானைப் பிடிக்கமுடியாமல் தளர்ந்துபோய் ஓர் ஆலமரத்தடியில் அமர்ந்தனர். அந்தணருக்கு உதவமுடியாமல் போய்விட்டதே என்று பாண்டவர்கள் மிகவும் வருந்தினர். 


அனைவருக்கும் தாகம் ஏற்பட்டதால் எங்கிருந்தாவது தண்ணீர் எடுத்துவரும்படி நகுலனிடம் தருமர் கூறினார். தண்ணீர் தேடிச்சென்ற நகுலன் வனத்தில் ஸ்படிகம் போன்று தூய்மையான தடாகத்தை கண்டான். முதலில் தனது தாகத்தை தணித்துக்கொண்டு அம்புகள் வைக்கும் தூணியில் சகோதரர்களுக்கு தண்ணீர் எடுத்துச்செல்ல திட்டமிட்டான். அவன் பொய்கையில் இறங்கி தண்ணீர் பருக யத்தனித்தபோது  அசரீர் ஒலித்தது. "இந்தத் தடாகம் எனக்குச் சொந்தமானது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். அதன்பிறகு நீர் பருகலாம்" என்றது அசரீரி. சுற்றும்முற்றும் பார்த்த நகுலன் யாரும் கண்ணுக்கு புலப்படாததால் அசரீரியை அலட்சியப்படுத்திவிட்டு தண்ணீர் குடித்தான். ஒரு மிடறு தண்ணீர் குடித்த மாத்திரத்திலேயே நகுலன் செத்தவன் போன்று கீழே விழுந்தான்.


கிருஷ்ணன் : 


வெகுநேரம் ஆகியும் தண்ணீர் எடுக்கச்சென்ற நகுலனைக் காணாததால் இரண்டாவதாக சகாதேவன் அனுப்பப்பட்டான். அவனும் திரும்ப வரவில்லை. மூன்றாவதாக அர்ஜூனன் சென்றான். உடலில் காயம் ஏதும் இல்லாமலே சகோதரர்கள் இருவரும் மரணித்து தரையில் கிடந்ததைப் பார்த்துத் திகைத்தான். கண்ணுக்குத் தெரியாத எதிரியை நோக்கி மந்திர அஸ்திரம் ஒன்றை எய்தான் அர்ஜூனன். அப்போதும் அதே குரல் ஒலித்தது "உன் பாணம் என்னை ஒன்றும் செய்யாது. முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு விடைசொல். அதன்பிறகு நீர் எடுத்துச்செல்" என்றது.


''முதலில் தாகத்தைத் தீர்த்துக்கொண்டு உன்கேள்விகளுக்கு விடை சொல்லுகிறேன் என்று கூறியபடி தண்ணீர் குடித்த அர்ஜூனனும் மாண்டு வீழ்ந்தான். மூன்று சகோதரர்களும் திரும்பி வராததால் தருமன் மனக்கவலை அடைந்தான். அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டிருக்கக்கூடும் என நினைத்தான். "தம்பிகளுக்கு என்னதான் ஆனது என்று பார். எனக்கு மிகவும் தாகமாக இருக்கிறது கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா" என்று பீமனிடம் தருமன் கூறினார். தண்ணீர் எடுக்கச்சென்ற பீமன் பொய்கை அருகே தனது மூன்று சகோதரர்களும் சடலமாகக் கிடப்பதைப் பார்த்து பொங்கி எழுந்தான். இது யக்ஷர்களின் வேலையாகத்தான் இருக்கும். முதலில் தாகத்தை தணித்துக்கொண்டு அவர்களை ஒழித்துக் கட்டுகிறேன் என சூளுரைத்தபடி பீமன் தடாகத்தில் இறங்கினான். மீண்டும் அதே அசரீரி ஒலித்தது. 'எனக்கு நிபந்தனை விதிக்க இவன் யார்?' என அலட்சியமாக நினைத்தபடி தண்ணீரைக் குடித்த பீமன் முந்தைய மூவரைப் போன்றே மாண்டு விழுந்தான்.


விநாயகர் :


தண்ணீர் எடுக்கப்போன தம்பிகள் நீண்டநேரம் ஆகியும் வராததால் வருந்தியபடி தண்ணீர் தேடி தானே நடக்கலானார் தருமன். தடாகம் அருகே வந்தவர் தனது நான்கு சகோதரர்களும் மாண்டுகிடப்பதைக் கண்டு மிகவும் வருந்தினார். இங்கு போர் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை என்று நினைத்தவர் உடல் தளர்ச்சியை நீக்கிக்கொள்ள முதலில் தாகம் தணிக்க முற்பட்டார். அப்போது மீண்டும் அசரீரி ஒலித்தது. "என் பேச்சை பொருட்படுத்தாமல் தண்ணீர் குடித்ததால் உன் உடன்பிறந்தவர்கள் மாண்டுபோனார்கள். முதலில் நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல். என்னை அலட்சியப்படுத்தினால் உன் தம்பிகளின் கதிதான் உனக்கும் ஏற்படும்" என்று குரல் ஒலித்தது. அசரீரிக்கு மதிப்பளித்து தண்ணீர் குடிக்காமல் கரையேறிய தர்மர் "இந்தப் பொய்கை உனக்குச் சொந்தம் எனக் கூறுகிறாய். உனது அனுமதி இல்லாமல் தண்ணீர் எடுக்க எனக்கு உரிமை இல்லை. உன் கேள்விகளைக் கேள் முடிந்த அளவுக்கு பதில் சொல்லுகிறேன்" என்றார்.


எதை இழப்பதால் இன்பம் ஓங்குகிறது என்ற அசரீரியின் கேள்விக்கு சினத்தை இழப்பதால் என பதில் சொன்னார் தருமன். இதுபோன்று பல கேள்விகளை அசரீரி கேட்டபோது அசராமல் பதில் சொன்னார் தருமன். தருமனின் பதில்களால் மகிழ்ந்துபோன அந்த குரல் இறுதியில் "மடிந்து போன நால்வரில் யாராவது ஒருவருக்கு நான் உயிர் தருகிறேன். யாருக்கு உயிர் கொடுக்கவேண்டும்" எனக் கேட்டது.

''நகுலனை எனக்குத்  திருப்பிக்கொடுங்கள்'' என தருமர் வேண்டினார். "யாராலும் வெல்ல முடியாத சிறந்த போர்வீரர்களான பீமன், அர்ஜூனன் ஆகியோரில் ஒருவரைக் கேட்காமல் இரண்டாம்தர வீரனாக இருக்கிறவனை எதற்குத் தேர்ந்தெடுக்கிறாய்" என அசரீரி கேட்டது.


அதற்கு தருமன், "என் தந்தை பாண்டுவுக்கு குந்தி, மாத்ரி ஆகிய இரண்டு மனைவிகள். நான், பீமன், அர்ஜூனன் ஆகியோர் குந்திக்கு பிறந்தோம். மாத்ரிக்கு நகுலன், சகாதேவன் ஆகியோர் பிறந்தனர். என் தாய்க்கு பக்திப்பூர்வமாக சேவைசெய்ய நான் உயிரோடு இருக்கிறேன். மற்றொரு தாயான மாத்ரி இறந்துவிட்டாள். அவளுக்குச் செய்யவேண்டிய சிராத்தம் போன்ற கடமைகளைச் செய்ய ஒரு மகன் வேண்டும் என்பதால் நகுலனை உயிர்ப்பிக்க வேண்டுகிறேன். போர்புரிந்து வெற்றிபெறுவது என் வாழ்கையின் குறிக்கோள் அல்ல" என்றான்.


தருமனின் இந்த பதிலைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்த தர்மதேவன் (யமதர்மன்) அங்கு பிரசன்னமானார். "தருமா நான் உனக்கு தெய்விகத் தந்தையாவேன். அந்தணரின் அரணிக்கட்டையை மான் வடிவில் எடுத்து வந்தது நான்தான். உனது தர்ம சிந்தனையால் நான் மகிழ்ச்சியடைந்தேன். உனது நான்கு சகோதரர்களும் மீண்டும் உயிர் பெற்று எழுவார்கள்" என்று வரம் வழங்கிவிட்டு மறைந்தார் தர்மதேவன். தருமனின் நான்கு சகோதரர்களும் தூங்கி எழுவதுபோன்று கண்விழித்தார்கள். அரணிக்கட்டையும் கிடைத்தது.


சர்வேஸ்வரன் : 


அந்தணருக்கு அரணிக்கட்டையை கொடுத்த பாண்டவர்கள் ஒரு வருடம் அஞ்ஞாத வாசத்துக்குத் தயாரானார்கள்.

மகாபாரத சம்பவத்தில் நகுலன் தொடங்கி பீமன் வரையில் நால்வரும் நீர் அருந்தி செத்துப்போன நஞ்சுப் பொய்கைதான் சொத்தவிளை கடற்கரையை ஒட்டி மகாவிஷ்ணு கோயிலுடன் இணைந்திருக்கிறது என்கிறார்கள் இப்பகுதிவாசிகள்.


சொத்தவிளை குறித்து ஆய்வு செய்து புத்தகம் வெளியிட்டிருக்கும் பேராசிரியர் ப.சர்வேஸ்வரன் கூறும்போது, "சொத்தவிளை நஞ்சுப் பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அமைக்கப்பட்டது. மண்ணுக்கு அடியில் கிடைக்கும் வெள்ளைக் கல் கொண்டு நேர்த்தியாக இக்கோயிலின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு, மகாலட்சுமி தேவியும் காட்சிதருகிறார்கள். ஆரம்பத்தில் மகாவிஷ்ணுவின் பஞ்சலோக ரூபம் இருந்திருக்கிறது. பிற்காலத்தில் பஞ்சலோக ரூபம் காணாமல் போனது. மகாகவிஷ்ணு, லட்சுமி தேவியும் நின்றகோலத்தில் காட்சியளிக்கின்றனர். வலப்புறம் சந்நிதியில் சிவலிங்கமும், லிங்கத்தின் எதிரே நந்தியெம்பெருமானும் காட்சியளிக்கிறார்கள். இக்கோயிலின் புனிதத் தீர்த்தமான நஞ்சுப் பொய்கையில் கால்நடைகள் நீர் அருந்தாது. நஞ்சுப் பொய்கை என்பதால் பொதுமக்களும் பயன்படுத்துவது இல்லை. மதுரை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பலர் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டு நஞ்சுப் பொய்கையிலிருந்து தீர்த்தம் எடுத்துச் செல்கிறார்கள். இந்தத் தீர்த்ததால் உடலில் ஏற்படும் ஆறாத புண்ணும் ஆறிவிடுவதாக கூறுகிறார்கள். எவ்வளவு கோடையாக இருந்தாலும் இந்தப் பொய்கை வறண்டுபோகாது. 2004-ம் ஆண்டு


ராமன் : 


ஏற்பட்ட சுனாமியில் இந்தக் கோயிலில் தண்ணீர் தேங்கினாலும் எந்த சேதாரமும் ஏற்படவில்லை. நஞ்சுப் பொய்கை பற்றி கேள்விப்பட்டு பக்தர்கள் வருகை இப்போது அதிகரித்துள்ளது" என்றார்.

பொய்கையைப் பார்த்தவண்ணம் வினைதீர்க்கும் விநாயகர் சந்நிதி அமைந்திருக்கிறது. பொய்கைக் கரையில் யமதர்மனுக்கு வடக்குப் பார்த்து பீடம் அமைக்கப்பட்டிருக்கிறது. நவகிரக சந்நிதி, மகாவிஷ்ணுக் கோயிலைப் பார்த்தவாறு ஆஞ்சநேயர் சந்நிதியும் உள்ளது. எல்லாவற்றுக்கும் மேலாக மகாவிஷ்ணு, சிவன் சந்நிதிக்கு மத்தியில் பஞ்சபாண்டவர் பீடம் ஒன்று அமைக்கப்பட்டு வழிபாடு செய்யப்படுகிறது. பஞ்சபாண்டவர் பீடத்தில் தனியாக படையல் இடப்படுகிறது.


"விநாயகர் சதூர்த்தி, வைகுண்ட ஏகாதசி தினங்களில் கோயில் விழாக்கள் நடக்கிறது. பிரதோஷம், அனுமன் ஜயந்தியின்போதும் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைதோறும் மாலை 4.30 மணிமுதல் 6.30 மணி வரை சிறப்பு பூஜை நடக்கிறது. இதில் ஏராளமான பக்கதர்கள் கலந்து கொள்வார்கள்" என்கிறார் கோயில் பூசாரி ராமன்.


எங்கிருக்கிறது எப்படிச் செல்வது?


நாகர்கோவிலிலிருந்து 12 கி.மீ. தொலைவில் சொத்தவிளை நஞ்சுப் பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் அமைந்திருக்கிறது. நாகர்கோவில் மீனாட்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து அம்பலப்பதி, மணக்குடி செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் செல்லலாம். சொத்தவிளை நஞ்சுப் பொய்கை மகாவிஷ்ணு ஆலயம் வருபவர்கள் நடந்து செல்லும் தூரத்தில் உள்ள சொத்தவிளை கடற்கரையின் அழகை ரசிக்கலாம். அய்யா வைகுண்டரின் ஐந்து பதிகளில் ஒன்றான அம்பலப்பதி கோயிலும் அருகில்தான் அமைந்துள்ளது. சொத்தவிளை வரும் பக்தர்கள் மனதுக்கு நிம்மதி நிச்சயம்.


N2R NandhakumaR

Channel N2R

Tuesday, 16 April 2019

முருகனின் 16 வகை கோலங்கள்....


Channel N2R

1. ஞானசக்திதரர் : 

இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.


2.கந்தசாமி : 

இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.


3. ஆறுமுக தேவசேனாபதி : 

இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.


4. சுப்பிரமணியர் : 

இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.


5. கஜவாகனர் : 

இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.


6.சரவணபவர் : 

தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.


7. கார்த்திகேயர் : 

இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.


8. குமாரசாமி : 

இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.


9. சண்முகர் : 

இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.


10. தாரகாரி : 

ஹதாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.


11. சேனானி : 

இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.


12. பிரம்மசாஸ்தா : 

இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.


13. வள்ளிகல்யாணசுந்தரர் : 

இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.


14. பாலசுவாமி : 

இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.


15. சிரவுபஞ்சபேதனர் : 

இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.


16. சிகிவாகனர் : 

மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.


ENN2AAR Tours 'n' Travels

+91 909 5004 999

Monday, 25 March 2019

இப்படியும் ஒரு சாமி ஊர்வலம்


*புதுவை மாநிலம். பாகூர் கொம்யூன் பிள்ளையார் குப்பம்,*
 *ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் பங்குனி உத்திரம் திருவிழாவில்*

*ஸ்ரீமுருகப் பெருமான் புல்லட் வாகனத்தில் தலைக் கவசத்துடன் வீதியுலா வந்து..,*

 *பக்தர்களுக்கு அருள்பாலித்த புதுமையான காட்சி.*

Ruler can do anything, so Born to rule the Galaxy

Sunday, 24 March 2019

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?




ஜனவரி: (மார்கழி - தை)
1) கத்தரி, 2)மிளகாய், 3)பாகல், 4) தக்காளி, 5) பூசணி, 6)சுரை, 7)முள்ளங்கி,8) கீரைகள்.

பிப்ரவரி: (தை - மாசி)
1) கத்தரி, 2)தக்காளி, 3) மிளகாய், 4)பாகல், 5) வெண்டை, 6)சுரை, 7) கொத்தவரை, 8)பீர்க்கன், 9) கீரைகள், 10)கோவைக்காய்.

மார்ச்: (மாசி - பங்குனி)
1)வெண்டை, 2)பாகல், 3)தக்காளி, 4)கோவை, 5)கொத்தவரை, 6)பீர்க்கன்.

ஏப்ரல் : (பங்குனி - சித்திரை)
1)கொத்தவரை, 2) வெண்டை.

மே: (சித்திரை - வைகாசி)
1) கத்தரி, 2)தக்காளி, 3)கொத்தவரை.

ஜூன் : (வைகாசி - ஆனி)
1) கத்தரி, 2)தக்காளி, 3)கோவை, 4)பூசணி,5) கீரைகள், 6)வெண்டை.7) செடி முருங்கை

ஜூலை: (ஆனி -ஆடி)
1) மிளகாய், 2)பாகல், 3)சுரை, 4)பூசணி,5) பீர்க்கன், 6)முள்ளங்கி, 7)வெண்டை, 8)கொத்தவரை, 9)தக்காளி.

ஆகஸ்ட்: (ஆடி - ஆவணி)
1) முள்ளங்கி, 2)பீர்க்கன், 3)பாகல், 4) மிளகாய், 5)வெண்டை, 6)சுரை..

செப்டம்பர்: (ஆவணி - புரட்டாசி)
1) கத்தரி, 2)முள்ளங்கி, 3)கீரை, 4)பீர்க்கன், 5)பூசணி.

அக்டோபர்: (புரட்டாசி - ஐப்பசி)
1)கத்தரி, 2)முள்ளங்கி.

நவம்பர் : (ஐப்பசி - கார்த்திகை)
1)செடிமுருங்கை, 2)கத்தரி, 3)தக்காளி, 4)முள்ளங்கி, 5)பூசணி.

டிசம்பர் : (கார்த்திகை - மார்கழி)
1)கத்தரி, 2)தக்காளி.
Ruler can do anything, so Born to rule the Galaxy

Saturday, 9 March 2019

Kongu Vellala Gounder Kulam


  1. Aanthuvan Kulam  -  அந்துவன்குலம்
  2. Azhagu Kulam  -  அழகுக்குலம்
  3. Aathe Kulam  -  ஆதிக்குலம்
  4. Aanthai Kulam  -  ஆந்தைக்குலம்
  5. Aadar Kulam  -  ஆடர்க்குலம்
  6. Aavan Kulam  -  ஆவன்குலம்
  7. Eenjan Kulam  -  ஈஞ்சன்குலம்
  8. Ozukkar Kulam  -  ஒழுக்கர்குலம்
  9. Oothaalar Kulam  -  ஓதாளர்க்குலம்
  10. Kannakkan Kulam  -  கணக்கன்குலம்
  11. Kannan Kulam  -  கண்ணங்குலம்
  12. Kannaanthai Kulam  -  கண்ணாந்தைக்குலம்
  13. Kaadai Kulam  -  காடைக்குலம்
  14. Kaari Kulam  -  காரிக்குலம்
  15. Keeran Kulam  -  கீரன்க்குலம்
  16. Kuzhlaayan Kulam  -  குழையன்குலம்
  17. Koorai Kulam  -  கூறைக்குலம்
  18. Koovendhar Kulam  -  கோவேந்தர்குலம்
  19. Saathanthai Kulam  -  சாத்தந்தைக்குலம்
  20. Sellan Kulam  -  செல்லன்குலம்
  21. Semban Kulam  -  செம்பன்குலம்
  22. Sengkannan Kulam  -  செங்கண்ணன்குலம்
  23. Sembuthan Kulam  -  செம்பூதன்குலம்
  24. Senkunnier Kulam  -  செங்குன்னியர்குலம்
  25. Sevvaayar Kulam  -  செவ்வாயர்குலம்
  26. Cheran Kulam  -  சேரன்குலம்
  27. Chedan Kulam  -  சேடன்குலம்
  28. Dananjayan Kulam  -  தனஞ்செயன்குலம்
  29. Thazhinji Kulam  -  தழிஞ்சிகுலம்
  30. Thooran Kulam  -  தூரன்குலம்
  31. Devendran Kulam  -  தேவேந்திரன்குலம்
  32. Thoodar Kulam   -  தோடர்குலம்
  33. Neerunniyar Kulam  -  நீருண்ணியர்குலம
  34. Pavazhalar Kulam  -  பவழர்குலம்
  35. Panayan Kulam  -  பணையன்குலம்
  36. Pathuman Kulam  -  பதுமன்குலம்
  37. Payiran Kulam  -  பயிரன்குலம்
  38. Panagkaadar Kulam  -  பனங்காடர்குலம்
  39. Pathariar Kulam  -  பதறியர்குலம்
  40. Pandiyan Kulam  -  பாண்டியன்குலம்
  41. Pillar Kulam  -  பில்லர்குலம்
  42. Poosan Kulam  -  பூசன்குலம்
  43. Poochanthai Kulam  -  பூச்சந்தைகுலம்
  44. Periyan Kulam  -  பெரியன்குலம்
  45. Perunkudiyaan Kulam  -  பெருங்குடியான்குலம்
  46. Porulaanthai Kulam  -  பொருளாந்தைக்குலம்
  47. Ponnar Kulam  -  பொன்னர்குலம்
  48. Maniyan Kulam  -  மணியன்குலம்
  49. Mayilar Kulam  -  மயிலர்குலம்
  50. Maadar Kulam  -  மாடர்குலம்
  51. Mutthan Kulam  -  முத்தன்குலம்
  52. Muzhukathan Kulam  -  முழுக்காதன்குலம்
  53. Medhi Kulam  -  மேதிக்குலம்
  54. Vannakkan  Kulam  -  வண்ணக்கன்குலம்
  55. Villiyar Kulam  -  வில்லியர்குலம்
  56. Vilayan Kulam  -  விளையன்குலம்
  57. Vizhiyar Kulam  -  விழியர்குலம்
  58. Venduvan Kulam  -  வெண்டுவன்குலம்
  59. Vennag Kulam  -  வெண்ணங்குலம்
  60. Vellampar Kulam  -  வெள்ளம்பர்குலர்
Ruler can do anything, so Born to rule the Galaxy

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...