Tuesday, 16 April 2019

முருகனின் 16 வகை கோலங்கள்....


Channel N2R

1. ஞானசக்திதரர் : 

இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். திருத்தணிகையில் எழுந்தருளியிருக்கும் மூலவர் திருவடிவம் ஹஞானசக்திதரர்’ திருக்கோலமாகும்.


2.கந்தசாமி : 

இவரை வழிபட்டால் சகல காரியங்களும் சித்தியாகும். பழனிமலை ஆண்டவர் திருவடிவம் இது.


3. ஆறுமுக தேவசேனாபதி : 

இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சென்னிமலையாண்டவர் திருக்கோயிலில் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் இந்த திருவுருவம் உள்ளது.


4. சுப்பிரமணியர் : 

இவர் தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தப் பேற்றினை அளிக்கக் கூடியவர். நாகை மாவட்டத்திலுள்ள திருவிடைகழி முருகன் கோயில் மூலவர் சுப்பிரமண்யர் ஆவார்.


5. கஜவாகனர் : 

இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும். திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோயில் கீழைக் கோபுரம் ஆகிய இடங்களில் யானை மீதிருக்கும் இவரது திருவுருவம் உள்ளது.


6.சரவணபவர் : 

தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர். சென்னிமலை, திருப்போரூர் ஆகிய இடங்களில் இவரது திருவடிவம் இருக்கிறது.


7. கார்த்திகேயர் : 

இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும். கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோயிலிலும், தாராசுரம் ஐராவதீச்வரர் கோயிலிலும் கார்த்திகேயர் திருவுருவம் உள்ளது.


8. குமாரசாமி : 

இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலில் இவரது திருவடிவம் உண்டு. கங்கை கொண்ட சோழபுரத்தில் இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது.


9. சண்முகர் : 

இவரை வழிபட்டால் சிவசக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும். திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் சண்முகர் திருவடிவமாகும்.


10. தாரகாரி : 

ஹதாரகாசுரன்’ என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இத்திரு நாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலி மலையில் உள்ள முருகன் கோயிலில் தாரகாரி இருக்கிறார்.


11. சேனானி : 

இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றிகிடைக்கும். பொறாமை நீங்கும். தேவிகாபுரம் ஆலயத்தில் சேனானி திருவுருவம் இருக்கிறது.


12. பிரம்மசாஸ்தா : 

இவரை வழிபட்டால் எல்லா வகைவித்தைகளிலும் தேர்ச்சி பெறலாம். சகலவித கலையறிவும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி கிட்டும். காஞ்சிபுரத்தில் உள்ள குமரக்கோட்டம் ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் பிரம்மசாஸ்தா திருக்கோலம் உள்ளது.


13. வள்ளிகல்யாணசுந்தரர் : 

இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும், கன்னிப் பெண்களுக்குக் கல்யாண பாக்கியம் கிடைக்கும். திருப்போரூர் முருகன் கோயில் தூண் ஒன்றில் இவர் திருவுருவம் இருக்கிறது.


14. பாலசுவாமி : 

இவர், உடல் ஊனங்களையும், குறைகளையும் அகற்றும் தெய்வம். இவரை வழிபடுபவர்களுக்கு உடல் நலம் கிடைக்கும். திருச்செந்தூர், திருக்கண்டிர், ஆண்டாள் கும்பம் கோயில்களில் பாலசுவாமி திருவுருவம் இருக்கிறது.


15. சிரவுபஞ்சபேதனர் : 

இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும். திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநளி பள்ளி ஆகிய இடங்களில்இவரது திருவுருவம் உண்டு.


16. சிகிவாகனர் : 

மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமையும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர்.


ENN2AAR Tours 'n' Travels

+91 909 5004 999

Monday, 25 March 2019

இப்படியும் ஒரு சாமி ஊர்வலம்


*புதுவை மாநிலம். பாகூர் கொம்யூன் பிள்ளையார் குப்பம்,*
 *ஸ்ரீ பாலமுருகன் திருக்கோயில் பங்குனி உத்திரம் திருவிழாவில்*

*ஸ்ரீமுருகப் பெருமான் புல்லட் வாகனத்தில் தலைக் கவசத்துடன் வீதியுலா வந்து..,*

 *பக்தர்களுக்கு அருள்பாலித்த புதுமையான காட்சி.*

Ruler can do anything, so Born to rule the Galaxy

Sunday, 24 March 2019

எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட வேண்டும்?




ஜனவரி: (மார்கழி - தை)
1) கத்தரி, 2)மிளகாய், 3)பாகல், 4) தக்காளி, 5) பூசணி, 6)சுரை, 7)முள்ளங்கி,8) கீரைகள்.

பிப்ரவரி: (தை - மாசி)
1) கத்தரி, 2)தக்காளி, 3) மிளகாய், 4)பாகல், 5) வெண்டை, 6)சுரை, 7) கொத்தவரை, 8)பீர்க்கன், 9) கீரைகள், 10)கோவைக்காய்.

மார்ச்: (மாசி - பங்குனி)
1)வெண்டை, 2)பாகல், 3)தக்காளி, 4)கோவை, 5)கொத்தவரை, 6)பீர்க்கன்.

ஏப்ரல் : (பங்குனி - சித்திரை)
1)கொத்தவரை, 2) வெண்டை.

மே: (சித்திரை - வைகாசி)
1) கத்தரி, 2)தக்காளி, 3)கொத்தவரை.

ஜூன் : (வைகாசி - ஆனி)
1) கத்தரி, 2)தக்காளி, 3)கோவை, 4)பூசணி,5) கீரைகள், 6)வெண்டை.7) செடி முருங்கை

ஜூலை: (ஆனி -ஆடி)
1) மிளகாய், 2)பாகல், 3)சுரை, 4)பூசணி,5) பீர்க்கன், 6)முள்ளங்கி, 7)வெண்டை, 8)கொத்தவரை, 9)தக்காளி.

ஆகஸ்ட்: (ஆடி - ஆவணி)
1) முள்ளங்கி, 2)பீர்க்கன், 3)பாகல், 4) மிளகாய், 5)வெண்டை, 6)சுரை..

செப்டம்பர்: (ஆவணி - புரட்டாசி)
1) கத்தரி, 2)முள்ளங்கி, 3)கீரை, 4)பீர்க்கன், 5)பூசணி.

அக்டோபர்: (புரட்டாசி - ஐப்பசி)
1)கத்தரி, 2)முள்ளங்கி.

நவம்பர் : (ஐப்பசி - கார்த்திகை)
1)செடிமுருங்கை, 2)கத்தரி, 3)தக்காளி, 4)முள்ளங்கி, 5)பூசணி.

டிசம்பர் : (கார்த்திகை - மார்கழி)
1)கத்தரி, 2)தக்காளி.
Ruler can do anything, so Born to rule the Galaxy

Saturday, 9 March 2019

Kongu Vellala Gounder Kulam


  1. Aanthuvan Kulam  -  அந்துவன்குலம்
  2. Azhagu Kulam  -  அழகுக்குலம்
  3. Aathe Kulam  -  ஆதிக்குலம்
  4. Aanthai Kulam  -  ஆந்தைக்குலம்
  5. Aadar Kulam  -  ஆடர்க்குலம்
  6. Aavan Kulam  -  ஆவன்குலம்
  7. Eenjan Kulam  -  ஈஞ்சன்குலம்
  8. Ozukkar Kulam  -  ஒழுக்கர்குலம்
  9. Oothaalar Kulam  -  ஓதாளர்க்குலம்
  10. Kannakkan Kulam  -  கணக்கன்குலம்
  11. Kannan Kulam  -  கண்ணங்குலம்
  12. Kannaanthai Kulam  -  கண்ணாந்தைக்குலம்
  13. Kaadai Kulam  -  காடைக்குலம்
  14. Kaari Kulam  -  காரிக்குலம்
  15. Keeran Kulam  -  கீரன்க்குலம்
  16. Kuzhlaayan Kulam  -  குழையன்குலம்
  17. Koorai Kulam  -  கூறைக்குலம்
  18. Koovendhar Kulam  -  கோவேந்தர்குலம்
  19. Saathanthai Kulam  -  சாத்தந்தைக்குலம்
  20. Sellan Kulam  -  செல்லன்குலம்
  21. Semban Kulam  -  செம்பன்குலம்
  22. Sengkannan Kulam  -  செங்கண்ணன்குலம்
  23. Sembuthan Kulam  -  செம்பூதன்குலம்
  24. Senkunnier Kulam  -  செங்குன்னியர்குலம்
  25. Sevvaayar Kulam  -  செவ்வாயர்குலம்
  26. Cheran Kulam  -  சேரன்குலம்
  27. Chedan Kulam  -  சேடன்குலம்
  28. Dananjayan Kulam  -  தனஞ்செயன்குலம்
  29. Thazhinji Kulam  -  தழிஞ்சிகுலம்
  30. Thooran Kulam  -  தூரன்குலம்
  31. Devendran Kulam  -  தேவேந்திரன்குலம்
  32. Thoodar Kulam   -  தோடர்குலம்
  33. Neerunniyar Kulam  -  நீருண்ணியர்குலம
  34. Pavazhalar Kulam  -  பவழர்குலம்
  35. Panayan Kulam  -  பணையன்குலம்
  36. Pathuman Kulam  -  பதுமன்குலம்
  37. Payiran Kulam  -  பயிரன்குலம்
  38. Panagkaadar Kulam  -  பனங்காடர்குலம்
  39. Pathariar Kulam  -  பதறியர்குலம்
  40. Pandiyan Kulam  -  பாண்டியன்குலம்
  41. Pillar Kulam  -  பில்லர்குலம்
  42. Poosan Kulam  -  பூசன்குலம்
  43. Poochanthai Kulam  -  பூச்சந்தைகுலம்
  44. Periyan Kulam  -  பெரியன்குலம்
  45. Perunkudiyaan Kulam  -  பெருங்குடியான்குலம்
  46. Porulaanthai Kulam  -  பொருளாந்தைக்குலம்
  47. Ponnar Kulam  -  பொன்னர்குலம்
  48. Maniyan Kulam  -  மணியன்குலம்
  49. Mayilar Kulam  -  மயிலர்குலம்
  50. Maadar Kulam  -  மாடர்குலம்
  51. Mutthan Kulam  -  முத்தன்குலம்
  52. Muzhukathan Kulam  -  முழுக்காதன்குலம்
  53. Medhi Kulam  -  மேதிக்குலம்
  54. Vannakkan  Kulam  -  வண்ணக்கன்குலம்
  55. Villiyar Kulam  -  வில்லியர்குலம்
  56. Vilayan Kulam  -  விளையன்குலம்
  57. Vizhiyar Kulam  -  விழியர்குலம்
  58. Venduvan Kulam  -  வெண்டுவன்குலம்
  59. Vennag Kulam  -  வெண்ணங்குலம்
  60. Vellampar Kulam  -  வெள்ளம்பர்குலர்
Ruler can do anything, so Born to rule the Galaxy

Tuesday, 12 February 2019

இறைவனின் கணக்குப் புத்தகம்

🌼எல்லாம் வல்ல இறைவனிடம் ஒரு கணக்குப் புத்தகம் இருக்கிறது. அதில் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பக்கம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

🌼ஓவ்வொருவருடைய ஒவ்வொரு செய்கையும் அவன் கவனத்திற்கு வராமல் போவதில்லை. செயல்களைச் செய்யும் போதே அவை தானாக அந்தப் பக்கத்தில் பதிவாகி விடும்.

🌼சித்திரகுப்தன் கணக்கு, நீதித் தீர்ப்பு நாளில் படிக்கப்படும் கணக்கு என்பது போல வேறு வேறு பெயர்களில் அழைத்தாலும் அப்படியொரு கணக்குப் புத்தகம் இருப்பதை பெரும்பாலான மதங்கள் ஒப்புக் கொள்கின்றன.

🌼மனிதன் போடும் கணக்கிற்கும் இறைவன் போடும் கணக்கிற்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. மனிதன் பெரியது என்று நினைக்கும் விஷயங்கள், இறைவன் கணக்கில் மதிப்பில்லாதவையாக குறிக்கப்பட்டு இருப்பதும் உண்டு.

🌼மனிதன் ஒன்றுமில்லை என்று நினைக்கும் விஷயங்கள் இறைவனின் புத்தகத்தில் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்படுவதும் உண்டு. எனவே ஒரு விஷயத்தில் தன் பங்கை மனிதன் நிர்ணயிப்பதற்கும், அதே விஷயத்தில் அவன் பங்கு இவ்வளவென்று இறைவன் தீர்மானிப்பதற்கும் இடையே பெருத்த வித்தியாசம் இருக்கிறது.

🌼மனிதன் தன் வாழ்நாளில் இத்தனை சாதித்தோம் என்று எண்ணி இறைவனிடம் எடுத்துப் போகும் கணக்கும், இறைவன் வைத்திருக்கும் மனிதனின் கணக்கும் பெரும்பாலும் ஒத்துப்போவதில்லை.

🌼மனிதன் எதையும் பெரும்பாலும் பணத்தால் அளக்கிறான். இறைவன் மனத்தால் அளக்கிறான். மனிதன் ஒன்றிற்கு எவ்வளவு செலவானது என்று பார்த்து மதிப்பிடுகையில் இறைவன் அது எத்தனை ஆத்மார்த்தமாய் செய்யப் பட்டது என்பதை வைத்து மதிப்பிடுகிறான்.

🌼மனிதன் எத்தனை மணி நேரம் பிரார்த்தனையிலும் தியானத்திலும் செலவாகி உள்ளது என்பதை வைத்து தன் இறைபணியை அளக்கையில் இறைவன் அதில் எத்தனை மணித்துளிகள் தன் மீது முழு ஈடுபாட்டுடன் இருந்தது என்பதை மட்டுமே எடுத்துக் கொள்கிறான். சதா இறைநாமத்தை ஜபித்துக் கொண்டு இருந்தும் மற்றவர்களிடம் கடுமையாகவும், நியாயமற்றும் நடந்து கொள்பவன் கணக்கை பாவக் கணக்காக எழுதும் இறைவன் தன்னை வணங்கா விட்டாலும் நேர்மையாகவும், தர்மசிந்தனையுடனும் வாழ்பவன் கணக்கை புண்ணியக் கணக்காகத் தன் புத்தகத்தில் குறித்துக் கொள்கிறான்.

🌼பண்டரிபுரத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன் புண்டலீகன் என்ற இளைஞன் தன் வயது முதிர்ந்த தாய் தந்தையருடன் வாழ்ந்து வந்தான். அவனும், அவனுடைய தாய் தந்தையரும் விட்டலனின் (கிருஷ்ணனின்) பக்தர்கள். தன் வயது முதிர்ந்த தாய் தந்தையர்க்கு புண்டலீகன் மிகுந்த சிரத்தையுடன் சேவை செய்து வந்தான்.

🌼அவன் பல காலமாக சிறிதும் தளர்ச்சி இல்லாமல் தன் பெற்றோருக்கு சேவை செய்ததைக் கண்டு மனம் உவந்த இறைவன் விட்டலன், தன் மனைவி ருக்மணியுடன் புண்டலீகன் முன் எழுந்தருளினான்.

🌼அந்த சமயத்தில் புண்டலீகன் தன் பெற்றோரின் துணிகளைத் துவைத்துக் கொண்டிருந்தான். தன் முன் பெருமாள் தம்பதி சமேதராக எழுந்தருளினதைக் கண்டு அவன் மனம் மகிழ்ந்தாலும் பெற்றோருக்காகத் தான் செய்து கொண்டிருந்த பணியை நிறுத்தி விட அவன் மனம் ஒப்பவில்லை.

🌼அதே நேரத்தில் தான் துணி துவைப்பதால் வழிந்தோடும் அழுக்கு நீர் பெருமாளின் திருப்பாதங்களைத் தொடுவதிலும் அவனுக்கு சம்மதமில்லை. எனவே ஒரு பெரிய கல்லை அவசரமாக அவர்கள் பக்கம் தள்ளி

🌼 "இறைவனே தாங்கள் இந்தக் கல்லில் சிறிது நேரம் நில்லுங்கள். 🌼

🌼நான் என் பெற்றோருடைய இந்தப் பணியை முடித்து விட்டுத் தங்களை கவனிக்கிறேன்" என்றான்.

🌼எத்தனையோ கோடி பேர் அந்த இறைவனைத் தரிசிக்க எத்தனையோ ஜென்மங்கள் காத்திருக்கிறார்கள் என்ற போதிலும் புண்டலீகன் தன் கடமைக்குப் பின்பே கடவுள் என்று செயல்பட்டதைக் கண்டு மெச்சி மனம் மகிழ்ந்த விட்டலன் தன் மனைவியுடன் அந்தக் கல்லில் ஏறி நின்று சிலையாகி அங்கேயே தங்கி விட்டான். இன்றும் பண்டரிபுரம் கோயிலில் பாண்டுரங்க விட்டலனாக அவ்வாறே காட்சியளிக்கிறான்.

🌼இறைவன் "ஈகோ" இல்லாதவன் என்பதற்கு இது ஒரு சிறிய உதாரணம். புண்டலீகன் செய்கையை அவன் அலட்சியமாகக் கருதவில்லை.

🌼இறைவனுக்கு அவன் மீது கோபம் வரவில்லை. அங்கு அவன் பெற்றோர் மீது வைத்திருந்த அன்பையே இறைவன் மெச்சினான்.

🌼இராமபிரான் மீதிருந்த அன்பில் சபரி என்னும் மூதாட்டி ஒவ்வொரு கனியையும் கடித்துப் பார்த்து இனிப்பான கனிகளையே தேர்ந்தெடுத்து அவருக்குப் படைத்தாள்.

🌼புளித்த கனிகளை வீசி எறிந்தாள். கடவுளுக்கு இனிப்பான கனிகளையே தர வேண்டும் என்ற மேலான நோக்கில் சபரி தந்த அந்த எச்சில் கனிகளை அமிர்தமாக எண்ணி சாப்பிட்டான் இராமன்.

🌼மனிதனின் கணக்கில் புண்டலீகனின் அலட்சியமும், சபரியின் எச்சிலும் தெய்வகுற்றம். அபசாரம். ஆனால் இறைவனின் கணக்கும் அப்படியே இருக்குமானால் இருவரும் இறை சாபத்திற்கு ஆளாகி இருப்பார்கள்.

🌼பண்டரிபுரத்தில் பாண்டுரங்க விட்டலனின் கோயில் தோன்றியிருக்காது.

🌼சபரி சரித்திரமாகி இருக்க மாட்டாள். இறைவன் எல்லாம் அறிந்தவன். செயலை அது செய்யப்படும் நோக்கத்தை வைத்தே அளப்பவன். அவன் கணக்கில் இருவரும் மிக உயர்ந்து போனார்கள்.

🌼கட்டு கட்டாக பணத்தை கோயில் உண்டியலில் போட்டு தான் பெரிய இறை சேவை செய்து விட்டதாக ஒருவன் இறுமாந்திருக்க, அதே கோயிலின் ஒரு மூலையில் உட்கார்ந்து பெரும்பக்தியுடன் மனமுருக இறைநாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பவன் செயலை அதைவிட மேன்மையானதாக இறைவன் நினைக்க வாய்ப்புண்டு. தானே

🌼பசியில் இருக்கும் போது தனக்குக் கிடைத்த உணவை இன்னொரு பசித்தவனுக்குப் பங்கிட்டு சாப்பிடும் செயலை பெரிய இறை சேவையாக இறைவன் கணக்கில் குறித்துக் கொள்வான் என்பது உறுதி.

🌼நாத்திகனாக இருந்தால் கூட நீங்கள் நல்லவனாக இருந்தால் இறைவனின் கணக்கில் உங்கள் இடம் உயர்விலேயே இருக்கும்.

🌼 ஆத்திகனாக இருந்தால் கூட உங்கள் செயல்கள் பலருக்குத் தீமை தருவதாக இருந்தால் உங்கள் இடம் இறைவனின் கணக்கில் தாழ்ந்தே இருக்கும்.

🌼ஈகோ உள்ள மனிதர்களுக்கு புகழ்பாடுவது ஆனந்தத்தை அளிக்கலாம். ஆசைகள் உள்ள மனிதனுக்குப் பணமும், பொருளும் கொட்டிக் கொடுப்பது ஆனந்தத்தை அளிக்கலாம்.

🌼 ஆனால் ஈகோ இல்லாத இறைவனை, விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனை இவை திருப்திப்படுத்தாது. எனவே பணம் கொடுத்தும், புகழ்பாடியும் கடவுளருளைப் பெற்று விடலாம் என்று யாரும் தப்புக் கணக்குப் போட்டு விட வேண்டும். மனிதரின் ஆதரவு பெற இது போன்ற செயல்கள் பலன் தரலாம். ஆனால் இறைவனை இப்படிப்பட்ட தந்திரங்களால் ஏமாற்றி விட முடியாது.

🌼இறையருள் வேண்டுபவர்களே! உங்கள் இதுநாள் வரையிலான செயல்களை மறு மதிப்பீடு செய்யுங்கள்.

🌼உங்கள் கணக்கு இறைவன் கணக்கோடு ஒத்துப் போகுமா? ஒத்துப் போகாது என்றால் இனியாவது உங்கள் அளவுகோல்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

🌼 உங்கள் சொற்களும், செயல்களும், வாழ்க்கையும் அந்த அளவுகோல்களில் மேன்மையாக இருக்கட்டும். அப்படி வாழ்வீர்களேயானால் வாழ்க்கையின் முடிவில் உங்கள் கணக்கையும், இறைவன் கணக்கையும் ஒப்பிடும் போது உங்களுக்கு ஏமாற்றம் ஏற்பட வாய்ப்பிருக்காது.🌼

N2R NandhakumaR

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...