Sunday, 24 July 2016

ருத்ராட்ச முகத்தில் உள்ள தேவதைகளால் விலகும் பாவங்களை தெரிந்து கொண்டு பயன்படுத்துவீர்


ஒரு நாள் ஜமதக்கினி மகரிஷியின் வயலில் ஒரு பசு மேய்ந்து கொண்டிருந்தது. அவர் ஒரு நெற்கதிர் எடுத்து விரட்டினார். அந்தப்பசு இறந்துவிட்டது. இதனால் பாவம் செய்து விட்டோம் என்று கருதி அவர் சுகமகரிஷியிடம் சென்று தன் துன்பத்தை கூறினார். உடனே அவர், ஜமதக்கினி நீ காசிக்கு சென்றால் ஒரு முக ருத்ராஷம் கிடைக்கும். அதை நீ அணிந்துக் கொண்டால் உன்னுடைய ‘கோ ஹத்திய தோஷம்’ நீங்கும் என்று கூறினார்.

ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு தேவதை அதிபதியாக இருப்பார்கள். அவரவர் அந்தந்த பாவங்களை அழித்து விடுவார்கள். இந்த ருத்ராஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் பாவத்தை அழிக்கும் என்று சொன்னாராம்.

ஒரு முகம்:

ஒரு முகம் கொண்ட ருத்திராட்சம் பிரம்ம ஹத்திய தோஷம் அழிக்கும். இது சிவனின் மற்றொரு உருவம் என்று கருதப்படுகிறது. இதை அணிந்தால் சிவனைப் பூஜை செய்த பலன் கிடைக்கும்.

இரண்டு முகம்:

இரண்டு முக ருத்ராஷம் அர்த்த நாரிஸ்வர சொரூபம். அனைத்து பாவங்களையும் அழிக்கும். இதை அணிந்தால் சிவனையும், சக்தியையும், பூஜை செய்த பலன் கிடைக்கும்.

மூன்று முகம்:

மூன்று முகம் ருத்ராஷத்திற்கு அக்னிதேவன் அதிபதி. இந்த ருத்ராஷம் ஸ்ரீ ஹத்தியா தோஷத்தை நீக்கும். (ஒரு பெண்ணை கொன்றால் வரும் பாவம்). மும்மூர்த்திகளையும் பூஜை செய்த பலன் கிடைக்கும் மூன்று முக ருத்ராஷம் மணமானப் பெண்கள் அவர்களின் தாலிக்கொடியில் அணிந்தால் பூவும், பொட்டும் நிலைத்து மகிழ்ச்சியை அளிக்கும்.

நான்கு முகம்:

நான்கு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி பிரம்மன். ஞாபசக்தியை பெருக்கும் சர்வஹத்தியா தோஷம் நீங்கும்.

ஐந்து முகம்:

ஐந்து முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி காலாக்கினி ருத்திரன். இது அனைத்து பாவங்களையும் அழிக்கும். மனதிற்கு சாந்தி தரும். இரத்த அழுத்தத்தை நீக்கும். அஜீரணத்தைப் போக்கும் மார்பு வலியை நீக்கும். தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்கள் ஒரு ருத்ராஷக்கொட்டை எடுத்து அதை பால்விட்டு இழைத்து அந்த சாந்தை எடுத்து கண்ணின் இமையின் மீது தடவினால் நல்ல உறக்கம் வரும். விஷ பூச்சிகள் தீண்டினால் உடனே ஒரு ருத்ராஷக் கொட்டை எடுத்து எலுமிச்சைப் பழச்சாரில் குழைத்து அந்த சாந்தை எடுத்து தீண்டிய இடத்தில் தடவினால் வலி குறைந்து குணமாகும். காய்ச்சிய நீர் அல்லது காய்ச்சியை பாலில் இரண்டு ருத்ராஷக் கொட்டைப் போட்டு உடன் எடுத்து விட வேண்டும். அப்படி எடுத்த நீர் அல்லது பாலை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எந்த விஷ பூச்சிகளும் அருகில் நெருங்காது. 32 கொட்டை கொண்ட மாலையை அணிந்தால் விரோதி கூட மரியாதை செலுத்துவான்.

ஆறு முகம்:

ஆறு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி கார்த்திகேயன் பனிரெண்டு ருத்ராஷ கொட்டை கையில் (மணிக்கட்டில்) அணிந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஹிஸ்டீரியா போன்ற வியாதிகளை வராமல் காக்கும். மாணவர்கள் அணிந்தால் ஞாபசக்தி பெருகும் கண்திருஷ்டியைப் போக்கும்.

ஏழு முகம்:

ஏழு முகம் ருத்ராஷத்திற்கு இதற்கு அணங்கம் என்று பெயர். இதற்கு அதிபதி காமதேவன். ஜாதகம் சரி இல்லாதவர்கள் இதை அணியலாம். இதை அணிந்தால் அகால மரணம் வருவதைத் தடுக்கும்.

எட்டு முகம்:

எட்டு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி விக்னேஷ்வரன். பஞ்ச மகா பாதகத்தை அழிக்கும். மன தைரியம் உண்டாக்கும். கணேசனை பூஜை செய்த பலன் கிடைக்கும். காய்ச்சியப் பாலில் இதைப்போட்டு எடுத்துவிட்டு அந்தப் பாலை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் பக்கவாதம் மூன்று மாதங்களில் குணமாகும்.

ஒன்பது முகம்:

ஒன்பது முக ருத்ராஷத்திற்கு அதிபதி பைரவன். இதற்குள் ஒன்பது சக்தி இருக்கிறது. ஒரு கொட்டை அணிவதாக இருந்தால் வலது கையில் அணியலாம். துர்கை பூஜை செய்பவர்களும் இதை அணியலாம். மனிதன் கிரக சாந்திக்காக நவரத்தினங்களை மோதிரமாக அணிகின்றான். நவரத்தின மாலை அணிகின்றான். நவகிரக பூஜையும் செய்கிறான். இவையாவும்; ஒரு ஒன்பது முக ருத்ராஷக் கொட்டை அணிந்தால் கிடைக்கும்.
உன்னதமான வாழ்வுக்கும் உயர்வான சிந்தனை உள்ள வாழ்வுக்கும் வாழ்கைக்கும் நூறு சதவீதம் உத்திரவாதம் தரும் ஒரே ஜோதிட நிலையம்
ஸ்ரீ கால பைரவி ஜோதிட நிலையம்
விஞ்ஞான மருத்துவ ஜோதிடம் மற்றும் வானியல் மருத்துவம்
அரசு மருத்துவமனை எதிரில்
ஆத்தூர்
சேலம் (மாவட்டம்)
M.கிருஷ்ண மோகன் 8526223399
பத்து முகம்:

பத்துமுக ருத்ராஷத்திற்கு ஜனார்த்தனம் என்று பெயர். இதற்கு அதிபதி ஸ்ரீ மகா விஷ்ணு அனைத்து கஷ்டத்தையும் அழிக்கும் சக்தி இதற்கு உண்டு. பாம்பு மற்றும் விஷபூச்சிகளில் இருந்து நம்மை காக்கும் சக்தி இதற்கு உண்டு. காய்ச்சியப் பாலில் இந்த ருத்ராஷக் கொட்டையைப் போட்டு எடுத்துவிட்டு அந்தப் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் கக்குவான் வராமல் தடுக்கும். ஒரு முக ருத்ராஷம் எப்படி சிவசொரூபமோ, அதேபோல் தஸமுகி ருத்ராஷம் சம்பூர்ண விஷ்ணு சொரூபம். இது மிகமிக குறைவாக கிடைக்கிறது.

பதினொன்று முகம்:

பதினொன்று முக ருத்ராஷம் ஏகாதஸ ருத்ர சொரூபம். இதை அணிந்தால் அசுவமேத யாகப்பலன் கிடைக்கும். முனிவர்களின் பத்தினிகள் கூட இதை அணிந்து கொண்டார்களாம். இதைப் பெண்கள் அணிவதால் இரக்கக்குணம் உண்டாகும்.

பனிரெண்டு முகம்:

பனிரெண்டு முகம் ருத்ராஷம் ஆதித்தியம் ஆகும். இதற்கு அதிபதி சூரிய பகவான். இதை காதில் அணிந்தால் சூரியனின் கருணை நமக்கு கிடைக்கும்.

பதிமூன்று முகம்:

பதிமூன்று முக ருத்ராஷத்திற்கு அதிபதிகள் கார்த்திகேயன், காமதேவன், இதை அணிந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

பதினான்கு முகம்:

பதினான்கு முக ருத்ராஷம் பரமசிவனுக்கு நிகரானது.

பதினைந்து முகம்:

பதினைந்து முக ருத்ராஷம் கடவுளின் மேல் பக்தியை உண்டாக்கும் சக்தி இதற்கு உள்ளது.

பதினாறு முகம்:

பதினாறு முக ருத்ராஷம் தந்திரம் செய்பவர்களுக்கு இந்த ருத்ராஷம் பயன் தரும்.

பதினேழு முகம்:

பதினேழு முக ருத்ராஷத்திற்கு அதிபதி விஸ்வகர்மா. இதை அணிந்தால் சகல வசதி கிடைக்கும்.

பதினெட்டு முகம்:

பதினெட்டு முக ருத்ராஷத்திற்கு அதிபதி பூதேவி.

பத்தொன்பது முகம்:

பத்தொன்பது முக ருத்ராஷம் அணிந்தால், ஞானம் பெருகும். சாந்திக் கிடைக்கும்.

இருபது முகம்:

இருபது முக ருத்ராஷத்திற்கு அதிபதிகள் பிரம்ம தேவன். சரஸ்வதி இதை அணிந்தால் ஞானம் பெருகும். மனதிற்கு சாந்தி தரும்.

இருபத்தி ஒன்று முகம்:

இருபத்தி ஒன்று முக ருத்ராஷத்திற்கு அதிபதி குபேரன். சொத்து சுகம் கிடைக்கும். எல்லா பாவத்தையும் அழிக்கும் சக்தி இதற்கு உண்டு.

ருத்திராஷம் கொட்டையின் உட்பகுதியில் வெற்றிடம் உள்ளது. இதனால் புதிய ருத்திராஷம் தண்ணிரில் மிதக்கும். பயன்படுத்த பயன்படுத்த ருத்திராஷத்திற்கு எடை கூடும். இதனால் ருத்திராஷம் நிரில் முழ்கும். ருத்ராஷக் கொட்டை அணிவதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது நாம் எந்த நிலையிலும் ருத்திராஷத்தை பயன்படுத்தலாம். இதனால் எவ்விதத்திலும் ருத்திராஷத்திற்கு சக்தி குறையாது. ஆனால் மனதிற்கு தவறு என்று நினைத்தால் ருத்திராஷத்தை அணிய வேண்டாம்.

நாக ருத்திராட்சம்

இந்த ருத்திராட்சம் மிகவும் அரிதான ஒன்று எவருக்கும் எளிதில் கிடைக்காது. அதிலும் உண்மையான நாக ருத்திராட்சமாக இருக்க வேண்டும் மற்றும் பயன்படுத்தும் முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது ஒருமுக ருத்திராட்சத்துடன் பாம்பு படம் எடுப்பது போல் ஒட்டியிருக்கும். இது மிகவும் குறைந்த அளவே கிடைக்கும். இதன் பயன்பாட்டை அறிந்து அணிவது நலம். ஒரு ருத்திராட்ச மரத்தில் நாகம் ஏறினால் அந்த மரத்தில் ஒரு ருத்திராட்ச கொட்டையில் மட்டும் நாகம் இருப்பது போல் உருவாகும். பின்பு அம்மரத்தில் ருத்திராட்ச கொட்டை உருவாகாது மேலும் அம்மரத்தை வெட்டி விடுவார்கள்.

ஒரு ருத்திராட்சக் கொட்டையை அணிந்தால் பயனில்லை 108 அல்லது 54 கொட்டை மாலையின் நடுவில் ஒரு பெரிய ருத்திராட்சம் போடவேண்டும். அப்பொழுது தான் முழுமையான பலன் கிடைக்கும். உண்மையான ருத்திராட்சத்திற்கு புஜத்துவாரம் தட்டையாகத்தான் இருக்கும். போலி ருத்திராட்சம் புஜத்துவாரம் உருண்டையாக இருக்கம். இதை வைத்தது போ லியைக் கண்டுபிடித்து விடலாம்.

Ruler can do anything, so Born to rule the Galaxy

Friday, 22 July 2016

ஆடி பெயர் வந்தது எப்படி தெரியுமா?


✡ ஆடி என்பது ஒரு தேவமங்கையின் பெயர; என்கிறது புராணம். ஒரு சமயம் பார;வதிதேவி, ஈசனைப் பிரிந்து தவம் செய்யும் நிலை ஏற்பட்டது. சிவபெருமான் தனிமையில் இருப்பதை அறிந்த ஆடி என்னும் தேவகுல மங்கை பாம்பு உருவம் எடுத்து, கயிலையின் உள்ளே யாரும் அறியா வண்ணம் நுழைந்தாள்.

✡ பிறகு பார;வதி தேவியாக உருமாறி சிவபெருமான் அருகில் சென்றாள். அப்போது ஒரு கசப்பான சுவையை சிவபெருமான் உணர;ந்தார;. தன்னை நோக்கி வந்தவள் பார;வதி அல்ல என்பதை அறிந்து, தன் சு+லாயுதத்தால் ஆடியை அழிக்க யத்தனித்தார;. அப்போது சு+லாயுதத்திலிருந்து வெளிப்பட்ட தீப்பொறி ஆடியை புனிதமடையச் செய்தது.

✡ அவள் ஈசனை வணங்கி, ஒரு நிமிடமாவது தங்கள் அன்பான பார;வை என்மீது பாட வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டேன். என்னை மன்னித்தருள வேண்டும் என்று வேண்டினாள். ஆனால் சிவபெருமான். என் தேவி இல்லாத சமயம் நீ அவளைப்போல வடிவம் கொண்டு வந்தது தவறு. எனவே பு+வுலகில் கசப்புச் சுவையுடைய மரமாகப் பிறப்பாய் என்றார;.

✡ அவள் விமோசனம் கேட்க, கவலை வேண்டாம், நீ மரமாகிப் போனாலும் ஆதிசக்தியின் அருளும் உனக்குக் கிட்டும். சக்தியை வழிபடுவதுபோல் உன்னையும் வழிபடுவார;கள்.

✡ ஆடியாகிய உன் பெயரிலேயே ஒரு மாதம் பு+லோகத்தில் அழைக்கப்படும். அந்த வேளையில் நீ கசப்பு குணம் கொண்ட மரமாக இருந்து மக்களுக்கு நல்லதைச் செய்வாய் என்று அருளினார;.

✡ ஆடி என்ற தேவலோகத்துப் பெண் தான் பு+லோகத்தில் வேப்ப மரமாகத் திகழ்கிறாள். ஈசனின் சாபமே அவளுக்கு வரமாக மாறியது. தெய்வாம்சம் பொருந்திய வேம்பு ஆதிசக்தியின் அம்சமாக உள்ளது. நோய்கள் பலவற்றை குணமாக்கும் சக்தி கொண்டவளாக திகழ்ந்தாள் அந்த மங்கை.

N2R NandhakumaR 
Channel N2R 

Ruler can do anything, so Born to rule the Galaxy

Thursday, 21 July 2016

உங்களையே சுற்றி வரும் உங்களுடைய மனைவியின் அன்பையையும் மனதையும் நேசியுங்கள்..!! மனைவியை மனதார நேசியுங்கள்.

உங்களையே சுற்றி வரும் உங்களுடைய மனைவியின் அன்பையையும் மனதையும் நேசியுங்கள்..!!
மனைவியை மனதார நேசியுங்கள்.

ஒரு மனைவி தான் பேசும் போது கணவன் அதை முழுமனதோடு கவனிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறாள்.

அதனால் பேப்பர் அல்லது புக் படித்துக்கொண்டோ, டி.வி பார்த்துகொண்டோ உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் மனைவிக்கு வெறும் ' உம் ' 'உம் ' என்று வேண்டாவெறுப்பாக பதிலளிக்காமல்,

அவள் பேசுவது ' உப்பு சப்பில்லாத டப்பா ' மேட்டராக இருந்தாலும் அவள் முகம் பார்த்து கவனியுங்கள்.

டிப்ஸ் - 1

'உம்' கொட்டுவதோடு மட்டும் அல்லாமல், " ஓ! அப்படியா", " ஆஹா! இப்படியா?" என்று உரையாடலில் பங்கு பெறுங்கள். உங்களின் இந்த ஈடுபாடு உங்கள் மனைவியை உற்சாகமடைய செய்யும்.
உங்கள் மனைவின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள், மனைவி பெரிதும் எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது.

டிப்ஸ் -2:

தமிழ் சினிமாவில் காண்பிப்பது போல் ' அல்வாவும், ஒரு முழம் பூவும்' வாங்கி கொடுத்தால் மனைவி நாய் குட்டியாக உங்களை வலம் வருவாள் என எதிர்பார்க்காதிருங்கள்.

பெண்களுக்கு 'பூ' பிடிக்கும்தான், அதை வாங்கி கொடுப்பது உங்கள் கடமை. பூ கொடுத்து 'ஐஸ்' வைக்கும் காலம் மலையேறி விட்டது.

மனைவிக்கு அவர்கள் விரும்பும் பொருளை [ உதாரனம்-: புடவை, நகை, அலங்கார பொருட்கள்......] கணவன் தன் மனைவிக்கு எந்த முன்னறிவிப்பும் இன்றி ' சர்பரைஸ்' ஆக கொடுத்தால் பூரித்து போவார்கள்.

மனைவியின் மனதை கொள்ளையடிக்க இது ஒரு முக்கியமான யுக்தி!!!

கணவன் தன்னை சர்பரைஸ் டின்னருக்கு ரெஸ்டாரன்ட் அழைத்துச் செல்வதை வீட்டிலிருக்கும் மனைவி பெரிதும் எதிர்பார்க்கிறாள்.

வேலைக்கு செல்லும் மனைவி தன் வீட்டு வேலைகளில் சிறு சிறு உதவிகளை கணவன் செய்யும் போது அவன் மீது இன்னும் அதிக ஈர்ப்பும் அன்பும் கொள்கிறாள்.

டிப்ஸ் -3:

பெண்களுக்கு புகழ்ச்சி , பாராட்டு இரண்டும் மிகவும் பிடிக்கும். அதிலும் முக்கியமாக அவர்கள் உடை அலங்காரம், அழகு போன்றவற்றை ரசித்து கணவன் பாராட்டினால் திக்கு முக்காடி மெய்மறந்து போய் விடுவார்கள்.

[செயற்கைதனமாக , மற்றும் ஒப்புக்காக வர்னிப்பது, பாராட்டுவது போன்றவற்றை மனைவி விரும்புவதில்லை, அதை எளிதில் கண்டும் பிடித்து விடுவார்கள்........ஜாக்கிரதை] அதனால் மனைவியை மனதார பாராட்டுங்கள், ரசித்து வர்னியுங்கள்.

ஒரு டயமண்ட் நெக்லஸ் தர முடியாத சந்தோஷத்தையும் நிறைவையும் உங்கள் அன்பான வார்த்தைகள் உங்கள் மனைவிக்கு கொடுத்துவிடும்!!

டிப்ஸ் -4:

மனைவியை குறை கூறுவதை நிறுத்துங்கள், முக்கியமாக குழந்தைகள் முன், மற்ற குடும்பத்தினர் முன், நண்பர்கள் முன் குறை கூறுவதை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

குறை கூறுதல் ஒரு மனைவியின் மன நிலையை பெரிதும் பாதிக்கும். உங்கள் மீதுள்ள நேசம் குறைந்து கடமைக்காக சேவை செய்ய ஆரம்பித்து விடுவார்கள்.

அதற்காக மனைவியை எப்போழுதும் புகழ்ந்துக் கொண்டேயிருக்க வேண்டும் என்று அர்த்தம் அல்ல.

உதாரனமாக, உங்கள் மனைவியின் சமையலில் காரம் அதிகம், உப்பு இல்லை என்றால்,
முதலில் " சாப்பாடு ரொம்ப நல்லாயிருக்குதுமா, ஆனா உப்பு கொஞ்சம் போட்டா இன்னும் டேஸ்டா இருக்கும்" என நாசூக்காக கூறுங்கள்,

கப்பென்று புரிந்து கொள்வார்கள், தன் தவறையும் திருத்தி கொண்டு இன்னும் அதிக சுவையுடன் சமைக்க முனைவார்கள்.

உங்களுக்காக பார்த்து பார்த்து சமைக்கும் மனைவியின் மனம் நோகாமல் குறைகளை எடுத்துச் சொல்வது ஒன்றும் பெரிய விஷயமில்லையே!!!

டிப்ஸ் -5:

பெண்களுக்கு பொதுவாக தன் பிறந்த வீட்டின் மேல் பிடிப்பு ஜாஸ்த்தியாக இருக்கும். அதனால் உங்கள் மனைவியிடம் அவர்கள் பிறந்த வீட்டினரை பற்றி குறை கூறாதிருங்கள்.

தன் பிறந்த வீட்டினரை தன் கணவன் நக்கல் செய்வது, அவமானபடுத்துவது போன்றவை ஒரு பெண்ணின் உணர்வுகளை காயபடுத்தி உங்கள் மணவாழ்க்கையில் விரிசலை உண்டுபண்ணும்.

உங்கள் மீது உங்கள் மனைவிக்கு இருக்கும் மரியாதை குறையவும், பழிவாங்கும் உணர்ச்சியாக உங்கள் பெற்றோர் மீது வெறுப்படையவும் செய்யும்.

டிப்ஸ் -6:

உங்கள் மணநாள், மனைவியின் பிறந்த நாள் போன்ற முக்கியமான தினங்களை ஞாபத்தில் வைத்துக்கொள்ள முயற்ச்சியுங்கள். மனைவியின் பிறந்த நாளன்று அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துக் செல்லலாம், பரிசு பொருட்களை வாங்கி கொடுக்கலாம்.

அது ஒரு விலையுர்ந்த பரிசாக தான் இருக்க வேண்டுமென்பதில்லை.

மனைவியை கடைக்கு அழைத்துச் சென்று,
"எனக்கு கார்ட்[வாழ்த்து அட்டை] செலக்ட் பண்ண தெரியாது, பரிசு வாங்க தெரியாது ,அதனால உனக்கு பிடித்ததை வாங்கிக்கோ, நான் உனக்கு பரிசாக கொடுத்ததாக நினைச்சுக்கோ"ன்னு கடமைக்காக பரிசு கொடுக்கிறேன் பேர்விழி என்று டுபாக்கூர் வேலையெல்லாம் செய்ய கூடாது.

இப்போதைக்கு இவ்வளவு டிப்ஸ் தான் என்னால் சேகரிக்க முடிந்தது.
மணமான சில நண்பர்கள் அன்புடன் கேட்டதின் பெயரில் இந்த பதிவையிடுகிறேன்.

எதிர் காலத்தில் மணமுடிக்க போகும் நண்பர்களும் இதனை மனதில் வைத்துக் கொண்டால் மணவாழ்க்கை தித்திக்காமல் போகுமா???

உங்கள் மணவாழ்வு இனிக்க என் வாழ்த்துக்கள்!!!!

Ruler can do anything, so Born to rule the Galaxy

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...