Thursday, 23 July 2015

திருமணம் (Marriage)


ஒரு தமிழர் திருமணத்தில் தாலி கட்டப்படுகிறது
திருமணம் ஒரு சமூக, சட்ட, உறவுமுறை அமைப்பு ஆகும். குடும்பம், பாலுறவு, இனப்பெருக்கம், பொருளாதாரம் போன்ற பல காரணங்களுக்காக திருமணம் செய்யப்படுகிறது. இரு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மனிதர்களுக்கு இடையே திருமணம் நடைபெறுகிறது. மணம் என்பது ஓர் ஆணும், ஒரு பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள நடத்தபெறும் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். மனிதனால் மனித சமுதாயத்தின் நலன் கருதிப் படைத்துக் கொள்ளப்பட்டதோர் ஒழுக்க முறை. திருமணம் என்பது மனித இனத்தைப் பொறுத்தவரை ஒரு உலகளாவிய பொதுமையாக இருந்த போதிலும், வெவ்வேறு பண்பாட்டுக்குழுக்களிடையே திருமணம் தொடர்பில் வெவ்வேறு விதமான விதிகளும்,நெறிமுறைகளும்காணப்படுகின்றன.திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. அதோடு திருமணம் என்பது ஒரு புதிய சந்ததி தோன்றுவதற்குரிய ஒருவிதப் பிணைப்பு ஆகும். ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவருக்கொருவர் கட்டுப்பட்டு, அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப்பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்துகொள்ளும் செயலே மணம் எனப்படும்.

திருமணம்- சொல்லும் பொருளும்

மணம் என்ற சொல்லுக்குக் 'கூடுதல்' என்பது பொருள். இதன் வேர்ச்சொல்மண் என்பதாகும். இன்று பொது நிலையில் மணம் என்பது நறுமணத்தைக் குறிப்பினும், பழங்கால வழக்கில் இச்சொல் பல பொருளை உடையதாக இருந்தது. 'மண்ணுதல்' என்ற சொல்லின் பொருள் கழுவுதல், நெருங்குதல், கலத்தல், கூடுதல், அழகுபெறுதல் எனப்பல. திருமணத்தைக் குறிக்கும் ' மணம் என்ற சொல் எவ்வாறு அமைந்தது என்பது தெரியவில்லை. மண்இயற்கையிலேயே மணம் உடையது. அதனை மண் மணம் என்பர். இது தமிழர் வழக்கு. இல்லறத்திற்கு நுழைவாயிலாக அமைவதனை 'மணம்' என்ற சொல்லால் குறிப்பிட்டதன் நோக்கம் மண்ணைப் (நிலத்தை) போல பொறுமை, அமைதி, எதையும் தாங்கும் வன்மை இவற்றை மணமக்கள் பெறுதல் வேண்டும் என்பதே அடிப்படை என்று கூறுவோரும் உளர். மனமொத்து, வாழ்வு முழுவதும் மணம் பெற்று நிகழ்வதற்கு ஏதுவான இந்நிகழ்ச்சியை மணம் என்று பெயரிட்டனர். சிறப்பான, மேன்மையான ஒன்றைக் குறிப்பிட 'திரு என்ற அடை கொடுத்து அழைப்பது தமிழர் மரபாகையால் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது.

மணம் குறித்த பிற சொற்கள்

மணத்தைக் குறிக்கப் பல்வேறு சொற்கள் பண்டைத்தமிழரால் பயன்படுத்தப்பட்டன. அவை முறையே கடி, மணம், மன்றல், வதுவை, வதுவைமணம், வரைவு என்பன. இவை மணத்தின் தன்மை, நடைபெறும் இடம் போன்ற பல காரணங்களால் பெயர் பெற்ற சொற்களாக உள்ளன. சில சொற்கள் பிற மொழியாளர் தொடர்பு, பிற சமயத்தவர் தொடர்பு காரணமாக வழக்கில் இடம் பெற்றதென்பது அறியலாம். சான்றாகக் ' கல்யாணம்" என்ற சொல் மணத்தைக் குறிக்கும் வகையில் நாலடியாரிலும்,ஆசாரக்கோவையிலும் பயின்று வந்துள்ளமையைக் காணலாம்.

கடி-மணம்

'கடி' என்பது பல பொருள் தரும்உரிச்சொல் ஆகும். 'கடி' என்ற சொல்லுக்கு நீக்குதல், காப்பு என்று பொருள் கூறுவர். மணமகளின் கன்னித்தன்மை நீங்கி, கற்பு வாழ்வு மேற்கொள்ளல் என்ற நிலையிலும், ஆண், பெண் இருவரும் இணைந்து ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக அமையும் இல்லற வாழ்வைத் துவங்குதல் என்ற வகையிலும் 'கடி' என்ற சொல் திருமணத்தைக் குறித்தது. "கடிமகள்". "வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து" போன்ற குறிப்புகளால் காப்பு என்ற பொருளில் 'கடி' என்ற சொல் இடம் பெறுதலைக் காணலாம்.
கடிமணம் என்பது நல்ல மணம், நன்மை பெற உதவும் மணம் என்றும் பொருளைத் தருகிறது. மணநாள் விளக்கம் என்ற நூலில் 'கடிநாள் கோலத்து காமன் இவனென' என்று மண நாளில் இடம் பெற்ற ஒப்பனை சுட்டப்படுகிறது. இலக்கிய வழக்கில் கடி என்ற சொல் மணத்தையும் , மணத்தொடர்புடைய மண நாள், மண வேளை ஆகியவற்றைச் சுட்டவும் பயன்படுகிறது. சீவக சிந்தாமணியில்'கடிசேர் மணமும் இனி நிகழும் காலமென்க' என்றும் 'கடிமணம் எய்தும் களிப்பினால்' என்றும் சுட்டப்படுதலால் கடி, மணம் என்ற இரு சொற்களும் இணைந்து திருமணத்தைக் குறிக்க வழக்கில் இடம் பெற்றமையை உணரலாம்.

கரணம்

கரணம் என்ற சொல் திருமணத்தைச் சுட்டும் பொருளில் பழங்காலத்தில் வழக்கில் இருந்துள்ளது.
"பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணமென்ப[1]
என்று தொல்காப்பியத்தில் குறிப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், 'கற்பெனப்படுவது கரணமொடு புணர' என்று கூறுமிடத்தில் 'கரணமொடு புணர' என்பதற்கு வேள்விச் சடங்கோடு கூடிய மணம் என உரை எழுதியுள்ளார்நச்சினார்க்கினியர். 'கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே','புணர்ந்துடன் போகிய காலையான' என்ற நூற்பாவாலும் இதனை அறியலாம். மேலும் கற்பியலில் தொடந்து ஐந்து நூற்பாக்களில் கரணம் என்பது மணத்தினைச் சுட்டுவதாகவே அமைந்துள்ளது, ஆனால் 'கரணம்' என்ற சொல் இன்று வழக்கில் இல்லை.

மன்றல்

'மன்றம் ' என்பது ஊர்ப் பொதுவிடத்தைக் குறிப்பிடுவது. பலர் முன்னிலையில் மேடையிட்டு அதன் மேல் மணமக்களை அமரச் செய்து, மணவினைச் செய்வித்தல் என்ற பொருளில் 'மன்றல்' என்பது மணத்தைக் குறிக்கும் சொல்லாக இடம்பெற்றது எனலாம்.' 'இருவேம் ஆய்ந்த மன்றல் இதுவென' என்பதால் இதனை அறியலாம். 'மன்றல்' என்றசொல் தொன்று தொட்டு வழங்கப்படுகிறது.

வதுவை

வதுவை என்ற சொல் 'வதிதல்' என்ற பொருள் தரும். இது 'கூடிவாழ்தல்' என்ற பொருளில் மணத்தைக் குறித்தது. இச்சொல் சிலம்பு, சிந்தாமணி,பெருங்கதை, கந்த புராணம், போன்ற இலக்கியங்களில் திருமணத்தைக் குறிக்கவே பயன் படுத்தப்பட்டுள்ளது.

வரைவு

வரை என்பதற்கு மலை, வரையறை என்ற பொருள்கள் உள்ளன. காதலர் பழகுவதை வரையறைப் படுத்துதல் (ஒழுங்குமுறைப் படுத்துதல்)என்ற நிலையில் 'வரைவு' என்பது மணத்தைக குறித்தது. வரைதல் வேட்கை என்பது மணந்து கொள்ளும் விருப்பத்தைக் குறிக்கும். இதனைத் தொல்காப்பியம்"வெளிப்பட வரைதல், வெளிப்படாது வரைதல் என்று ஆயிரண்டென்ப" என இரு வகையாகக் கூறுகிறது. எனவே வரைதல் என்பது திருமணத்தைக் குறிக்கும் சொல்லாக பண்டைத் தமிழர் வழக்கில் இடம் பெற்றமையைக் காணலாம். ஆயினும் இது பின்னர் வழக்கொழிந்துள்ளது.

பழந்தமிழரும் திருமணமும்

பண்டைத் தமிழர் தன் வாழ்க்கையில் களவொழுக்கம், கற்பொழுக்கம் ஆகிய இருவகை ஒழுக்கங்களையும் கொண்டிருந்தனர். மணச் சடங்கினைப் பற்றி தொல்காப்பியம் கூறும் செய்திகளில் பண்டைத்தமிழர்கள் திருமணம் என்ற சடங்கு இல்லாமலேயே இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தனர். எண்வகை மணமுறைகள் நிகழ்ந்துள்ளன. பின்னர் இச்செயற்பாட்டில் பொய்மையும் வழுவும் மிகுதிப்படவே அதனைக் களைய வேண்டி சில விதி முறைகளை வகுத்தனர். 'கரணம்' என்ற திருமணம் வாயிலாக பொய்மை நிகழாது என நினைத்தனர். இதன் காரணமாக திருமணம் என்ற சடங்கு உருவாயிற்று. இனவே, களவு மணம், கற்பு மணம் இரண்டும் தமிழர் வாழ்க்கை நெறியாக அன்று விளங்கியதை அறியலாம். பெற்றோர் நடத்தி வைக்கும் மணவாழ்க்கையே 'கற்பு நெறி' எனப்பட்டது.

மணமுறைகள்

பொருள் கொடுத்தும், சேவை புரிந்தும் மணத்தல், திறமையை வெளிக்காட்டும் வகையில் வீரத்தின் காரணமாக மணத்தல், போர் நிகழ்த்தி மணத்தல் ,தன் காதல் மிகுதியைக் காட்டி மணத்தல் ஆகிய இவ்வகை மண்முறைகள் களவுநெறி, கற்புநெறி ஆகிய இருவகை மண முறைகளிலும் இருந்தது. உறவு முறைத்திருமணம், கலப்புமணம் ஆகிய வகைகளில் கூட களவு மணமும் இருந்தது என்பதனை இலக்கியங்கள் வாயிலாக அறியலாம்.
இதன் அடிப்படையில் சங்க இலக்கியங்கள் வாயிலாக தெரியவரும் தமிழரின் மணமாக
  1. மரபு வழி மணம்
  2. சேவை மணம்
  3. போர் நிகழ்த்தி மணம்
  4. துணங்கையாடி மணம்
  5. பரிசம் கொடுத்து மணம்
  6. ஏறு தழுவி மணம்
  7. மடலேறி மணம்
ஆகிய மண முறைகளைக் காணலாம்.

மரபு வழி மணம்

இதனைப் பலரறி மணம் என்றும் இயல்பு மணம் என்றும் கூறுவர்.பெண்ணின் பெற்றோர் மணமகனிடம் ' யான் கொடுப்ப நீ மணந்து கொள்' என்று வேண்டி மணமுடித்தலாகும். இதுவே சமூகத்தில் பெரு வழக்காக இருந்தது

ஏறு தழுவுதல்

தமிழரின் வீர உணர்வைக் காட்டும் செயல் 'ஏறு தழுவுதல்' ஆகும். இதுகலித்தொகையில் முல்லைக்கலியில்ஆயர் மத்தியில் நிலவிய மணவினைச் சடங்கு எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆயர்கள் தங்கள் பெண்களை மணக்கப் போகும் ஆடவரின் திறனை, வீரத்தின் அடிப்படையில் மதிப்பிட வேண்டி மேற்கொண்ட வீர விளையாட்டே ஏறு தழுவுதல் ஆகும். காளையை அடக்கி தழுவி நிற்பவனுக்கே தலைவி உரியவள் என்ற குறிக்கோளுடன் ஏறு வளர்த்தனர். அவ்வேற்றினைத் தழுவி அதற்குப் பரிசுப்பொருளாக ஆயர் மகளை மணப்பதற்குத் துணிந்த இளைஞர்களாக ஆயர்கள் இருந்தனர். முல்லை நில ஆயர்கள் ஆடு, மாடுபோன்ற விலங்கினங்களைப் பாதுகாக்கும் தொழிலையுடையவர்கள். அவற்றிற்குப் புலி முதலிய விலங்குகளால் துன்பம் நேராமல் காக்கும் பொருட்டும், கள்வர் கவர்ந்து செல்லாமல் காக்கும் பொருட்டும், அவர்கள் வீரமிக்கவராக இருத்தல் இன்றியமையாதது. இதனால் ஆயர் தம் மகளைத் திருமணம் செய்ய முன்வருபவரின் ஆற்றலை அறிந்த பின்னரே மகளை மணம் முடித்துக் கொடுக்கும் வழக்கம் உடையவராக இருந்தனர் என்பதை அறியலாம்.

மடலேறுதல்

பனை மடலைக் குதிரையாக ஆக்கி, எறியூர்தலை "மடன்மா ஏறுதல்' என்றும் ' மடல்' என்றும் சுட்டினர். இச்செயலை மேற்கொள்வதன் மூலம், தலைவனின் காதன் வன்மையை ஊருக்கு உணர்த்துதல், அதன் வழியாக தான் விரும்பிய மணமகளைப் பெற்று மணத்தல் என இது அமைகிறது. மடலேறி மணம் முடித்தலைப் பெருந்திணையின் பால் படுத்திக் கூறுவார் தொல்காப்பியர். பழந்தமிழர் இலக்கியங்களிலேயே இது குறைவாகவே இடம்பெற்றுள்ளது. தமிழரின் வாழ்க்கையில் மடலேறுதல் என்பது அருகியே வழக்கில் இடம்பெற்றிருக்க வேண்டும். பெண்கள் மடலேறுதல் இல்லை. ஏனெனில் நாணம் துறந்து மடலேறுதல் என்பது காமம் மிக்க கழிபடர் தலைவனுக்கு உரிய ஒன்றாகும். மடலூரும் தலைவனே இச்செயலை நாணமிக்க செயலாகக் கருதுவதாககுறுந்தொகைப் பாடல் காட்டுகிறது. இவ்வழக்கு தற்போது இல்லை.

போர் நிகழ்த்தி மணமுடித்தல்

தமிழர்கள் வீர உணர்வை விளக்கும் வகையில் 'மகட்பாற்காஞ்சி' என்னும் துறையை தொல்காப்பியம் சுட்டுகிறது. பண்டைத் தமிழர் சமுதாயத்தில் ஒருவன் தான் மணக்க விரும்பும் பெண்ணைப் பெறுதல் அரியது என்ற நிலை உருவாகும் போது, போரிட்டு வெற்றி பெற்றுத் தான் விரும்பிய பெண்ணை மனந்து கொள்ளுதல் என்ற வழக்கம் இடம் பெற்றமைக்குப்புறநானூறு என்ற இலக்கியத்தில் உள்ள பாடல்கள் சான்று பகர்கின்றன.

துணங்கையாடி மணத்தல்

துணங்கையாடுதல் என்பது மகளிர் விளையாட்டில் ஒன்று. விழாக்காலங்களில் துணங்கையும், மன்னர்ப்போரும் ஒருங்கே நிகழும். துணங்கைக் கூத்துக்குரிய நாள் நிச்சயிக்கப்பட்டு, அந்நாளில் ஆண், பெண் இருபாலரும் தனித்தனியே துணங்கையும், மன்னர்ப்போரும் நிகழ்த்திய செய்தியை குறுந்தொகைப்பாடல் காட்டுகிறது.

பரிசம் கொடுத்து மணத்தல்


மணமகளின் பெற்றோர் தனது மகளுக்கு வழங்கிய சீர்வரிசைப் பொருள்கள்
மணமகன் பரிசம் கொடுத்து மணமகளின் பெற்றோர் ஒப்புதலுடன் மணத்தல் பரிசம் கொடுத்தல் எனப்படும். இப்பரிசம் அணிகலன், பணம், நிலம் போன்ற சொத்துக்களாக வழங்கப்பெறும் மணமகளின் பெற்றோர் கேட்கும் பரிசுத் தொகையினைக் கொடுத்து, அவர்கள் ஒப்புதல் பெற்று மணந்தமைக்குச் சான்று உண்டு
" உறுமென கொள்ளுநர் அல்லர் நறுநுதல் அரிவை பாசிலை விலையே "என்ற குறிப்பு இதனை உனர்த்துகிறது. சில சமயம் ஏதேனும் காரணம் குறித்து மணமகன் தரும் பரிசத்தை மணமகளின் பெற்றோர் ஏற்காமல் மகளைக் கொடுக்கவும் மறுப்பர்.தற்காலத்தில் பரிசம் கொடுத்து மகளை மணத்தல் சில சமூகத்தாரிடம் காணப்படுகிறது. அதோடு பொருள் பெற்று மணத்தல் என்பதும் உள்ளது.

திருமண வகைகள்


கனடாவில் ஒருபால் திருமணம்
திருமணங்கள் பல வகைப்படுகின்றன. பெரும்பான்மைத் திருமணங்கள் ஒர்ஆண், ஒரு பெண் ஆகிய இருவருக்கிடையே நடைபெறும் ஏற்பாடு ஆகும். எனினும் தற்காலத்தில் ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கு இடையே நடைபெறும் திருமணங்களும் சட்ட, அரசியல் முறையில் பல நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவை ஒருபால் திருமணங்கள் எனப்படுகின்றன.ஆண் அல்லது பெண் ஒரே சமயத்தில் எத்தனை மனைவியரை அல்லது கணவன்மாரைக் கொண்டிருக்கலாம் என்பதிலும், ஒருவர் யாரைக் கணவனாக அல்லது மனைவியாக அடைய முடியும் என்பதிலும் பல வேறுபாடுகள் உள்ளன. மேலோட்டமாகத் துணைவர் எண்ணிக்கை அடிப்படையில் திருமணத்தை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்.

பலதார மணம்

ஒரு ஆண் பல பெண்களை மணக்கும் முறை பொதுவாக பழந்தமிழர் வாழ்வில் காண முடிகிறாது. சங்க இலக்கியங்களில் காமக்கிழத்தி, பொருள்வயின் கிழத்தி, இல்லக்கிழத்தி என்று பல மனைவியரைக் கொண்டமையை நோக்கும் போது மகட் பேறு மட்டும் கருதி மட்டுமே இப்பலதார மணம் நிகழ்த்தப் பெறவில்லை என்பதனை அறியலாம்.

உறவு முறைத் திருமணம்

உறவு முறைத் திருமணம்மணிமேகலை காப்பியத்தில் முதல் முதலாகச் சுட்டப்படுகிறது. மைத்துனன்-(வடசொல்)மணம் புரிதற்கு உரியவன் என்று பொருள். மணிமேகலைக் காலச் சமுதாய வழக்கில் வணிகர் குலத்திடையே இவ்வழக்கு இடம் பெற்றிருந்தது. வணிகரின் செல்வம், அவர்தம் குடியிலேயே எக்காலத்தும் இருத்தல் வேண்டும் என்ற எண்ணம் காரணமாகவும் வருணப்பாகுபாடு, குலப்பாகுபாடு ஆகியவை அழியாமல் பாதுகாக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் இவை நிகழ்ந்திருக்க வேண்டும் என்பர்.

திணைக் கலப்பு மணம்

சங்க கால குறிஞ்சி, முல்லை, மருதம்,நெய்தல், பாலை என்ற ஐந்நில மக்களுக்குள்ளும் கலப்பு மணம் இருந்த நிலை அகநானூறுப் பாடல் மூலம் அறிய முடிகிறது. மற்ற காப்பியங்களில் இது பற்றிய செய்திகள் இடம் பெற வில்லை.

சேவை மணம்

மணமகன் தான் விரும்பிய பெண்ணின் தந்தைக்குப் பிடித்தமான முறையில் சேவைகள் செய்தோ, தனது திறமைகளைக் காட்டியோ அப்பெண்ணை மணத்தல் சேவை மணம் எனப்படும். சீவக சிந்தாமணியில் சீவகன் ஏமமாபுரத்தின் மன்னன் மகள் கனகமாலையை மணந்ததும்,பெருங்கதையில் உதயனன் பதுமாவதியை மணந்ததும் இந்த சேவை மணத்தினைச் சார்ந்ததாகும்.

தமிழரின் திருமண நிகழ்வுகள்

காப்பியங்களில் காணப்படும் பண்டைத் தமிழரிடம் இடம் பெற்ற மண முறைகளைத் தவிர, நால்வகை வருணத்தவர் தம்குல முறைப்படியான மணவினைச் செயல்கள் இடம் பெற்ற நிலையும் காணப்படுகிறது. இது காப்பியங்களிலும் மரபாக இடம் பெற்றுள்ளது.
  1. பொருத்தம் பார்த்தல்
  2. மணநாள் குறித்தல்
  3. திருமண அழைப்பிதழ் அல்லது முரசுமூலமாக நகர மக்கட்கு உணர்த்துதல்
  4. மணவினை நிகழும் இடத்தை அலங்கரித்தல்
  5. சிறப்பு இறைவழிபாடு செய்தல்
  6. மங்கல ஒலி எழச்செய்தல்
  7. மணமேடை ஒப்பனை
ஆகிய திருமண நிகழ்வுகள் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளது.

பொருத்தம் பார்த்தல்

பண்டைத்தமிழகத்தில் களவு நெறி இருப்பினும் அக்களவு நெறி கற்பாகிய திருமணத்தில் முடிந்தது. இரு பெற்றோர்களில் ஒப்புதல் பெற்று மணம் நிகழ்த்தலை மரபாகக் கொண்டனர். அவ்வாறான கற்பு நெறி சிறந்து விளங்க மணப் பொருத்தம் பார்த்தனர். திருமணத்திற்குரிய பொருத்தங்களாக
" பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு
உருவு, நிறுத்த காமவாயில்,
நிறையே, அருளே, உணர்வோடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே"
என தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். பெருங்கதையில் மணப்பொருத்தம் எட்டு என்றும் அவை
  1. இளமை
  2. வனப்பு
  3. வளமை
  4. தறுக்கண்
  5. வரம்பில் கல்வி
  6. நிறைந்த அறிவு
  7. தேசத்தமைதி காத்தல்
  8. குற்றமில்லாத சூழ்ச்சி முதலியன ஆகும் எனக் குறிப்பிடுகிறது.
சீவக சிந்தாமணியில் குண மாலை-சீவகன் மணம் கணியரிடம் பொருத்தம் கேட்ட பின்பே நிகழ்ந்ததாகக் கூறப்பட்டுள்ளது. பதுமாவதியை சீவகன் மணந்த போது பெண்ணின் தந்தை சாதகம் பார்த்து, மணம் முடித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தற்காலத்திலும் பத்து பொருத்தம் பார்த்தல் நிகழ்கிறது.

மண நாள் குறித்தல்

தமிழர்கள் எந்தச் செயலைச் செய்தாலும் நல்ல நாள் பார்த்துச் செய்வதில் நம்பிக்கையுடையவர்கள். மணவினை முடித்தற்கு உரிய நல்ல நாள், நல்ல நேரம், மங்கல வினைக்குரிய பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய அனைத்தியும் வல்லவரிடம் கேட்டு முடிவு செய்தனர்.
" மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண்டிங்கள்"
மேலும் வளர்பிறை நாள்களையும், பகலின் முற்கூறான காலைப் பொழுதையுமே மண நிகழ்விற்குரிய நல்ல நேரமாகக் கருதினர்.சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள்கோவலன் – கண்ணகி மணவினை சந்திரன் உரோகிணி என்னும் நட்சத்துடன் கூடும் வேளையில் நடந்ததாகக் குறிப்பிடுகிறார். "வானூர் மதியஞ் சகடனைய" கம்ப ராமாயணத்திலும் வசிட்டர் மணவினை நிகழ்த்தற்குரிய நாளைக் கூறினார் என்றும் அறியலாம். இதனால் நல்ல நேரம் பார்த்தல் பெரும்பாலும் எல்லா மரபினராலும் பின்பற்றப்பட்டது.

நகருக்கு உரைத்தல்

மணம் நிச்சயிக்கப்பட்ட பின் மணச் செய்தியினை ஊருக்கு அறிவித்தல் தமிழர் மரபாகும். சங்கப் பாடல்களில்இவை இடம் பெறவில்லை. அக்காலத்தில் இயற்கையோடு இயைந்த மணம் மேற்கொண்டமையால் தங்கள் சுற்றாம் சூழ முடித்துக் கொண்டனர். பிற்காலத்தில்
பல்லார் அறியப் பறையறிந்து நாள் கேட்டுக்
கலியாணஞ் செய்து கடிபுக்க - மெல்லியள்"
என நாலடியார் கூறுகிறது. சிறிய ஊராயின் பறையறிவித்தும், தொடர்ந்த காலத்தில் மன்னர், வணிகர் ஆகியோர் முரசறைந்து மண்ச் செய்தியை நகருக்கு உறைத்தனர். யானையின் மீது அணிகலன்களை அணிந்த பெண்களை அமர்த்தி முரசறைந்து அறிவித்தனர். பெருங்கதையில் மணச் செய்தியைக் கூறும் போது 'வெள்ளை ஆடையை உடுத்தியும், வெள்ளைச் சந்தனத்தை உடலில் அணிந்து, அசையும் மஞ்சிகையைக் (காதணி) காதில் அணிந்து, மாலைகள் ஆட முத்து மாலை புணைந்தும், போர்க்களத்திலே தலைமை கொண்ட யானையின் மீது வன்முரசை ஏற்றினர் என்று முரசறைவோன் தோற்றம் கூறப்படுகிறது. சிந்தாமணியில்மன்னனின் மணவினை அறிவிக்க முரசறைவோன் யானை மீதமர்ந்து, மணச் செய்தியை ஊருக்கு உணர்த்தினான். முரசு சுமக்கும் யானைக்கும் வெள்ளணியும், மாலையும், திலகமும் அணிவித்தனர் என்று சுட்டுகிறது. பெரிய புராணத்தில் புனிதவதி, ( காரைக்கால் அம்மையார்)பரமதத்தன் ஆகியோர் திருமணச் செய்தி ஓலையில் எழுதி அணுப்பிய செய்தியைக் காண முடிகிறது.மனன்ர் மண வினையில் மக்கள் பங்கு அதிகம் இருந்தது. மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தம் கடமை ஆற்றிய நிலையைக் காண முடிகிறது. மேலும் முரசறைவோன் மக்களை அணிகலண்கள் பலவற்றை அணிந்து கொள்ளும்படியும் அவை அரச கட்டளைஆகையால் இனிய பால் சோற்றாஇயல்லாமல் பிறாவற்றை ஏழு நாட்கள் உம் மனம் விரும்பினும் உண்ணாதிருப்பீராக " என்று அறிவுருத்தி, பின்பு அவர்கள் மேற்கொள்ள வேண்டிய செய்தியையும் கூறுகிறான். இதனால் மன்னருக்கும் மக்களுக்கும் இடையே இருந்த உறவும் மக்களின் மகிழ்ச்சியை நல்ல நாளில் விரும்பி கொல்லாமை முதலிய நோன்பு வலியுறுத்தப்ப்டுதலையும் அறியலாம். மண நாளின் போது இன்னா செயல்கள் எவையும் இடம் பெறாமல் அறவாழ்க்கை மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் புலனாகிறது.

மணவினை நிகழும் இடம்

பழந்தமிழர் திருமணத்தை பெண்வீட்டில் நிகழ்த்துதலை மரபாகக் கொண்டிருந்தன்ர்.களவொழுக்கம் காரணமாக உடன்போக்குநிகழும்பொழுது தலைவன் தலைவியைத் தன்னுடன் தனது இடத்திற்கு அழைத்துச் சென்று மணம் செய்து கொள்வது மரபாக இருந்தது. கற்பு மணம் பெரும்பாலும் மணமகள் இல்லத்திலேயே நிகழ்ந்தது. இதனை
" நும்மனைச் சிலம்பு கழீஇயயரினும்
எம்மனை வதுவை நன்மணங்கழிகெனச்
சொல்லி னெவனோ மற்றே வெண்வேல்
வையற விளங்கிய கழலடிப்
பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே" 
என்ற ஐங்குறுநூறு பாடலால் அறியலாம். ஒரு பெண் மணவினை நிகழும் வரை பிறந்த வீட்டை விட்டு வெளி வருதல் கூடாது; பிறர் மனையில் தங்கவும் கூடாது என்ற கொள்கையின் படி பரிசம் போடுதலும் பெண்வீட்டில் திருமணம் செய்தலும் இடம் பெறுவதுதமிழர் வழக்கமாக இருந்தது. காப்பிய காலத்திலும் பெரும்பாலும் மணமகள் வீட்டிலேயே மணவினை நிகழ்ந்தது. இன்று அவரவர் வசதிக்கும் வாய்ப்பிற்கும் ஏற்ப இறைவன் முன்னிலை, திருமணக்கூடம், பொதுமன்றில்கள், மணமகன் இல்லம் ஆகிய இடங்களிலும் மணம் நிகழ்த்துதல் இடம் பெறுகிறது.

மணப் பந்தல் அமைத்தல்


தற்காலத்தில் வீட்டில் மணவினை நடைபெறுவதைக் குறிக்க அமைக்கப்படும் தென்னோலைமற்றும் வாழைத் தோரணங்களால் அமைக்கப்பட்டுள்ள பந்தல்
தமிழர் மணவினைகளில் மனச்செயல் இனிதே நிறைவேறி வாழ்நாள் முழுமையும் வளம் பெற இறைவழிபாடு முதலிடம் பெற்றது. மணம் நடைபெறும் வீட்டின்கண் பந்தல் அமைப்பர். அப்பந்தலை "மணப்பந்தல்" எனச் சுட்டுவர். மணப் பந்தலில் நாற்பத்தைந்து காலகள் இடம் பெற்றன. ஒவ்வொரு காலிலும் ஒரு தெய்வம் நிலை பெற்றதாகக் கருதினர். அதனை
ஐயொன்பதின் வகைத் தெய்வநிலைஇய
கைபுனை வனப்பின் கான்முதல் தோறும்
ஆரணங்காகிய வணிமுளையகல்வாய்" 
என்ற பெருங்கதை ப் பாடல் வழி அறியலாம். அந்தக் கால்கள் தோறும் கூலமுளைகளையுடைய நிறை குடங்கள் அழகுற அமைக்கப்படது. கணபதி பூசையுடன் மணப்பந்தல் அமைக்க நடுகின்ற முதல் பந்தக்காலை நல்ல நாள், நல்ல முழுத்தம் பார்த்து, மங்கல இசை முழங்க நடுதல் வழக்கம். இறை வழிபாடி நிகழ்த்திய பின் ஏனைய கால்கள் நட்டுப் பந்தல் அமைப்பர். இவை தமிழரிடம் பிற மொழியினரின் தொடர்பு காரணமாக இடம் பெற்ற செயல்கள் எனலாம்.

இறைவழிபாட்டிற்குரிய பொருள்கள்


திருமணச்சடங்கில் பயன்படும்  மங்கலப்பொருள்கள்
தக்கோலம் , ஏலக்காய்,கிராம்பு(லவங்கம்), சாதிக்காய், கற்பூரம்எனும் ஐவகை மணப் பொருள்களுடன்,வெற்றிலையையும் வலப்பக்கம் வைத்து, சந்தனத்துடன், மஞ்சளையும் தடவி இரும்பாற் செய்த விளக்கினிடத்தில் நிறைக்கப்பட்ட நெருப்பு நிறைகளைச் சுற்றி நறும்புகையூட்டி, ' தேவீர் நீர் மலையிடத்திருந்தாலும், மண்ணிடத்திருந்தாலும், விண்ணிடத்திருந்தாலும் இங்கு வந்து இந்தப் படையலைப் பெற்று மணமக்களுக்கு மங்கலத்தைக் கொடுக்க வேண்டும் ' என்று தேவர்களை வேண்டினர். பந்தக்கால் தோறும் உறையும் நான்முகக்கடவுள் முதலிய தெய்வங்களுக்கு அமைந்த இடங்களை செம்முது பெண்டிர் தம்மைக் கன்னிப் பெண்கள் சூழ்ந்திருக்க வலம் வந்து, உளுந்து,நெல், உப்பு, மலர்,வெற்றிலைச்சுருள்,சந்தனம் ஆகிய மங்கலப் பொருட்களையும் தமது கைகைகளில் அடக்கிக் கொண்டு, காந்தள் இதழ் போன்ற தம் மெல்லிய கரம் குவித்து எல்லீரும் இங்கணம் ஏழுமுறை வணங்குமின் என உளுந்து முதலியவற்றைத் தூவி வணங்கிக் காட்டுவர். அக்கன்னியரும் அவ்வாறே வணங்கித் தெய்வங்கட்கு மடை கொடுப்பர். சங்க இலக்கியங்களில்பந்தல் காலில் உறையும் தெய்வங்களின் பெயர் சுட்டப்படவில்லை. இடைக்காலத்தில் நான்முகக்கடவுள் எனப் பகுறிப்பிடப்படுதலைக் காணலாம்

தெய்வங்களுக்குப் படைத்த உணவு வகைகள்

பால் உலையில் வெந்த வெண்சோறு, தேன் உலையில் வெந்த தேன்சோறு, புளிநீரில் வெந்த புளிஞ்சோறு, கருப்பஞ்சாற்றில் வெந்த இன்னடிசில், நெய்ப்பொங்கல் ஆகியவற்றை பொன்,வெள்ளி, மணிச் செபம்புகளாலான அகல்களில் நிறைத்துத் தெய்வங்களுக்கு மடை கொடுத்தனர். இறைவழிபாட்டில் மணமகள், அவளது தோழியர், பெண்டிர் ஆகியோர் இடம்பெற்றனர். இல்லுறை தெய்வத்திற்கு மலர் தூவி வழிபட்டனர்.

மங்கல ஒலி

திருமணம் நடக்கும் வீட்டில் சங்கொலி, பறையொலி ஆகியவை முழங்கும். மணச் சடங்கு நடைபெறும் போது திருமண முழவு(மத்தளம்) பெரிய முரசு, மணமுழவு மணமுரசு ஆகியவை ஒலித்து மணவினையை நகர மக்கட்கு உணர்த்தினர். அரசர் மணவினையில் பல்வகை இசைக்கருவிகளின் ஒலிகள் முழங்கின. ஆறு நாட்கள் கழிய எங்கும் பரபரப்புடன் வெண்சங்கு முழங்கின. குற்றமில்லா யாழும், குழலும், தண்ணுமையும், அழகிய முரசும் முழங்கின. கம்பராமாயணம் இதனை
" மங்கல முரசு இனம் மழையின் ஆர்த்தன;
சங்குகள் முரன்றன; தாரை,பேரிகை பொங்கின;
மறையவர் புகலும் நான்மறை, கங்குலின் ஒலிகளும்
மாகடலும் போன்றதே" 
எனக் குறிப்பிடுகிறது.

நகரை அழகு செய்தல்

மன்னர் மண வினைகளில் நகரினைப் பொலியச் செய்தல் சிறப்பிடம் பெறுகிறது. மக்களும் ஒருங்கிணைந்து கூடி மணவினைச் செயல்களில் ஈடுபட்டனர். மங்கலச் செயல்களாகஅரண்மனை வாயில்களில் கமுகு, வாழை ஆகியவற்றைத் தொங்கவிடுதல், மாலைகள் அணிவித்து அகில்புகையூட்டுதல், அழகிய வண்ணக் கோலமிடுதல்போன்ற செயல்களை மேற்கொண்டனர்.

மணமேடை ஒப்பனை

மணவறை எனப்படும் நிலத்தைதிருமகளின் இடை போலப் புனைந்தனர். வண்ணப் பொடிகளால் கோலமிட்டனர். மங்கலமாகப் பெரிய தவிசை (இருக்கை) இட்டனர். பொற்காசும், மணியும், முத்தும்குவிக்கப்பட்டன. மங்கலகரமாகவிளக்குகள் எழுந்தன. புகைகள் எழுந்தன. பெண்கள் கவரி ஏந்தி நின்றனர். இச்செயல்கள் மன்னரின் மணமேடைகளில் இடம் பெற்றன.

புதுமையாக இடம்பெற்ற சில பழக்கங்கள்

பண்டைத்தமிழரின் மண மரபில் இடம் பெற்ற மணவினைச் செயல்கள் காப்பியங்களில் அமைந்து காணப்படினும் புதியவைகளும் காப்பியங்களில் இடம்பெற்றுள்ளன. பண்டைத் தமிழர்களிடம் இல்லாத வேள்வித் தீ வளர்த்தல் என்பது சிலப்பதிகாரம் மற்றும் பெருங்கதையில் காணப்படுகிறது.
  • காப்பு நூல் கட்டுதல்
  • மங்கல நீர் கொண்டு வருதல்
  • மண மக்கள் ஒப்பனை
  • மணமகன் அழைப்பு
  • வேள்வித்தீ
  • அம்மி மிதித்தல்
  • பாத பூசை செய்தல்
  • அருந்ததி காட்டல்
  • அறம் செய்தல்
  • மங்கல அணி
  • சீதனம் கொடுத்தல்
இது போன்று புதியனவாக தமிழர்களின் திருமணத்தில் புதிதாக இடம் பெற்றன.

உலகில் வினோத திருமணங்கள்

  • சீனா நாட்டில் உகூர் கலாசார மக்கள் மணமகள் மீது அம்பு எய்து அன்பைப் பரிமாறிக்கொள்கிறார்கள்.
  • ஆப்பிரிக்காவின் மரிட்டானியா பகுதியில் மணப்பெண் உணவு உண்டு உண்டாக வேண்டுமென்று நினைக்கிறார்கள்.
  • ஸ்காட்லந்து நாட்டில் திருமணத்திற்கு முதல் நாள் மணமகளை அழுகிய பழங்களைக்கொண்டு கறுப்பாக மாற்றுகிறார்கள்.
  • சீனா நாட்டின் துஜியா இனத்தில் மணமகள் ஒரு மாதத்திற்கு ஒரு மணி நேரம் அழ வேண்டும். இது அங்கு கட்டாயம் ஆகும்.
  • கொரியா நாட்டில் முதலிரவிற்கு செல்லும் மணமகனை இரண்டு கால்களையும் கட்டி உள்ளங்காலில் அடிக்கிறார்கள்.
  • இந்திய நாட்டில் ஜாதகத்தில் தோசம் இருக்கும் பெண்கள் வாழைக்கன்றையோ, தென்னை மரத்தையோ முதலில் திருமணம் செய்த பின் கல்யாணத்திற்க்கு ஆயத்தப்படுத்துகிறார்கள்.
  • அயர்லாந்து நாட்டில் திருமணப்பெண் நடனமாடும்போது காலை தரையிலிருந்து தூக்கவே கூடாது என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.
  • ஸ்பார்ட்டன் கலாசாரத்தில் மணப்பெண்னை மொட்டை அடித்து, ஆணின் உடையை உடுத்தச் செய்து அலங்கோலப்படுத்துகிறார்கள்.
  • ஜெர்மானிய திருமணங்களின் மணமக்களுக்கு பீங்கான் தட்டுகள் கொடுக்கப்பட்டு அதை அவர்கள் தரையில் போட்டு உடைக்கிறார்கள்.

சாதியும் திருமணமும்

இந்தியாவில் சராசரி 89 சதவிகிதம் திருமணங்கள் சொந்தசாதிக்குள்ளேயே நடக்கின்றன. தமிழகத்தில் 2.59 சதவிகிதம் மட்டுமே சாதி மறுப்பு திருமணங்கள் நடக்கின்றன. தமிழக மற்றும் ராஜஸ்தானில் அதிக அளவு 97.41 சதவிகிதம் அகமணமுறை திருமணங்கள் நடப்பதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது.

Ruler can do anything, so Born to rule the Galaxy

திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போவது எப்படி?


1. பெண் பார்க்கச் செல்லும் முன்னரே பெண்ணின் அப்பா / அண்ணன் போன்றோரிடம் தொலைப்பேசி மூலம் சுருக்கமாக பேசி ஒரு அறிமுகம் பெற்றுக் கொள்ளுங்கள். வரும் நேரம், வழி ஆகியவற்றை ஒப்புக்குக் கேட்கலாம். இதனால் முன் பின் அறியாமல் போய் விழிப்பதைத் தவிர்க்கலாம். பெண்ணிடமே முன்கூட்டிப் பேசி விட முடியுமானால் இன்னும் அருமை. பெண்ணின் படிப்பு, வேலை, குடும்பப் பின்னணி இவற்றை வைத்து இதைக் கேட்டுப் பார்க்கலாமா என முடிவு செய்யலாம்.
2. கூட்டமாகச் செல்ல வேண்டாம். நம் பக்கத்தில் இருந்து முடிவெடுக்கக்கூடிய முக்கியமான உறவினர்கள் 4, 5 பேர் செல்லலாம். கண்டிப்பாக ஒரு பெண்ணாவது இருக்க வேண்டும். பல திருமணங்களை நடத்தி வைத்த அனுபவம் உள்ள பெரியவர் ஒருவர் இருந்தால் நன்று. நிறைய பேர் சென்றால் பெண் வீட்டாருக்கும் ஏற்பாடு செய்வது சிரமம். அந்தப் பெண்ணுக்கு இதற்கு முன்னரே நிறைய வரன்கள் வந்து சென்றிருந்தால், நாம் படை சூழப் போவது அவர்களுக்குத் தர்ம சங்கடமான நிலையைத் தரும். பெண் நிச்சயமானால், அடுத்த முறை இன்னும் நிறைய பேரை அழைத்துச் சென்று முறைப்படி பேசும் சூழல் வரும். குழந்தைகளை அழைத்துச் சென்றால் அவர்களை வைத்துச் சற்று கலகலப்பாக பேச்சை வளர்க்கலாம். வாயாடிப் பிள்ளைகள் விளையாட்டுத் தனமாகப் பேசி நமது மானத்தை வாங்கலாம் என்பதால் இதில் சற்று கவனம் தேவை :)
3. பை நிறைய பூ, பழம், இனிப்புகள் வாங்கிச் செல்லலாம். நாம் எவ்வளவு வாங்கிச் செல்கிறோம் என்பதை வைத்து நமது தாராள குணத்தை அளக்கக்கூடும்.
4. கோயில், உணவகம் போன்ற இடங்களிலும் பெற்றோர்கள் உடன் மட்டும் சென்று பார்க்கலாம். இதில் சற்று இறுக்கம் குறைவாக இருக்கும். எனினும், எல்லா குடும்பங்களும் இதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். வீட்டுக்கே சென்று பார்ப்பதால், நாமும் அவர்களின் பழக்க வழக்கங்கள், உறவு முறைகளை அறிந்து கொள்ள முடியும்.
5. பெண் பார்க்கப் போகும் அன்று நன்கு தூங்கி எழுந்து, சவரம் செய்து, நன்றாகத் துவைத்துத் தேய்த்த ஆடையை அணிந்து செல்லுங்கள். விரல் நகங்களை வெட்டிச் சென்றால் கூடுதல் மதிப்பெண் கிடைக்கும் என்று எனக்கு ஒரு தோழி சொன்னாள் :)தேவைப்பட்டால், வாடகைக்காவது ஒரு வண்டி எடுத்து அலைச்சல், உளைச்சல் இல்லாமல் சரியான நேரத்துக்குச் செல்லுங்கள்.
6. தனியாக இல்லாவிட்டாலும், மற்றவர்கள் முன்னிலையிலாவது பெண்ணிடம் ஏதாவது பேச்சு கொடுக்க முயலுங்கள். எல்லா கேள்விகளுக்கும் பெற்றவர்கள் முந்திக் கொண்டு பதில் சொன்னாலும், விடாமல் பெண்ணிடமே பேச்சு கொடுங்கள். நிமிர்ந்து உட்கார்ந்து நேராகப் பார்த்துப் பேசுங்கள். வள வள என்று பேசாமல் சுருக்கமாக, தெளிவாக பேசுவது நன்று. ஒரு சில நிமிடங்கள் பேசினாலும், பெண்ணைப் பற்றிய ஏதாவது ஒரு புரிதல் கிட்டும். பெண் பிடித்திருந்தால், அவர்களின் தொலைப்பேசி எண் கேட்டு வாங்கி மேலும் பேசிப் புரிந்து கொண்டு முடிவைச் சொல்லலாம்.
7. பெண் பிடித்திருக்கிறதா என்று கேட்டால், ஆமாம் / இல்லை என்று பட்டெனச் சொல்லி விடாதீர்கள். உங்கள் பெற்றோர், பெரியவர்களிடம் பேசி விட்டுச் சொல்வதாகச் சொல்லுங்கள். வாக்கு கொடுத்து மீறுவது போல் ஆனால் சிக்கலாகும். நமக்குப் பிடிக்கும் பெண் ஊகிக்கவே முடியாத காரணங்களுக்காக நமது பெற்றோருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்.
8. தரகர் மூலம் ஏற்பாடு ஆன பெண் என்றால், இயன்ற அளவு தரகரை கழற்றி விட்டு விட்டுச் செல்லவும். இரண்டு பக்கமும் மாற்றி மாற்றிப் பேசி குழப்புவதில் தரகர்கள் வல்லவர்கள். எந்த அளவுக்கு நேரடியாகப் பெண் வீட்டாரிடம் பேசுகிறோமோ அந்த அளவு நல்லது.
9. பணம், வரதட்சணை முதலிய தீவிரமான கேள்விகளைத் தவிருங்கள். இது ஒரு அறிமுக சந்திப்பே.
10. ஒரு மணி நேரத்துக்கு மேல் தங்காதீர்கள். தேநீர், இனிப்புகள் மட்டும் சாப்பிடுங்கள். பெண் நிச்சயமான பிறகே விருந்து சாப்பிடுவது பல ஊர்களிலும் உள்ள முறை.

Ruler can do anything, so Born to rule the Galaxy

Saturday, 9 May 2015

"வாரன் பப்பட்" (Warren Buffet )

உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான "வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்..! 1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்.... 2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம் 3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை 4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது 5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய‌ விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்.... 6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்..... 7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது (அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது (ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது 8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்.... 9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்.... 10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க‌ , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை : 1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது 2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள் 3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள் 4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்...... 5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர் 6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே... . . . Ruler can do anything, so Born to rule the Galaxy

Friday, 8 May 2015

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது?.

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...? என்பவைகளை பற்றி. சற்று விரிவாக ஆராயலாம்..வாருங்கள் !!!!! நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன் பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால் உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை. பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும். இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம் போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வ கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும் காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா? அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது? இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம் முன்னோர்களும் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள். இது எத்தனை தூரப்பார்வையோடு, வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?” குலதெய்வம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும். தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம் குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன் சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம் என்று அலட்சியப் படுத்தக்கூடாது. எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான் உயிரை எடுக்கமுடியும். குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு. நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க சென்றாலும் குறிசொல்பவர் நம்குல தெய்வத்தை அழைத்து அதனிடம் கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக எதையும் சொல்ல முடியாது. இதை உணர்ந்த மந்திரவாதிகள் ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில் யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம் கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான் செய்வினை செய்வார். மந்திரவாதிகள் தாங்கள் வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின் குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில் பெற்று விடுகிறார்கள். மந்திர கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும் உண்டு. அவை அந்த மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு. குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில் தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும். அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை. எனவே தான் அந்த தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன் அழைக்கப்படுகின்றன. குலதெய்வங்களும் கர்மவினைகளை நீக்க வல்லவை. யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல் போவதும் உண்டு. பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன் படைத்திருக்கிறான். பிறந்த வீட்டில் ஒரு தெய்வம் புகுந்த வீட்டில் ஒரு தெய்வம். திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள். பிறந்த வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது. பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும் காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும் சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும். இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில் வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள். ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது. குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம், யாகம் செய்தாலும், ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன் தருமா என்பது சந்தேகம்தான். எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள். அக்கோவிலுக்கு உதவுங்கள். பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள் வாழ்க்கைபோகும் போக்கை… அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற தன்மையை போதிக்கிறது, அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம் மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த குலதெய்வம் மனிதன் லௌகீக வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் அவர்கள் தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக்கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்து விடும். ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13 வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு இருக்கும். விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக் காண்போமா.....? விஞ்ஞான முறையில் யோசித்தால் ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே. ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23 தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம். இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தந்தையின் க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன. தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள் உள்ளன. ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக் கூறி உள்ளது. ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக் கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே. ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ, ஆணோ ஒருவரை ஒருவர் அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர, சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம் சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும். ஏனெனில் பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம் இருவரிடமும் இருக்கையில் ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும் ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை. ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம் இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில் அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப் போகின்றது வழி வழியாக. வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன், கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத் தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப் பட்டு வருகின்றது. இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளித்திருக்கின்றனர். இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன் தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது. ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y க்ரோமோசோம்கள் பெண்களுக்குக் கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம் இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y க்ரோமோசொம்கள் மட்டுமே. ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத் தன் மகனுக்கு அளிக்க முடிகிறது. பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள் கிடைப்பதில்லை. ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே பலவீனமான ஒன்று. மேலும் தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச் சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக் கொண்டிருக்கிறதாம். 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால் ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும் பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள் தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது ... . . Ruler can do anything, so Born to rule the Galaxy

அன்பு இருக்கும் இடத்தில்வெற்றியும் செல்வமும் இருக்கும்

ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள். அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள். அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள். அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் . அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள். மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார். அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்.. அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள். ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள். அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார். அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்.. அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார். அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள். இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள். இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார். அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள். அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர். இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்? நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள். அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!! அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும். ‪#‎அன்பே‬ கடவுள் Ruler can do anything, so Born to rule the Galaxy

முழுக்காதன் (அருமைக்காரர், சீர்காரர்) குலம் வரலாறு

வெள்ளாளக் கவுண்டர்களில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவினர் உள்ளார்கள். அவர்களில் ஒரு குலத்தவரே முழுக்காதன் என்பவர்களது பிரிவாகும். காடையூரின் பழங்காலத்திய பெயர் நட்டூர் என்பதாகும். காங்கேயத்தை தமது குலதெய்வ பிரதான பூமியாக கருதும் இவர்கள் காடையூர், நல்லூர், ஊத்துக்குளி, மோரூர், இளம்பிள்ளை, மோழிப்பள்ளி, பொள்ளாச்சி, புதன்சந்தை, ஏழூர், தொழுவூர், தோளூர், போன்ற ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.வெள்ளாள கவுண்டர் சமூகத்தில் இந்த சமூகத்தினருக்கு மற்ற பிரிவினரை விட அதிக மரியாதையும், மதிப்பும் உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள். அது மட்டும் அல்ல அவர்களது முக்கியமான வீட்டு விழா என்பது காது குத்தும் சடங்காகும். அதை அவர்கள் பெரும் விழாவாக கொண்டாடி சீர்வரிசைகளை செய்வதினால்தான் அவர்களை முழுமையான காதைக் கொண்டவர்கள் எனக் கருதி அவர்களை முழுக் காதன் என்பார்கள். காங்கயம் அருகில் உள்ள காடையூரில் முழுக்காதவர்களின் குல தெய்வமான வெள்ளையம்மாவின் சன்னதி புகழ் பெற்ற காடையீஸ்வரர் கோவிலில் உள்ளது. காடையூர் என்ற பெயர் ஏற்பட்டதின் காரணமும் ஒரு அதிசய நிகழ்வுதான். முன்னொரு காலத்தில் நட்டூர் எனப்பட்ட தற்போதைய காடையூரில் ஆட்சி செய்து வந்த குறுநில மன்னன் பாண்டிய நாட்டு அரசனுக்கு யுத்தத்தில் உதவி செய்ய முன் வந்தான். பாண்டிய நாட்டு அரசன் மீது படையெடுத்து வந்த வடநாட்டு மன்னன் பெரும் படையுடன் யானைப் படையையும் அழைத்துக் கொண்டு வந்து தாக்குதலை நடத்தினான். அந்த கால யுத்தங்களில் யானைப் படையே வலிமையான படையாகும் என்பார்கள். ஆனால் நட்டூரில் இருந்த மன்னனிடம் அதிக படை பலம் இல்லை. அவர் நாட்டில் நிறைய காடைக் குருவிகள் இருந்தன. நட்டூர் மன்னன் சிவ பக்தர். ஆகவே பெரும் படையுடன் வந்த வடநாட்டு மன்னனை தோற்கடிக்க சிவபெருமான் தனக்கு உதவ வேண்டும் என்று அவன் சிவபெருமானிடம் வேண்டிக் கொள்ள அவரும் ஒரு காடைக் குருவியாக உருவெடுத்து பல காடைக் குருவிகளுடன் சேர்ந்து வந்து அந்த யானைகளை தாக்கலானார். யானைகளை காரைக் குருவிகள் தாக்கலாயின. அவற்றில் ஒரு குருவியாக சிவபெருமானும் இருந்தார் சாதாரணமாக யானைகள் தமக்கிட்ட பணியில் கவனமாக இருக்கும். ஆனால் தம்முடைய கண்களையும், காதுகளையும் கொத்திக் கொத்தி நூற்றுக்கணக்கான காரைக் குருவிகள் காயப்படுத்தியதைக் கண்டு கோபமுற்ற யானைகள் செய்வதறியாமல் பிளிரத் துவங்கி மதம் பிடித்து தம்மை அழைத்து வந்த படையினரையே திருப்பித் தாக்கத் துவங்க, படையெடுத்து வந்த வெளிநாட்டு மன்னன் பயந்துபோய் எஞ்சி நின்ற படையினருடன் ஓட்டம் பிடித்தானாம். இதனால் மன்னனைக் காத்த காரைக் குருவிகள் பெருமை பெறும் வகையில் நட்டூர் என்பது காடையூர் என்ற பெயராயிற்று என்பதாக கர்ண வழிப் பரம்பரைக் கதை உண்டு.இதனால்தான் காடையூர் சிவபெருமான் ஆலயத்தில் முழுக்காதன் வெள்ளாள கவுண்டர் சமூகத்தினர் வழிபடும் பங்கசாக்ஷி சமேத காடையீஸ்வரர் மற்றும் அவர்களது குலதெய்வமான வெள்ளையம்மாள் சன்னதியும் உள்ளது. காடையீஸ்வரரே மன்னனுக்கு யுத்தத்தில் குருவி உருவில் வந்து உதவிய சிவபெருமான் ஆவார் என்ற நம்பிக்கையும் உண்டு. பங்கசாக்ஷி சிவபெருமானின் மனைவியான பார்வதியே. இனி அந்த ஆலயத்தில் உள்ள வெள்ளையம்மாள் தெய்வமான கதையைப் படியுங்கள் . முன்னொரு காலத்தில் காக்கேயம் எனும் ஊருக்கு பக்கத்தில் இருந்த கிராமத்தில் ஒரு விவசாயி வாழ்ந்திருந்தார். அவருக்கு சில நிலபுலங்கள் உண்டு. அவருக்கு ஒரு பெண்ணும், நான்கு மகன்களும் இருந்தார்கள். பிறக்கும்போதே பெண் குழந்தையின் சரீரம் வெள்ளை வெளீர் என இருந்ததினால் அவளுக்கு வெள்ளையம்மாள் எனப் பெயரிட்டார்கள். நான்கு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். வெள்ளையம்மாள் திருமண வயதை எட்டினாள். ஆனால் அவர்கள் அவளை யாருக்கு மணமுடித்துத் தருவது என்ற கவலையில் இருந்தபோது பக்கத்து நிலங்களில் மாடுகளை மேயவிட்டுக் கொண்டு இருந்த ஏழை இளைஞன் ஒருவரைக் கண்டார்கள். அவர்கள் பார்த்தவரை அந்த இளைஞன் நல்ல குணம் கொண்டிருந்தான். தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்து வந்திருந்தான். அவனும் அவர்களது இனத்தவரே ஆகும். ஆகவே அவனைக் கண்டவர்கள் அவனிடம் பேசி அவனுக்கே ஊரார் சம்மதத்துடன் வெள்ளையம்மாவை திருமணம் செய்து வைத்தார்கள். அதன் பின் அனைவருமே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். காலம் கடந்தது. வெள்ளையம்மாளின் கணவர் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தவன்சில காலத்திலேயே வெள்ளையம்மாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்து வளர்ந்தன. சில காலத்திலேயே வெள்ளையம்மாளின் தந்தை வயதாகி மரணம் அடைந்தார். மரணம் அடையும் முன்னால் தனது மகன்களையும், வெள்ளையம்மாளின் குடும்பத்தையும் அழைத்து, தனது மரணத்துக்குப் பின்னால் தன்னுடைய சொத்துக்களில் நிலபுலங்களில் ஒரு காணி நிலத்தை வெள்ளையம்மாளுக்கு தரவேண்டும் என்று மகன்களிடம் கூறிவிட்டு மரணம் அடைந்தார். தந்தையின் மரணத்துக்குப் பின்னால் அவருடைய மகன்கள் அவரவர்களுடைய மனைவிகளின் துர்போதனையைக் கேட்டு வெள்ளையம்மாளுக்கு சொத்தில் காணி நிலத்தை தந்து விட்டால் தத்தம் பங்கு குறைந்து விடுமே என எண்ணிக் கொண்டு அவளுக்கு சொத்தில் எந்தப் பங்கையும் கொடுக்கக் கூடாது என முடிவு செய்தார்கள். வெள்ளையம்மாளின் பலமே அவளது கணவன்தானே என்பதினால் வெள்ளையம்மாளுக்கு தெரியாமல் அவனை தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று அவனைக் கொன்று புதைத்து விட்டார்கள். ஆனால் அவர்களுடன் தனது கணவர் சென்றதையோ அல்லது அவர்கள் அவனைக் கொன்று விட்டதையோ அறிந்திடாத வெள்ளையம்மாளிடம் அவர்கள் வெள்ளையம்மாளின் நடத்தையில் சந்தேகம் கொண்டுதான் அவளது கணவன் அவளை தவிக்க விட்டுச் சென்று விட்டான் எனக் கூறியதும் அல்லாமல் தாங்களும் அவளை சந்தேகிப்பதாகக் கூறினார்கள். அது முதல் தொடர்ந்து சில நாட்கள் அவளது நடத்தையைக் குறைக் கூறிக்கொண்டு இருந்தவர்கள் ஒருநாள் அவளையும் வீட்டை விட்டுத் துரத்தி விட்டார்கள். அவளை அவர்கள் வீட்டை விட்டுத் துரத்தியபோது அவள் தனது மூன்று குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்று விட்டாள். போதாததற்கு அவள் நான்காம் முறையாக அப்போது கர்பிணியாக வேறு இருந்தாள். எங்கு செல்வது எனத் தெரியாமல் பதுங்கி இருந்த வெள்ளையம்மாளை சர்தார் பார்த்தார் எங்கு செல்வது எனத் தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு சென்றபடி இருந்தவள் ஒரு காட்டுப் பகுதியில் சென்று பயத்தில் ஒதுக்குப் புறமாக ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தாள். அப்போது அந்த வழியே வந்து கொண்டு இருந்த அரசாங்கத்தை சேர்ந்த உயர் அதிகாரி பயத்துடன் அமர்ந்திருந்த அவளை கவனித்து விட்டார். அப்படிப்பட்ட அதிகாரிகளை அந்த காலத்தில் சர்தார் என்றே அழைப்பார்கள். குதிரையில் இருந்து இறங்கி அவள் அருகில் சென்று அவளிடம் பேசி நடந்த அனைத்தையும் அந்த சர்தார் கேட்டறிந்து கொண்டார். அவள் கதையைக் கேட்டு மனம் இறக்கப்பட்டவர் அவளை அரண்மனைக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு இடத்தில் பத்திரமாக தங்க ஏற்பாடு செய்தபின் தான், தான் அரசாங்க வேலையாக பல இடங்களுக்கும் செல்ல வேண்டி உள்ளதால் அவளை அங்கேயே தைரியமாக தங்கி இருக்குமாறும் தான் திரும்பி வந்து அவளது குறையை தீர்ப்பதாக வாக்கு கொடுத்தார். சர்தார் வேலை விஷயமாக சென்று விட்டு திரும்ப சில காலம் ஆயிற்று. அதற்குள் வெள்ளையம்மாளுக்கு நான்காம் குழந்தையும் பிறந்து விட்டது. சர்தார் திரும்பி வந்ததும் வெள்ளையம்மாளின் சகோதரர்களை ஊரார் முன்னால் வரவழைத்தார். வெள்ளையம்மாளை வீட்டை விட்டு துரத்தியதின் காரணத்தையும், அவளுக்கு சேரவேண்டிய சொத்தை தராததின் காரணத்தையும் விளக்குமாறு கடுமையாக கேட்டு விசாரிக்கத் துவங்கியதும் அவர்கள் தத்தம் மனைவிகளுடன் சேர்ந்து தமது தவற்றை மறைத்துக் கொள்ளும் விதமாக அவள் நடத்தைக் குறித்து மீண்டும் சந்தேகத்தை எழுப்பினார்கள். ஆனால் அவர்கள் தம் மீது சுமத்திய அத்தனை அவதூறுகளையும் வெள்ளையம்மாள் மறுத்ததும் அல்லாமல் கடவுள் மீது ஆணையாக தான் எந்த தவறையும் செய்யாத பதிவிரதை என சத்தியமும் செய்தாள். தான் எந்த தவற்றையும் செய்யாத பத்தினி என்று வள்ளியம்மாள் சத்தியம் செய்தாள் அதைக் கேட்ட அண்ணன்மார்கள் எங்கே அவளது வார்த்தைகளை சர்தார் நம்பி அவளுக்கு சாதகமாக தீர்ப்பை தந்து விடுவாரோ என பயந்துபோய் அவளால் செய்யமுடியாத சில நிபந்தனைகளைக் கூறி அவற்றை அவள் நிறைவேற்றினால் மட்டுமே அவள் கற்புக்கரசி என தாம் நம்புவோம் என்றும், அப்படி அவள் செய்து காட்டினால் அவளுக்கு சேர வேண்டிய சொத்தைத் தர சம்மதிப்போம் என்றும் கூறினார்கள். அவர்கள் விதித்த நிபந்தனைகள் என்ன தெரியுமா?மாடுகள் இழுத்துச் செல்லும் மாட்டு வண்டியில் மாடுகளை கட்டிவைக்க நுகத்தடி எனும் கட்டையை அதன் கழுத்தில் கட்டுவார்கள். அந்தக் கட்டை விசேஷ மரத்தை வெட்டி நன்கு காயவைத்து அதன் கட்டையில் செய்தது. அது வேறு எதற்கும் பயன்படாது. ஆகவே ஒரு நுகத்தடியை ஒரு இடத்தில் நட்டு வைத்து அதற்கு நீர் ஊற்றி வளர்க்க வேண்டும். நட்டு வைக்கப்பட்ட அந்தக் கட்டை துளிர்விட்டு செடியாக வளர வேண்டும். அது முதல் நிபந்தனை.அடுத்த நிபந்தனை அந்த கிராமத்தில் உள்ள மண் குதிரையின் மீது அவள் ஒரு குடம் நீர் ஊற்றவேண்டும். அப்போது அந்த குதிரை சற்று நேரம் உயிர் பிழைத்து எழுவது போல எழுந்து நின்று கனைக்க வேண்டும்.மூன்றாவது நிபந்தனை என்ன என்றால் நுகத்தடிக்கு நீர் ஊற்றவும், குதிரை மீது நீர் ஊற்றவும் எடுத்து வரப்படும் பானை காய வைத்து பக்குவப்படுத்தி வைக்கப்படாத பானையாக இருக்க வேண்டும். அவள் பத்தினியாக இருந்தால் அந்த மண் குடம் தண்ணீரில் கரையாது.அதைக் கேட்ட சர்தார் திகைத்தார். அவளை ஏமாற்ற அவர்கள் அவளால் செய்ய முடியாத நிபந்தனையை வேண்டும் என்றே விதிக்கிறார்கள். அவளுக்கு நீதி கிடைக்காவிடில் அவளையும் அவளது கணவரைக் கொன்றது போலவே அவர்கள் சதி செய்து கொன்று விடுவார்கள் என்பதை அறிந்து கொண்டதினால் அவளை அந்த நிபந்தனைகளை ஏற்க மறுக்குமாறு கூறினார். ஆனால் வெள்ளையம்மாளோ தான் ஒரு பதிவிரதை என்பது சத்தியமானதினால் அவர்கள் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு அவற்றை செய்வதாகவும், கடவுள் இருந்தால் சத்தியவாதியான தன்னைக் காப்பாற்றுவார் என தீர்மானமாக கூறி விட ஊர் ஜனங்கள் முன்னால் மண்குதிரை இருந்த இடத்தின் அருகில் ஒரு நுகத்தடியை எடுத்து வந்து நட்டார்கள். ஒரு குயவனிடம் இருந்து பக்குவப்படுத்தாத பானையையும் கொண்டுவந்து வெள்ளையம்மாவிடம் தந்தார்கள். வெள்ளையம்மாளோ அதை சர்வசாதாரணமாக தனது தலையில் வைத்து கிணற்றருகில் எடுத்துச் சென்று அதில் நீரை நிறப்பி மீண்டும் தனது தலையில் வைத்துக் கொண்டு வந்தாள். மண் குடம் நீரில் கரையாமல் இருந்தது. நட்டு வைக்கப்பட்டு இருந்த நுகத்தடி மீது குடத்து நீரை ஊற்ற சற்று நேரத்திலேயே அதில் சின்ன சின்ன இலைகள் தோன்றின. அடுத்து மண் குதிரை மீது நீரை ஊற்ற சட்டென எழுந்த குதிரையும் கனைத்து விட்டு அமர்ந்தது. அத்தனை சம்பவங்களையும் பார்த்த அவளது சகோதரர்கள் பயந்து போனார்கள். தாம் செய்த தவறை உணர்ந்தார்கள். தமது சகோதரி தெய்வப்பிறவியாக இருக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அவளுக்கே தமது தந்தையின் அனைத்து சொத்தையும் தந்துவிட்டு அங்கிருந்து கிளம்பி வேறு ஊருக்கு சென்று விட்டார்கள்.வெள்ளையம்மாள்அதன் பின் வெள்ளையம்மாள் பலகாலம் அந்த ஊரில் வாழ்ந்து வந்திருந்தப் பின் ஒருகட்டத்தில் தெய்வமாகி விட்டாள். அவளை அந்த ஊரில் இருந்த அனைவருமே வணங்கி வழிபடலானார்கள். அவள் வழிவந்த இனத்தவரே முழுக்காதன் சமூகத்தினர் என்கிறார்கள்.  Ruler can do anything, so Born to rule the Galaxy

நம் உடம்பை பத்தி , நாம தெரிஞ்சுக்கிட கீழே உள்ள தகவல்கள் நமக்கு உதவியா இருக்கும்

எத்தனை கோடி , கோடியா நாம சம்பாதிச்சாலும், உடல் நலத்தோட இல்லைனா, சவலைப் புள்ளை மாதிரி, எல்லாத்தையும் ஏக்கத்தோட பார்த்து,பார்த்து பேரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்... நம்ம உடம்பை பத்தி , நாம தெரிஞ்சுக்கிட கீழே உள்ள தகவல்கள் நமக்கு உதவியா இருக்கும்.... இப்போ , நாம எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்... எதை சரி பண்ணலாம்னு செக் பண்ணிக்கோங்க.... நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவுசெய்து கொண்டு சுழன்றுகொண்டிருக்கிறது. ஒவ்வொரு உறுப்புக்கும் அதன்பணியை செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது. விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம். இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம்இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள். விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம். காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள்இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தைஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே. காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும் காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள் இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும். காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம். காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும் நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது. முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம். இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல்கூடாது இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம். பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம் இந்த நேரத்தில்மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது. பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம். மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம். பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம். இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber இரவுஉணவுக்கு உகந்த நேரம் இது. இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை, டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல, உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது. இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம். இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும். இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம். இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள். Ruler can do anything, so Born to rule the Galaxy

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...