Wednesday, 23 December 2020
தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதிகளாக அமைந்துள்ள ஊர்கள்
Friday, 11 December 2020
ஏழை மக்களின் பசியாற்றிய மக்கள் சேவகர் சுப்பிரமணியம் சாந்தியடைந்தார்! சாந்தி கியர்ஸ் அறங்காவலர் மரணம்!!
கோவை : பல்வேறு விதங்களில் மக்களுக்கு சேவை செய்து வந்த கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (வயது 78) இன்று உயிரிழந்தார்.
இவர் கோவையில் சாந்தி கியர்ஸ் என்ற நிறுவனத்தை 1972 துவங்கி, இயந்திர உதிரி பாகங்களை பலவேறு நாடுகளுக்கு தயாரித்து கொடுத்து மிக வேகமாக வளர்ச்சியடைந்தவர் சுப்ரமணியம்.
கடந்த 1996 ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கினார்.
இந்த அமைப்பின் அறங்காவலராக இருந்து வந்தார் சுப்ரமணியம். சாந்தி கியர்ஸ் நிறுவனம் சமீபத்தில் வேறு நிறுவனத்திற்கு விற்கபட்டது.
சாந்தி சோசியல் சர்வீஸ் பணிகளை மட்டும் சுப்பிரமணியம் கவனித்து வந்தார்.
மலிவு விலையில் தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஏராளமானோர் உணவகத்தை பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 60 வயதுக்கு மேற்பட்ட 300 பேருக்கு இலவச உணவும் வழங்கப்பட்டு வருகின்றது.
சாந்தி மருத்துவமனையில் மருத்துவர் கட்டணம் வெறும் ரூ.30 மட்டும் வசூலிக்கப்பட்டு வருகிறது. மருத்தகங்களிலும் 30 சதவீதம் விலை குறைவில் அனைத்து மருந்துகளும் விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் மருத்துவ ஆலோசனை பெறவும் , பரிசோதனைகள் செய்யவும்,மருந்துகள் வாங்கவும் பொது மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவார்கள். சாந்தி சோசியல் சர்வீஸ் பெட்ரோல் பங்கில், புதிய ஸ்டாக் வரும் போது என்ன விலையோ, அதே விலை அந்த ஸ்டாக் முடியும் வரை விற்பனை செய்யப்படும்.
சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பால் இலவச மின்மயானமும் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்தகைய சேவைகளை செய்து வந்த சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் கடந்த சில தினங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சுப்பிரமணியம் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு கோவை மக்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
tamil
Tuesday, 8 December 2020
N2R Inspiration Quotes 369
மற்றவர் தோள் மீது ஏறி நின்று தன்னை உயரமாக காட்டி கொள்வதை விட, தனித்து நின்று தன் உண்மையான உயரத்தை உலகிற்கு காட்டுவதே சிறந்தது!
-N2R நந்தகுமார்.
துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!
1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...
-
1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம். மற்றும் 2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம்...
-
🌟 சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது. 🌟 கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கலாகாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கக்கூடாத...
-
முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் ...