Wednesday 28 November 2018

சபரிமலைக்கு தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது ஏன்?


 கார்த்திகை வந்தால் சபரிமலைக்கு மாலைப் போடும் பழக்கம் இன்று வரை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அவ்வாறு சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் யாத்திரையின் போது தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது எதற்காக மற்றும் எருமேலி பேட்டை துள்ளலின் மகத்துவம் என்ன என்பதைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.

18வது முறையாக சபரிமலை யாத்திரைக்கு செல்லும் போது தென்னம்பிள்ளையை எடுத்துச் செல்வது ஏன்?

🔥 முதல்முறை தொடங்கி ஒவ்வொரு முறையும் சபரிமலை யாத்திரை மேற்கொள்ளும்போதும், ஐயப்பமார்களுக்கு பலவிதமான மனமாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் காரணமாக ஐயப்பன்மார்களுக்கு அவர்களுக்குள் இருக்கும் தீயகுணங்கள் அகன்று நல்ல குணங்கள் துளிர்க்கும்.

🔥 ஐயப்பமார்கள் அவர்களிடமிருந்த அஞ்ஞானங்களைத் துறந்து மெய்ஞ்ஞானத்தை அடைகிறார்கள். இதன் மூலம் அவர்களது பழைய பிறவியைத் துறந்து புனர் ஜென்மம் பெறுகின்றனர்.

🔥 தென்னையை நாம் மனித இனத்திற்கு இணையாகவே கருதுகின்றோம். அதனால் அதை தென்னம்பிள்ளை என்றே அழைக்கிறோம். மறுபிறவி எடுப்பதை குறிப்பதற்கே தென்னம்பிள்ளையை எடுத்துச்சென்று அங்கே நடுகிறோம்.

எருமேலி பேட்டை துள்ளலின் மகத்துவம் என்ன?

🔥 பேட்டைத்துள்ளல் என்பது, சுயநலமாக யோசிக்கும் எண்ணங்களை அறவே அகற்றுவதாகும். ஒவ்வொரு மனிதனும் ஜாதி, மதம், இனம், சமூக அந்தஸ்து இவற்றை அகற்றி, வண்ணம் பூசி நடனமாடி பக்தர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். நாம் எல்லோரும் ஒன்று என்ற எண்ணத்தை பிரதிபலிக்கும் வைபவமே பேட்டைத்துள்ளல். இங்கே வேட்டைபிரியரான சாஸ்தா, வேடவன் உருவத்தில் கிராத சாஸ்தாவாக அருள்பாலிக்கிறார்.

🔥 இந்த சாஸ்தா, காட்டில் உள்ள மிருகங்களை மட்டும் வேட்டையாடவில்லை. நம்முள் உள்ள மிருக குணத்தையும் வேட்டையாடி, நம்முள் உள்ள நான் என்ற உணர்வை அழித்து, நமக்குள் விழிப்புணர்வைப் புகுத்தி, நாம் எல்லோரும் சமம் என்று உணரவைத்து நம்மை நல்ல மனிதர்களாக மாற்றி அருள்கிறார்.

ஐயப்ப பக்தர்கள் தினமும் வழிபாடு செய்யும் போது சொல்ல வேண்டிய ஐயப்ப ஸ்லோகம் :

ஓம் மஹாத்யுதயே நம
ஓம் கோப்த்ரே நம
ஓம் கீர்வாண ஸம்ஸேவ்யாய நம
ஓம் கதா தங்காய நம
ஓம் கதா க்ரண்யை நம

ஓம் ரிக்வேத ரூபாய நம
ஓம் நக்ஷத்ராய நம
ஓம் சந்த்ர ரூபாய நம
ஓம் வலாஹகாய நம
ஓம் தூர்வாச்யாமாய நம

#Channel_N2R

Sunday 25 November 2018

கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் தேங்காய் உடைத்தால் ஆபத்தா? பெண்கள் கடைபிடிக்க வேண்டிய சாஸ்திரங்கள் !!



🌟 சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது.

🌟 கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கலாகாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கக்கூடாது. உடைக்கும் அதிர்ச்சி நுண்ணலைகள் மூலம் கர்ப்பத்தைத் பாதிக்கும்.

🌟 இரவில் வீட்டைப் பெருக்கலாகாது. பெருக்கினாலும் குப்பையை தெருவில் கொட்டக்கூடாது. பகலில் குப்பையை வீட்டினுள் ஓரிடத்தில் குவித்து வைக்கலாகாது. அப்படி மூலையில் குவித்து வைத்தால் நல்ல நாளில் எல்லோருடனும் கலந்து இருக்க முடியாமல் விலக்கிவிடும்.

🌟 அதிகாலையில் எழுந்து சாணம் தெளித்து கோலம் போட வேண்டும். வேலைக்காரர்களை வைத்து கோலமிடக்கூடாது. அந்த வீட்டின் பெண்ணே இந்த வேலையை செய்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும்.

🌟 சாப்பிடுவதற்கு இலை போடுவதற்கு முன் இலைக்குக் கீழே பசும் சாணி அல்லது வெறும் ஜலத்தால் சுத்தம் செய்ய வேண்டும்.

🌟 எந்தப் பொருளையும் இல்லை என்று கூறாமல் அந்தப் பொருள் வேண்டும். இந்தப் பொருள் வேண்டும், வாங்கி வாருங்கள் என்றே கூற வேண்டும்.

🌟 எந்தக் குறையையும் எண்ணி கண்ணீர் விடக்கூடாது, அழுத வீட்டில் செல்வம் நிற்காது.

🌟 வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும்போது அவர்களுக்கு வெற்றிலை பாக்கு, பழம், புஷ்பம் போன்றவற்றை கொடுத்து உபசரிக்க வேண்டும்.

🌟 கர்ப்பமாக இருக்கும் போது எலுமிச்சை பழத்தை அறுத்து விளக்கேற்றக்கூடாது.

🌟 பிரதோஷ காலத்தில் அதாவது மாலை 6 மணியளவில் பெண்கள் வீட்டில் படுத்திருக்கக்கூடாது.

🌟 அம்மி, உரல் மீது அமரக்கூடாது. வீட்டு வாசற்படியை மிதிக்கக்கூடாது.

🌟 அன்னம், உப்பு, நெய், காய்கறிகளை கையால் பரிமாறக்கூடாது.

🌟 மாலை நேரங்களில் தீபம் ஏற்றி நமஸ்கரிக்கும் பெண்மணிக்கு ஆசிகூறத் தேவர்கள் இல்லங்களுக்கு வருகின்றார்கள். எனவே தீபம் வைக்கும் நேரத்தில் பெண்கள் வேறு இடங்களுக்குச் செல்லக்கூடாது.

🌟 பெண்கள் கையில் வளையல் அணியாமலும், தலையை விரித்துப் போட்டும் விளக்கேற்றக்கூடாது.


N2R நந்தகுமார்

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...