1. குளித்து தூய ஆடை அணிந்து ஆலய
தரிசனத்திற்குச் செல்ல வேண்டும்.
2. ஆலயத்திற்குள் செல்லும் முன்
கோவிலின் கோபுரத்தைப் பார்த்து வணங்க
வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம்
என்பர் பெரியோர்.
3. மகாசிவநாமமாகிய, “ஓம் சிவாய நம
“ என்ற
ஐந்தெழுத்து மந்திரத்தை மனதினுள்
செபித்துக்
கொண்டே கொடிமரத்தைப்
பார்த்து வணங்க வேண்டும்.
4. பின்பு விநாயகப்
பெருமானை தோப்புக்கரணம்
இட்டு வணங்க வேண்டும். இதுவும்
ஒரு வகை யோகப் பயிற்சியுமாகும்.
5. ஈச்சுவரரை தரிசிக்கும் முன்னர்
நந்திதேவரை வணங்கி ஆசி பெற்று உள்ளே
வேண்டும்.
6. பின்பு ஈச்சுவரரின் காவல்
தெய்வங்களாகிய
துவாரபாலகர்களிடம்
அனுமதி பெற்று ஈச்சுவரனை வணங்க
வேண்டும்.
7.
எம்பெருமானை வணங்கி மும்முறை வலம்
வர வேண்டும்.
8. வலம் வரும் போது குருவாகிய
தட்சிணாமூர்த்தி சுவாமிமுன்
நின்று கண்களை திறந்து அவரைப்
பார்த்து வணங்க வேண்டும்.
9.
அடுத்து வள்ளி தெய்வானை சமேதரராய
காட்சியளிக்கும் முருகப்
பெருமானை தரிசிக்க வேண்டும்.
10 . சண்டிகேசுவரர் சன்னதிக்குச் சென்று,
அவரிடம் ஆசி பெற வேண்டும்.
எக்காரணம் கொண்டும்,
தியானத்தில் ஈடுபட்டிருக்கும் சண்டிகேசுவரர்
சந்நிதியில் கைதட்டியோ,
ஒலி எழுப்பியோ இடையூறு செய்தல் ஆகாது
Wednesday, 27 September 2017
ஆலய தரிசன விதி முறைகள்
Friday, 22 September 2017
சகல பாவம் போக்கும், செல்வம் பெருக்கும் மூன்றாம் பிறை தரிசனம்
வானில் தோன்றும் மூன்றாம் பிறை நிலவைத் தரிசிப்பதையே, 'பிறை காணுதல்' என்கின்றனர். பஞ்சாங்கத்திலும், காலண்டரிலும் மூன்றாம் பிறையை மக்கள் பார்க்கவேண்டும் என்பதற்காக 'சந்திர தரிசனம்' என்று குறிப்பிட்டுள்ளது.
மூன்றாம் பிறையைப் பார்த்தால் செல்வம் சேருமா? என்றும் நான்காம் பிறையைப் பார்த்தால் கஷ்டங்கள் உண்டாகும் என்றும் கூறுகிறார்களே ஏன் என்று 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமனிடம் கேட்டோம். அவர் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...
சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்தப் பிறை தெய்வீக சின்னமாகும்.
காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இதைக் காணவேண்டும் என்று கூறினார்கள்.
மூன்றாம் பிறை உருவான கதை :
ஒரு முறை தட்சனின் சாபத்தால், தனது பதினாறு கலைகளையும் இழந்தான் சந்திரன். தனது கலைகளை மீண்டும் பெறுவதற்காக சந்திரன் சிவனை நினைத்து தியானம் செய்தார்.
தட்சனின் சாபத்தால் உருகும் சந்திர பகவானின் தேக நிலை குறித்து மிகவும் வருத்தம் அடைந்தனர் அவரின் இருபத்தேழு நட்சத்திர மனைவியர். உடனே தங்களின் தந்தையான தட்சனிடம் சென்று சாப விமோசனம் அளிக்கும்படி வேண்டினர் .
தட்சனோ தனது அறியாமையால், அளித்த சாபத்தால் தனது புண்ணியம் அனைத்தும் குறைந்துவிட்டது என்றும், தன்னால் சாப விமோசனம் அளிக்க முடியாது என்றும் கூறினார். இறுதியில் 27 நட்சத்திர மனைவியரும் சந்திரனும் சிவ பெருமானை நினைத்து தவம்புரிந்தனர்.
சந்திரனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் தன் தலைமுடியில், ‘மூன்றாம் பிறையாக’ அமரும் பேறுபெற்றார்.
சுறுசுறுப்போடு அதேநேரம் சிறுகச் சிறுக வளர்ந்தால் முழுப்பலனையும் அடையமுடியும் என்னும் கருத்தை வலியுறுத்துகின்றது இந்த பிறை. இதை வைத்துத்தான் எண்பது வயது நிறைவுற்றவர்களை 'ஆயிரம் பிறை கண்டவர்' என்று அவருக்குச் சதாபிஷேகம் செய்து கொண்டாடுகின்றோம்.
பலன்கள் :
அமாவசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும்.
மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும்.
குறிப்பாக சித்திரை, வைகாசி மாதங்களில் வரும் இப்பிறையைக் கண்டால் ஓர் ஆண்டு சந்திர தரிசனம் செய்த பலன் கிடைக்கும்.
கார்த்திகை, மார்கழி மாதங்களில் வரும் மூன்றாம் பிறையைக் கண்டால் சகல பாவங்களும் தொலையும்.
நான்காம் பிறையை ஏன் பார்க்கக் கூடாது ?
ஒரு முறை விநாயகப் பெருமான் சந்திரலோகத்துக்கு விஜயம் செய்தார்.
கையில் கொழுக்கட்டையுடன் வந்திருந்த விநாயகரைக் கண்டு ஏளனம் செய்த சந்திரன் மீது விநாயகர் மிகுந்த கோபம் அடைந்தார். அன்று பிள்ளையார் சதுர்த்தி வேறு. கோபமுற்ற கணபதி, ‘சதுர்த்தியில் உன்னைப் பார்ப்பவர்கள் வீண்பழிக்கு ஆளாவார்கள்!’ என்று சபித்தார்.
மனம் வருந்திய சந்திரனோ, தான் அறியாது செய்த தவற்றை மன்னித்து சாப விமோசனம் தரும்படி கேட்டுக்கொண்டான். விநாயகர் சந்திரனை மன்னித்தார், ஆனால், மூன்றாம்பிறையைப் பார்ப்பவர்களுக்கு மட்டும் முழு மகிழ்ச்சி பொங்கும் என்று அருளினார்.
நான்காம்பிறையைப் பார்த்ததால் வரும் கெடுபலனை எப்படித் தவிர்க்கலாம்? இதற்கும் புராண காலத்தில் கிடைத்த ஒரு தீர்வைப் பார்ப்போம்.
ஒருமுறை சதுர்த்தியில் வரும் நான்காம் பிறையைப் பார்த்து வீண்பழிக்கு ஆளானார் கண்ணன். இதற்குப் பரிகாரமாக, அடுத்த திங்களில் (அடுத்த மாதத்தில்) அமாவாசையை அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் செய்ததோடு கணபதியையும் வேண்டி பழியில் இருந்துவிடுபட்டார்.
காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும். எனவே,
சந்திர தரிசனம் !!
மூன்றாம் பிறை தரிசனம் முற்பிறவி பாவத்தைப் போக்கும் என்பார்கள். சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும்.
அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும். மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.
மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தல் மனநிறைவும், பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும்.
மூன்றாம்பிறை பிறந்த கதை :
ஒருமுறை விநாயகப் பெருமான், சிவனின் அதிகாரத்தையும், பொறுப்புகளையும் ஏற்றுக்கொண்டார். பொறுப்பினை ஏற்றுக் கொண்ட பின் விநாயகர் அனைத்து உலகங்களையும் பார்வையிட சென்றார்.
எல்லா உலகத்தையும் பார்வையிட்ட விநாயகர் சந்திரனையும் பார்க்க சென்றார். சந்திரன் ஒரு முழுவெண்மதி என்பதால், விநாயகரின் திருவுருவை பார்த்து பரிகசித்தான்.
இதனால் கோபமுற்ற விநாயகப்பெருமான் 'உன் அழகு இன்று முதல் இருண்டு உன்னை உலகத்தார் வணங்க மாட்டார்கள்" என்று சாபமிட்டார். விநாயகரின் சாபத்தால் சந்திரனின் அழகு குன்றியது.
பின் சந்திரன் பொலிவிழந்தான். இதனால் கவலை அடைந்த சந்திரன் மனம் வருந்தியதுடன், சிவனை நோக்கி கடும் தவம் இருந்து பழையபடி முழுவெண்மதியை பெற்றான். முழுமதி நாளில் சந்திரனை வழிபடுவது சந்திர தரிசனை ஆகும்.
மூன்றாம் பிறை வணங்குவதால் ஏற்படும் நன்மைகள் :
சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.
மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.
மூன்றாம் நாள் வரும் சந்திரனை அதாவது மூன்றாம் பிறையை பார்த்தால் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.
Thursday, 21 September 2017
நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல..!
நாம் ரகசியமாக ஒரு காரியத்தைச் செய்தால் யாருக்குத் தெரியப்போகிறது என்று நினைத்துக்கொண்டு தனி அறையிலோ, தனி இடத்திலோ ஒரு காரியத்தைச் செய்கிறோம்.
ஏனெனில் இரண்டாவது ஆள் ஒருவருக்குத் தெரிந்தால் அதன் பெயர் "ரகசியம்"அல்ல என்பதும், அந்த ஆள் எவ்வளவுதான் நெருங்கிய உறவினராக இருந்தாலும், நண்பராக இருந்தாலும் அது வெளியே பரவ வாய்ப்பு உண்டு என்றும் நமக்குத் தெரியும்.
ஆனால் இந்துமதம் என்ன சொல்கிறது என்றால் நீங்கள் செய்யும் எதுவுமே ரகசியம் அல்ல; ஏனெனில் ஒன்பது பேர் எப்போதும் உங்களைக் கண்காணிக்கிறார்கள்; அந்த ஒன்பது சாட்சிகளை மீறி எதையும் செய்ய முடியாது.
*யார் அந்த ஒன்பது பேர்?*
பஞ்ச பூதங்களான நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் (வெற்றிடம்); இது தவிர சூரியன், சந்திரன், எமன், காலம் (நேரம்).
பஞ்சபூதம் என்று சொல்லிவிட்டாலே, அதனுள் எல்லாம் அடங்கிவிடும். இருந்த போதிலும் சூரியனும், சந்திரனும் நன்கு தெரிந்த பிரகாசமான பொருள் என்பதால் அதைச் சேர்த்தனர். அல்லது இரவும் பகலும் — 24 மணி நேரமும்- என்று பொருள் கொள்ளவும் அவை உதவும்.
*எமன் என்பவன் யார்?* அவனுடைய கணக்குப்பிள்ளை சித்திர குப்தன் என்பர். இதன் பொருள் என்ன வென்றால் நாம் செய்யும், நாம் நினைக்கும் ஒவ்வொரு விஷமும் ஒரு சித்திரத்தை — படத்தை உருவாக்குகிறது.
அந்தப் படம் நமக்குத் தெரியாமல் (குப்த = ரகசியமாக) இருக்கிறது. இந்த விஞ்ஞான உண்மையையே இந்துக்கள் 'சித்திர' 'குப்த' என்றனர்.
ஒரு கொசு நீரில் உட்கார்ந்தால் கூட நீரில் அதிர்ச்சி ஏற்பட்டு வளையங்கள் உண்டாகும். ஆனால் நமக்கு கண்ணுக்குத் தெரியாது.அது கொசுவுக்குத் தெரியும். ஒரு எறும்பு ஊர்ந்து சென்றால்கூட ஒரு வழித்தடம் உண்டாகும். அது நமக்குத் தெரியாது. எறும்புக்கு அந்தப் பாதை தெரியும். அதுபோல நாம் எண்ணும் ஒவ்வொரு எண்ணமும் ஒரு படத்தை உண்டாக்கும்; அது நமக்குத் தெரியாது; சித்திரகுப்தன் அல்லது எமனுக்குத் தெரியும்.
சித்திரகுபதன் அல்லது எமன் என்பவன் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர். நம்முடைய எல்லா நல்ல, கெட்ட செயல்கள், எண்ணங்களையெல்லாம் கூட்டிக் கழித்து, பாவ புண்ணியங்களைப் பட்டியல் போட்டுவிடுவர்.
நீர், நெருப்பு, ஆகாயம் முதலியன இல்லாத இடமே இல்லை. அவர்கள் நம்மைக் கவனிக்கிறார்கள் என்பதைச் சொல்லத் தேவையே இல்லை.
இந்துக்களுத்குத்தான் இந்த விஞ்ஞான உண்மைகள் தெரியும். இதுவரை வேறு யாருக்கும் அது தெரியாது.
நீரை மந்த்ரம் மூலம் அனுகுண்டாக மாற்றும் வல்லமை நம் ரிஷி முனிவர்களுக்கு இருந்தது. ஒரு உள்ளங்கை நீரை மந்திரம் மூலம் சாபமாகவோ வரமாகவோ மாற்றும் அரிய வித்தை அவர்களுக்கு மட்டுமே தெரியும். இதனால்தான் பெண்ணைக் கல்யாணம் செய்துகொடுத்தாலும், தானங்களை செய்தாலும் நீரைப் பயன்படுத்தினர். சாபம் கொடுக்கவும் வரம் கொடுக்கவும் நீரைப் பயன்படுத்தினர்.
நெருப்பு என்பது இல்லாமல் மனிதன் முன்னேறமுடியாது. உடம்பிலுள்ள அக்னி ஜடராக்னி. வெளியே உள்ள அக்னி சாட்சியாக திருமணம் செய்துவிட்டால் அதை மீறக்கூடாது. பழைய அரசர்கள் அக்னி சாட்சியாக உடன்படிக்கை செய்ததை நமது கல்வெட்டுகள் கூறுகின்றன. அக்னி சாட்சியாக கோவலன் - கண்ணகி திருமணம் செய்து கொண்டதை தமிழ் காப்பியம் சிலப்பதிகாரம் சொல்லும். நீர் ஆறாக ஓடும்படி தாரைவார்த்து தானம் செய்ததை சங்க இலக்கியம் செப்பும்.
காலம் (நேரம்) என்பது நம்மைக் கவனிக்கிறது. அதை நிறுத்த யாராலும் முடியாது. கடிகாரம் ஓடிக்கொண்டிருபாது போல ஒவ்வொன்றும் கணக்கிடப்படுகிறது.
விண்ணில் உலவும் செயற்கைக் கோள்கள், நம் வீட்டு கொல்லைப்புறத்தைக் கூடப் படம் பிடிக்கும்; கூகுள் மேப் மூலம் நம் நண்பர் வீட்டிற்குள் யார் வந்து செல்கிறார்கள் என்பதை நம் வீட்டுக் கம்ப்யூட்டரிலேயே காணமுடியும்; சி.சி. டிவி மூலம் கொலைகாரனைக் கூடக் கண்டுபிடிக்கமுடியும். இன்ப்ரா ரெட் காமிரா, பைனாகுலர் மூலம் இருட்டில் நடப்பதையும் காணமுடியும். ஆனால் இவைகளிடமிருந்து தப்பிக்க வழி உண்டு. இந்துக்கள் சொன்ன ஒன்பது கர்ம சாட்சிகளிலிருந்து தப்பிக்க யாராலும் முடியாது!!!
ஆகவே ஒன்பது சாட்சிகளுக்குப் பயந்து நாம் நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்; நல்ல காரியங்களையே எண்ண வேண்டும்.
ஒன்றே செய்க; அதுவும் நன்றே செய்க;
Ruler can do anything, so Born to rule the Galaxy
என்றும் இளமையுடன் வாழ ஆசையா?
Ruler can do anything, so Born to rule the Galaxy
ஆண்கள் என்றும் இளமையாக இருக்க சில டிப்ஸ்
இப்போது இளமையைத் தக்க வைப்பதற்கு, ஆண்கள் மேற்கொள்ள வேண்டிய செயல்கள் என்னவென்று பார்ப்போம்.
01. புகைத்தலை உடன் நிறுத்துங்கள்
இளமைத் தோற்றத்தை தக்க வைப்பதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது புகைப்பிடித்தலை நிறுத்துவது தான். ஏனெனில் புகைப்பிடித்தால், சருமத்தில் சுருக்கங்கள் விரைவில் வருவதோடு, சரும வறட்சியை உண்டாக்கும். மேலும் புகைப்பிடித்தலை நிறுத்துவதால், உடலில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் ஆண்மைத் தன்மை குறைபாடு ஏற்படுவதிலிருந்து விடுபடலாம்.
02. ஷேவிங் செய்யும் போது சில செயல்கள்
ஆண்கள் தொடர்ச்சியாக ஷேவிங் செய்வதால், சருமமானது மிகவும் கடினமாவதோடு, வறட்சி மற்றும் ஒருவித சுருக்கமானது ஏற்படும். ஆகவே எப்போதும் ஷேவிங் செய்யும் போது வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்துவதோடு, ஷேவிங் செய்த பின்னர் ஷேவிங் லோசனைப் பயன்படுத்த வேண்டும்.
03. திராட்சை ஜூஸ்
ஆண்களின் இளமையானது நீடிக்க வேண்டுமெனில், தினமும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்த திராட்சை பழத்தை ஜூஸ் போட்டு குடித்து வந்தால், சருமத்தில் நெகிழ்வுத்தன்னை நீள்வதோடு, இளமை தோற்றத்தை தக்க வைக்கலாம்.
04. அல்க்ககோல் தவிர்த்தல்
முதுமைத் தோற்றத்தை தடுப்பதற்கு ஒரு சிறந்த வழியென்றால், ஆல்கஹால் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆல்கஹால் இரத்த நாளங்களை அளவுக்கு அதிகமாக விரிவடையச் செய்து, சரும சுருக்கத்தை ஏற்படுத்தும்.
05. உடற்பயிற்சி
முதுமைத் தோற்றமானது முகத்தில் மட்டும் வெளிப்படுவதில்லை, தசைகளின் மூலம் வெளிப்படும். எனவே தினமும் உடற்பயிற்சியை செய்து வந்தால், தசைகளானது இறுக்கமடைந்து, இளமையான தோற்றத்தைத் தரும்.
06. பால் கொண்டு முகம் கழுவுதல்
வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்ததும், பாலை கொண்டு முகத்தை துடைத்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறுவதோடு, சருமத்தை பொலிவோடு வைத்துக் கொள்ளும். அதிலும் இந்த முறையை தினமும் இரண்டு முறை செய்வது நல்லது.
07. மசாச்
முதுமையை தடுக்க வேண்டுமெனில், உடலின் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க வேண்டும். இத்தகைய இரத்த ஓட்டத்தை மசாஜ் செய்வதன் மூலம் அதிகப்படுத்தலாம். இதனால் உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்த ஓட்டமானது சீராக சென்று, இளமையைத் தக்க வைக்கும்.
08. காய்கறிகள்
உணவில் காய்கறிகளின் அளவை அதிகரிக்க வேண்டும். அதிலும் பசலைக் கீரை அல்லது பீன்ஸ் போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், சுருக்கங்கள் ஏற்படாமல் இருப்பதோடு, சருமமும் பொலிவோடு இளமையுடன் காணப்படும்.
09. சன் ஸ்கிறீன் க்றீம்கள்
முதுமையை தக்க வைக்க வேண்டுமெனில், அதிகமாக வெயிலில் சுற்றக்கூடாது. ஒருவேளை வெயிலில் செல்வதாக இருந்தால், சன் ஸ்கிரீனை தவறாமல் பயன்படுத்தி செல்ல வேண்டும். ஏனெனில் சூரியக்கதிர்கள் சருமத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி, சுருக்கங்களை எளிதில் உண்டாக்கிவிடும்.
10. தண்ணீர்
தினமும் குறைந்தது 8 டம்ளர் அல்லது 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடல் வறட்சி நீங்கி, உடலும் ஆரோக்கியமாக இளமையுடன் காணப்படும்.
Ruler can do anything, so Born to rule the Galaxy
என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி
நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன. நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.
ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா
ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும். "பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள். கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது. கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும். பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:
கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
நாவில் சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,
அக்கி,
தேமல்,
படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திர எரிச்சல்,
கல்லடைப்பு,
சதையடைப்பு,
நீரடைப்பு,
பாத எரிச்சல்,
மூல எரிச்சல்,
உள்மூலம்,
சீழ்மூலம்,
ரத்தமூலம்,
ரத்தபேதி,
பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய்,
இதய நோய்,
மூட்டு வலி,
உடல் பலவீனம்,
உடல் பருமன்,
ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்
போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய். இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...
"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-
காலை வெறும் வயிற்றில் இஞ்சி - நண்பகலில் சுக்கு - இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.
Ruler can do anything, so Born to rule the Galaxy
துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!
1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...
-
1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம். மற்றும் 2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம்...
-
🌟 சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது. 🌟 கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கலாகாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கக்கூடாத...
-
முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் ...