சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஒரு பெரிய பாவ செயல். சண்டிகேஸ்வரருக்கு காது கேக்காது என்று வேறு கூறி வருகிறோம். அப்படியில்லை.
சண்டிகேஸ்வரர் ஒரு மிக சிறந்த சிவ பக்தர். அவர் எப்போதும் சிவ சிந்தனையிலே
தியானத்தில் இருப்பவர். எனவே அவருக்கு முன் சென்று கை தட்டுவது அவரது தியானத்தை
கலைப்பது போன்றது. எனவே இனி சண்டிகேஸ்வரர் முன் கை தட்டாதீர்கள்.
சண்டிகேஸ்வரர் சிவ பக்தர் மட்டும் இல்லை. சிவனின் சொத்துகளை பாதுகாப்பவர். எனவே சிவ ஆலயங்களை விட்டு செல்லுமுன், சண்டிகேஸ்வரர் முன் சென்று மெதுவாக சத்தம வராமல் கைகளை துடைத்து, சிவன் கோயில் சொத்து எதையும் நாம் எடுத்து செல்லவில்லை என்பதை சண்டிகேஸ்வரர் தியானம் கலையாமல் சொல்லவேண்டும்.
இதுவே முறையாகும். தங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இதனை தெரிவிப்பது நமது கடமையும் அல்லவா!
Wednesday, 13 January 2016
சிவ ஆலயங்களில் சண்டிகேஸ்வரர் முன் கை தட்டுவது ஏன்?
Monday, 11 January 2016
கோடங்கிபாளையம் கிராம ஊராட்சி சில பெருமைகள்
வரலாறு
சங்ககாலத்தில் கோவில் கொண்டான் பாளையம் என்று அழைக்கப்பட்ட இவ்வுரானது மருவி பிற்காலத்தில் கோடங்கிபாளையம் என்றானது.
கோடங்கிபாளையம் ஊராட்சி 1950ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. பல்லடம் ஊராட்சி ஒன்றியத்தின் 5வது பெரிய ஊராட்சியாகும்.
10,000 மக்கள் தொகை கொண்ட ஊராட்சியாக உள்ளது.
கிராமங்கள்
இந்த ஊராட்சியில் 6 பழைய குக்கிராமங்கள் உள்ளன.
3.பெருமாள்கவுண்டம்பாளையம்
4.ராசாக்கவுண்டம்பாளையம்
5.காரணம்பேட்டை
6.சங்கோதிபாளையம்
புதியதாக,
1.காந்திநகர்
2.பெரியார் நகர்
3.அண்ணாநகர்
4.நேருநகர்
5.முருகன் நகர்
6.பகவதி நகர்
7.அருள்ஜோதிநகர்
8.அன்னை நகர்
9.இலந்தைமடை
10.பாலாஜிநகர்
போன்ற குக்கிராமங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அஞ்சல் நிலையங்கள்
கோடங்கிபாளையம்-641668
காரணம்பேட்டை-641401,
என இரு அஞ்சல் நிலையங்கள் உள்ளன.
நற்பணி மன்றங்கள்
கோடங்கிபாளையம் ஊராட்சியில் நல்லமுறையில் இயங்கும் 6 இளைஞர் நற்பணி மன்றங்கள் உள்ளன.
1. கோடங்கிபாளையம்- இளைஞர் நற்பணி மன்றம்
2. சின்னக்கோடங்கிபாளையம் - சின்னகோடங்கிபாளையம் இளந்தளிர் நற்பணி மன்றம்.
3. காரணம்பேட்டை-முத்தமிழ் மன்றம்
4. சங்கோதிபாளையம்-இளைஞர் நற்பணி மன்றம்
5. பெருமாக்கவுண்டம் பாளையம்- பாரதி இளைஞர் நற்பணி மன்றம்
6. ராசாக்கவுண்டம்பாளையம்-விவேகம் இளைஞர் நற்பணி மன்றம்
குழந்தைகள் நல மையங்கள்
ஆரம்ப துணை சுகாதார நிலையம் காரணம்பேட்டையில் உள்ளது.
கோடங்கிபாளையம், சின்னகோடங்கிபாளையம்,
காரணம்பேட்டை,
சங்கோதிபாளையம்,
பெருமாக்கவுண்டம்பாளையம்,
எம்.ஜி.ஆர்.நகர் ஆகிய ஊர்களில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் குழந்தைகள் நல மையங்கள் (பாலர் பள்ளிகள்) செயல்படுகின்றன.
நியாயவிலைக் கடைகள்
கோடங்கிபாளையம் -முழு நேர நியாயவிலைக் கடை,
காரணம்பேட்டை-முழு நேர நியாயவிலைக் கடை,
சங்கோதிபாளையம்-பகுதி நேர நியாயவிலைக் கடை,
பெருமாக்கவுண்டம்பாளையம்-பகுதி நேர நியாயவிலைக் கடை
என நான்கு நியாயவிலைக் கடைகள் உள்ளன.
பொதுக் கிணறுகள்
1.கோடங்கிபாளையம்-5
2.சின்னக்கோடங்கிபாளையம்-1
3.சங்கோதிபாளையம்-2
4.பெருமாக்கவுண்டம்பாளையம்-1
5.காரணம்பேட்டை-2
6.ராசாக்கவுண்டம்பாளையம்-1
எனமொத்தம் 12 பொதுக்கிணறுகள் ஊராட்சி மன்றக் கட்டுப்பாட்டில் உள்ளன.
நீர்த்தொட்டிகள்
31மேல்நிலை நீர்த்தொட்டிகளும், 4 தரைமட்டத் தொட்டிகளும் உள்ளன.
1. கோடங்கிபாளையம்-4 தொட்டிகள்-கொள்ளளவு-1,20,000 லிட்டர்கள்
2.சின்னக்கோடங்கிபாளையம்-9 தொட்டிகள்-கொள்ளளவு-2,20,000 லிட்டர்கள்.
3.காரணம்பேட்டை-8 தொட்டிகள்-கொள்ளளவு-2,40,000 லிட்டர்கள்
4.சங்கோதிபாளையம்-6தொட்டிகள்-கொள்ளளவு-2,00,000லிட்டர்கள்.
5.பெருமாக்கவுண்டம் பாளையம்-5தொட்டிகள்-கொள்ளளவு-1,30,000 லிட்டர்கள்
6.ராசாக்கவுண்டம்பாளையம்-3 தொட்டிகள்-கொள்ளளவு- 80,000லிட்டர்கள்
ஆக 35 தொட்டிகளின் மொத்தக்கொள்ளளவு 9,90,000 லிட்டர்கள்.
தேசிய நெடுஞ்சாலை 67ம், மாநில நெடுஞ்சாலை 174ம் காரணம்பேட்டையில் சந்திக்கின்றன.இது முக்கியப் போக்குவரத்து மையமாக உள்ளது.
புறக்காவல் நிலையம்(Outpost) காரணம்பேட்டை சந்திப்பில் பல்லடம் காவல்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தானியங்கி சைகை(Signal) காரணம்பேட்டையில் நிறுவப்பட்டுள்ளது.
பேருந்து நிலையம்
சின்னகோடங்கிபாளையம் (காரணம்பேட்டை)யில் பேருந்து நிலையம் உள்ளது.
சங்கோதிபாளையத்தில் 33MW துணை மின் நிலையம் உள்ளது.
சூலூர் கிழக்கு மின் வாரிய அலுவலகம் காரணம்பேட்டையில் உள்ளது.
திருக்கோவில்கள்
அனைத்துக் குக்கிராமத்திற்கும் பொதுவான சங்ககாலத் தமிழ் மன்னரால் கட்டப்பட்ட மீன் சின்னம் பொறித்த மாரியம்மன் கோயில் கோடங்கிபாளையத்தில் உள்ளது.
அனைத்துக் குக்கிராமத்திற்கும் பொதுவான மிகவும் பழைமையும் சக்தியும் வாய்ந்த பகவதி அம்மன் கோவிலும்,கரிவரதராசப் பெருமாள் கோவிலும் இலந்தைமடையில் உள்ளன.
மேலும்,
1.கோடங்கிபாளையம்-14
2.சின்னக்கோடங்கிபாளையம்-12
3.ராசாக்கவுண்டம் பாளையம்-4
4.பெருமாக்கவுண்டம் பாளையம்-5
5.காரணம்பேட்டை-11
6.சங்கோதிபாளையம்-8
ஆக 46கோயில்கள் உள்ளன.
சின்னகோடங்கிபாளையத்தில் ஆனந்தபுரி ஆதீனம் உள்ளது.தவத்திரு.பழனிச்சாமி அடிகளார் ஆதீனமாக உள்ளார்.
சின்னகோடங்கிபாளையத்தில் ஸ்ரீசக்ரா தியான பீடம் உள்ளது.சுவாமி-ஸ்ரீயுக்தேஷ்வர்
கோடங்கிபாளையத்தில் ஸ்ரீவாலை பரமேஸ்வரி அம்மன் சித்தர் பீடம் உள்ளது. சுவாமி-டாக்டர் சிவசாமி அவர்கள். இங்கு சித்த வைத்தியமும் நடைபெறுகிறது.
பள்ளிகள்
5 அரசு ஆரம்பப் பள்ளிகளும்,2 அரசு உயர்நிலைப்பள்ளிகளும் உள்ளன.
2தனியார் பள்ளிகள் உள்ளன.
1.ஆதர்ஷ் வித்யாலயா, சின்னகோடங்கிபாளையம் - LKG முதல் +2வரை
2.கற்பகவிருட்ச வித்யாலயா,காரணம்பேட்டை - LKG முதல் 5ம் வகுப்பு வரை.
முக்கிய தொழில்கள்
கருங்கல் சுரங்கங்கள் மற்றும் அது தொடர்புடைய கல்லுடைக்கும் தொழிற்சாலைகள் நிறைய உள்ளன.
விசைத்தறியும்,விவசாயமும் முதன்மைத் தொழில்களாக உள்ளன.
நூற்பாலைகள் மூன்றும்,சிறு நூற்பாலைகள் 8ம் உள்ளன.
மகாலட்சுமி(அரோமா)பால் தொழிற்சாலை உள்ளது. ஸ்ரீ கணேசா ரெடிமிக்ஸ் காங்கிரீட்-காரணம்பேட்டை,
ஸ்ரீ காடேஸ்வரி ரெடிமிக்ஸ் காங்கிரீட்-கோடங்கிபாளையம்
என இரு காங்கிரீட் கலவை தொழிற்சாலைகள் உள்ளன. சமையல் எண்ணெய்...குறிப்பாக தேங்காய்எண்ணெய் பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்று சுருச்சி ரீபைனரீஸ் என்ற பெயரில் இயங்கி வருகிறது.
இயற்கை முறையிலான செக்கு எண்ணெய் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையம் காரணம்பேட்டை பேருந்து நிலைய எதிர்புறம் உள்ளது.
மூன்று திருமண மண்டபங்கள்
1.கொங்குவேளாளர் திருமணமண்டபம்,காரணம்பேட்டை
2.கொங்கு திருமணமண்டபம்,கோடங்கிபாளையம்.
3.ஸ்ரீ வெங்கடேஷ்வரா திருமண மகால்A/C ,காரணம்பேட்டை.
காரணம் பேட்டையில் வாகன எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் 3 உள்ளன.
வங்கிகள்
காரணம் பேட்டையில் தேசியமயமாக்கப்பட்ட கனரா வங்கி, காரணம்பேட்டை கிளை உள்ளது.
காரணம்பேட்டையில் தேசியமயமாக்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி, கோடங்கிபாளையம்(காரணம் பேட்டை) கிளை உள்ளது.
காரணம் பேட்டையில் K2016 கோடங்கிபாளையம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம்(வங்கி) உள்ளது.
ஏ.டி.எம்
கனரா வங்கி,சிட்டி யூனியன் வங்கி,கரூர் வைஸ்யா வங்கி ஆகியவற்றின் தானியங்கி பணம் வழங்கும்(Automatic Money Teller-ATM) இயந்திரங்கள் காரணம் பேட்டையில் உள்ளன.
சுவையான உணவு உண்ண
1.பொன்னுசாமி உணவகம்,காரணம்பேட்டை
2.ஐஸ்வர்யா உணவகம்,ஆறாக்குளம் பிரிவு, சின்னகோடங்கிபாளையம்.
3.குரு ரெஸ்டாரன்ட், காரணம்பேட்டை
4.ஜெர்மன் டிரைவ் இன் Q உணவகம் ஆகியவை செயல்படு கின்றன.
அருகிலுள்ள மருத்துவ மனைகள்
1.PSG மருத்துவமனை,கரடிவாவி-தொலைவு - 6 கி.மீ.
2.KMCH சூலூர் மருத்துவமனை,சூலூர்-தொலைவு- 5 கி.மீ.
3.பாலாஜி மருத்துவமனை,சூலூர்-தொலைவு - 5 கி.மீ.
4.ராகவேந்திரா மருத்துவமனை,சூலூர்-தொலைவு- 6 கி.மீ.
5.பொன்னி மருத்துவமனை-பல்லடம்-தொலைவு-10 கி.மீ.
6.சஞ்சீவ் மருத்துவமனை,பல்லடம்- 9 கி.மீ.
கோடங்கிபாளையம் ஊராட்சிக்கான ஆரம்ப சுகாதார நிலையம் செம்மிபாளையத்தில் உள்ளது.
மயானங்கள்
அனைத்து 6 பெரிய குக்கிராமங்களிலும் அனைத்து சாதியினருக்கும் பொதுவான "பொது மயானங்கள்" உள்ளன.இது சிறப்புத் தன்மை வாய்ந்த ஒன்றாகும்.
தகவல்கள் 2015 ல்
தொடரும்...,
Published by
N2R NandhakumaR
Channel N2R
Subscribe to:
Posts (Atom)
துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!
1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...
-
1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம். மற்றும் 2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம்...
-
🌟 சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது. 🌟 கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கலாகாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கக்கூடாத...
-
முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் ...