உலகின் இரண்டாவது பெரிய பணக்கார மனிதரான
"வாரன் பப்பட்" (Warren Buffet ) பற்றி சில சுவாராசியமான தகவல்கள்..!
1. அவர் முதல் பங்கு (share) வாங்கியது அவரின் 11 வயதில்.... அதுவே தான் தாமதமாக வாங்கியதாக பிற்காலத்தில் அவர் தெரிவித்தார்....
2. 14 வயதிலேயே தனது சுய சம்பாத்தியத்தில் சின்ன பண்ணை வீடு ஒன்றினை அவர் வாங்கினார்.....அப்பணம் அவர் பேப்பர் டெலிவரி செய்ததில் சம்பாதித்து, சேமித்த பணம்
3. இன்று வரை 3 படுக்கை அறை கொண்ட சாதாரண வீட்டிலேயே அவர் குடியிருந்து வருகின்றார்..அவ்வீட்டிற்கு சுற்றுச் சுவரோ அல்லது வேலியோ இல்லை
4. அவராகவே அவர் காரை எங்கும் ஓட்டிச் செல்வார்.... டிரைவர் மற்றும் பாதுகாப்புக்கென ஆட்கள் யாரும் கிடையாது
5. அவர் இதுவரை எங்கும் தனி விமானத்தில் பயணித்தது கிடையாது. .. உலகின் பெயர்பெற்ற, பெரிய விமான கம்பெனிக்கு சொந்தக்காரர் அவர்....
6. அவரின் சொந்த கம்பெனிகள் மொத்தம் 63. வருடம் ஒரு முறை மட்டுமே கம்பெனியின் தலைமை பொறுப்பாளர்க்கு ( CEO) கடிதம் எழுதுவார்.... இடைப்பட்ட எந்தவொரு மீட்டிங் மற்றும் சந்திப்புகளும் இருக்காது.... அந்த கடிதத்தில் கம்பெனியின் அடுத்த இலக்கை குறிப்பிட்டு இருப்பார்.....
7. கம்பெனி பொறுப்பாளர்க்கு இரண்டு விதிகளை மட்டும் குறிப்பிடுவார் ..... அது
(அ) பங்குதாரர்களின் பணத்தை நஷ்டமடைய செய்யக் கூடாது
(ஆ) முதலாவது விதியை மறக்க கூடாது
8.அவரைச் சுற்றி எப்போதும் ஒரு உயர்தர சமூகத்தினரின் கூட்டம் இருக்காது....அவரின் ஓய்வு நேரத்தில் அவர்க்குத் தேவையான பாப் கார்னை வீட்டில அவரே தயார் செய்து சாப்பிடுவார், டிவி பார்ப்பார்....
9. அவரிடம் எந்தவொரு செல் போனோ அல்லது மடிக் கண்ணியோ வைத்திருக்க மாட்டார்....
10. உலகின் முதல் பணக்காரரரான பில் கேட்ஸ் சில வருடங்களுக்கு முன் இவரை சந்திக்க , இருவருக்கும் பொதுவான எதுவும் இல்லையென்று எண்ணி முதலி வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே வாரன் பப்பட் டை சந்திக்க
நேரம் ஒதுக்கியிருந்தார்... ஆனால் சந்தித்த பொழுது, அந்த சந்திப்பு பத்து மணி நேரங்களுக்கும் மேலாக நடைப்பெற்றது
எளிமையின் மனிதரான வாரன் பப்பட் நமக்கு சில அறிவுரைகளைச் சொல்கின்றார்....... அவை :
1. பணம் மனிதனை படைக்கவில்லை ஆனால் பணத்தை படைப்பவனை மதிக்கின்றது
2. உங்கள் வாழ்க்கையினை எளிமையாகவும், எளிதாகவும் வாழுங்கள்
3. அடுத்தவர்கள் சொல்வதை செய்யாதீர்கள். மற்றவர்கள் சொல்வதை கேளுங்கள் ஆனால் உங்களுக்கு சரியெனப் படுவதை நீங்கள் செய்யுங்கள்
4. புகழ்பெற்ற கம்பெனியினை (brand names) பின்பற்றாதீர். உங்களுக்கு வசதியானதை வாங்கி பயன்படுத்துங்கள்......
5. பணத்தை தேவையற்ற காரியங்களை வாங்கி வீணாக்காதீர்
6. உனது வாழ்க்கை....நீயே விதிகளை தீர்மாணி, அடுத்தவரை உன் வாழ்க்கையினை தீர்மானிக்க அனுமதிக்காதே...
.
.
.
Ruler can do anything, so
Born to rule the Galaxy
Saturday, 9 May 2015
Friday, 8 May 2015
குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது?.
குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின்
பெருமை என்ன...?
குலதெய்வம்
விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
என்பவைகளை பற்றி.
சற்று விரிவாக ஆராயலாம்..வாருங்கள் !!!!!
நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன்
பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல
தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார்
வரிசையில், மிகப்பெரிய
ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால்
உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும்
ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த
வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின்
வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.
எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண்
சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால்,
ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல
அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம்
இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த
விஷயமாகும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த
கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்
போகாமலும் இருக்கலாம்.
அதற்கு உத்தரவாதமில்லை.
ஆனால், குலதெய்வ
கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற
ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால்
அங்கு கொண்டு செல்லப்பட்டு,
முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும்
காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும்
படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ
சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம்
பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த
விதத்திலாவது உருவாக்க முடியுமா?
அது மட்டுமல்ல. ஒரு மனிதனின்
பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை
இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம்
இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல்
அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது?
இந்த வழி வழி போக்கில் ஒருவர்
மூட்டை மூட்டையாக
புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர்
பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!
நாம்
அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக
வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம்
முன்னோர்களும் பித்ருக்களாக
இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?”
குலதெய்வம்
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம்
குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில்
அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ
வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.
குலதெய்வம் பெரும்பாலும்
சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன்
சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம்
என்று அலட்சியப் படுத்தக்கூடாது.
எமன் கூட
ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான்
உயிரை எடுக்கமுடியும்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்
தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்
காக்கும் வல்லமை படைத்தவை.
எனவே தான் அந்த
தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்களும்
கர்மவினைகளை நீக்க வல்லவை.
யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக
இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல்
போவதும் உண்டு.
நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க
சென்றாலும் குறிசொல்பவர் நம்குல
தெய்வத்தை அழைத்து அதனிடம்
கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல
முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக
எதையும் சொல்ல முடியாது.
இதை உணர்ந்த
மந்திரவாதிகள்
ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில்
யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ
அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம்
கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான்
செய்வினை செய்வார்.
மந்திரவாதிகள் தாங்கள்
வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின்
குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில்
பெற்று விடுகிறார்கள்.
மந்திர
கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும்
உண்டு. அவை அந்த
மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்
தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்
காக்கும் வல்லமை படைத்தவை.
எனவே தான் அந்த
தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்களும்
கர்மவினைகளை நீக்க வல்லவை.
யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக
இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல்
போவதும் உண்டு.
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல
தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன்
படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்.
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின்
குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம்
முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள
குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.
பிறந்த
வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது.
பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை
செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும்
காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும்
சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால்
பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில்
வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல
வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ
வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம்
இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம்
இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த
ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன்
தருமா என்பது சந்தேகம்தான்.
எனவே உங்கள்
குலதெய்வத்தின்
கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம்
ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக
ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.
பூஜைகள் நடைபெற
ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள்
வாழ்க்கைபோகும் போக்கை…
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற
தன்மையை போதிக்கிறது,
அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம்
மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த
குலதெய்வம் மனிதன் லௌகீக
வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது
எந்த ஒரு வம்சத்திலுமே 13
வம்சாவளியினருக்கு மேல் அவர்கள்
தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க
முடியாது என்பது தெய்வக்கணக்கு.
ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின்
வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ,
அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச
விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது
காரணத்தினால் வம்சம் அழிந்து விடும்.
ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13
வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு
இருக்கும்.
விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக்
காண்போமா.....?
விஞ்ஞான முறையில் யோசித்தால்
ஒரு குழந்தை ஆணா,
பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே.
ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள்
உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23
தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.
இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா,
பெண்ணா என்பதைத் தந்தையின்
க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx
க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.
தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட
க்ரோமோசோம்கள் உள்ளன.
ஆணின் y யுடன் பெண்ணின்
x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x
சேர்ந்தால் பெண் குழந்தையும்
பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக்
கூறி உள்ளது.
ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்
கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே.
ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ,
ஆணோ ஒருவரை ஒருவர்
அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர,
சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம்
சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும்.
ஏனெனில்
பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம்
இருவரிடமும் இருக்கையில் ஆண்
குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும்
ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y
க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.
ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம்
இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில்
அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப்
போகின்றது வழி வழியாக.
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க
வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,
கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்
தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும்
விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப்
பட்டு வருகின்றது.
இதன் முக்கியத்துவம்
குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளுக்கு முக்கியத்துவம்
அளித்திருக்கின்றனர்.
இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி,
கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x
க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன்
தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x
க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது.
ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y
க்ரோமோசோம்கள் பெண்களுக்குக்
கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம்
இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y
க்ரோமோசொம்கள் மட்டுமே.
ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத்
தன் மகனுக்கு அளிக்க முடிகிறது.
பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள்
கிடைப்பதில்லை.
ஆணின் y க்ரோமோசோம்கள்
ரொம்பவே பலவீனமான ஒன்று.
மேலும்
தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள்
அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச்
சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக்
கொண்டிருக்கிறதாம்.
13 தலைமுறைக்கு மேல்
அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால்
ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும்
ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும்,
பரம்பரை நோய்கள் தொடர
கூடாது என்பதாலுமே சொந்த ரத்த
உறவுகளுக்கிடையே திருமணம்
தவிர்க்கப்படுகிறது ...
.
.
Ruler can do anything, so
Born to rule the Galaxy
அன்பு இருக்கும் இடத்தில்வெற்றியும் செல்வமும் இருக்கும்
ஒரு பெண் அவளுடைய வீட்டை விட்டு வெளியேறிய பொழுது அப்பொழுது மூன்று முதியவர்கள் அவள் வீட்டின் முன் அமர்ந்திருந்தார்கள்.
அவர்களைப் பார்த்த அப்பெண் நீங்கள் யாரென்று எனக்கு தெரியவில்லை. இருந்தாலும் உங்களை பார்த்தால் பசியுடன் இருப்பதாக தெரிகிறது. அதனால் என் வீட்டிற்கு வாருங்கள். நான் ஏதாவது சாப்பிடுவதற்கு தருகிறேன் என்று அப்பெண் அம்மூவரையும் பார்த்து கூறிகிறாள்.
அதற்கு அம்மூவரும் வீட்டில் உன் கணவன் இருக்கிறாரா என்று கேட்கிறார்கள்.
அதற்கு அவள் அவர் வீட்டில் இல்லை. வெளியே சென்றிருக்கிறார் என்று பதிலளிக்கிறாள் .
அப்பொழுது அவர்கள் அப்படியென்றால் உனது கணவர் வரும் வரை நாங்கள் வரமாட்டோம் என்று கூறிவிடுகிறார்கள்.
மாலையில் அவளுடைய கணவன் வீட்டிற்கு வந்தபொழுது அவள் நடந்தவற்றை கூறுகிறாள். அதற்கு அவள் கணவன் நான் வீட்டிற்கு வந்துவிட்டேன் என்று கூறி அவர்களை அழைத்துக்கொண்டு வா என்று சொல்கிறார்.
அவள் வீட்டிலிருந்து வெளியே வந்து அம்முவரையும் அழைக்கிறாள்..
அதற்கு அவர்கள் நாங்கள் மூவரும் ஒன்றாக வரமுடியாது என்று கூறுகிறார்கள்.
ஏன் அப்படி என்று அவர்களிடம் அவள் கேட்டாள்.
அதற்கு அவர்களில் ஒரு முதியவர் இன்னொருவரை காண்பித்து இவர் செல்வம் என்றும், மற்றொருவரை காண்பித்து இவர் வெற்றி என்றும் நான் அன்பு என்றும் கூறி உள்ளே சென்று உன் கணவனிடம் எங்கள் மூவரில் யார் உன் வீட்டிற்கு வரவேண்டும் என்று ஆலோசனை செய்து எங்களிடம் சொல் என்று அவளிடம் கூறுகிறார்.
அப்பெண் வீட்டினுள் வந்து தன் கணவனிடம் அந்த முதியவர் கூறிய அனைத்தையும் கூறுகிறாள்..
அதை கேட்ட அவளுடைய கணவன் மிகவும் மகிழ்ச்சியாகி என்ன ஆச்சர்ரியமாக இருக்கிறது!. என்று கூறிவிட்டு, நாம் நம் வீட்டிற்கு செல்வத்தை அழைப்போம். அவர் நம் வீட்டை செல்வத்தால் நிரப்பிவிடுவார் என்று தன் மனைவியிடம் கூறுகிறார்.
அதை கேட்ட அவருடைய மனைவி அதற்கு அதிருப்தி தெரிவிக்கிறாள். ஏன் நாம் நம் வீட்டிற்கு வெற்றியை அழைக்கக்கூடாது? என்று கேட்கிறாள்.
இதை அனைத்தையும் செவியேற்று கொண்டிருந்த, வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்திருந்த அவர்களுடைய மகள், ஏன் நாம் அன்பை அழைக்கக்கூடாது? அவரை அழைத்தால் நம் வீட்டை அன்பால் நிரப்பிவிடுவார் அல்லவா? என்று அவள் தன் கருத்தை கூறுகிறாள்.
இதை கேட்ட அவளுடைய பெற்றோர் தங்களுடைய மகளின் ஆசையின்படி அன்பை வீட்டிற்கு அழைக்க முடிவு செய்கின்றனர். பிறகு தன் மனைவியிடம் அவளுடைய கணவன், நீ வெளியே சென்று அன்பை நம் வீட்டிற்கு அழைத்துக் கொண்டுவா என்கிறார்.
அப்பெண் வெளியே வந்து அம்மூவரையும் பார்த்து உங்களில் யார் அன்பு, அவர் என் வீட்டிற்கு விருந்தாளியாக வருமாறு அன்புடன் அழைக்கிறேன் என்கிறாள்.
அதைக் கேட்ட அன்பு வீட்டிற்கு செல்கிறார். அவரை பின் தொடர்ந்து மற்ற இருவரும் செல்கின்றனர்.
இதைப் பார்த்த அப்பெண், மற்ற இருவரிடமும் ஏன் நீங்கள் வருகிறீர்கள்?
நான் அழைத்தது அன்பை மட்டும் தானே? என்று ஆச்சர்யப்பட்டு கேட்கிறாள்.
அதற்கு அம்மூவரும் ஒன்றாக அப்பெண்ணிடம், நீ செல்வத்தையோ அல்லது வெற்றியையோ அழைத்திருந்தால், மற்ற இருவரும் வெளியே இருந்திருப்போம். ஆனால் நீ அன்பை அழைத்திருக்கிறாய். எங்கு அன்பு இருக்கிறதோ அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும் என்று பதிலளிக்கிறார்கள்!!
அன்புதான் நம்மை அதிக சந்தோஷப்பட வைக்கும்.
#அன்பே கடவுள்
Ruler can do anything, so
Born to rule the Galaxy
முழுக்காதன் (அருமைக்காரர், சீர்காரர்) குலம் வரலாறு
வெள்ளாளக் கவுண்டர்களில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட பிரிவினர் உள்ளார்கள். அவர்களில் ஒரு குலத்தவரே முழுக்காதன் என்பவர்களது பிரிவாகும். காடையூரின் பழங்காலத்திய பெயர் நட்டூர் என்பதாகும். காங்கேயத்தை தமது குலதெய்வ பிரதான பூமியாக கருதும் இவர்கள் காடையூர், நல்லூர், ஊத்துக்குளி, மோரூர், இளம்பிள்ளை, மோழிப்பள்ளி, பொள்ளாச்சி, புதன்சந்தை, ஏழூர், தொழுவூர், தோளூர், போன்ற ஊர்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.வெள்ளாள கவுண்டர் சமூகத்தில் இந்த சமூகத்தினருக்கு மற்ற பிரிவினரை விட அதிக மரியாதையும், மதிப்பும் உண்டு. காரணம் இவர்கள்தான் கல்யாணங்களில் சீர் செய்வதற்கு முன்னுரிமை பெற்றவர்கள். அது மட்டும் அல்ல அவர்களது முக்கியமான வீட்டு விழா என்பது காது குத்தும் சடங்காகும். அதை அவர்கள் பெரும் விழாவாக கொண்டாடி சீர்வரிசைகளை செய்வதினால்தான் அவர்களை முழுமையான காதைக் கொண்டவர்கள் எனக் கருதி அவர்களை முழுக் காதன் என்பார்கள். காங்கயம் அருகில் உள்ள காடையூரில் முழுக்காதவர்களின் குல தெய்வமான வெள்ளையம்மாவின் சன்னதி புகழ் பெற்ற காடையீஸ்வரர் கோவிலில் உள்ளது. காடையூர் என்ற பெயர் ஏற்பட்டதின் காரணமும் ஒரு அதிசய நிகழ்வுதான். முன்னொரு காலத்தில் நட்டூர் எனப்பட்ட தற்போதைய காடையூரில் ஆட்சி செய்து வந்த குறுநில மன்னன் பாண்டிய நாட்டு அரசனுக்கு யுத்தத்தில் உதவி செய்ய முன் வந்தான். பாண்டிய நாட்டு அரசன் மீது படையெடுத்து வந்த வடநாட்டு மன்னன் பெரும் படையுடன் யானைப் படையையும் அழைத்துக் கொண்டு வந்து தாக்குதலை நடத்தினான். அந்த கால யுத்தங்களில் யானைப் படையே வலிமையான படையாகும் என்பார்கள். ஆனால் நட்டூரில் இருந்த மன்னனிடம் அதிக படை பலம் இல்லை. அவர் நாட்டில் நிறைய காடைக் குருவிகள் இருந்தன. நட்டூர் மன்னன் சிவ பக்தர். ஆகவே பெரும் படையுடன் வந்த வடநாட்டு மன்னனை தோற்கடிக்க சிவபெருமான் தனக்கு உதவ வேண்டும் என்று அவன் சிவபெருமானிடம் வேண்டிக் கொள்ள அவரும் ஒரு காடைக் குருவியாக உருவெடுத்து பல காடைக் குருவிகளுடன் சேர்ந்து வந்து அந்த யானைகளை தாக்கலானார். யானைகளை காரைக் குருவிகள் தாக்கலாயின. அவற்றில் ஒரு குருவியாக சிவபெருமானும் இருந்தார் சாதாரணமாக யானைகள் தமக்கிட்ட பணியில் கவனமாக இருக்கும். ஆனால் தம்முடைய கண்களையும், காதுகளையும் கொத்திக் கொத்தி நூற்றுக்கணக்கான காரைக் குருவிகள் காயப்படுத்தியதைக் கண்டு கோபமுற்ற யானைகள் செய்வதறியாமல் பிளிரத் துவங்கி மதம் பிடித்து தம்மை அழைத்து வந்த படையினரையே திருப்பித் தாக்கத் துவங்க, படையெடுத்து வந்த வெளிநாட்டு மன்னன் பயந்துபோய் எஞ்சி நின்ற படையினருடன் ஓட்டம் பிடித்தானாம். இதனால் மன்னனைக் காத்த காரைக் குருவிகள் பெருமை பெறும் வகையில் நட்டூர் என்பது காடையூர் என்ற பெயராயிற்று என்பதாக கர்ண வழிப் பரம்பரைக் கதை உண்டு.இதனால்தான் காடையூர் சிவபெருமான் ஆலயத்தில் முழுக்காதன் வெள்ளாள கவுண்டர் சமூகத்தினர் வழிபடும் பங்கசாக்ஷி சமேத காடையீஸ்வரர் மற்றும் அவர்களது குலதெய்வமான வெள்ளையம்மாள் சன்னதியும் உள்ளது. காடையீஸ்வரரே மன்னனுக்கு யுத்தத்தில் குருவி உருவில் வந்து உதவிய சிவபெருமான் ஆவார் என்ற நம்பிக்கையும் உண்டு. பங்கசாக்ஷி சிவபெருமானின் மனைவியான பார்வதியே. இனி அந்த ஆலயத்தில் உள்ள வெள்ளையம்மாள் தெய்வமான கதையைப் படியுங்கள் . முன்னொரு காலத்தில் காக்கேயம் எனும் ஊருக்கு பக்கத்தில் இருந்த கிராமத்தில் ஒரு விவசாயி வாழ்ந்திருந்தார். அவருக்கு சில நிலபுலங்கள் உண்டு. அவருக்கு ஒரு பெண்ணும், நான்கு மகன்களும் இருந்தார்கள். பிறக்கும்போதே பெண் குழந்தையின் சரீரம் வெள்ளை வெளீர் என இருந்ததினால் அவளுக்கு வெள்ளையம்மாள் எனப் பெயரிட்டார்கள். நான்கு குழந்தைகளும் வளர்ந்து பெரியவர்கள் ஆனார்கள். வெள்ளையம்மாள் திருமண வயதை எட்டினாள். ஆனால் அவர்கள் அவளை யாருக்கு மணமுடித்துத் தருவது என்ற கவலையில் இருந்தபோது பக்கத்து நிலங்களில் மாடுகளை மேயவிட்டுக் கொண்டு இருந்த ஏழை இளைஞன் ஒருவரைக் கண்டார்கள். அவர்கள் பார்த்தவரை அந்த இளைஞன் நல்ல குணம் கொண்டிருந்தான். தான் உண்டு தன் வேலை உண்டு என வாழ்ந்து வந்திருந்தான். அவனும் அவர்களது இனத்தவரே ஆகும். ஆகவே அவனைக் கண்டவர்கள் அவனிடம் பேசி அவனுக்கே ஊரார் சம்மதத்துடன் வெள்ளையம்மாவை திருமணம் செய்து வைத்தார்கள். அதன் பின் அனைவருமே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து கொண்டு இருந்தார்கள். காலம் கடந்தது. வெள்ளையம்மாளின் கணவர் மாடு மேய்த்துக் கொண்டு இருந்தவன்சில காலத்திலேயே வெள்ளையம்மாவுக்கு மூன்று குழந்தைகள் பிறந்து வளர்ந்தன. சில காலத்திலேயே வெள்ளையம்மாளின் தந்தை வயதாகி மரணம் அடைந்தார். மரணம் அடையும் முன்னால் தனது மகன்களையும், வெள்ளையம்மாளின் குடும்பத்தையும் அழைத்து, தனது மரணத்துக்குப் பின்னால் தன்னுடைய சொத்துக்களில் நிலபுலங்களில் ஒரு காணி நிலத்தை வெள்ளையம்மாளுக்கு தரவேண்டும் என்று மகன்களிடம் கூறிவிட்டு மரணம் அடைந்தார். தந்தையின் மரணத்துக்குப் பின்னால் அவருடைய மகன்கள் அவரவர்களுடைய மனைவிகளின் துர்போதனையைக் கேட்டு வெள்ளையம்மாளுக்கு சொத்தில் காணி நிலத்தை தந்து விட்டால் தத்தம் பங்கு குறைந்து விடுமே என எண்ணிக் கொண்டு அவளுக்கு சொத்தில் எந்தப் பங்கையும் கொடுக்கக் கூடாது என முடிவு செய்தார்கள். வெள்ளையம்மாளின் பலமே அவளது கணவன்தானே என்பதினால் வெள்ளையம்மாளுக்கு தெரியாமல் அவனை தனியாக ஒரு இடத்துக்கு அழைத்துச் சென்று அவனைக் கொன்று புதைத்து விட்டார்கள். ஆனால் அவர்களுடன் தனது கணவர் சென்றதையோ அல்லது அவர்கள் அவனைக் கொன்று விட்டதையோ அறிந்திடாத வெள்ளையம்மாளிடம் அவர்கள் வெள்ளையம்மாளின் நடத்தையில் சந்தேகம் கொண்டுதான் அவளது கணவன் அவளை தவிக்க விட்டுச் சென்று விட்டான் எனக் கூறியதும் அல்லாமல் தாங்களும் அவளை சந்தேகிப்பதாகக் கூறினார்கள். அது முதல் தொடர்ந்து சில நாட்கள் அவளது நடத்தையைக் குறைக் கூறிக்கொண்டு இருந்தவர்கள் ஒருநாள் அவளையும் வீட்டை விட்டுத் துரத்தி விட்டார்கள். அவளை அவர்கள் வீட்டை விட்டுத் துரத்தியபோது அவள் தனது மூன்று குழந்தைகளையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சென்று விட்டாள். போதாததற்கு அவள் நான்காம் முறையாக அப்போது கர்பிணியாக வேறு இருந்தாள். எங்கு செல்வது எனத் தெரியாமல் பதுங்கி இருந்த வெள்ளையம்மாளை சர்தார் பார்த்தார் எங்கு செல்வது எனத் தெரியாமல் அங்கும் இங்கும் அலைந்து கொண்டு சென்றபடி இருந்தவள் ஒரு காட்டுப் பகுதியில் சென்று பயத்தில் ஒதுக்குப் புறமாக ஒரு இடத்தில் அமர்ந்து இருந்தாள். அப்போது அந்த வழியே வந்து கொண்டு இருந்த அரசாங்கத்தை சேர்ந்த உயர் அதிகாரி பயத்துடன் அமர்ந்திருந்த அவளை கவனித்து விட்டார். அப்படிப்பட்ட அதிகாரிகளை அந்த காலத்தில் சர்தார் என்றே அழைப்பார்கள். குதிரையில் இருந்து இறங்கி அவள் அருகில் சென்று அவளிடம் பேசி நடந்த அனைத்தையும் அந்த சர்தார் கேட்டறிந்து கொண்டார். அவள் கதையைக் கேட்டு மனம் இறக்கப்பட்டவர் அவளை அரண்மனைக்கு அழைத்துச் சென்று அங்கு ஒரு இடத்தில் பத்திரமாக தங்க ஏற்பாடு செய்தபின் தான், தான் அரசாங்க வேலையாக பல இடங்களுக்கும் செல்ல வேண்டி உள்ளதால் அவளை அங்கேயே தைரியமாக தங்கி இருக்குமாறும் தான் திரும்பி வந்து அவளது குறையை தீர்ப்பதாக வாக்கு கொடுத்தார். சர்தார் வேலை விஷயமாக சென்று விட்டு திரும்ப சில காலம் ஆயிற்று. அதற்குள் வெள்ளையம்மாளுக்கு நான்காம் குழந்தையும் பிறந்து விட்டது. சர்தார் திரும்பி வந்ததும் வெள்ளையம்மாளின் சகோதரர்களை ஊரார் முன்னால் வரவழைத்தார். வெள்ளையம்மாளை வீட்டை விட்டு துரத்தியதின் காரணத்தையும், அவளுக்கு சேரவேண்டிய சொத்தை தராததின் காரணத்தையும் விளக்குமாறு கடுமையாக கேட்டு விசாரிக்கத் துவங்கியதும் அவர்கள் தத்தம் மனைவிகளுடன் சேர்ந்து தமது தவற்றை மறைத்துக் கொள்ளும் விதமாக அவள் நடத்தைக் குறித்து மீண்டும் சந்தேகத்தை எழுப்பினார்கள். ஆனால் அவர்கள் தம் மீது சுமத்திய அத்தனை அவதூறுகளையும் வெள்ளையம்மாள் மறுத்ததும் அல்லாமல் கடவுள் மீது ஆணையாக தான் எந்த தவறையும் செய்யாத பதிவிரதை என சத்தியமும் செய்தாள். தான் எந்த தவற்றையும் செய்யாத பத்தினி என்று வள்ளியம்மாள் சத்தியம் செய்தாள் அதைக் கேட்ட அண்ணன்மார்கள் எங்கே அவளது வார்த்தைகளை சர்தார் நம்பி அவளுக்கு சாதகமாக தீர்ப்பை தந்து விடுவாரோ என பயந்துபோய் அவளால் செய்யமுடியாத சில நிபந்தனைகளைக் கூறி அவற்றை அவள் நிறைவேற்றினால் மட்டுமே அவள் கற்புக்கரசி என தாம் நம்புவோம் என்றும், அப்படி அவள் செய்து காட்டினால் அவளுக்கு சேர வேண்டிய சொத்தைத் தர சம்மதிப்போம் என்றும் கூறினார்கள். அவர்கள் விதித்த நிபந்தனைகள் என்ன தெரியுமா?மாடுகள் இழுத்துச் செல்லும் மாட்டு வண்டியில் மாடுகளை கட்டிவைக்க நுகத்தடி எனும் கட்டையை அதன் கழுத்தில் கட்டுவார்கள். அந்தக் கட்டை விசேஷ மரத்தை வெட்டி நன்கு காயவைத்து அதன் கட்டையில் செய்தது. அது வேறு எதற்கும் பயன்படாது. ஆகவே ஒரு நுகத்தடியை ஒரு இடத்தில் நட்டு வைத்து அதற்கு நீர் ஊற்றி வளர்க்க வேண்டும். நட்டு வைக்கப்பட்ட அந்தக் கட்டை துளிர்விட்டு செடியாக வளர வேண்டும். அது முதல் நிபந்தனை.அடுத்த நிபந்தனை அந்த கிராமத்தில் உள்ள மண் குதிரையின் மீது அவள் ஒரு குடம் நீர் ஊற்றவேண்டும். அப்போது அந்த குதிரை சற்று நேரம் உயிர் பிழைத்து எழுவது போல எழுந்து நின்று கனைக்க வேண்டும்.மூன்றாவது நிபந்தனை என்ன என்றால் நுகத்தடிக்கு நீர் ஊற்றவும், குதிரை மீது நீர் ஊற்றவும் எடுத்து வரப்படும் பானை காய வைத்து பக்குவப்படுத்தி வைக்கப்படாத பானையாக இருக்க வேண்டும். அவள் பத்தினியாக இருந்தால் அந்த மண் குடம் தண்ணீரில் கரையாது.அதைக் கேட்ட சர்தார் திகைத்தார். அவளை ஏமாற்ற அவர்கள் அவளால் செய்ய முடியாத நிபந்தனையை வேண்டும் என்றே விதிக்கிறார்கள். அவளுக்கு நீதி கிடைக்காவிடில் அவளையும் அவளது கணவரைக் கொன்றது போலவே அவர்கள் சதி செய்து கொன்று விடுவார்கள் என்பதை அறிந்து கொண்டதினால் அவளை அந்த நிபந்தனைகளை ஏற்க மறுக்குமாறு கூறினார். ஆனால் வெள்ளையம்மாளோ தான் ஒரு பதிவிரதை என்பது சத்தியமானதினால் அவர்கள் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு அவற்றை செய்வதாகவும், கடவுள் இருந்தால் சத்தியவாதியான தன்னைக் காப்பாற்றுவார் என தீர்மானமாக கூறி விட ஊர் ஜனங்கள் முன்னால் மண்குதிரை இருந்த இடத்தின் அருகில் ஒரு நுகத்தடியை எடுத்து வந்து நட்டார்கள். ஒரு குயவனிடம் இருந்து பக்குவப்படுத்தாத பானையையும் கொண்டுவந்து வெள்ளையம்மாவிடம் தந்தார்கள். வெள்ளையம்மாளோ அதை சர்வசாதாரணமாக தனது தலையில் வைத்து கிணற்றருகில் எடுத்துச் சென்று அதில் நீரை நிறப்பி மீண்டும் தனது தலையில் வைத்துக் கொண்டு வந்தாள். மண் குடம் நீரில் கரையாமல் இருந்தது. நட்டு வைக்கப்பட்டு இருந்த நுகத்தடி மீது குடத்து நீரை ஊற்ற சற்று நேரத்திலேயே அதில் சின்ன சின்ன இலைகள் தோன்றின. அடுத்து மண் குதிரை மீது நீரை ஊற்ற சட்டென எழுந்த குதிரையும் கனைத்து விட்டு அமர்ந்தது. அத்தனை சம்பவங்களையும் பார்த்த அவளது சகோதரர்கள் பயந்து போனார்கள். தாம் செய்த தவறை உணர்ந்தார்கள். தமது சகோதரி தெய்வப்பிறவியாக இருக்க வேண்டும் என உணர்ந்தவர்கள் அவளுக்கே தமது தந்தையின் அனைத்து சொத்தையும் தந்துவிட்டு அங்கிருந்து கிளம்பி வேறு ஊருக்கு சென்று விட்டார்கள்.வெள்ளையம்மாள்அதன் பின் வெள்ளையம்மாள் பலகாலம் அந்த ஊரில் வாழ்ந்து வந்திருந்தப் பின் ஒருகட்டத்தில் தெய்வமாகி விட்டாள். அவளை அந்த ஊரில் இருந்த அனைவருமே வணங்கி வழிபடலானார்கள். அவள் வழிவந்த இனத்தவரே முழுக்காதன் சமூகத்தினர் என்கிறார்கள்.
Ruler can do anything, so
Born to rule the Galaxy
நம் உடம்பை பத்தி , நாம தெரிஞ்சுக்கிட கீழே உள்ள தகவல்கள் நமக்கு உதவியா இருக்கும்
எத்தனை கோடி , கோடியா நாம சம்பாதிச்சாலும், உடல் நலத்தோட இல்லைனா, சவலைப் புள்ளை மாதிரி, எல்லாத்தையும் ஏக்கத்தோட பார்த்து,பார்த்து பேரு மூச்சு விட்டுக்கிட்டே இருக்க வேண்டியதுதான்...
நம்ம உடம்பை பத்தி , நாம தெரிஞ்சுக்கிட கீழே உள்ள தகவல்கள் நமக்கு உதவியா இருக்கும்.... இப்போ , நாம எப்படி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம்... எதை சரி பண்ணலாம்னு செக் பண்ணிக்கோங்க....
நமது உடல், ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே
கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவுசெய்து கொண்டு
சுழன்றுகொண்டிருக்கிறது.
ஒவ்வொரு உறுப்புக்கும் அதன்பணியை செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும்
அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றி விடுகிறது.
விடியற்காலை 3.00 மணிமுதல் 5.00 மணிவரை நுரையீரலின் நேரம்.
இந்த நேரத்தில்சுவாசப் பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள்அதிகமாகச் சேகரித்தால்ஆயுள் நீடிக்கும்.
தியானம் செய்யவும் ஏற்ற நேரம்இது.
ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.
விடியற்காலை 5.00 மணிமுதல் 7.00 மணிவரை பெருங்குடலின் நேரம்.
காலைக்கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீர வேண்டும்
மலச்சிக்கல் உள்ளவர்கள்இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும்
பழக்கத்தைஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும்.
உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.
காலை 7.00 மணி முதல் 9.00 மணிவரை வயிற்றின் நேரம்.
இந்த நேரத்தில் கல்லைத்தின்றாலும் வயிறு அரைத்துவிடும்
காலை உணவை பேரரசன் போல் உண்ணவேண்டும் என்று சொல்வார்கள்
இந்த நேரத்தில் சாப்பிடுவதுதான் நன்குசெரிமானமாகி உடலில் ஒட்டும்.
காலை 9.00 மணிமுதல் 11.00 மணி வரை மண்ணீரலின் நேரம்.
காலையில் உண்டஉணவை மண்ணீரல் செரித்து ஊட்டச் சத்தாகவும்
ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர்கூடக் குடிக்கக்கூடாது.மண்ணீரலின் செரிமானசக்தி பாதிக்கப்படும்
நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.
முற்பகல் 11.00 மணிமுதல் பிற்பகல் 1.00 மணி வரை இதயத்தின் நேரம்.
இந்தநேரத்தில் அதிகமாகப் பேசுதல்,
அதிகமாகக் கோபப்படுதல்,அதிகமாகப் படபடத்தல்கூடாது
இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிகமிக எச்சரிக்கையாக இருக்கவேண்டிய நேரம்.
பிற்பகல் 1.00 மணிமுதல் 3.00 மணிவரை சிறுகுடலின் நேரம்
இந்த நேரத்தில்மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.
பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை சிறுநீர்ப்பையின் நேரம்.
நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.
மாலை 5.00 மணி முதல் 7.00 மணி வரை சிறுநீரகங்களின் நேரம்.
பகல் நேரபரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற,
எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க,தியானம்செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.
இரவு 7.00 மணி முதல் 9.00 மணி வரை,பெரிகார்டியத்தின் நேரம்.
பெரிகார்டியம்என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும்
ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber இரவுஉணவுக்கு உகந்த நேரம் இது.
இரவு 9.00 மணி முதல் 11.00 மணி வரை,
டிரிப்பிள் கீட்டர் என்பது ஒரு உறுப்பல்ல,
உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை
இணைக்கும்பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.
இரவு 11.00 மணி முதல் 1.00 மணி வரை பித்தப்பை இயங்கும் நேரம்.
இந்த நேரத்தில்தூங்காது விழித்திருந்தால்
பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும்.
இரவு 1.00 மணி முதல் விடியற்காலை 3.00 மணி வரை கல்லீரலின் நேரம்.
இந்தநேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது
கட்டாயம்படுத்திருக்க வேண்டும் உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது.
இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள்முழுவதும்
சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள்.
Ruler can do anything, so
Born to rule the Galaxy
Thursday, 7 May 2015
வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம், மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை இல்லையென்று சொல்லும் இன்றைய விஞ்ஞானம் !!
வாகனங்களுக்கு முன்னால் எலுமிச்சம்பழம்,
மிளகாய் கட்டும் பழக்கம் மூடநம்பிக்கை
இல்லையென்று இன்றைய விஞ்ஞானம்
சொல்கிறது.
எலுமிச்சம் பழத்தில் உள்ள சிட்ரோனிக்
அமில்கா (Cidronic amilga) என்னும்
அமிலமானது மிளகாயில் உள்ள
பென்னியோசிட் (Benniyocid) என்னும்
காரத்துடன் இரசாயனப் பகுப்பாகி,
மிதீரியட் (methiriyed) என்னும் ஒருவகை
உந்து வாயுவை வெளியிடுகிறது. அந்த
வாயுவை வாகனத்தின் பானட்டில் இருந்து
ஸ்டியரிங் வரை செல்லும் எத்ஹோயிட்
(Ethgoid) என்னும் கலப்பு மூலகத்திலான
உலோகக்கம்பி வாகனத்தின் உட்பகுதிவரை
கடத்துகிறது. அந்த வாயுவானது
ஓட்டுனரை நித்திரை கொள்ளாமலும்,
உற்சாகத்துடனும் இருக்கச் செய்வதுடன்,
பிரேக் ஆயிலையும் வற்றாமல்
பாத்துக்கொள்கிறது. இதில் இன்னொரு
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இந்த
வாயுவானது மேற்சொன்ன இரசாயனப்
பகுப்பால் ஒரு வாரம் மட்டுமே
கிடைக்கிறது. அதனால்தான் வாராவாரம்
வெள்ளிக்கிழமைகளில் ஏற்கனவே கட்டப்பட்டவை
அகற்றப்பட்டு புதிதாகக் கட்டப்படுகின்றத
ு..!
வெள்ளிக்கிழமைகளில் இதனைச் செய்வதற்கும்
ஒரு காரணம் இருக்கிறது. பூமியானது
சூரியனுக்கும் சுக்கிரனுக்கும்
இடையில் வடமத்திய ரேகையில் கடக்கக்
கோட்டுக்கு தெற்கே 5 டிகிரி
மேல்நோக்கி ஏறி, 3 டிகிரி
கீழ்நோக்கி இறங்குவதால் இந்த இரசாயன
பகுப்பு அதிகம் நடக்கிறது ..!!!
நம் முன்னோர்கள் மூடர்கள் அல்ல..!
விஞ்ஞான அடிப்படையில் தான்
செயல்பட்டிருக்கிறார்கள்..!
நம் முன்னோர் பெருமையை உரக்க
சொல்வோம்..!
இந்த செய்தியை பகிர்ந்து உலகறியச்
செய்வோம்..!
.
.
Ruler can do anything, so
Born to rule the Galaxy
Subscribe to:
Posts (Atom)
துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!
1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...
-
1) குல தெய்வம் கோவிலுக்கு சென்று வரலாம். மற்றும் 2) "ஓம் கண்டபரஸவே ஸகலாய சர்வ சங்கட பாவ கர்ம ஹர ஹரயே சந்திர சஞ்ஜீவநாய இரட்சகம் இரட்சகம்...
-
🌟 சுமங்கலி பெண்கள் குங்குமம் இல்லாமல் இருக்கக்கூடாது. 🌟 கர்ப்பிணிகள் தேங்காயை உடைக்கலாகாது. தேங்காய்களை உடைக்கும் இடத்தில் இருக்கக்கூடாத...
-
முன்னோர்கள் சாபம் உள்ள குடும்பங்களில் எந்த செயல் செய்தாலும் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டில் எந்த சுபகாரியங்களும் ...