Tuesday 25 June 2013

தனக்குத் தானே ஆபரேஷன் செய்து கொண்ட ரஷ்ய‌ டாக்டர்!




பனிப் பிரதேசமான அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ரஷ்ய ஆய்வு கூடத்தில் 50 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவராக பணியாற்றியவர் லியோனிட் ரோகோசோவ்.

29-4-1961 அன்று காலை இவருக்கு திடீரென சோர்வு, வாந்தி, காய்ச்சல் என ஒன்றுபட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன. சிறிது நேரத்திற்கு பின்பு கடுமையான வயிற்று வலியும் சேர்ந்துக்கொள்ள மனிதர் துடிதுடித்துப் போனார்.

தனக்கு தெரிந்த கை வைத்தியம் எல்லாம் செய்து பார்த்தும் வயிற்று வலி மட்டும் குறைந்தபாடில்லை. ரஷ்யாவின் தலைமை ஆய்வு நிலையத்திற்கு செல்ல வேண்டுமானால் ஆயிரத்து 600 கிலோ மீட்ட‌ர் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும். ஆனால், கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய பருவ நிலையோ விமான பயணத்துக்கு இடம் தரவில்லை.

அன்று மாலை வயிற்று வலி மேலும் கடுமையானது. ‘அப்பென்டிஸைட்டிசிஸ்’ எனப்படும் குடல் வால் நோய்தான் தனது தீராத வயிற்று வலிக்கு காரணம் என்பதை அவர் உணர்ந்தார்.

மறுநாள் இரவு வரை வயிற்று வலி குறையாமல் போகவே, 30-4-1961 அன்றிரவு 10 மணியளவில் ஒரு டிரைவர் மற்றும் ஒரு வானிலை ஆய்வாளர் ஆகியோர் கத்தி, மருந்து ஆகியவற்றை எடுத்து தர, தனது வயிற்றுப் பகுதியை 10 சென்டி மீற்றர் அளவிற்கு திறந்து 4 சதுர சென்டி மீட்ட‌ர் அளவுள்ள குடல் வாலை வெற்றிகரமாக வெட்டி வெளியே எடுத்தார்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த அறுவைசிகிச்சைக்குப் பின்னர் திறந்த பகுதியை தையலிட்டு மூடிய ரோகோசோவ், 2 வாரத்திற்குள் உடல்நலம் தேறி எப்போதும் போல் வேலைகளை கவனிக்க தொடங்கினார்.

தொடர்ந்து மருத்துவ பணியாற்றி வந்த லியோனிட் ரோகோசோவ் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு 21-9-2000 அன்று தனது 66வது வயதில் மரணமடைந்தார்.

உலக மருத்துவ வரலாற்றில் தனக்குத் தானே ஒருவர் அறுவைசிகிச்சை செய்து கொண்டது இது தான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது!
 Kongu.K.NandhakumaR
Ruler can do anything, so Born to rule the Galaxy

துப்பாக்கிச் சூடுகளில் இன்று வரை 46 விவசாயிகளை பலி கொடுத்து பெற்ற உரிமை.., இலவச மின்சாரத்துக்கான ரத்த வரலாறு!

  1969 லிருந்து 1976 வரை மு.கருணநிதி முதல்வராக இருந்த தி.மு.க அரசு மின் கட்டணத்தை யூனிட் ஒன்றுக்கு 8 பைசாவிலிருந்து 10 பைசாவாக ...